கிரக தோஷங்களுக்கு உணவு பரிகாரம்

 

அனைவருக்கும் வணக்கம்.

அட்சய லக்ன பத்ததி முறையில் ஒரு நண்பருடைய கேள்வி

34 வயது ஆகிறது, திருமணம் நடக்கவில்லை என்று கேள்வி

கேட்டுருக்காங்க.

ஜாதகருக்கு மேஷ லக்னம் 2ல் செவ்வாய்,செவ்வாய் தோஷத்தினால் திருமணம் நடக்கவில்லை என்று சொன்னார்.

இந்த நிகழ்வு எந்த வகையில் பொருத்தமாக இருக்கு என்று பார்ப்போம்.

திருமணம் நடக்காததற்கு செவ்வாய் தான் காரணமா என்று பார்ப்போம்.

லக்னம் நகரும்பொழுது செவ்வாய் தோஷம் யோகமாக கூட வாய்ப்பு இருக்கு என்று நண்பர் கேட்டார்.

ஜென்ம லக்னம் மேஷம், இன்றைய லக்னம் கடகம் ,

கடக லக்னத்திற்கு 11ல் செவ்வாய், அப்ப ஏன் திருமணம் நடக்கவில்லை?

உதாரணமாக கடக லக்னாதிபதி சந்திரன், 7ம் வீட்டு அதிபதி சனிபகவான் கும்பத்தில் இருக்கும் பொழுது,திருமண வாய்ப்பு எதிர்பார்த்த மாதிரி இருக்காது.

ஜாதகருடைய லக்னாதிபதியோ, 7ம் வீட்டு அதிபதியோ, 8 ல் இருந்தால் திருமணம் சார்ந்த உறவுகள், திருமணம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த யோகத்தை கொடுக்காது.

எல்லாரும் மேஷ லக்னத்திற்கு 2ல் செவ்வாய் இருக்கு என்று சொல்லி பரிகாரம் செய்து, உண்மையில் கடக லக்னமாக இருந்து, கடக லக்னத்திற்கு 7ம் அதிபதியும், லக்னாதிபதியும் கும்ப லக்னத்தில் அட்டமத்தில் சனியும் சந்திரனும் இருப்பது ஒரு அவயோகத்தை கொடுக்கும்.

அந்த வாழ்க்கை ஒரு பொருத்தம் இல்லாத இணையாகதான் இருக்கும்.

 

அதனால் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இன்றைக்கு என்னுடைய வாழ்க்கையில் எது பொருத்தமான நிகழ்வுகள்,இன்றைக்கு என்னுடைய வாழ்க்கை முறையில் எப்படி இருக்கு,

சனிபகவானுக்கும் சந்திர பகவானுக்கும் என்ன நிகழ்வு நடந்திருக்கு,

ஜாதகர் 8ல் இருக்கும் பொழுது எதிர்பார்ப்புகள் மூலமாகவே தடையை ஏற்படுத்தும்.இரண்டு குடும்பத்தின் மூலமாக பெரிய அளவில் போராட்டத்தை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு லக்னத்திற்கும் பார்த்தால் இன்றைய வயது எப்படி இருக்கு, இன்றைக்கு என்னுடைய நிகழ்வு எப்படி இருக்கு, இன்றைக்கு நான் எப்படி இருக்கேன் என்னுடைய வருமானம் எப்படி இருக்கு,என்னுடைய குடும்பம் எப்படி இருக்கு,என்னுடைய பேர் புகழ் எப்படி இருக்கு,

 

உதாரணமாக கடக லக்னத்திற்கு 5ம் அதிபதி செவ்வாய், 7ல் உச்சமாக இருப்பார் காதல் திருமணம் நடக்கும், பெரிய யோகத்தை கொடுக்கக் கூடிய அமைப்பாக இருக்கும்.

அதுபோல் ஒவ்வொரு ஜாதகத்திலும் இன்றைய லக்னம் என்னவென்று பார்த்தால்,

உதாரணமாக கடகலக்னத்திற்கு 5ம் அதிபதி 11 ல் இருந்தால் எதிர்பாராத திடீர் திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுக்கும்.

செவ்வாய் என்பது நிறைய பேரு பார்ப்பாங்க,

செவ்வாய் எத்தனை பேருடைய திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்துது, எத்தனை பேருடைய குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துது,

என்று நிறையபேர் சொல்லுவாங்க.

எப்பொழுதும், செவ்வாய் உங்களை நேரடியாக துன்பப்படுத்துவது கிடையாது.வாழ்க்கையில் ஒரு புரிதல் வரணும்.

30 வயதிற்கு பிறகு ஜாதகம் பார்க்க வேண்டாம் என்று சொல்லுவாங்க, அப்படி கிடையாது

20 – 30 வயசு அதனுடைய வேகம் 100 மடங்கு இருக்கும்.

30 – 40 வயது அதனுடைய வேகம் 60 மடங்கு இருக்கும்.

40-50 வயது அதனுடைய வேகம் 40 மடங்கு இருக்கும்.

அதனுடைய தன்மை பொருத்து எவ்வளவு தூரம் ஓடுகிறோம் என்பது தான் வாழ்க்கை.

 

முதலில் நம்முடைய வேகம், சக்தி எவ்வளவு அதிகமாக இருக்கும்னா ?

1 மில்லி செகண்ட் -ல் அந்த தூரத்தை கடக்க முயற்சி செய்வோம்.

அந்த வேகம் ஆரம்பிக்கும் பொழுது ஒரு 20 to 30 வயது, நம்முடைய வேகம் அதிகமாக இருக்கும்.

அந்த நேரத்தில் எதிர்பாராத வகையில் முடிவெடுக்க வைக்கும்.

 

செவ்வாய் பகவானுடைய தன்மைகளாக உணவு பொருட்களை எடுத்துக் கொண்டால் காரம் அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் அதிகரிக்கும்.

உஷ்ணம் அதிகரிக்கும் பொழுது அவர்களுடைய நிலை கோபம் வந்து உடனே அந்த விஷயத்தை வெளிப்படுத்துவது.

அதுதான் செவ்வாய் தோஷம் என்று சொன்னாங்க.

காரம் சம்பந்தப்பட்டது மிளகாய், இஞ்சி,பூண்டு, வெங்காயம், மிளகு இதில் எல்லாமே காரம் அதிகம்.

காரம் சம்பந்தப்பட்ட உணவுகளை, உணவில் சேர்க்கும் பொழுது, உதாரணமாக பூண்டு சேர்க்கும் பொழுது அதனுடைய வேகம் 3 to 5 மடங்கு அதிகரிக்கும்.

உதாரணமாக கடக லக்னம் 2ல் செவ்வாய் இருக்கு, இல்லை 1, 4, 7, 8, 12ல் செவ்வாய் இந்தால் செவ்வாய் தோஷம். அது ஏதோ ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

உதாரணமாக 2ல் செவ்வாய் இருந்தால் வார்த்தைகள் மூலமாகபாதிப்பு ஏற்படுத்தும். 4ல் செவ்வாய் இருந்தால் மிளகாயை அவ்வளவு சந்தோஷமாக ருசித்து சாப்பிடக்கூடிய ஒரு அமைப்பை ஏற்படுத்தும்.

உணவு வகைகளை தான் முக்கியமாக பார்க்கணும்.

உணவு வகைகளை எவ்வளவு தூரம் கவனமாக எடுக்கிறீர்களோ அவ்வளவு தூரம் அந்த கிரகங்கள் வழி வகுக்கும்.

 

ஒரு ஜாதகத்தில் திருமணம் பண்ணும் பொழுது 20 to 30 வயது, செவ்வாய் பலமாக பார்க்கணும்.

செவ்வாய் தோஷம் இருந்தால் பரிகாரம்:.

காரம் சம்பந்தப்பட்ட உணவுகளை எவ்வளவு தூரம் குறைக்க முடியுமோ குறைச்சிக்கங்க. காரம் மட்டும் இல்லை இதோடு எந்த கிரகம் சேர்ந்திருக்கு,

உதாரணமாக சனி பகவான் சேர்ந்திருக்கு, சூரியன் சேர்ந்திருக்குனா கண்டிப்பாக புளிப்பு, உப்பு, காரம் இது மூன்றையும் கட்டுப்பாடாக வைத்திருக்கனும்.

உணவுகளுக்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதனுடைய வெளியீடு நம்முடைய உணர்வுகள்.

உணவுகள் = உணர்வுகள்

திறன்களாக இருக்கலாம், பேச்சாக இருக்கலாம் ,உழைப்பாக இருக்கலாம் எல்லாவற்றிலும் இந்த உணர்வுடைய வெளிப்பாடு இருக்கும்.

செவ்வாய் உடைய காரகத்தன்மைகளை புரிந்து கொண்டால் கண்டிப்பாக வாழ்க்கை உடைய நெறிமுறைகளை கையில் வைத்துக் கொண்டால்,

செவ்வாய் உடைய தன்மைகளை புரிந்து கொண்டு, உணர்ந்தால்

அதற்கு தகுந்தார் போல் கண்டிப்பாக 100 இல்லை 1000 மடங்கு கிரகங்கள் வழி கொடுக்கும்.

கிரகங்கள், நட்சத்திரங்கள் வழி கொடுக்கும்.

வாழ்க்கையில் ஒரு யோகத்தை பெற முடியும்.

 

ஆனால் 1, 4, 7, 8, 12ல் செவ்வாய் இருந்தால் இதை சொன்னால் கேட்க மாட்டாங்க. அப்பதான் நிறைய காரமான உணவுகள், உப்பு இதெல்லாம் நிறைய சேர்த்துபாங்க.

சொல்வதை காது கொடுத்து கேட்க மாட்டார்கள்.

இந்த மாதிரி காரமான உணவுகள் சாப்பிடும் பொழுது அந்த கோபத்தினுடைய தன்மைகள் 100 இல்லை 500 இல்லை 1000 மடங்கு கோபத்தினுடைய தன்மை , வேகம் அதிகமாக இருக்கும். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் செவ்வாய் தோஷம் பார்த்து பயப்பட வேண்டாம். அதை யோகமாக மாற்றிக்கலாம்.

 

நன்றி.

இந்த ALP ஜாதகருக்கு வேலை, தொழில் எது சிறந்தது

 

அனைவருக்கும் வணக்கம்.

அட்சய லக்ன பத்ததி முறையில் ஒரு உதாரண ஜாதகம் பார்ப்போம்.

ஜாதகருக்கு வேலை சிறப்பாக இருக்குமா? தொழில் சிறப்பாக இருக்குமோ?

அவருக்கு எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டது என்று பார்க்கலாம்.

இந்த ஜாதகருக்கு வயது 52, அவருடைய பிறப்பு லக்னம் துலாம், 2 வருடம் துலாம் லக்னத்தில் இருந்திருக்கு, 12 வயது வரையும் விருச்சிக லக்னம் ,பொதுவாக அட்சய லக்னத்தில் பிறப்பு லக்னம் என்பது குழந்தை பருவம் ஜாதகம் பார்க்க முக்கியத்துவம் கொடுப்பதில்லை.ஏன்னா அந்த குழந்தைகள் தாய் தந்தையரை சார்ந்துதான் இயக்கும். 10 வருடம் காலம் வரையும் எடுத்துக்கலாம்.12 வயது வரை உள்ள பருவமும் அதற்குப்பின் உள்ள பருவமும் பெற்றோரை சார்ந்தது தான் இருக்கும்.

தனிப்பட்ட முறையில் அவர்களுடைய கல்வி தகுதிகள் 20, 22 வயதிலிருந்து பார்க்கலாம்.

அவர்களுடைய தனிப்பட்ட திறன் வேலை நல்லா இருக்குமா,

தொழில் நல்லா இருக்குமா,அவர்களுடைய 22 வயதிற்க்கு பிறகு இந்த ஜாதகத்தில் பார்க்கலாம்.

அடுத்து 22 வயதிலிருந்து 32 வயது வரை மகர லக்னம்,

லக்னாதிபதி சனி,பத்து வருடத்தை இயக்கக்கூடிய அதிபதி சனி, 4ம் வீட்டில் நல்ல அமைப்பில் தான் இருக்கார்.

சனீஸ்வரன் தன்மை நீச்சமாக இருந்தாலும் , லக்னாதிபதி 10ம் வீட்டை பார்ப்பதால் தொழில் சார்ந்த நோக்கத்தோடு தான் இருப்பார்.

வேலைக்கு போகக் கூடிய எண்ணம் இருக்காது.

அதில் 10ம் வீட்டு அதிபதி சுக்கிரன், 10ம் வீட்டில் பலமாக இருக்கு.

இவருக்கு வேலையை விட தொழில் நல்ல அமைப்பில் இருக்கு,

 ஏன்னா? 10ம் அதிபதி பலமாக இருக்கு.

குரு சந்திரன் 10ம் வீட்டில் இருக்கு, இருக்கலாமா?

7ம் வீட்டு அதிபதி சந்திரன் 10ம் வீட்டில் இருக்கலாம் ஏன்னா? கூட்டி தொழில் சார்ந்த நிகழ்வுகள் உண்டு, இது நல்லா இருக்குமா?

ALP லக்னத்திற்கு 12ஆம் அதிபதி குரு , 3ம் அதிபதி குரு 10ம் வீட்டில் இருக்கிறார். ஜாதகருடைய எண்ணங்கள், செயல்கள் எல்லாமே தொழிலை நோக்கி தான் போகும். இவருக்கு தொழில் செய்யக்கூடிய யோகமும் இருக்கு. ஆனால் இவருக்கு விரயாதிபதி தொழிற் ஸ்தானத்திலிருந்து குருவாக இருக்கிறார், அதனால் குரு சார்ந்த தொழிலை அவர் கையில் எடுக்கக் கூடாது எடுத்தால், அவருக்கு நஷ்டம் உண்டு.

ஆனால் இவர் குரு சார்ந்த தொழிலை செய்திருக்கிறார்.

பைனான்ஸ் சம்பந்தப்பட்ட தொழில், அதேபோல் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி இருக்காங்க.

10ம் இடத்தில் குரு இருக்கு அது சார்ந்து தொழில் எண்ணத்தை கொடுத்து இருக்கு,ஆனால் அவர் விரயாதிபதியாக இருந்ததால் அந்த தொழில் சார்ந்த நிகழ்வுகள் அவருக்கு சிறப்பை கொடுத்து இருக்காது.

1993 ல் ஆரம்பித்து 2015 வரையும் நஷ்டத்தோடே இந்த தொழிலை செய்ததாக சொன்னாங்க.

ALP லக்னம் கும்ப லக்னம் வரும்பொழுது லக்னாதிபதி சனி 3ம் இடத்தில்,

தொழிற் ஸ்தானத்தின் அதிபதி செவ்வாய் லக்னத்திற்கு 7ம் வீட்டில்,

அதனால் இங்கு தொழில் சார்ந்த நிகழ்வுகள் 7ல் இருந்து நடத்தி இருப்பதால் ஒர் அளவு தொழில் செய்து இருக்காங்க.

ஒருவருடைய சப்போர்ட் மூலமாக தான் இவர் தொழில் செய்து இருக்கிறார் காரணம் என்னவென்றால் ஜாதகர் தொழிலுக்கு 8ம் வீட்டில் இருந்து விட்டார்.

அதனால் ஜாதகர் தனிப்பட்ட முறையில் தொழில் சார்ந்த நிகழ்வுகளில் இருக்க முடியவில்லை.பார்ட்னர்ஷிப் மூலம் அந்த தொழில் ஓரளவு போனது.

  ALP லக்னம் மீன லக்னம் வரும்பொழுது ,2015 ல் தான் அந்த பள்ளிக்கூடம் சம்பந்தப்பட்ட, பினான்ஸ் சம்பந்தப்பட்ட நஷ்டம் அதிகமாக ஏற்பட்டு அந்த பள்ளிக்கூடம் மூடுறாங்க.

இது எதனால் இங்கு வரும் பொழுது நடந்தது,

லக்னாதிபதி குரு லக்னத்திற்கு 8ம் வீட்டில் , 8ம் வீட்டில் குரு தொடர்பு பெறும் பொழுது பிரச்சனைக்குரிய காலம் இங்கு ஆரம்பித்தது.

5ம் அதிபதியும் 8ம் இடத்தில் இருப்பதால் மனசு ஒரு நிலையில் இருக்காது.

தொழில் சார்ந்த நிகழ்வுகள் இவருக்கு யோகத்தை தராது.

லக்னாதிபதியும் 8ம் வீட்டில், 10ம் வீட்டு அதிபதியும் 8ம் வீட்டில் இருப்பதால்,

இந்த இடத்தில் தொழில் சார்ந்த விஷயங்களை சமாளிக்க முடியவில்லை.

இந்த ஜாதகத்தில் இன்றுவரையும் இந்த கஷ்டம் தொடர்ந்துட்டு தான் இருக்கு, கடன் அதிகமாக இருக்கு, ஏன்னா?

இந்த லக்னத்திற்கு 6ம் அதிபதி சூரியன் 7ம் வீட்டில் இருக்கு ,

7ம் வீட்டில் இருந்து 7ம் அதிபதியோடு சேர்ந்து லக்னத்தை பார்க்கிறார்,

அதனால் இங்கு பார்ட்னர்ஷிப் மூலம் முயற்சி செய்து பார்த்து இருக்காங்க, ஆனால் முடியவில்லை.இவருக்கு நஷ்டம் என்பது 7ம் வீட்டிற்கு லாபமாக முடிந்தது.அதனால் அந்த பள்ளிக்கூடம் நிறுத்திட்டாங்க.

இவருக்கு எப்பொழுது மாற்றம் வரும்?

ALP லக்னம் மேஷ லக்னமாக வரும் பொழுது 10ம் வீட்டு அதிபதி சனி லக்னத்தில் இருக்கு, லக்னாதிபதி செவ்வாய் 5ம் வீட்டில் இருக்கு,

இப்பவும் இவருக்கு தொழில் செய்யக்கூடிய எண்ணங்கள் தான் அதிகமாக இருக்கும்.இப்பவும் தொழில் நல்லா நடத்த முடியாது,

ஏன்னா? இந்த லக்னத்தின் அதிபதி 5ம் வீட்டில் இருந்து தொழிலுக்கு 8ம் வீடாக இருப்பதால் ஜாதகருடைய எண்ணமும் ,செயலும் அவருக்கு எதிராக போய்டும்.

அதனால் தொழிலை சிறப்பாக செய்ய முடியாது.

மகர லக்னம் வரும்பொழுது குரு சம்பந்தப்பட்ட தொழில் எடுக்காமல், மற்ற கிரகங்களுடைய தொடர்பு மகர லக்னமாக வரும் பொழுது 2 வது வீடு சனீஸ்வரனாக இருந்து, அவர் 4 ல் இருந்து 10ம் வீட்டை பார்க்கும் பொழுது,

உற்பத்தி சம்பந்தப்பட்ட தொழில் செய்திருந்தால் அவருக்கு அந்த வருமானம் வந்திருக்கும்.

அடுத்து கும்ப லக்னம் வரும்பொழுது வருமானம் குரு, தொழிலுக்கு இது விரயமாக போனதால் தொழில் சார்ந்த இவர் நீடித்திருக்க கூடாது.வெளியில் இருந்து ஏதாவது கமிஷன் பேசிக் பண்ணிருந்தால் யோகத்தை கொடுக்கும். காரணம்? இங்கு வரும்பொழுது 2ம் வீட்டை சூரியனும் புதனும் பார்ப்பதால் கம்யூனிகேஷன் கமிஷன் பேசிக்கில் அவர் வருமானத்தை பார்த்திருக்கலாம்.

மேஷ லக்னம் வரும்போது தொழில் முதலீடு போடக்கூடாது.மேஷ லக்னத்திற்கு வருமானத்தின் அதிபதி சுக்கிரன் 7ம் வீட்டோடு தொடர்பில் இருப்பதால்,மனைவி சார்ந்த நிகழ்வுகள் மூலம் ஏதாவது வருமானத்தை தேடி கொள்ளலாம்.

நன்றி.

செவ்வாயும் காரமும்/சுக்கிரனும் இனிப்பும்

அனைவருக்கும் வணக்கம்,
அட்சய லக்னபத்ததி ஜோதிட முறையில் ஒரு நண்பர் கேள்வி கேட்டிருந்தார், ஜோதிடம் என்பது உணவே மருந்து அந்த மருந்தே வாழ்க்கையுடைய அடிப்படையாக இருக்கு,
உணவு சார்ந்த விஷயங்களையும்,ஜோதிடம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒப்பீடு செய்யுங்கள் என்று கேட்டாங்க.

கண்டிப்பாக எல்லாத்துடைய அடிப்படை மூலாதாரம் உணவு தான்.
இது வாழ்க்கையில் எவ்வளவு தூரம் நடக்கும், எவ்வளவு தூரம் புரியும் என்று தெரியவில்லை. இதை புரிந்து கொண்டால் கண்டிப்பாக நம்முடைய வாழ்க்கையில் நிறைய நிகழ்வுகளை மாற்ற முடியும்.

உதாரணமாக எப்பவும் இனிப்பு என்று சொல்லுவோம்.
இனிப்பு என்ற நிகழ்வைப் பொறுத்தவரையில் எப்பொழுதும் இனிப்பான விஷயங்கள் ,ரொம்ப இனிப்பா பேசுறாங்க என்று சொல்லுவோம்.அவங்களுக்கு சுக்கிரன் பலமாக இருக்கோ என்று சொல்வோம் இனிப்பு சம்பந்தப்பட்டது உணவு சம்பந்தப்பட்டது நிறைய கிடைத்தால் ,சாப்பாடு யோகமாக கிடைத்தால் சுக்கிரன் பலமாக இருக்கோ என்று சொல்லுவார்கள் பார்த்து பேசும் பொழுது அது உண்மைதான்.

சூரியனும் சுக்கிரனும் சம்பந்தப்படும்பொழுது, அதில் சுக்கிரன் பலப்படும் பொழுது இந்த இனிப்பு சம்பந்தப்பட்ட உணவு வகைகளை அதிகமாக பயன்படுத்துவார்கள்.
இனிப்பு என்பது கரும்பு ஸ்வீட் கிடையாது. நாம் சாப்பிடக்கூடிய அரிசி தான் இனிப்பு.
கிழங்குகள் கூட இனிப்புதான்.அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய மாவு பொருட்கள் எல்லாமே இனிப்போடு சம்பந்தப்பட்டது தான்.
உதாரணமாக இதனுடைய தாக்கம் குறையும்பொழுது,
இப்போ சுக்கிரன் பலமாக இருந்தால், அவருக்கு உணவு நல்லபடியாக அமைந்து இனிப்பு சம்பந்தப்பட்டது சமநிலை ஆகும்.

ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் நல்லா இருக்கா? நல்லா இல்லையா? என்பதை ஒரு ஜாதகரை பார்த்தால் கண்டுபிடிக்கலாமா?
என்று கேள்வி இருந்தால் கண்டுபிடிக்கலாம்.
ஒருவர் உடம்பை பொருத்தவரையில் அவருடைய அமைப்பு பலமாக இருக்கும். அதுவே சுக்கிரன் பலப்படவில்லை என்றால் எப்பொழுதுமே சோர்வு, இனிப்பு பொருத்தவரையில் எளிதாக சோர்வுதன்மை கொடுக்கக்கூடியது.
அதேபோல் இனிப்பு அதிகமானாலும் பிரச்சனை, குறைந்தாலும் பிரச்சனை.
கேரட் இனிப்பு சார்ந்த விஷயம், அதேபோல் அரிசி சாப்பிட்டுவிட்டு கடைசியாக கார்போஹைட்ரேட் அந்த எச்சில் முழுங்கும் பொழுது நாக்கை கவனித்து பார்த்தால் நல்லா இனிக்கும்.
சுக்கிரன் பலமாக பலமாக அதிகமாகும் பொழுது உடல் சோர்வு ஏற்படும்,
அதேபோல் குறையும் பொழுது உடல் சோர்வு ஏற்படும்.
சுக்கிரன் பலமாக இருந்தால் நம்முடைய உடம்பில் நிறைய விஷயங்களை பார்க்க முடியும்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு அமைப்பு இருக்கு.
செவ்வாய் என்றால் காரம், சுக்கிரன் என்றால் இனிப்பு
இதில் இனிப்பு என்றால் சுக்ரன் மட்டும் கிடையாது, புதன், சந்திரன், சூரியன் இது எல்லாமே இதனுடைய தொடர்புடைய நிகழ்வாக அமையும்.
பூமிக்கு கீழ் உள்ள கிழங்கு வகைகள் சாப்பிடும் பொழுது அதில் இனிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிகமாக இருக்கும்.
சுக்ரன் பலமாகவோ பலவீனமாகவோ இருந்தால் கண்டிப்பாக இனிப்பு சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் வரும். அதனால் கவனமாக இருக்கனும்.

உதாரணமாக ALP லக்னத்திற்கு 6,8,10,12ல் சுக்கிரன் இருந்தால் ,அப்பொழுது மாவு பொருட்கள், இல்லை அரிசி சம்பந்தப்பட்டது,
கிழங்கு வகைகளில் கேரட், உருளைக்கிழங்கு ,கரும்பு ,
அன்றாட நிகழ்வுகளில் இருக்கக்கூடிய பேக்கரியில் சாப்பிடக்கூடிய இனிப்பு பொருட்கள், வெள்ளை சீனி இது எல்லாமே எளிதாக உடம்பில் நேரடியாக ஒரு பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கும்.
6, 8, 10, 12ல் சாப்பிட வைக்கும் அதுவே மற்ற இடத்தில் இருந்தால் குறைவாக லோ சுகர் அதனால் உடல் சோர்வு 1 நிமிடமோ, 5 நிமிடத்திலோ , இல்லை பதற்றமாகும் பொழுது,பயப்படும்பொழுது அந்த நிகழ்வை சுக்ரன் கொடுக்கும்.

உதாரணமாக ALP தனுசு லக்னம் போகும் பொழுது 6ம் அதிபதி சுக்ரனாக வரும் பொழுது கிழங்கு வகைகளை சாப்பிடும் பொழுது தன்னை அறியாமல் சாப்பிட வைக்கும்.உடல் பருமனாவது,
உடல் பருமனுக்கும் அதே கிழங்கு வகைகள் சுக்ரன் தான்,
உடல் இளைப்பதற்கும் அதே கிழங்கு வகைகள் சுக்ரன் தான்.
உங்கள் ஜாதகத்தில் ALP லக்னத்திற்கு சுக்கிர பகவான் எங்க இருக்கு?
எதற்கு தகுந்த மாதிரி 6, 8, 10, 12ல் இருந்தால் நீங்கள் உணவை கட்டுபடுத்தனும். சுக்ரன் பலகீனப்பட்டால் மன அழுத்தம் கொடுக்கும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தோஷமாக இருக்கணும் என்றால் சுக்கிரன் பலப்பட்டு இருந்தால் கண்டிப்பாக சந்தோஷமாக இருக்கும்.
அதனால் உணவு வகைகளை பொறுத்தவரையில் அளவான சாப்பாடு சாப்பிடனும். சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் நல்லா இருந்தால் சந்தோஷமாக இருக்கும்.அதுவே 6, 8, 10, 12ல் இருந்தால் உணவுகளை கவனமாக பார்த்து சாப்பிடணும்.
கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை யோகமாக மாறும்.

நன்றி.

வேலையா / சுயதொழிலா

அனைவருக்கும் வணக்கம்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இந்த ஜாதகத்தில் ஒரு கேள்வி, என்ன கேள்வி கேட்கிறாங்களோ அதற்கான நிகழ்வு நேரடியாக பார்க்கலாம்.

இந்த ஜாதகர் மேஷ லக்னத்தில் இருந்து இன்றைக்கு இவருடைய நிகழ்வு கன்னி லக்னத்தில் தொடங்குகிறது.

ஜாதருடைய கேள்வி தொழில் செய்யலாமா? தொழில் செய்தால் எப்படி இருக்கும்?

லக்னத்திற்கு 10 ம் வீட்டில் எந்த கிரகம் இருக்கு என்று பார்க்கனும்.

ஏன்னா? முதலில் 10 வீடு சம்பந்தப்பட்ட கேள்வி தொழில் செய்யலாமா?

அப்போ 5க்கும் 6க்கும் உடைய சனி 10 ல்.

5 என்பது மனசு, 6 என்பது கடன், வம்பு, வழக்கு, நோய்க்கு 10ம் இடத்தில் இருக்கு.அப்போ கடன் பண்ணா நோய் வரும்,தொழிலில் கடன் வம்பு வழக்கு வரும் தேவையில்லாத பிரச்சனை வரும்.

6ம் அதிபதி 10 ல் இருந்தால் கண்டிப்பாக கடன் வாங்கி தான் தொழில் செய்யணும்.மாற்று கருத்து இல்லை.

5ம் அதிபதியாக இருந்து 10ம் அதிபதியுடன் தொடர்பில் இருந்தால் கண்டிப்பாக முன் பின் முரணாக எப்பவும் முடிந்தபின் முடிவு எடுப்பார்கள்.

எப்பொழுதும் ஆரம்பிக்கும் முன் தான் முடிவு எடுக்கணும்.

 

அதனால் நீங்கள் ஒரு முதலீடு செய்து தொழில் தொடங்கணும் என்றால் கண்டிப்பாக ஒரு அறிவுரை ஒரு வழிகாட்டக் கூடிய ஜோதிடர் உங்களுக்கு வேணும்.எந்த ஜோதிடராக இருந்தாலும் பாருங்கள்.

 

கன்னிலக்னத்தில் 10ம் வீட்டில் சனி பகவான் இருப்பது சர்வீஸ் சம்பந்தப்பட்டது.

இவ்வளவு நாள் வேலை பார்த்தேன் இப்பொழுது தொழில் தொடங்கணும்,

கன்னி லக்னம், துலாம் லக்னம் ஷேர் மார்க்கெட் சம்பந்தப்பட்டது. எப்பொழுதும் முடிந்த பின் தான் முடிவு எடுப்பார்கள்.

எல்லாம் விரயமான பெண்தான் முடிவெடுப்பார்கள்.

ALP லக்னம் கன்னி லக்னம் , 10ம் இடத்தில் சனி பகவான் இருந்தால்

இப்படிதான் முடிவு எடுப்பார்கள்.

அவசரப்பட்டு நாம் கண்ட்ரோலில் இருக்கோம் என்று போராடக்கூடிய ஒரு நிகழ்வு ஏற்படுத்தும்.

லக்னாதிபதி புதன், விரயதிபதி 2ல் இருக்கார்.

விரயத்தை பண்ணக்கூடிய தொழில் அமைப்பு, உத்திரம் நட்சத்திரம்,அவர் விரயத்தை பண்ண சூரியன் 2ல் நீச்சம்.

கம்யூனிகேஷன் சம்பந்தப்பட்ட 3 செவ்வாய் அவரும் 2ல் எதார்த்தமாக இல்லை.

உத்திரம் நட்சத்திரம் 3 வருடம், 4 மாதம் விரயத்தை கொடுக்கக் கூடியது.

சந்திரன் 10க்கு 12, 9ல் சந்திரன் கேதுவுடன் சேர்க்கை,

அங்கேயும் எதிர்பார்த்த மாதிரி இல்லை. 3ல் ராகு,வேலைக்கு தான் சிறப்பு வேலை சம்பந்தப்பட்ட விஷயம் யோகத்தை கொடுக்கும் , அதுவே தொழில் சம்பந்தப்பட்ட விஷயம் சிறியதாக ஒரு 4, பேர் அமைப்பு ஏற்படுத்தி பண்ணலாம்.

முதலீடு போடடு இந்த ஜாதகர் தொழில் செய்தால் கண்டிப்பாக பிரச்சனையாக வரும்.

 

நன்றி.