ALP Astrology
நிகழ்வு | தலைப்பு |
---|---|
1 |
full video link: https://youtu.be/JcgkDJuKAqU?si=ujB-k1XeVx6QeSLE
அட்சய லக்ன பத்ததி, எனும் ALP ஜோதிட ஆய்வு.
ALP ஜோதிட கண்டுபிடிப்பாளர். Dr. பொதுவுடைமூர்த்தி.
அனைவருக்கும் வணக்கம்.
நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.
இந்த நல்ல நாளில் உங்களை எல்லாம் சந்திக்கிறதுல மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி, வேதாரண்யம்.
அட்சய லக்ன பத்ததி, ALP அஸ்ட்ராலஜி மெத்தட். அட்சய லக்ன பத்ததி அப்படிங்கிற முறையை, இந்த ஜோதிடத்தில் என்னுடைய ஆய்வை வெளிப்படுத்தி உள்ளேன். இந்த ஆய்வில் நம்ம பாரம்பரிய முறையிலா இருக்கட்டும், கேபி முறையிலா இருக்கட்டும், புதிய ஒரு விஷயத்தை, ஃபார்முலாவை, கிரியேட் செய்துள்ளேன்.
இந்த நாள் வரைக்கும் லக்னம் நகராது. ஒரே லக்னத்தை வைத்துத் தான், பலன் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் வயதிற்கு ஏற்ப, இந்த லக்னத்தை மாற்றி, லக்னத்தை, லக்னப் புள்ளியை மாற்றி, அந்த பாவங்களுக்கு, கோச்சார முறையிலும், தசா புத்திகள் அடிப்படையிலும், பலன் பார்க்கும் முறைகளை உருவாக்கி, ஒரு மென்பொருளும், புத்தகமும் வெளியிட்டு இருக்கிறேன். www.alpastrology.org
இந்த ஒரு நல்ல நாளில் வந்து, இந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்தை நாம சாதிக்கணும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த அட்சய லக்ன பத்ததி, என்னுடைய வாழ்க்கையை பெரிய முறையில் மாற்றி இருக்கிறது.
இன்றைக்கு பல்வேறு இடங்களில் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது, பல ஆயிரக்கணக்கான ஜாதகங்கள் ஆய்வு ஏற்படுத்தப்பட்டு மிகத் துல்லியமான பலன் கூறும் முறையை, இந்த அட்சய லக்ன பத்ததி முறையில் கூற முடிகிறது.
இந்தப் பெயர் வரக் காரணம் என்ன என்றால், நாம 12 வருடமா இந்த ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கும் போது, கடந்த ஆறு மாதத்திற்கு முன்னாடி போய் இமயமலை அடிவாரத்தில் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தேன். அந்த ஆலம் விழுதுகள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அங்க இருக்கிற கூடிய விஷயங்கள் எல்லாமே பாவகங்கள் ரீதியா கணக்கு எழுதிட்டே வரேன். அந்த பாவகங்களுக்கும், கிரகத் தன்மைகளுக்கும், எவ்வளவு ஒத்து போகுது அப்படின்னு ஆய்வு பண்ணிக்கிட்டு இருக்கும் போது, இந்த வளரும் லக்னத்தை எப்படி எல்லாம் பெயர் வைக்கலாம் அப்படின்னா, வளர்தல் அப்படின்னா நாம என்ன சொல்லுவோம், அன்னைக்கு பார்த்து, திருதியை நாள்ல கணக்கெடுத்துட்டு இருக்கிறேன்.
திருதியை, அப்படினா நாம என்ன சொல்லுவோம்? அட்சயம் அப்படின்னு சொல்லுவோம். வளருதல் அப்படின்னு சொல்லுவோம்.
அன்னைக்கு தான், நாம தங்கம் வாங்குறது அப்படின்னு சொல்லுவீங்க. அட்சய திருதியை அன்று, கூட்டம் கூடும். அங்க அட்சயம் அப்படிங்கிறது ஒரு விஷயம் அட்சயம்னா, குபேரன். குபேரன்னா வளருதல், அட்சய பாத்திரம், அப்படின்னா, வளர்தல் எடுக்க, எடுக்க குறையாது, ஒரு விஷயம் அப்படின்னு நிறைய கணக்குகள் இருக்கு.
நம்ம சொல்லுவோம் லக்னம் அப்படின்னா தோற்றம்னு சொல்லுவோம். அந்தத் தோற்றத்தை, வளரும் முறையை வந்து, ஒழுங்குபடுத்தல் அப்படின்னு அட்சய லக்ன பத்ததி அப்படின்னு பெயர் வச்சேன்.
ஏன் என் பெயர் வைக்கல அப்படின்னு நிறைய பேர் கேப்பாங்க. ஜோதிடம், கடவுள் கொடுத்தது. சித்தர்களும், மகான்களும், பெரியவர்களுடைய ஆசீர்வாதத்தினாலும், இந்த ஆய்வு ஏற்படுத்தப்பட்டது. அதுல என்ன என் பெயர் வேண்டி இருக்கு, அப்படின்னு என்னோட பேரு வைக்கல. நிறைய பேர், என்னோட பேரு வைக்கல அப்படிங்கிறத குறையா என்கிட்ட கேட்டாங்க. அப்படி இல்ல. ஏன்னா இறை எனக்கு கொடுத்த பொக்கிஷம். ALP அப்படிங்கிறது. அது, மக்களுக்கும் ஜோதிடர்களுக்கும் பயன்படணும். மூர்த்தி என்கிற பெயர் வந்து பிடிக்காது அப்படின்னா, ALP முறை பிடிக்காமல் போய் விடும். அப்படிங்கறதுக்கு தான் நான் அட்சய லக்ன பத்ததி, அப்படின்னு பெயர் வச்சேன். ALP பேர் வச்சேன். ALP அப்படின்னா ஆழ் மன பதிவுகள் அப்படிங்கிறதத் தான், நான் ALP அப்படின்னு எடுத்தேன். www.alpastrology.com
கடந்த காலத்தை நான் போய் பார்த்தேன். கடந்த காலத்துக்கும் ஜோதிடத்துக்கும் எவ்வளவு தொடர்பு அப்படின்னு உங்களுக்குத் தெரியும். அந்தத் தொடர்புகளை எல்லாம், உங்க கர்ம பதிவுகள் எல்லாம் எடுக்கும் போது, எதிர்காலத்தை திட்டமிடக் கூடிய கர்ம பதிவுகள் எப்படி இருக்கும், அப்படிங்கிறத ஆய்வு பண்ணினேன். அப்போ என்னோட லக்ன பாவங்கள், என்னுடைய 12 பாவங்களை, மூன்று பாவங்களாக பிரித்து, அந்த பாவங்கள் எப்படி இயங்குகிறது? நான் செய்த கர்மா, என்னுடைய அம்மா செய்த கர்மா, என்னுடைய அப்பா செய்த கர்மா, என்னுடைய முன் ஜென்மத்தில் ஏற்படக்கூடிய பாவக பலன்கள் எப்படி இயங்குகிறது என மூன்று வகையான பாவகப் பலன்களை பிரித்தோம்.
அப்போ இந்த 27 நட்சத்திர பதிவுகள் எப்படி இயங்குகிறது? ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும், முன் ஜென்ம பதிவுகள் எப்படி இருக்கு அப்படிங்கிறத, ஆய்வு பண்ணி எடுத்தேன்.
அப்போ இந்த வளரும் லக்னத்துல, தன்னுடைய வயசு ஜீரோல இருக்கும்போது, அதுல இருந்து 1 வருடம், 1 மாதம், 10 நாள்ல, பாரம்பரிய முறையில், ஒரு நட்சத்திம், தன் பாதத்தை கடக்குது, அப்படின்னு ஆய்வு பண்ணினேன். இந்த லக்னப் புள்ளிகள், எவ்வளவு தூரம் நகர்ந்து போகிறது, அதற்கு தகுந்தாற்ப் போல, நம்முடைய வாழ்க்கை முறை மாறும் என்பதை, ஆய்வு செய்தேன்.
இது எப்ப கண்டுபிடிச்சேன் அப்படின்னா, நிறைய உதாரண ஜாதகம் சொல்லலாம். இதுக்கு உதாரணமா வந்து செவ்வாய் தோஷம் அப்படின்னு நீங்க எல்லாருமே கேள்விப்பட்டிருப்பீங்க. 1-2-4-7-8-12 பாவங்களில், செவ்வாய் இருந்தால் தோஷத்தை ஏற்படுத்தும். ஒரு பெண்ணிற்கு லக்னத்திற்கு ஒன்பதில் செவ்வாய் இருக்கிறது. இப்ப தோஷமா, தோஷம் இல்லையா என்றால், தோஷம் இல்லை.
ஆனால், அட்சய லக்னத்தில், ஏழில் செவ்வாய் இருந்தது அதாவது அவர் திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நிறைய காரணங்களை நம்முடைய ஆய்வு முறையில், ஒரு ஜாதகம், இரண்டு ஜாதகம் இல்லை. ஒரு ஆயிரக்கணக்கான, இரண்டாயிரக் கணக்கான ஜாதகங்களை வகுப்பில் எல்லாரும் முன்னாடியும் போட்டு ஆய்வு பண்ணும் போது, மிக எளிமையாக புரியக் கூடிய முறையை நாம வந்து ஆய்வு பண்ணோம்.
1 வருடம், 1 மாதம், 10 நாள்ல, ஒரு லக்னப் புள்ளி மாறுது. அப்போ ஒரு பாவகக் கட்டம் மாற, பத்து வருட காலங்கள் தேவைப்படுது, அப்படிங்கிறது என்னுடைய ஆய்வு. அந்த பத்து வருட காலங்களில், அடுத்த பத்து வருட காலத்துக்கு இடைப்பட்ட காலத்துக்கு நீங்க நடந்த விஷயங்களை ஒப்பீடு பண்ணீங்கன்னா, தசா புத்திகளுக்கு கோச்சாரங்களை எடுத்து பலன் சொன்னா, ரொம்ப சந்தோஷமா இருக்கும்.
404 நாட்கள் நாங்கள் எடுத்தோம். இப்ப என்ன பண்ணோம், 40 நாளைக்கு ஒரு பலனை எடுத்து இருக்கோம். நட்சத்திரங்களோட தன்மை எப்படி எடுக்கணும்? கிரகங்களோட தன்மை எப்படி எடுக்கணும் அப்படிங்கிறத ஆய்வு பண்ணி இந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறோம்.
அப்புறம் அதற்கு தகுந்தார்ப் போல, பரிகார கோயில்கள், மிக மிகத் துல்லியமா இத வந்து நாலு வருஷத்துக்கு முன்னாடியே நான் எழுதி எடுத்து வச்சிருக்கேன். இன்னைக்கு, நேத்து கிடையாது, நாலு வருஷத்துக்கு முன்னாடி, இந்த பரிகார கோயில்கள் எடுத்து வச்சிருக்கேன். அந்த பரிகார கோயில்கள் அப்படியே அட்சய லக்னப் பத்ததி பாகம் ஒன்று புத்தகத்தில் எழுதி வெளியிட்டு இருக்கிறோம். கோவில்கள், பரிகாரங்கள், நட்சத்திரங்கள், ராசிகள் கணக்கிடும் முறைகள், அவற்றை ALP பலன் பார்க்கும் உதாரண ஜாதகங்களோடு ஒப்பிட்டுக் கொடுக்க முடிந்த நிறைய விஷயங்கள், அதுல கொடுத்து இருக்கிறேன்.
அதுல இருந்து, இப்போ 15 புத்தகம் வரிசையாக வெளியிடப் போகிறேன். இப்போ அடுத்த புத்தகம், நட்சத்திரங்களும் ALP-யும், பரிகாரங்களும் சூட்சுமங்களும் அப்படின்னு. ஏன்னா, நட்சத்திரங்கள் பற்றி முதல் புத்தகத்தில் கொடுக்கவில்லை. இரண்டாவது புத்தகத்தில் கொடுத்திருக்கிறேன்.
முதல்ல வந்து பாவகங்களும் தன்மைகளும். அடுத்தது வந்து நட்சத்திரங்களும் தன்மைகளும், இரண்டாவது புத்தகம். இப்படி ஒவ்வொரு விஷயமாக கொண்டு வந்து இத கொடுத்திருக்கிறோம். இந்த ALP விஷயங்கள் பொறுத்த வரைக்கும் பிரம்மாண்டமாக, ஒரு துல்லியமான பலன்களை, ஜோதிடர்களும் வரக்கூடிய ஜாதகர்களும் வந்து, மிக சந்தோஷமாக, அவர் வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறது அப்படின்னு தெரிந்து கொள்ளக் கூடிய விஷயமாக, இந்த ALP முறை இருக்கு. அடுத்து ஒரு வீடியோல உங்களை எல்லாம் சந்திக்கும் வரை விடை பெறுவது S. பொதுவுடைமூர்த்தி வேதாரண்யம். நன்றி, வணக்கம்.
என்றென்றும் நன்றியுடன்....
ALP Astrology
+91 9786556156
S.POTHUVUDAIMOORTHY
ALP ILLAM,
No.18A Ganesh Nagar(First Right),
Old Perungalathur (NEAR LOTUS POND),
S.V Nagar Post,
Chennai - 600063,
Tamil Nadu, India.
alpastrologyoffice@gmail.com
alpastrology.org@gmail.com