அரசு வேலை உண்டு

அரசு வேலை உண்டு

அனைவருக்கும் வணக்கம் இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும் நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். பரிகாரம் செய்தால் நம்முடைய வாழ்க்கை மாறும். பரிகாரம் எல்லாம் செய்யலாம் ஆனால் உழைப்பும் முயற்ச்சியும் இருந்தால்தான் ஜெயிக்க முடியும். பத்தாயிரம் வாங்காமல் பத்தாயிரம் சம்பாதிக்க வழி சொல்லிக் கொடுங்கள். மீன் பிடிப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள் உங்கள் வாழ்க்கை வளமாகும். காலத்தை அறிந்து உணர்வதுதான் ஜோதிடம். யாருக்கு என்ன நேரத்தில் பரிகாரம் செய்யவேண்டும் என்பதை உணர்ந்து செய்தால் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். காலம் அறிந்து செயல்பட வேண்டும். உடனே எதுவும் நடக்காது இது எல்லாவற்றிற்கும் நம்முடைய உழைப்பும் முயற்சியும் தேவை. முயற்சி பயிற்சி நம்முடைய முன்னேற்றத்திற்கான வழி. இன்றைக்கு வெற்றியாளர்களாக இருப்பவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் கஷ்டப்பட்டவர்கள் தான். அவர்களுடைய முயற்சியும் பட்ட கஷ்டமும் பார்த்தால் மிக மிக அதிகமாக இருக்கும். ஜாதகத்தில் பரிகாரம் என்பது எந்த நேரத்தில் செய்தால் நல்லா இருக்குமோ அந்த நேரத்தில் செய்தால் தான் பலிக்கும். அவருக்கு அந்த வெற்றி கிடைக்குமா? அல்லது வெற்றி கிடைக்கக் கூடிய அமைப்பு உள்ளதா? இரண்டு வருடம் அமைதியாக தான் இருக்க வேண்டும் என்றால் இருந்துதான் ஆகவேண்டும். ஜாதகத்துடைய அமைப்பு தான் இது. நன்றி.

அட்சய லக்ன பத்ததி பாகம் 1 pdf

அட்சய லக்ன பத்ததி பாகம் 3

அட்சய லக்ன பத்ததி பாகம் 2

அட்சய லக்னம் பத்ததி ஜோதிடம்

ஜோதிடம்

அட்சய லக்ன பத்ததி புத்தகம்

https://youtu.be/o6VnVKGctWo

திருச்செந்தூர் முருகனை வழிபடுங்கள்

திருச்செந்தூர் முருகனை வழிபடுங்கள்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒரு நிறையும் இருக்கும் ஒரு குறையும் இருக்கும். 120 வருடம் ஒருவருக்கு சந்தோஷமாகவும் அமையாது. கெட்டதாகவும் அமையாது. அதே போல் நம்முடைய அட்சய லக்னம் ஒவ்வொரு 10 வருடத்திற்கும் லக்னம் மாறும் லக்னம் நகரும். வயதுடைய லக்னத்திற்கு நம்முடைய தசா புக்தியை இணைத்து பலன் பார்க்க வேண்டும். வயதுடைய லக்னம் எப்படி கணக்கீடு செய்வது என்பது நிறைய வீடியோக்கள் யூடியூபில் உள்ளது பாருங்கள். அட்சய லக்ன பத்ததி, ALP Astrology என்று பார்த்தால் தெரியும். உங்களுடைய லக்னம் தனுசு லக்னம் என்றால் 40 வயதில் Alp லக்னம் 4 கட்டம் நகர்த்தி ஒரு கட்டத்திற்கு 10 வருடம், 40 வயதில் ALP லக்னம் : மீன லக்னம் மீன லக்னத்திற்கு தசாபுத்தி பார்த்தால் கண்டிப்பாக யோகமாக அமையும். உதாரணமாக புதன் தசை நடந்தால் வீடு வாங்குவார். புதன் தசை நடந்தால் எதிர்பாராத தீடீர் திருமணம் அமையும். 30 – 40 வயதில் புதன் தசை நடந்தால் 30 வயதில் தான் யோகம். அதுவே ஜென்ம ராசி மிதுன ராசியாக இருந்தால் பஞ்சமஸ்தானதிபதி ஆயில்யம் நட்சத்திரத்திலிருந்து புதன் தசை நடத்தினால் கண்டிப்பாக காதல் திருமணம். கல்வி என்றால் இரண்டாவது பாவகம் 40, 60 வயதாக இருந்தாலும் படிப்பு என்றால் 2வது பாவகம். ஏன்னா? லக்னம் நகரும் பொழுது அதனுடைய குடும்ப சூழ்நிலைகள் அதனுடைய படிப்பு சூழ்நிலைகள் எல்லாம் 2ம் பாவகம் தான் குறிக்கும். கண்டிப்பாக 2ம் பாவகத்தில் உள்ள கிரகங்கள் உடைய தன்மைகள் 11ம் வீட்டைப் பார்த்தால் கண்டிப்பாக யோகம் உண்டு. மேல்நிலைக்கல்வி படிப்பார்கள். சூரியன் செவ்வாய் பார்த்தால் Phd படிப்பாங்க. குரு பார்த்தால் CA ல் மேல்நிலை கல்வி படிப்பாங்க. எந்த இரண்டாம் பாவக நட்சத்திர அதிபதியோ ,இரண்டாம் பாவக லக்ன புள்ளியோ எந்த 11ம் வீட்டை பார்த்தால் கண்டிப்பாக யோகம் உண்டு. 2ம் அதிபதி 6 ல் இருந்தால் ரண ருண சத்ரு கல்வி மருந்து மாத்திரைகள் சம்பந்தப்பட்டது, டாக்டர் சம்பந்தப்பட்டது, இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்டது, இரண்டாம் பாவகம் அதிபதி 6ல் சம்பந்தப்படும் பொழுது கண்டிப்பாக ரண ருண சத்ரு கல்வி படிப்பார்கள். 2ம் அதிபதி 8 ல் இருந்தால் கண்டிப்பாக டிப்ளமோ சம்பந்தப்பட்ட படிப்பு நல்லா இருக்கும். 2ம் அதிபதி 10 ல் இருந்தால் தொழில் கல்வி நல்லா இருக்கும். இரண்டாம் வீட்டு அதிபதி 9ல் இருந்தால் அப்பா கல்வியை பெறுவார்கள். ALP க்கு இரண்டாம் வீட்டு அதிபதி 4ல் இருந்தால் அம்மா கல்வியை பெறுவார்கள். ஒவ்வொரு படிப்பும் கிரகத்துடைய கூட்டு தன்மைகள் வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். டாக்டருக்கு படிக்க வேண்டும் என்றால்? அட்சய லக்னத்திற்கு இரண்டாம் பாவக அதிபதி லக்னம், ALP க்கு 6ல் நின்றால் கண்டிப்பாக ஜாதகர் டாக்டர் படிப்பாங்க. மருந்து மாத்திரைகள் சம்பந்தப்பட்ட படிப்பு படிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் கிரகங்கள் உடைய ராசி தன்மைகள் தெரிந்திருக்க வேண்டும். நன்றி.

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_1pdf

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_3

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_2

#ALP_astrology_contact_number_9786556156

https://youtu.be/6R0XDMWQ790

அட்சய லக்ன பத்ததி மருத்துவ ஜோதிடம் (முக பாவனை)

முக பாவனை ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியத்துவம்,
அதனுடைய உட்கூறுகள் என்ன,
என்பதை அமெரிக்காவை சார்ந்த பால் ஹெல்ப் மேன் என்ற மன இயல் அறிஞர், உளவியல் அறிஞர் என்ன பண்றாருனா இதைப்பற்றிய உடல் கூறுகள்,
நம்முடைய புன்னகைக்கும், நம்முடைய உடல் அசைவுகளுக்கும், இயக்கங்களுக்கும்
எவ்வளவு ஒத்துப் போகிறது.

அதாவது உடல் அசைவுகளுக்கும் புன்னகைக்கும் உள்ள வேறுபாடு என்ன?
எவ்வளவு தூரம் ஒத்துப்போகிறது?
பொய்யா சிரிக்கிறார்களா,
இல்லை ஆழ்மனதிலிருந்து ஆழ்ந்து சிரிக்கிறார்களா,
இல்லை முகத்திற்கும் அந்த சிரிப்பிற்கும் ஒத்துப் போகிறதா,
என்று சொல்லி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முக பாவனைகளை ஆய்வு செய்கிறார்.

உணர்ச்சியே அட்லஸ் என்ற வார்த்தையை அவர் குறிக்கிறார்.
அது சம்பந்தப்பட்ட ஆய்வுகளை முன்னோடியாகத் திகழ கூடிய
பால் ஹெல்ப் மேன் என்பவர் புன்னகை உடைய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால்
அது எதார்த்தமான தோற்றத்தைக் குறிக்கணும் ,எதார்த்தமாக உருவாகணும்,
பொய்யாக சிரிக்கும் பொழுது உடல் மொழி எப்படி இருக்கு என்பதை ஆய்வு செய்திருக்கிறார்.
அதை பற்றிதான் இன்று பேசப் போகிறோம்.

நம் வாழ்க்கையில் எல்லோருக்கும் நோய் சார்ந்த பிரச்சனைகளாக இருக்கட்டும்,
கடன் சார்ந்த பிரச்சனையாக இருக்கட்டும்,
எல்லாம் பிரச்சனைகளாக பேசும் பொழுது அது எந்த அளவிற்கு யோகம் கொடுக்கும் என்பது தெரியவில்லை.
ஆனால் இதற்கெல்லாம் ஒரு மருந்து நம்முடைய ஆழ்ந்த சிரிப்பு.
அதுதான் புன்னகை.
அதாவது நம்முடைய ஆழ்மனதில் இருந்து எதார்த்தமாக சிரிப்பது.

ஒருவர் நகைச்சுவை சொல்லும்பொழுது அதில் சிரிப்பு இருக்காது ஆனால் அவருக்காக நாம் சிரிக்கணும்,

அதாவது மூளையின் செயல்பாடு எப்படி இருக்கும்னா வெளியில் வாய் சிரிப்பு தோற்றத்தை காமிக்குமே தவிர மனதில் சிரிப்பு இருக்காது.

ஆழ்ந்த சிரிப்பு இருக்கும்பொழுது கண்டிப்பாக நோய்களுக்கு மருந்தாகும்.

நம்முடைய வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு நகைச்சுவை பார்க்கும் பொழுது தன்னை அறியாமல் சிரிப்போம்.
ஏதாவது ஒரு நகைச்சுவை பார்த்திருப்போம், ஏதாவது ஒரு மொழியை கேட்டிருப்போம்,
சின்ன குழந்தை ஏதாவது ஒரு விஷயம் பேசி இருக்கும், இல்லை சிரித்திருக்கும்
குழந்தைகளின் சிரிப்பு பார்க்கும்பொழுது ஆனந்தம் வரும் பாருங்கள் அதுதான் புன்னகை.

அந்தப் புன்னகை தான் நம்முடைய வாழ்க்கையில் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.

உதாரணமாக நம் கண்ணாடி முன் நின்று சிரித்து பாருங்கள்,
அது பொய்யான சிரிப்பாக இருக்கும்.

இதுவே ஒரு நகைச்சுவை தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது எதார்த்தமாக சிரிப்போம்,
நாலு பேர் இருக்கும்போது சிரிக்க மாட்டோம்,
இதுவே எங்காவது தனியாக இருக்கும் பொழுது நகைச்சுவை பார்த்தால் நம்மை அறியாமல் சிரிப்போம்.
நம்மை அறியாமல் இந்தப் புற சூழ்நிலைகள்,
அதுதான் இந்த மனிதர்களுடைய சிரிப்பு அலைகளை கட்டுப்படுத்தும்.

உங்கள் வாழ்க்கையில் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஏதாவது ஒரு நாள், அந்த நாளில் இன்றைக்கு யாரைப் பார்த்தாலும் சந்தோஷமாக சிரிக்கணும், வணங்கனும், நன்றி சொல்லனும், வாழ்த்துக்கள் சொல்லணும், என்று காலையில் 6 மணிக்கு ஆரம்பித்து சாயங்காலம் 6 மணி வரைக்கும் பார்க்கும் பொழுதெல்லாம் சிரியுங்கள்.
உங்களை கேள்வி கேட்டு இருப்பாங்க,
உங்களை கோபப்படுத்தி இருப்பாங்க,
உங்களைப் புகழ்ந்து இருப்பாங்க,
எல்லாவற்றிற்கும் உங்களுடைய மருந்து, உங்களுடைய விடை சிரிப்பாக இருக்கட்டும்.
அந்த ஒரு நாள் உங்கள் வாழ்க்கையை மாற்றும். அப்படி ஒரு நாள் இருந்து பாருங்கள்.

அன்றைய இரவில் உங்கள் மனம் ஒரு 100 சதவீதம் ஒரு ஆழ்ந்த உறக்கமும், ஒரு ஆழ்ந்த சந்தோஷமும், என்றைக்கும் இல்லாத ஒரு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும்.

தொல்காப்பியர் 8 வகைப்பாடுகள் வகைபடுத்தி உள்ளார்.
தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்றால் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான நகைச்சுவை,சந்தோஷம், இன்பம் இப்படி நிறைய
வகைபடுத்தக் கூடியதில்,
முதலில் சொல்லக்கூடிய உணர்வாக நகைச்சுவையை தான் சொல்கிறார்.
சிரிப்பை தான் சொல்கிறார்.

அதனால் நம்முடைய வாழ்க்கையில்
சிரிப்புதான் அடுத்தகட்ட இலக்கை நோக்கி பயணிக்கக்கூடிய ஒரு நிகழ்வாக மாறும் என்பதை நமக்கு புரியவைக்கிறார்.

நம்முடைய மூளை ஒரு எதார்த்தமான சிரிப்பிற்க்கும், பொய்யான சிரிப்பிற்க்கும் இந்த இரண்டு வகையான சிரிப்புகளை,
மூளை எளிமையாக புரிந்துகொள்ளும்.

நாம் எதார்த்தமாக சொல்வோம். இது உண்மையாக சிரிக்கிறோம், இது போலியாக சிரிக்கிறோம் என்று ஆனால், இந்த மூளைக்கு போலியான சிரிப்புகளையும் உணர கூடிய தன்மை உள்ளது.

நம் உடலில் இருக்கக்கூடிய தசைநார்கள்
ஒரு இறுக்கமாக இருக்கு, இல்லை இருக்க மற்று இருக்கு,
உதாரணமாக கை, கால், இல்லை நம் மூளையின் பின்பகுதியில் தசைநார்கள் இருக்கமாக இருந்தால் எதார்த்தமான சிரிப்பு வராது.

அதேபோல் தசைநார்கள் இறுக்கமற்று இருக்கும்பொழுது அந்த உணர்வுகள் சந்தோஷமான சிரிப்பு, ஆழ்ந்த சிரிப்பு எதார்த்தமாக வரும் அந்த சிரிப்பு.

இந்த மாதிரி இருக்கும் பொழுது யாருக்கு அந்த அமைப்பு வரும் என்றால் நாம் கிரக ரீதியாக பார்க்கணும்,
சந்திரன் என்ற கிரகமும்,
சுக்கிரன் என்ற கிரகமும்,
இது பலமாக இருக்கணும்.

இந்த இரண்டு கிரகங்களும் குருவோட தன்மைகளாக எப்படி இருக்கும் என்பதை பொறுத்தி பார்க்கும் பொழுது தான் நம் மூளையினுடைய செயல்பாடுகளுக்கும்,
நம் தசைநார் உடைய செயல்பாடுகளுக்கும்,
நாம் விளக்கத்தை காணமுடியும்.

இல்லை சார் , சந்திரன் சுக்கிரனுக்கு 6,8 ஆக இருக்கு, சந்திரனுக்கும், குருவுக்கும் சஷ்டாஷ்டகமாக இருக்கு என்றால் அதனுடைய தசைநார்கள் எப்போதும் ஒரு இறுக்கத்தை கொடுக்கும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த உணர்வுகள் மாறும் பொழுது கோட்சார கிரகங்கள் வைத்தும் நாம் பலன் சொல்லலாம்.

கண்டிப்பாக சந்திரன் சுக்கிரன் இருக்கும்பொழுது அந்த தசை நார்கள் ஒரு யோகமான ஒரு ஆனந்தமான சிரிப்பு வரும்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் நல் சூல்நிலையில் அதாவது 1,5,11 ல் தொடர்பு இருக்கும் பொழுது ஒரு சுப கிரகங்களாக இருந்து தொடர்பாக இருந்தால், இப்பொழுது சந்திரன் சுக்கிரன் பலமாக இருந்து அந்த கிரகங்கள் தொடர்புகள் இருந்தால் எதார்த்தமாக சிரிப்பு வரும்.
ஒரு நிமிடத்தில் வரலாம் இல்லை ஒருநாளில் வரலாம் இல்லை எதுவுமே இல்லாமல் ஒருவர் சந்தோஷமாக இருப்பார்.அதுபோல்தான் நிறைய பேரை நீங்கள் பார்த்திருப்பீர்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஆழ்ந்து சிரிப்பார்கள்.

கேங்கேயம் என்ற ஒரு பகுதி மூளையினுடைய கீழ்ப்பகுதியில் இருக்கக்கூடியது. ஒரு எதார்த்தமான ஆனந்து சிரிப்பை கொடுக்கும்.இந்த ஆழ்ந்த சிரிப்பு எப்பொழுது வரும் என்றால் ஏதாவது ஒரு நண்பர் நீண்டநாள் பிறகு பார்க்கிறோம் ,அந்த சந்தோஷம் அவ்வுளவு ஆனந்தமாக இருக்கும்.அப்பொழுது நம் மூளையின் உடைய பின்பகுதியில் இந்த உணர்ச்சிகள் உடைய பகுதிகளாக தூண்ட ஆரம்பிக்கும்.
அதுதான் இம்படிக் என்று ஒரு உணர்ச்சி செல்லை தூண்டும்.
இந்த உணர்ச்சி செல் நேராக கேங்லியாவை தொடும். அதை தொட்டவுடன் ஒரு ஆனந்தமான சிரிப்பு தோன்றும்,
நம் நண்பர்கள், நமக்குப் பிரியமானவர்கள்,காதல் வயப்படக் கூடிய ஆண் பெண் சந்திக்கக்கூடிய இடத்தில் அப்படி ஒரு எதார்த்தமான விஷயம் வரும்.அப்பொழுதுதான் உணர்ச்சி அலைகள் ஆனந்தமாக எதார்த்தமாக வரும்.

அதுவே நமக்கு பிடிக்காத நபர்களை ஒரு இடத்தில் பார்க்கும் பொழுது அந்த உணர்வு அந்த உணர்ச்சி அந்த இடத்தில் தோன்றுவதில்லை.

அதேபோல் ஒவ்வொரு காலகட்டமும் வயதுக்குத் தகுந்தாற்போல் காலத்திற்கு தகுந்தாற்போல் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நம்முடைய மொத்த வயதினரை பார்க்கும் பொழுது இந்த ஆனந்தமான சிரிப்பு 60 வயது.அப்பொழுது அந்தக் கருத்துகள் ஒத்துப்போகும்.

60 வயதான நபருக்கும், 20 வயது பையனுக்கும் ஒரு பொருத்தம் இருக்காது. ஏன்னா? இந்த உடல் மொழிகள் ஒத்து போகாது.

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இந்த சிரிப்பு புன்னகை என்பது மிக முக்கியமானது. கண்டிப்பாக இதைப் பற்றி நிறைய ஆய்வுகள் நிறைய விஷயங்கள் உங்களோடு கலந்து பேச போகிறேன்.

அதாவது பணம் இருந்தாலும் சரி பணம் இல்லை என்றாலும் சரி, பணம் ஆண்டவன் கொடுக்கக்கூடியது, நம்முடைய உடற்கூறுகள் தகவல்கள் நம்மிடம் ஒரு நோய் இருக்கு என்றால் அங்கேதான் மருந்தும் இருக்கும்.

அதே போல் தான் நம்முடைய எல்லா கேள்விகளுக்கும் நல்ல மருந்து சிரிப்பு.
நீங்கள் ஆனந்தமாக சிரிக்க முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் காலையில் எழும் பொழுது ஒரு 10 நிமிடம் கண்ணாடி முன் நின்று சிரித்து பாருங்கள்.
பணம் இல்லாத ஒரு நோய்க்கான மருந்து சிரிப்புதான்.

கண்டிப்பாக இதைப் பற்றி நிறைய விஷயங்கள் அடுத்தடுத்த வீடியோவில் பேச போகிறோம்.

நன்றி

#அட்சய_லக்னம்_பத்ததி_ஜோதிடம்

#ஜோதிடம்

#அட்சய_லக்ன_பத்ததி_புத்தகம்

#அட்சய_லக்ன_பத்ததி_pdf

#ALP_astrology_contact_number_9786556156

https://youtu.be/MG-2oVRig5E

 

அட்சய லக்ன பத்ததி மருத்துவ ஜோதிடம் (கேடயம்)

வணக்கம்
கேடயம் என்ற விஷயத்தை பற்றி பேச போகிறோம்.
கேடயம் என்பது நீங்கள் நினைப்பது போல் பாதுகாப்பு கவசம் என்பது அல்ல
இது நம் உடலுடைய ஒரு பாதுகாப்பு கவசம் என்ற ஒரு அமைப்பை பற்றி தான் பேச போகிறோம்.

எப்படி ஒரு படை வீரருக்கு அந்த கேடயம் பயன்படுகிறதோ நம்முடைய உடலுடைய ஆற்றல் சக்திக்கு எப்படி பாதுகாப்பு என்பதற்கு இந்த கேடயம் இந்த விஷயத்தைப் பற்றி பேசுவோம்.

கேடயம் என்பது கிரேக்கச் சொல்.
அதாவது தைராய்டு சுரப்பி என்ற விஷயத்திற்கு இதனுடைய கிரேக்க சொல் கேடயம், பாதுகாப்பு கவசம் இதைப் பற்றி தான் பேச போகிறோம்.

19ம் நூற்றாண்டு வரை இந்தத் தைராய்டு சுரப்பி என்பது,
இதனுடைய பயன்பாடு என்ன? இதனுடைய அணுகுமுறைகள் என்ன?
இது எப்படி எல்லாம் பாதுகாப்பு கவசமாக இருக்கு என்பது தெரியாமல் இருந்தது.

19ம் நூற்றாண்டு பிறகுதான் இதனுடைய பயன்பாடு தெரிய ஆரம்பித்தது.
1800 ம் ஆண்டு இந்த முன் கழுத்து கயலை என்றால் விரும்பத்தகாத தசைப்பகுதி.

அதை விருப்பமில்லாத, அழகு குறைந்த பகுதியாக எடுத்துதாங்களே தவிர அது தைராய்டு சுரப்பியால் வரக்கூடிய வியாதி,அது ஒரு நோய் என்பது தெரியாமல் இருந்தது.

தைராய்டு இருக்கு என்ற நிகழ்வு என்றால்,
இதயத்துடிப்பு குறைவாக மந்தமாக இருக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கும்.
அப்பொழுது ஒரு விஷயத்தை எதிர்பார்த்த அளவு செய்ய முடியாமல் இருக்கும்.

அதுவே இன்னொருவருக்கு பதட்டமும் பயமும் இருக்கும்.

அதுவே இன்னொருவருக்கு எந்த ஒரு அறிகுறியும் இருக்காது.

இப்படி மூன்று விதமான அணுகுமுறைகளில் நமக்கு தைராய்டு சம்பந்தப்பட்ட விஷயங்கள் உணர முடியும்.

ஏன் இதைப் பற்றி பேசுகிறேன் என்றால் அட்சய லக்ன பத்ததி மருத்துவ ஜோதிடம் இந்த நூலில் இதைப் பற்றிய விஷயங்கள் தான் நிறைய விவாதிக்கப் போகிறோம் அதை பற்றி எழுதப் போகிறோம்.

1883 ல் அந்த முன்கழுத்து கயலை பகுதியை அறுவை சிகிச்சை பண்றாங்க.
அந்தப் பகுதியை அகற்றியதற்கு பிறகு அவர்களுடைய உடல் பகுதி ரொம்ப சோர்வாக இருந்தது.

அப்படி வரும்பொழுது முன்கழுத்து பகுதி முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.
அதில் ஏதாவது ஒரு அறிகுறி இருக்கும் என்று அதனால் உடல் பகுதி பாதிக்கப்பட்டு இருக்கு, அதை முழுமையாக நீக்கக் கூடாது .
அதை பற்றிய ஆய்வு 1883 ல் அதைப்பற்றிய நிறைய விஷயங்கள் தேடல்கள் இருந்தது.

இந்த முன் கழுத்து பகுதியில் கயலை உருவாக்குவதற்கு காரணம் என்ன?
என்பதை ஒரு வேதியியல் அறிஞர் பாமன் என்பவர் அயோடின் என்ற சத்து குறைபாடு உடலில் இருக்கு அதனால் தான் ஒரு மனிதனுக்கு இந்தமாதிரி கழுத்துப்பகுதி வீக்கமாக, கழுத்தில் ஒரு கயலையாக அந்த தசை பற்று வீங்குகிறது.

இந்த அயோடின் சொன்ன பிறகுதான் அயோடின் சம்பந்தப்பட்ட நுட்பமான நிறைய ஆய்வுகள் எடுக்கப்பட்டது.

உடலில் அயோடின் குறைவால் தான் இப்படி மாற்றம் வருகிறது என்று கண்டுபிடித்த பிறகு,
ராபர்ட் ஜேம்ஸ் கிரேஸ் என்பவர் இந்த அயோடின் அதிகமாக இருப்பதால் பிரச்சனை வருகிறதா, இல்லை குறைவாக இருப்பதால் பிரச்சனை வருகிறதா,என்பதை ஆய்வு செய்தார்.

ஏன்னா? கூடுதலாக சென்றால் என்ன பிரச்சனை? குறைவாக வந்தால் என்ன பிரச்சனை?
என்பதை ஆய்வு செய்தார்.

அயோடின் என்பது உணவில் மட்டும் கிடையாது,அது மரபிலும் வரலாம் என்று சொல்லி அது ஹைப்பர் தைராய்டிசம் என்ற விஷயத்தை சொல்கிறார்.

இதனால் என்ன அறிகுறி என்றால் நம்முடைய கண் பகுதி வீக்கமாகும்.
அதாவது கண்ணுடைய கீழ்பகுதி ஒரு வீக்கமாக பிதுக்கமாக உயர்ந்து காணப்படும்.
அந்த மாதிரி ஒரு அமைப்பு இருக்கும்.

ஒரு பதட்டமான சூழ்நிலைகள் இவருடைய வாழ்க்கையில் உருவாகும்.
இதை அறிஞர் நுண்குமிழி என்று கணக்கிடுகிறார்.
20 to 30% நூண்குமிழி என்பது சுரக்க ஆரம்பிக்கும்.
இதனால்தான் கண் பகுதி வீங்கும் என்ற விஷயத்தை சொல்கிறார்.

நுண் குமிழி எவ்வளவு குறைகிறதோ, அதாவது 20 to 30% குறைவாகும் பொழுது ஹைப்போ தைராய்டிசம் என்ற விஷயத்தை சொல்கிறார்.

அங்கு பதட்டம் என்று சொன்னதற்கு மாறாக இங்கு மந்தம்.

ஹைப்போதைராய்டிசம் என்பது இந்த ஹார்மோன்கள் சுரக்க கூடிய சூழ்நிலைகள் ரொம்ப ரொம்ப குறைவாக இருக்கும்.
அப்பொழுது மந்தமான ஒரு சூழ்நிலையை உருவாக்கும்.

அந்த மந்தமான சூழ்நிலையை உருவாக்கும் பொழுது அதனுடைய சூழ்நிலைகள் எல்லாம் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதும்,
ஹார்மோன் சுரப்பதால் தொண்டை பகுதியில் கட்டியாக வருவது முன் கழுத்து கயலை பகுதி.
அது உருவாவதற்கு ஹைப்போ தைராய்டிசம் தான் காரணமாக இருக்கு என்பதையும் அவர் ஆய்வில் செல்கிறார்.

பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கும் இந்த திசுக்கள் உடைய குறைபாடுகள் இருக்கும்.
அப்பொழுது நாம் குழந்தைகள் பிறக்கும் பொழுதே ஆய்வு செய்து பார்க்கும் பொழுது அந்தக் குறைபாடு கவனிக்கக் கூடிய இடத்தில் இருந்தார்கள் என்றால் அதை எடுத்துக்கலாம்.

அதை கவனிக்காமல் இருந்தால் மூக்கு கழுத்து வாய் பேச முடியாமல் போவது, வளர்ச்சி குன்றுவது,
இதெல்லாம் எளிமையாக தாக்கக்கூடியது.
இதை அதிகமாக கவனம் பார்த்து
ஏன்னா பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு இது தொன்றுதொட்டு வரக்கூடிய ஒரு நிகழ்வு என்று ஆய்வில் சொல்லியிருக்கிறார்கள்.

அட்சய லக்ன பத்ததி மருத்துவ ஜோதிடத்தில் இதனால் நீங்க என்ன சொல்லவரிங்க?

தைராய்டு என்ற நோய் எந்த காரகத்தின் கீழ் வருகிறது என்றால் குருபகவான்.
இதை நீங்கள் ஆய்வு செய்து பாருங்கள்.
அதேபோல் குரு 6, 8, 10, 12 ல் இருந்தால் ஹைபோதைராய்டிசம் என்பது மந்தமான சூழ்நிலையை உருவாக்குவது.
சுறுசுறுப்பு இல்லாமல் சோம்பேறித்தனமாக ஒருவர் உட்கார்ந்திருந்தால்
அதில் குரு உடைய ஆதிக்கம் எப்படி இருக்கும என்பதை பார்க்கலாம்.
அதேபோல் பதட்டமாக இருப்பார்கள், சம்பந்தமே இல்லாமல் கோபப்படுவார்கள்.
இந்த மாதிரி அமைப்பு யாருக்கு இருக்கும் என்றால் ஹைப்பர் தைராய்டிசம்.

இது யாருடைய கிரக சேர்க்கை என்றால் சூரியன் – சனி கிரக சேர்க்கையாக இருக்கும்.

6, 8, 10, 12ல் இந்த இரண்டு கிரகங்கள் சேரும் பொழுது திடீர் திடீரென்று ஏற்படக்கூடிய பயம், பதட்டம் இந்த உணர்வுகளை ஏற்படுத்தும்.
இதை ஆய்வு செய்து பாருங்கள்.

மூன்று கிரகங்கள் மட்டும் வைத்து ஆய்வு செய்ய முடியுமா? கிடையாது,

உங்களுடைய அட்சய லக்னத்திற்கு புதன் எங்கிருக்கிறதோ பார்த்து இதை முடிவு செய்யணும்.புதன் என்ற கிரகத்தை இணைத்துப் பார்க்கும் பொழுது கண்டிப்பாக 100 சதவீதம் நோயின் உடைய தன்மை, தாக்கம் எவ்வளவு தூரம் இருக்கும் என்பதை உங்களால் உணர முடியும்.கண்டிப்பாக நிறைய பார்க்கலாம்,
இதற்கெல்லாம் விடையாக அட்சய லக்னத்திற்கு இப்படி இருக்கு என்று தெரிந்து கொண்டோம். இதை எப்படி சரி செய்வது என்றால் இந்த சுரப்பிகள் உடைய தன்மைகள் யாரிடம் இருக்கு என்றால் சந்திர பகவான்.
அதில் பிட்யூட்டரி என்ற சுரப்பி மூலமாக இதை சரி செய்ய முடியும் என்ற விஷயம் இருக்கு.அந்தச் சந்திரன் நிலையை அறிய வேண்டும்,சந்திரன் நிலையை அறிய வைத்து அதை சரி செய்ய கூடிய அமைப்பையும் பார்க்க வேண்டும்.

நன்றி, வணக்கம்

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_1_pdf

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_3

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_2

#அட்சய_லக்னம்_பத்ததி_ஜோதிடம்

#ஜோதிடம்

அட்சய லக்ன பத்ததி புத்தகம்

https://youtu.be/-r28mcDgeNo

அட்சய லக்ன பத்ததி மருத்துவ ஜோதிடம்

அட்சய லக்ன பத்ததி மருத்துவ ஜோதிடம்

அனைவருக்கும் வணக்கம்.
அட்சயலக்ன பத்ததி ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிடம் பற்றி பேச போகிறோம்.
ஏன்னா? மருத்துவம் என்பது நிறைய பேருக்கு தேவை படக்கூடிய ஒரு விஷயமாகவே இருக்கு.
ஏன்னா நம்ம உடம்பில் எந்த பாகத்தில் என்ன பிரச்சனை என்றாலும் நாம் ஜாதகத்தை பார்க்க ஆரம்பிக்கிறோம்.

அதனுடைய விளைவுகள் என்ன?
அது எப்படி இருக்கும்?
ஒரு அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தாலும் செய்யலாமா வேண்டாமா அப்படிங்கிற முடிவு எடுப்பதற்கு எல்லாம் இந்த ஜோதிடம் நமக்கு இன்றியமையாத ஒரு விஷயமாக இருக்கு.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் உங்க எல்லாருக்கும் தெரியும் நல்ல accurate ஆன
பலன்களை தரக்கூடியதில் ரொம்ப சிறப்பான பலன்களை தருகிறது.

இதில் மருத்துவ ஜோதிடமும் நமக்கு மிகவும் அவசியமானது,
ஆனால் இன்றைக்கு உள்ள காலகட்டங்களில் உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வதில் அதிக சிரமமான சூழ்நிலைகளை கொடுத்துட்டு இருக்கு.

என்ன உணவு முறைகளும் சரி, நம்முடைய உடல் தேவைகளை கவனித்துக் கொள்வதற்கு கால அவகாசமும் இல்லை,
அவசரமான உலகத்தில் நாம் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்காக கொஞ்சம் செலவு பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அந்த ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் எந்த கிரகங்களோடு எந்த மாதிரியான சூழ்நிலைகள் சம்பந்தப் படும் பொழுது நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் அப்படிங்கறத பல வருடங்களாக ஆய்வுகள் மேற்கொண்டு ஒவ்வொரு நோய்க்கான காரணங்கள், காரணிகள் எந்த கிரகத்தினோடு இணைவு ஏற்பட்டால் அவங்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் வரும், அப்படிங்கற மாதிரியான விஷயங்களெல்லாம்
திரு பொதுவுடைமூர்த்தி ஐயா, இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கியவர்.
ஆய்வு செய்து நிறைய விஷயங்களை நமக்கு கொடுத்து இருக்காங்க.

இந்த நோய்களைப் பற்றியும்,
நோயினுடைய தன்மைகள் பற்றியும்,
அதற்கு எந்தெந்த காரகங்கள்,
எந்தெந்த கிரகங்கள்,நமக்கு அந்த நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைகிறது, அதற்கு நம் தடுப்பு முறைகள் என்னென்ன பண்ணிக்கணும்,
இந்த ஒரு விஷயம் ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்தால் அது வராமல் தடுப்பதற்கும் அல்லது அது வந்தபிறகு நாம் என்னென்ன பரிகாரங்கள் செய்யணும், என்னென்ன மருத்துவங்கள் எடுத்துக் கொள்ளணும், என்பதை நாம் எளிதாக இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை என்பது ஒவ்வொருவரும் உணர்ந்து அவங்க அவங்களே பார்த்து சரி செய்துக் கொள்ளக்கூடிய ஒரு ஜோதிட முறையாக இன்றைக்கு வளர்ந்து கொண்டு இருக்கு.

ஏன்னா ? வீட்டுக்கு ஒரு ஜோதிடர். பொதுவுடை மூர்த்தி சாருடைய ரொம்ப முக்கியமான ஒரு குறிக்கோளாக இருக்கு.
அதனால் நிறைய Class எடுத்துட்டு இருக்காங்க.
இந்த ஜோதிட துறையில் இன்னும் தேடல்கள் நுணுக்கமாக ஆய்வு பண்ணிட்டு இருக்காங்க.

அதில் மருத்துவ ஜோதிடத்திற்காக தான் நிறைய நேரம் செலவு செய்றாங்க. அதனால் தான் நிறைய பேருக்கு ஜோதிடம் பார்ப்பதற்கு அவகாசம் இல்லாமல் போகிறது.

இந்த மருத்துவ ஜோதிடத்தில் என்னென்ன எல்லாம் தெரிந்து கொள்ள முடியும்.
இப்போ ஒருவருக்கு தைராய்டு வருது அந்த தைராய்டுக்கு என்னென்னவெல்லாம் பண்ண முடியும்?
அந்த காரணிகள் ஏன் கெட்டுப் போகிறது?
அந்த தைராய்டு சுரப்பிகளில் எதனால் பிரச்சனை ஏற்படுகிறது?
அது எப்படி பிரச்சனைகளை உண்டாக்குகிறது?
அதற்கு என்னென்ன கிரகங்கள் காரணமாக அமைகிறது?
அதை சரி செய்வதற்கு எந்த கிரகம் உறுதுணை செய்யும்?
நம்ம உடம்பில் எந்த கிரகத்தினுடைய தன்மைகளை எந்த சுரப்பியை அதிகப்படுத்திக்கனும், என்கிற விஷயத்தை எல்லாம் ரொம்ப நுணுக்கமாக ஆய்வு செய்து இருக்காங்க.

அதேபோல் பாராதைராய்டு எப்படி வருகிறது,
அந்தப் பாராதைராய்டு வேலை என்ன,
ஏன்னா? ஒரு நோய்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு உறுப்பை பற்றி சொல்லி ஆகணும்.
நம் உடலில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு பாகங்களுக்கும் நம்முடைய கடமை கொடுக்கப்பட்டிருக்கிறது.

இயந்திரம் என்பது மனித உடல் மாதிரிதான்.
நல்லா ஓடுறவரையும் தான் அதனுடைய மதிப்பு,
என்றைக்கு சிறிய பாதிப்பு ஏற்படுகிறதோ அன்றைக்கு நாம் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைய வேண்டியதாக இருக்கும்.

அந்த இயந்திரத்தில் எந்த பாகம் பழுது படப் போகிறது என்று தெரிந்தால் அதை தடுக்க வேண்டிய தடுப்பு முறைகளை நாம் எளிதாக தெரிந்துகொண்டு செய்தால் அது சுலபமாக இருக்கும்.

நமக்கு என்ன பிரச்சனைகள் வரப்போகிறது, அதை எப்படி சரி செய்து கொள்ளலாம்,
நாம் தெரிந்து அதை உணர்ந்து செய்தால் நம்மை நாமே சரி செய்ய முடியும்.
அதற்கு ஒரு சுலபமான வழியாக இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிடம் என்பது நமக்கு ரொம்ப ரொம்ப useful ஆக இருக்க போகிறது.

ஏன்னா? நம்முடைய உடல் காரணிகள் அத்தனையும் ஏதோ ஒரு கிரகங்கள் செயல்படுத்தக் கூடிய ஒரு பொறுப்பில் இருக்கு.

இந்த கிரகத்தோடு இந்த கிரக இணைவுகள் சேர்ந்தாலோ அல்லது நோய் ஸ்தானத்தின் அதிபதியோடு சம்பந்தப்பட்டாலோ நமக்கு ஆரோக்கியத்தில் இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்.

இதற்கு அறிவியல் சிகிச்சை வேண்டுமா, இல்லை அலோபதியில் சரி செய்ய முடியுமா,
இல்லை ஆயுர்வேதத்தினால் சரிசெய்ய முடியுமா,
இல்லை சித்தா எடுக்கணுமா, யோனி எடுக்கணுமா,
இந்த மாதிரி நிறைய மருத்துவ முறைகளில் எதைப் பின்பற்றினால் நாம் எளிதாக நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்,
ஒரு அற்புதமான ஜோதிட முறை தான் இந்த
அட்சய லக்ன பத்ததி மருத்துவ ஜோதிட முறை.

நோய்களைப் பற்றியும் சார் பேச போறாங்க.
அதை எந்த கிரகங்களோடு தொடர்புபடுத்தி பார்க்கணும் என்பதை சொல்ல இருக்காங்க.
தொடர்ந்து நீங்க பாருங்க, உங்களுக்கு ஏற்படக்கூடிய நோய்என்ன,
அதற்கு எந்த மாதிரி சிகிச்சை எடுக்குறீங்க ,
எந்த வருடத்தில் நோய் ஆரம்பித்தது,
எப்போ உணர்திங்க,
என்பதை பின்னோட்ட பதிவுகளாக உங்களுடைய பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த வருடம் கொடுத்து உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கு, அந்த பிரச்சனை எப்பொழுது ஆரம்பித்தது, என்பதை பதிவு செய்தால் அது எங்களுடைய மருத்துவ ஜோதிடத்திற்கு ஆய்வு ஜாதகத்துக்காக நாங்கள் எடுத்துக் கொள்வோம்.

இது எல்லோருக்கும் பயனுள்ள பகுதியாக இந்த ஜோதிட முறை இருக்கும். அதை புரிஞ்சிப்பிங்க. அதை பற்றி நிறைய வீடியோக்கள் சார் பேச இருக்காங்க. தைராய்டு சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது, ஒரு மனச்சிதைவுக்கு, மனதில் உள்ள பிரச்சனைகளுக்கு என்ன காரணம் உடல் மட்டும் காரணமா மனது மட்டும் காரணமா இதை எப்படி நாம் பிரித்துப் பார்ப்பது ,மூளை என்றால் அந்த தலைப்பகுதியில் என்னென்ன விஷயங்கள் எல்லாம் இருக்கு அது ஒரு மருத்துவரே ஆச்சரியப்படக் கூடிய அளவில் மூர்த்தி சாருடைய ஆய்வுகள் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும்.கண்டிப்பாக பெரிய அளவில் பயன்படும் .

அட்சய லக்ன பத்ததியில் 18 Volume எழுதி வெளியிடுறாங்க.அதில் மருத்துவ ஜோதிடம் என்ற நூல் முடிவு நிலையில் இருக்கு. கண்டிப்பாக அந்த நூல் வெளி வரும்பொழுது உங்கள் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பயனுள்ள நூலாக அமையும்.
நம் முடைய உடல் கூறுகளை அங்கம் அங்கமாக பிரித்து எந்தந்த கிரகம் ஆதிக்கம் செலுத்தும், அது எந்த கிரகத்தினுடைய இணைவு இருந்தால், சேர்க்கை இருந்தால் எந்த நேரத்தில் அதன் தாக்கம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளகூடிய ஒரு அரிய பொக்கிஷமாக அட்சய லக்ன பத்ததியின் மருத்துவ ஜோதிடம் Book உங்களுக்கு சிறந்த வழிக்காட்டியாக இருக்கும்.

நன்றி

https://youtu.be/4RryvGGhenc