ஜோதிட சூட்சுமங்கள் மற்றும் அதன் பலன்களும் பரிகாரங்களும் முனைவர் வாக்குயோகி பொதுவுடை மூர்த்தி

Continue reading “ஜோதிட சூட்சுமங்கள் மற்றும் அதன் பலன்களும் பரிகாரங்களும் முனைவர் வாக்குயோகி பொதுவுடை மூர்த்தி”

2023 வருடம் இப்படித்தான் இருக்கும்.

வணக்கம்.

 

அட்சய லக்ன பத்ததி முறையில் 2023ம் ஆண்டின் ALP நட்சத்திர பலன்

(பரணி 1, 2, 3, 4 பாதம்) :

 

அட்சய லக்னம் மேஷம்,

அட்சய நட்சத்திர புள்ளி பரணி நட்சத்திரம் போனால் இந்த காலகட்டம் எப்படி இருக்கும்.

ஒவ்வொரு நட்சத்திர பாதம் வலிமையானது.

பரணி நட்சத்திரம் 1, 2, 3, 4 பாதங்களுக்கு ஒரு பொதுவான பலன்கள்:

 

தொழில் சார்ந்த மாற்றங்களை குறிக்கக்கூடிய ஒரு அமைப்பு தான் பரணி நட்சத்திரம்.

வாழ்க்கையில் ஏதாவது தொழில் செய்யணும், குறிப்பாக ஹோட்டல் சம்பந்தப்பட்டது, கேட்டரிங் படிக்கணும் இப்படி எண்ணங்கள் முழுவதும் உணவு சார்ந்து, பயணம் சார்ந்து தொழிலில் ஏதாவது வேலை மாற்றம் வேணும், ஏதாவது ஒரு தொழில் செய்யணும் இதுதான் பரணி நட்சத்திர அமைப்பு.

 

என்னுடைய நண்பர் தொழில் செய்யணும் என்று ஆசைப்பட்டு நஷ்டமடைந்தார்.

ஒரு தொழில் செய்து நஷ்டமடைந்து விட்டது, நஷ்டமடைந்ததை சம்பாதிக்க அவருக்கு 10, 15 வருடங்கள் ஆகியது.

தொழில் செய்வது நல்ல விஷயம் தான்.

ஆனால் அந்த தொழிலுக்கான கால நிர்ணயம் என்ன என்பதை முடிவு செய்துவிட்டு பன்னுங்க

 

அட்சய லக்ன பத்ததியில் இதை தெளிவாக சொல்ல முடியும்.

இந்த காலகட்டத்தில் தொழில் செய்யலாம், இந்த காலகட்டத்தில் தொழில் செய்யக்கூடாது, தொழில் சார்ந்த விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்கனும்.

 

ஹோட்டல் வைக்கலாம், ஆனால் வியாபாரம் அவ்வளவு சிறப்பாக இருக்காது.

2023, இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த தொழில் செய்தாலும் வாடிக்கையாளர் கூட்டம் இருக்காது.

அதனால் பெரிய முதலீடு செய்ய வேண்டாம்.

இருக்கக்கூடியதில் ஏதாவது அசையா சொத்தாக வாங்கி வைக்கலாம்.

 

அடுத்து வரக்கூடிய 4 வருடங்களுக்கு இடம் சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்யும் பொழுது கவனமாக முதலீடு செய்யனும்.

இந்த காலகட்டங்கள் நிலங்களை விற்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையக்கூடிய நிகழ்வு.

 

இந்த காலகட்டங்கள் நிலங்களை விற்று , விற்ற பணத்தை கொஞ்சம் தூரத்தில் ஏதாவது இடம், இல்லை விவசாய சம்பந்தப்பட்ட இடங்களோ வாங்கி நீங்கள் முதலீடு செய்யலாம்.

இல்லை தங்கத்தில் முதலீடு செய்யலாம்

இப்படி செய்யலாம் தவிர, இல்லை 2 வீடுகட்டி வாடகைக்கு விடக்கூடிய அமைப்பு உண்டு.

அசையா சொத்துக்கள் மூலம் வருமானத்தை கொடுக்குமே தவிர வேறு எதிலும் வருமானம் வராது இந்த காலகட்டம்.

 

படிப்பு எப்படி இருக்கும்?

இந்த காலகட்டம் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் பிரச்சனையாகத்தான் இருக்கும்.

உடல் சார்ந்த பிரச்சனைகளாலே படிக்க முடியாது.

 

பரணி நட்சத்திரம் 1, 2, 3, 4 பாதம் போகும்பொழுது உடல் சார்ந்த நோய்கள்,

உடல் சார்ந்த பிரச்சனைகள்

கண்டிப்பாக இருக்கும்.

அதனால் கவனமாக இருக்கனும்.

 

முயற்சிகள் எப்படி இருக்கும்?

முயற்சி சார்ந்த விஷயங்கள் நல்லா இருக்கும்.

முயற்சி செய்தால் கண்டிப்பாக வாய்ப்பு உண்டு.

ஆனால் தொழிலுக்காக முயற்சி செய்ய வேண்டாம்.

தொழிலுக்காக முயற்சி செய்தால் கடனாக, பிரச்சனையாக தான் போகும்.

போட்டித்தேர்வு எழுதலாம்.

 

வீடு வாங்கலாமா?

வீடு வாங்கினால் கண்டிப்பாக இந்த இடத்தில் கொஞ்சம் பிரச்சனை இருக்கும்.

கொஞ்சம் கவனமாக பார்த்து வாங்கலாம்.

கல்யாண மண்டபம், காம்ப்ளக்ஸ் கட்டலாம்.

பழைய வீடு வாங்கி மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

அசையா சொத்துக்களில் முதலீடுகள் நல்லா இருக்கும்.

 

குழந்தைகள் மூலமாக, பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.

நோய், கடன், வழக்கு இப்படி ஏதாவது ஒரு வகையில் பிரச்சனை இருக்கும்.

ரொம்ப கவனமாக இருக்கணும்.

 

கடன் சார்ந்த விஷயங்கள் தலைக்கு மேல் பிரச்சனை இருக்கும்

தலையிலும் பிரச்சனை இருக்கும்

இந்த நேரத்தில் முடி கொட்டுவது,

தலைவலி சார்ந்த பிரச்சனை,

இல்லை, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை,

வரும்.

அதனால் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணும்.

 

திருமண வாய்ப்புகள் எப்படி இருக்கும்?

பெண் வீட்டு பக்கத்தில்,

இல்லை வேலை செய்யக்கூடிய இடத்தில் பெண் இருக்கும்.

கண்டிப்பாக யோகத்தை கொடுக்க கூடிய அமைப்பு உண்டு.

பரணி நட்சத்திரம் 1ம் பாதம் போனால் கண்டிப்பாக காதல் திருமணம்.

பரணி நட்சத்திரம் 3ஆம் பாதம் போனால், வீட்டில் பார்க்கக்கூடிய திருமணம்,

எதிர்பாராத திடீர் திருமணம் உண்டு.

 

உடல் சார்ந்த தனிப்பட்ட நோய்வாய்படுமா?

தலைவலி மட்டும் தான் பிரச்சனை.

 

இந்த காலகட்டத்தில் அப்பாக்கு எப்படி இருக்கும்?

அப்பாக்கு கடனாகக் கூடிய வாய்ப்பு உண்டு.

வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மாற்றம் உண்டு.

இடம் விட்டு இடம் மாறிக்கலாம்,

வேலையில் இடம் மாற்றம் உண்டு சம்பளம்

இக்கரைக்கு அக்கரை பச்சை இருக்கக்கூடிய கம்பெனியை விட மற்றொரு கம்பெனியில் சம்பளம் அதிகம் என்று சொல்லி ஏமாற்றுவார்கள் அதனால் இப்போது

இடமாற்றம் செய்யாமல் இருப்பது நல்லது.

 

லாபம் உண்டா?.

லாபம் உண்டு.பழைய சொத்துக்கள் மூலமாக லாபம் உண்டு,

அதை பயன்படுத்திக் கொள்ளவும்.

 

தூக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பிரச்சனையாக இருக்கும்.

வேலையில் அழுத்தம் இருக்கும்,

ஒரு சம்பளத்தை கொடுத்து இரண்டு வேளை வாங்குவார்கள்.

இப்படி தான் போகும்.

அடுத்த 2023 வருடம் இப்படித்தான் இருக்கும்.

 

ஜோதிடம் எல்லோரும் படிங்க, அப்போதான் உங்கள் ஜாதகம் உங்களுக்கு புரியும்.

நன்றி.

2023 – அஸ்வினி நட்சத்திரம் 2ம் பாதம் எப்படி இருக்கும்?

வணக்கம்.

2023 – அஸ்வினி நட்சத்திரம் 2ம் பாதம் எப்படி இருக்கும்?

அஸ்வினி நட்சத்திரம் 2ம் பாதம் செல்லும் காலகட்டத்தில் என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? இது பொதுவான பலனாக இருந்தாலும், நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய சில முக்கியமான நிகழ்வுகளை இங்கு பேசலாம்.

எதிர்பாராத நிகழ்வுகள் இந்த ஜாதகத்தில் நடக்குமா? கண்டிப்பாக நடக்கும்.
உதாரணமாக, படிப்பு சார்ந்த விஷயங்கள் நல்லா இருக்கும்,
திருமணம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு இந்த காலகட்டத்தில் எதிர்பாராத திடீர் திருமணம்.

அஸ்வினி நட்சத்திரம் – 2ம்பாதம் போகும் பொழுது “எதிர்பாராத ” என்ற நிகழ்வு உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமாக இருக்கும்.
எதிர்பாராத திருப்பங்கள், திடீர் திருப்பங்கள்,
எதிர்பாராத திடீர் பிரச்சனைகள்,
இந்த விஷயங்கள் தான் பார்க்க போகிறோம்.

உதாரணமாக,
23 வயது முதல் 33 வயது வரை ஒரு ஜாதகருக்கு அஸ்வினி நட்சத்திரம் – 2ம் பாதம் ALP புள்ளியாக போனால்,
கண்டிப்பாக திருமணம் நடக்கும்.
இது காதல் திருமணமாக இருக்கும்.
இவர்களுடைய எண்ணங்கள் பிரதிபலிப்புகள் முழுக்க முழுக்க படிப்பு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாது.
2023 ல் முழுவதும் காதல் சார்ந்த விஷயங்கள் அதிகமாக இருக்கும்.
கவனமாக இருக்கனும்.
மேஷ லக்னம்,அஸ்வினி நட்சத்திரம் 2ம் பாதம் போகும் பொழுது முழுக்க முழுக்க கவனமாக இருக்கனும்.
அது யாரால் பிரச்சனை வரும்னா ? நண்பர்களால் பிரச்சனை இருக்கும்.

உடல் சார்ந்த விஷயங்கள் பெரிய அளவில் பிரச்சனை இருக்காது.
கண் சம்பந்தப்பட்ட பாதிப்பு இருக்கலாம். உதாரணமாக 40 to 42 வயது வரை ஒருவருக்கு ALP லக்னம் மேஷ லக்னம், அஸ்வினி நட்சத்திரம் 2ம் பாதம் போகும்பொழுது கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும்.

முயற்சி செய்யலாமா? பண்ணக்கூடாது
இப்போ முயற்சி செய்தாலே பிரச்சனை இருக்கும்.
எந்த முயற்சி செய்தாலும் தோல்வி தான்.
பிரச்சனையில் முடியும்.
இந்த காலகட்டங்கள் மிக கவனமாக இருக்கனும்.
வாய்ப்புகளை உருவாக்காதிங்க,
வாய்ப்புகள் வரும் பொழுது பயன்படுத்தி கொண்டால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.

வீடு வாங்கலாமா?
வீடு வாங்கலாம், ஆனால் பழைய வீடாக தான் இருக்கும், உடைந்த வீடாக இருக்கும்,
அதுவும் எதிர்பார்த்தது போல் இருக்காது.
பழைய வீடு வாங்கினால் சந்தோஷம்.
இடம் வாங்கலாமா? இடம் வாங்கினால் கண்டிப்பாக டாக்குமெண்ட் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும்.

குழந்தை பிறப்பு உண்டு.
கண்டிப்பாக குழந்தை பிறக்கும்.

அஸ்வினி நட்சத்திரம் 2ம் பாதம் கண்டிப்பாக கடன் சார்ந்த பிரச்சனை இருக்கும்.
திருமணம் சார்ந்த உறவுகளுக்கு திருமணம் செய்யலாமா? எதிர்பாராத தீடீர் திருமணம்.
இது பொருத்தம் இருக்கு, இல்லை என்று 6 மாதத்திற்கு முன் பார்த்த ஜாதகம், இப்போ திரும்ப பார்க்கும் பொழுது நல்ல திருமண உறவை அமைத்துக் கொடுக்கும்.

தொழில், முதலீடு சார்ந்த விஷயங்களில் இந்த காலகட்டம் கவனமாக இருக்கனும்.
முதலீடு செய்து கூட்டுத்தொழில் செய்யலாம்.
ஆனால், ஒருவருக்கு தான் லாபம், 2 பேருக்கு லாபம் கிடையாது.
ஆனால், Building கட்டி தரேன், நீ வாடகையை எனக்கு கொடு அப்படி செய்யலாம்.

இந்தலக்னத்திற்கு அப்பா நல்லா இருக்கும்,யோகத்தை கொடுக்கும்.
இந்த காலகட்டத்தில் அப்பாவால் பெரும் யோகம் உண்டு.
தொழில் நல்லா இருக்கும்.
இந்த காலகட்டத்தில் புதிய முதலீடு வேண்டாம்.

லாபம் எப்படி இருக்கும்?
எதிர்பாராத திடீர் லாபம், வருமானம் கொடுக்கும்.
பதவி உயர்வு கொடுக்கும்.
இந்த நேரத்தில் தான் பதவி உயர்வு பதிவு செய்யனும்.

இந்த காலகட்டத்தில் தூக்கம் சார்ந்த விஷயங்கள் பிரச்சனையாகத்தான் இருக்கும்.
ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும்.
எதனால் தூக்கம் பிரச்சனை?
தொழில் சார்ந்த விஷயங்களால் தூக்கம் பிரச்சனை.
வேலை, வேலை சம்பந்தப்பட்ட இடத்தால் பிரச்சனை.
கடனால் பிரச்சனையாக இருக்கும்.
கவனமாக இருக்கனும்.

நன்றி.

 

 

எண்ணங்கள் என்பது சந்திரன் முடிவுகள் என்பது குருபகவான்

வணக்கம்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஏதாவது ஒரு நிகழ்வுகளுக்கு ஏதாவது வழி கிடைத்துவிடாதா? இல்லை ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்துவிடாதா?

என்ற எல்லாருடைய ஏக்கத்திற்கும் இந்த ஜோதிடத்தில் மிகப்பெரிய வளர்ச்சி, மிகப்பெரிய மைல்கல் என்பது

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இருக்கு.

 

என் வாழ்க்கையில் இப்போ என்ன நடக்கும், நாளைக்கு என்ன நடக்கும், அடுத்து ஒரு மாதம் எப்படி இருக்கும், அடுத்து ஒரு வருடம் எப்படி இருக்கும்.

இந்த நிகழ்வு மிகப்பெரிய நீண்ட தூரத்தில் இந்த அட்சய லக்ன பத்ததி உடைய வளர்ச்சி இருக்கு.

 

ஒரு மனிதன் எப்படி வளர்ச்சி பெறுகிறதோ, மாற்றம் அடைகிறதோ,

அதேபோல் ஜென்ம லக்னம் வளர்ந்து, நகர்ந்து மாற்றம் அடைந்து ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நடந்த, நடக்ககூடிய நிகழ்வுகளை கூறுவதுதான்

அட்சய லக்ன பத்ததி.

 

அட்சய லக்ன பத்ததி என்ற நிகழ்வு

youtube வீடியோ நிறைய இருக்கு.

கண்டிப்பாக உங்களுக்கு உங்களுடைய வாழ்க்கையில் உதவும்.

ஏன்னா? வழிக்காட்டுதல் இல்லாமல் நீங்கள் போனால் எப்படி இருக்கும்.

அதாவது எங்க போறது, எப்படி போறது என்று தெரியாது.

இந்த இரண்டிற்கும் விளக்கம் சொல்வதுதான் ஜோதிடம்.

 

இந்த விளக்கத்தை இவ்ளோ தூரத்தில், இவ்ளோ வேகத்தில் இந்த இடத்திற்கு போனால் உங்கள் வாழ்க்கை பயணம் வெற்றியாகும்.

ஒரு நிகழ்வு :

நான் சமஸ்கிருதம் கத்துட்ட, அந்த நிகழ்வு சரியா முடியல, நான் பரதநாட்டியம் கத்துகிட்டேன் அது சரியா பண்ண முடியல. இப்படி நிறையா நிகழ்வுகள் சொன்னப்போ நான் சொன்னேன் ஒரு

பொருத்தமில்லாத சின்ன பாட்டிலுக்கு ஒரு பெரிய மூடியோ, பெரிய பாட்டிலுக்கு சின்ன மூடியோ, போட்டால் அது பாதுகாப்பாக இருக்குமா? இருக்காது

அதுபோல் தான் நம் வாழ்க்கை.

எனக்கு எது புடிக்குமோ, எனக்கு எது தெரியல

நீங்க 10 பேரை சந்திச்சிருப்பிங்க, அதில் இவர் சரியாக இருக்க மாட்டார், இவர் சரியாக இருப்பார் என்று மனம் ஒரு அறுதியிட்டு சொல்லும்ல அதுதான் இறுதியாளர்.

 

உங்கள் வாழ்க்கையில் ஒரு 10 விஷயம் செய்திருப்போம்,

பரதநாட்டியம் ஒத்து வரல, சமஸ்கிருதம், பரதநாட்டியம், ஆன்மிகம், ஜோதிடம், யோகா,

இப்படி இவ்வளவு நிகழ்வு இருந்தாலும், இந்த யோகாவில் மறுபடியும் மறுபடியும் ஒரு நிகழ்வு வந்து அதில்தான் என்னுடைய உடல் லயத்து போகிறது, மனம் லயத்து போகிறது என்று சொல்லும் இடத்தில்தான் ஒரு ஆத்மார்த்தமான திருப்தி கிடைக்கும்.

அதுதான் உங்களுக்கு பொருத்தமான

பாட்டில்கு ஏற்ற மூடி.

அங்குதான் ஆத்மார்த்தமான திருப்தி கிடைக்கும்.

இந்த நிகழ்வுகளை சரியாக பொருத்திவிட்டால் உங்கள் வாழ்க்கையில் வெற்றி தான்.

 

ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு குழந்தை பேறு சம்பந்தப்பட்ட நிகழ்வு.

இதற்கு திருமணம் ஆவதற்கு முன் குருவிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.

இதற்கு விசாகம், மகம் நட்சத்திரம் வரும் நாட்களில் குருவிடம் ஆசிர்வாதம் வாங்கனும்.

குரு என்றால் நவக்கிரக குரு,

ஆன்மிக குரு இல்லை, நமக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரோ, இல்லை ஜோதிடரோ,

ஜோதிடரிடம் இந்த விஷயங்கள்

நடக்காதப்போ தான் போவாங்க.

இப்படி செய்யக்கூடாது.

 

நம்முடைய எண்ணங்கள் ஒன்று,

முடிவுகள் ஒன்று

எண்ணங்கள் என்பது சந்திரன்

முடிவுகள் என்பது குருபகவான்

ஒருவர் மேல் கோபப்படக்கூடிய தன்மைகளை செய்வது சந்திரன்.

அதிதமாக கோபப்படுவதற்கு செவ்வாய் ஏதோ ஒரு வகையில் பலமாக இருக்கணும்.

ஆனால் சந்திரன் சம்பந்தப்படும் பொழுது உடனே கோபப்பட வைக்கும்.

ஆனால் குரு தெரியாமல்தானே செய்றாங்க, மன்னிசிடுங்க, இந்த விஷயம்பத்தி இப்போ பேச வேணாம், 2 நாள் போகட்டும், என்ற.

அந்த குரு தான் உங்கள் வாழ்க்கையை வழிநடத்தும்.

 

ஒரு ஜோதிடரை பார்க்க நினைக்கும்பொழுது அன்றைக்கு உங்கள் வாழ்க்கை மாறும்.

ஆனால், குரு பலமில்லை என்றால் உங்களை பலவகையில் அலைய வைக்கும்.

அந்த காலத்தில் விளக்கு ஏற்றி வைத்து, அதை பார்த்து பலன் சொல்வார்கள்.

 

வாழ்க்கையில் வழிகாட்டக் கூடிய, எண்ணங்களை தோற்றுவிக்க கூடிய

நல்லது, கெட்டதுகளை

குருபகவான் ,

மனசாட்சி,வாழ்க்கையில் நடக்கக்கூடிய அத்தனை எண்ணங்களையும் நாம் கவனிக்கணும்.

இது சரி,இது நல்லது என்று முடிவு செய்யணும். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இதற்கு என்ன பண்றோம்னா?

அகம்,புறம் என்று வைத்திருக்கோம்.

அதாவது உள் மனதிற்குள் அகமனம் , புற மனம் என்று வைத்திருக்கோம்.

அட்சய லக்னத்திற்கு 6, 8, 10, 12ல் குரு பகவான் இருந்தால், உங்கள், வெளிமனம் வேகமாக இருக்கும் ‘உள்மனம் (குரு) இன்னும் வேகமாக போக சொல்லும்.

கவனமாக இருக்கனும்.

நன்றி.

https://youtu.be/IivTzi5cnq