திருமணம்… மற்றும்..வேலை…

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அட்சய லக்ன பத்ததி முறையில் எப்படி ஜாதகம் பார்ப்பது.
ஏன்னா? ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒரு தனிப்பட்ட திறமை, தனிப்பட்ட அமைப்பு உண்டு.
ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒரே நேரத்தில் பிறந்திருந்தாலும், 1 நிமிட இடைவெளி வைத்து பார்க்கும் பொழுது அட்சய லக்ன பத்ததி முறையில் பார்க்கும் பொழுது அது வெவ்வேறு பலன்களை குறிக்கும்.

அட்சய லக்ன பத்ததி முறையில் நட்சத்திரங்கள் மாறும்பொழுது மூன்று நிமிடத்திற்கு நட்சத்திர பாதங்கள் மாறும்பொழுது 45 நாள் அல்லது 90 நாள் பலன்கள் மாறுபடும்.

அப்படி பலன்கள் மாறும்பொழுது ஒவ்வொரு நட்சத்திர புள்ளிக்கும் இருக்கக்கூடிய அமைப்பு வெவ்வேறாக இருக்கும்.

405 நாள் ஒரு நட்சத்திர பாதம் இயங்கினால் அடுத்த 45 நாள் ஒரு கிரகம் இயக்கும்,
அடுத்த 5 நாள் ஒரு கிரகம் இயக்கும், அடுத்த 13 . 1/2 மணிநேரம் ஒரு கிரகம் இயக்கும்.
அடுத்த 1 .1/2 மணிநேரம் ஒரு கிரகம் இயக்கும்.
அடுத்த 10 நிமிடம் ஒரு கிரகம் இயக்கும்.
அடுத்த ஒன்றரை நிமிடங்கள் ஒரு கிரகம் இயக்கும்.

இப்படி மாறுபடும் பொழுது உறவுகள் வகையிலும், நண்பர்கள் வகையிலும் ஏற்படும் சூழ்நிலைகள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும்.
அதனால் ஜாதகத்தில் இரு நிலைகளைக் குறிக்கும்.

உதாரணமாக 45 நாள் ஒரு குழந்தைக்கு குரு இயக்கினால் அந்தக் குழந்தை படிப்பில் ஆர்வம் காட்டும்.

அதுவே 45 நாள் சுக்கிரன் இயக்கினால் ஒரு குழந்தைக்கு விளையாட்டு துறையில், விளையாட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டும்.
இரண்டும் படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் காட்டும்.
ஆனால் இரட்டையர்கள் இரு குழந்தைகளுக்கும் வெவ்வேறு துறையாக இருக்கும்.

ஒவ்வொரு இரட்டை குழந்தைகளின் ஜாதகங்களை ஆய்வு செய்யும் பொழுது ஒரு நிமிட இடைவெளியில் அட்சய லக்ன பத்ததி முறையில் பார்க்கும்பொழுது இரு குழந்தைகளுக்கும் பலன்கள் வெவ்வேறாக இருக்கும்.

நன்றி, வணக்கம்.

அரசு வேலை உண்டு

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
” அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

இறந்தவர்களின் ஜாதகத்தை கண்டிப்பாக பார்க்க கூடாது. ஜோதிடர்கள் அனைவரும் இதை செய்கிறார்கள்.
அப்படி செய்யக்கூடாது.

ஏன்னா? இறந்தவர்கள் கடவுளிடம் சென்று விட்டார்கள் என்று சொல்கிறோம்.
ஒரு நிலையை விட்டு இன்னொரு நிலையை அடையக்கூடிய ஆத்மாவிற்கு,உடலுக்கு மறுபடியும் ஜாதகம் பார்ப்பது என்பது தவறான விஷயம்.

இருக்கும் நபர்களுக்கு தான் நாம் ஜாதகத்தை பார்த்து ஆய்வு செய்ய வேண்டும்.
இல்லாதவர்களுக்கு நாம் ஜாதகம் பார்க்கக் கூடாது.

இல்லாத விஷயத்தை தேடுவது மிக சங்கடமான சூழ்நிலையை உருவாக்கும்.
அதனால் இறந்தவர்களுடைய ஜாதகம் பார்த்தால் அதனுடைய பின்விளைவு எல்லோரையும் பாதிக்கும்.
அதனால் பார்க்க கூடாது.

பார்ப்பவர்கள், கேட்பவர்கள் இரண்டு பேருக்கும் அந்த நிகழ்வு பாதிக்கும்.

அட்சய லக்ன பத்ததி முறையில் 2,7,8 ,10 தொடர்பு இருந்தால் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

நன்றி, வணக்கம்

காதல் திருமணம் நடக்குமா….? நடக்காதா…?

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அட்சய லக்ன பத்ததி முறையில் ஒவ்வொரு ஜாதகத்திலும் எந்த காலம் யோகம், எந்த காலம் அசுப காலம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

வாய்ப்புகளை நல்ல நேரத்தில் பயன்படுத்தினால் யோகம் உண்டு. அசுப காலத்தில் பயன்படுத்தினால் விரயமாகும்.

எல்லா காலகட்டத்திலும் ஜோதிடம் என்பது பரிணாம வளர்ச்சி.
இதெல்லாம் கடவுளுடைய அமைப்பு.
கடவுள் ஜோதிடம் வழியாக ஏதோ ஒரு ரூபத்தில் ஒரு வாய்ப்பு கொடுக்கிறார்.
ஜாதகம் தனக்குத்தானே பரிணாமத்தை ஏற்படுத்திக் கொள்கிறது.

கிரகங்களும் கடவுள்களும் ஏதோ ஒரு ரூபத்தின் வழியாக ஜோதிடத்தில் புதிய பரிணாமங்களை கொண்டு வந்து ஒரு வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

குரு ஜாதகத்தில் எவ்வளவு பலபடுகிறதோ அந்த அளவிற்கு யோகத்தைக் கொடுக்கும்.
குரு என்றால் வழிகாட்டுதல்.
குரு பார்ப்பதால் உங்கள் வாழ்க்கை செம்மையாக மாறும்.

அட்சய ராசிக்கு கிரக பெயர்ச்சிகள் பார்ப்பது மிக சிறப்பான ஒரு விஷயத்தை ஏற்படுத்தும்.

கிரகப்பெயர்ச்சி என்பது ஜெனன கால ஜாதகம் தசாபுத்தி நன்றாக இருந்தால்
அதனுடைய ஊன்றுகோல் கோள்களின் கிரகங்களுடைய கோட்சார தன்மைகள்.

ஜெனன ஜாதகம் நன்றாக இருந்தால் கோட்சார கிரகங்கள் எவ்வளவு சுபமாக இருந்தாலும், அசுபமாக இருந்தாலும், ஜாதகம் பளுவாக வேலை செய்யும்.

ஜாதகருடைய வாழ்க்கையை வழிகாட்டுதலும், நெறிப்படுத்துதலும் தான் ஜோதிடருடைய கடமை.
ஜோதிட இருக்கும் பலப்பட வேண்டும் ஜாதகருக்கும் பலப்பட வேண்டும்.

நன்றி, வணக்கம்.

2021 & 2024 யோகமான காலம்

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளமும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அட்சய பாவகம்:

ஒரு நட்சத்திர புள்ளி 405 நாள் இயக்கும்.
405 நாள் ஒரு நட்சத்திர பாதம் மட்டும் இயங்காது.
உப நட்சத்திரங்கள் அல்லது தசாபுத்திகள் என்று பிரித்து இருக்கிறோம்.
ஒரு நட்சத்திர பாதம் 45 நாள் இயங்கும் அந்த 45 நாள் 5 நாள் இயங்கும்.
5 நாள் 13 மணி நேரம் 20 நிமிடம் இயங்கும்.
13 மணி நேரம் 20 நிமிடம் 1 மணிநேரம் 30 நிமிடம் இயங்கும்.
1 மணிநேரம் 30 நிமிடம் 10 நிமிடமாக இயங்கும்.
இப்படி தான் 12 பாவகமும் பிரித்து இருக்கிறோம்.

ஒவ்வொரு பாவகத்திற்கும் கிரகங்கள் மாறும்பொழுது துல்லியமாக பலன் எடுக்க முடியும்.

அட்சய ராசி என்பது தசாபுத்திகள் அடிப்படையில் எடுக்கிறோம்.

அட்சய பாவகம் என்பது ஒவ்வொரு நட்சத்திரத்தையும் 12 பாவகங்களாக பிரிக்கும் பொழுது 33 நாள் 18 மணி நேரம் தொடர்புடைய பாவகத்தை இயக்கும்.

அட்சய பாவகம் இன்றைக்கு எந்த பாவகத்தில் இருக்கிறதோ ஒவ்வொரு 33 நாளுக்கும் மாறிக்கொண்டு இருக்கும்.
நாம் நட்சத்திரங்கள் வழியாகவும் கிரகங்களை பிரித்து இருக்கிறோம்.
ராசியில் சந்திரன் உடைய தன்மைகளையும் பாவகமாக எடுத்து இருக்கிறோம்.

பாவகங்கள் வழியாக பிரிக்கும் பொழுது நட்சத்திரங்கள், கிரகங்கள், பாவகங்கள் இந்த மூன்றும் தனித்தனியாக ஒரே நேரத்தில் பார்க்கும் பொழுது இன்னும் எளிமையாக புரியும்.

பாவகங்களில் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நட்சத்திரங்கள் செல்லும்பொழுது மிக மிக எளிமையாக சொல்ல முடியும்.

நன்றி, வணக்கம்.

2021 டிசம்பரில் குழந்தை உண்டாகும்

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அட்சய நட்சத்திரம்:

அட்சய நட்சத்திரம் என்பது

சுக்ர திசை என்றால் மூன்று நட்சத்திரத்தில் உங்களுடைய மனநிலை பயணிக்க கூடிய அமைப்பை ஏற்படுத்தும்.

இன்றைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்களை,
அத்தனை மன இயல்புகளையும்,
எண்ண ஓட்டங்களையும், அட்சய நட்சத்திரத்திடம் தான் இருக்கும்.

அட்சய ராசி மேஷம்,
அட்சய நட்சத்திரம் பரணி நட்சத்திரம்,

பரணி நட்சத்திரம் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கையில் கோவில்களில் அர்ச்சனை செய்யும் பொழுது அட்சய நட்சத்திரம் என்று அர்ச்சனை செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கை மாறும்.

ஜென்ம நட்சத்திரங்கள் நம்முடைய வாழ்க்கையை பிரதிபலிக்கும்.

ஆனால் இன்றைய நட்சத்திரம் அட்சய நட்சத்திரம் என்பது தசாபுத்திகள் எந்த திசையில் நடக்கிறதோ அதனுடைய நட்சத்திரம் அட்சய நட்சத்திரம் என குறிப்பிட வேண்டும்.

இன்றைக்கு எந்த நட்சத்திரத்தில் பயணிக்கிறீர்களோ அதுதான் உங்களுடைய அட்சய நட்சத்திரம்.
அட்சய ராசி மேஷம்,
அட்சய நட்சத்திரம் பரணி நட்சத்திரம் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கை மாறும்.

எந்த ராசியில் பிறந்தீர்களோ அந்த ராசியில் இருந்து வரக்கூடிய தசாபுத்தி, அதிலிருந்து வரக்கூடிய நட்சத்திரம்தான் அட்சய நட்சத்திரம்.

சந்திரன் எங்கு இருக்கிறதோ சந்திரனிலிருந்து எந்த தசாபுத்தி நகர்கிறதோ அதுதான் அட்சயராசி.

நன்றி, வணக்கம்.