Akshaya Lagna Paddhati

ASTROLOGY

Dr.S.Pothuvudaimoorthy, Ph.D.

வீடு வாங்கப் போகிறீர்களா? எப்பொழுது வாங்க வேண்டும்? ALP ஸ்ரீ குரு. Dr. உமா வெங்கட், ALP ஜோதிடர்.

ALP Astrology

நிகழ்வு தலைப்பு
1

முன்னுரை

 

full video link: https://youtu.be/3F3Ecu52MVo?si=-T3Ovterxex_IPSb

 

ஒருத்தங்க வீடு வாங்குறாங்க. அவுங்க வீடு வாங்குவதற்கு முன்பு, ஜோதிடம் பார்க்கலாமா, கூடாதா? 

 

வீடு எனக்கு கிடைக்கும்போது தானே வாங்க முடியும். அதற்கு ஏன் நான் ஜோதிடம் பார்க்க வேண்டும்? என் ஜாதகத்தை பார்த்துத் தான் எனக்கு வீடு அமைப்பு சொல்ல முடியுமா? இல்லைனா அதுதான் எனக்கு சொல்லுமா? அந்த தகுந்த காலம்கிறது அது எனக்கு வழி காட்டுமா? அப்படிங்கற கேள்வி எல்லாருக்குமே இருக்கும். 

 

கண்டிப்பாக வீடு வாங்குவதற்கு உங்க ஜாதகம் எடுத்து, உங்க ஜாதகத்துல நாலாம் பாவகம், வீடு மனை யோகம் என்று சொல்லலாம். அந்த கிரகம் நன்றாக இருந்தால் மட்டும்தான், நீங்கள் வீடு வாங்குவதற்கு உண்டான காலம் உங்களுக்கு இருக்கிறது. அது சார்ந்த கேள்விகளுக்காக நீங்கள் வருவீர்கள் என்பது உங்கள் ஜாதகத்தின் அமைப்பு. www.alpastrology.org

 

இந்த வீடு வாங்கும் போது, அப்பா சொன்னாங்க, தம்பி கூட சேர்ந்து வாங்கினேன், நானாக ஏதாவது செய்து வீடு வாங்குகிறேன், என் அண்ணா கூட சேர்ந்து வீடு வாங்குகிறேன். இந்த மாதிரி கேள்விகள் இருந்தால்,  கண்டிப்பாக அந்த இடத்தில் உங்களுக்கு பிரச்சனை இருக்கிறதா என்றால், கண்டிப்பாக இருக்கிறது.

 

நானாக ஒரு வீட்டை முடிவு செய்து விட்டு, இந்த வீட்டை வாங்கும் போது, எனக்குள்ள அந்த வீட்டின் அழுத்தம், இதைவிட இன்னும் கொஞ்சம் நமக்கு நல்லா வந்திருக்குமோ என்ற தன்மை இருக்கும். உங்கள் ஜாதகத்தில் நாலாம் பாவக கிரகம் சொல்லக் கூடியது, சில இடங்களில் அதாவது லக்னத்தில் அமர்ந்தால் மட்டுமே இந்த கேள்வி, உங்களுக்கு வரும். அதை செய்யலாமா என்றால் அதை செய்யக் கூடாது. 

 

அண்ணா கூட சேர்ந்து வீடு வாங்கினால் பிரச்சனை வருமா என்றால், நாளைக்கு அந்த பிரச்சனை என்பது கண்டிப்பாக உங்களுக்கு வரும். இன்னைக்கு, உங்களுடைய அண்ணனும், நீங்களும், அதாவது மூத்த சகோதரன் என்று சொல்லக் கூடிய பாவகமும், உங்கள் வீடும் சேர்ந்து இணையும் போது, அங்கு பிரச்சனைகளை உருவாக்கும். இது வீடு வாங்குவதற்கு மட்டும் கிடையாது. பூர்வீக வீடு என்று சொல்வார்கள். அந்த வீட்டை பங்கு பிரிக்கும் போது, இந்த வீடு நாலாம் பாவகம் சரி இல்லை என்றால், உங்களுக்கும் உங்க அண்ணனுக்கும்,  உங்களுக்கும் உங்க அப்பாவுக்கும், உங்களுக்கும் உங்க தம்பிக்கும் பிரச்சனையை கொடுக்கும். 

 

 

என்னங்க, நாங்க ஒரு சொத்தை பிரிக்கணும் என்றால் இவங்க எல்லோரும் தானே சம்பந்தப்படுவார்கள். இவர்கள் மூலமாக பிரச்சனை வருமா? என்ன இருந்தாலும் பிரிச்சிட்டு தானே போகணும், அப்படிங்கறதெல்லாம் கிடையாது. நமக்கு கிடைக்க வேண்டியதை அவங்க அதிகமாக, இல்லைனா எனக்கு கிடைக்க வேண்டியதை அவர்கள் தர மாட்டார்கள் என்கின்ற ஜாதகம் தான் நிறைய நாங்கள் பார்த்திருக்கிறோம். 

 

எந்தக் காலகட்டத்தில், அந்த மனையைப் பிரிக்கலாம். இப்ப நாங்க அந்த மனையை வாங்கலாமா, அந்த சொத்தை நாங்கள் பிரித்து வாங்கலாமா, என்றால், அதற்கு தகுந்த காலம் என்று இருக்கும். அந்த காலத்தில் மட்டும் தான் நீங்கள் வாங்க முடியும். அல்லாத காலத்தில், நீங்கள் செயல்பட்டால், கண்டிப்பாக பிரச்சனையாகவும், விரையமாகவும், அல்லது வீட்டிற்க்காக கடன் என்பதை ஏற்படுத்தும். 

 

சரிங்க, சொத்து பிரச்சனையே வேண்டாம். புதிதாக ஒரு வீடு வாங்குகிறேன். அது எனக்கு சரியாக இருக்குமா என்றால்,  அதையும் உங்கள் ஜாதகம் தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் வீடு வாங்கும் போது, நம்முடைய ALP யில்,  அழகாக சொல்லலாம், ALP நட்சத்திர புள்ளி சம்பந்தப்பட்டால் மட்டும் தான் நமக்கு அந்த வீடு வாங்குவதற்கு உண்டான உகந்த காலமாக இருக்கும். 

 

மகர லக்னம் அட்சய லக்னம் போகும்போது, அவிட்டம் - 1,2 நட்சத்திர புள்ளியில் நான் வீடு வாங்கலாமா என்று ஒருவர் கேட்கிறார். வாங்கலாமா என்றால் தாராளமாக வாங்கலாம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி என்று சொல்லக்கூடிய கிரகம், நாலாம் இடத்தில் இருந்தால், வீடு பூர்வ புண்ணியம்  சம்பந்தப்பட்ட இடங்களில், குலதெய்வம் சம்பந்தப்பட்ட இடங்களில், இல்ல பக்கத்துல ஏதாவது ஒரு கோயில் இருக்கிறது அந்த மாதிரி இடங்களில் வாங்கலாம் என்பதை அவர்களிடம் சொல்லுவோம். 

 

வீட்டிற்காக சுப விரையம் என்பது உங்களுக்கு இருக்குமா என்றால், உங்கள் ஜாதகத்தில் கண்டிப்பாக சம்பந்தப்படும். ஆனால் உங்கள் லக்னத்திற்கு சூரியன் என்று சொல்லக்கூடிய கிரகமோ இல்லை என்றால் வேறொரு கிரகம், அந்த நாலாம் பாவகத்தில் அமர்ந்திருக்கும் போது,  அங்கு பிரச்சனைகளை கொடுக்குமா என்றால், கண்டிப்பாக பிரச்சினைகளை கொடுக்கும்.

 

இதே மகர லக்னம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு,  உத்திராட நட்சத்திரம் யாருக்கெல்லாம் போனதோ அப்போது வீடு வாங்கினேன். அதனால் நான் பிரச்சனைகளை சந்தித்தேன். அதாவது டாக்குமெண்ட் சம்பந்தப்பட்ட பிரச்சனை, வழக்கு உள்ள சொத்தை வாங்கி இருப்பார்களா என்றால், கண்டிப்பாக வாங்கி இருப்பார்கள். www.alpastrology.com

 

அட்சய லக்னம் மகர லக்னம் உத்திராட நட்சத்திரம் போகக்கூடிய நண்பர்கள் யாரெல்லாம் வீடு வாங்கி இருக்கிறீர்களோ அங்கு உங்களுக்கு பிரச்சனை கொடுக்குமா என்றால் கொடுக்கும். உங்களுடைய ALP லக்ன நட்சத்திரப் புள்ளி என்ன என்பதை பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிரச்சனை என்பது இருந்திருக்கும். எந்த மாற்றமும் கிடையாது. 

 

அப்போ வீடு வாங்குவதற்கும், நமக்கு ஜாதகம் தகுந்த காலத்தை குறி காட்டுமா என்றால், கண்டிப்பாக குறி காட்டும். சிலரை வீடு எனும் போது, பழைய வீடு வாங்க சொல்லுவோம். சில கிரக அமைப்பு என்பது, பழைய வீட்டினுடைய தன்மை இருக்கும். ஏன் புது வீடு வாங்கினால் என்ன என்று, புது வீடு வாங்கி விடுவார்கள் ஆனால் அந்த பழைய வீடு எவ்வளவு செலவு கொடுக்குமோ இந்த புது வீடு அவ்வளவு செலவு கொடுத்து கொண்டே இருக்கும். இதுவே பழைய வீட்டின் அமைப்பாக இருந்தால் அந்த செலவுகளை குறைக்கும். அவங்க இருக்கக் கூடிய வீடு மிகவும் சுபிட்சமாக இருக்கும் என்றும் சொல்லலாம். இதுவும் நடந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக நடந்து இருக்கிறது

 

வீட்டைப் பொறுத்த வரைக்கும், அவர்களுடைய ஜாதக அமைப்பு, பழைய வீடா, புது வீடா, பிளாட் சம்பந்தப்பட்டதா என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். சிலர் நாங்க பிளாட்டாவே வாங்கிட்டோம், என்று சொல்வார்கள் ஆமாம் உங்கள் ஜாதகத்தின் படி அது அடுக்கு மாடி கட்டிடங்களாக இருக்கக்கூடிய தன்மை என்று சொல்வோம். சிலருக்கு நில அமைப்பு என்பது அவர் ஜாதகம் சார்ந்து சொல்லி இருப்போம். 

 

தனுசு லக்னம், மூலம் - 2 பாதம் போகிறது. வீடு வாங்கலாமா என்று கேட்டார்கள். தாராளமாக வாங்குங்கள் என்று சொன்னோம். நானும் என் தம்பியும் சேர்ந்து வாங்கப்  போகிறோம் என்று சொன்னார்கள். இல்லை தம்பியும் நீங்களும் சேர்ந்து வாங்க வேண்டாம். தனித் தனியாகவே வாங்குங்கள் என்று சொன்னோம். அவர்கள் கொஞ்சம் பிரச்சனையாகி, பணம் சம்பந்தப்பட்டதில், கம்யூனிகேஷனில் தம்பியோடு பிரச்சினை வந்து, வீடு சார்ந்த நிகழ்வுகளை நிறுத்தி விட்டார்கள். 

 

அதற்குப் பிறகு, நாங்க சொன்னோம். புதுமனை என்பது வாங்க வேண்டாம். உங்களுக்கு உரியது என்பது பழைய மனை மட்டும் தான். பழைய வீடு இல்லை என்றால்,  அடுத்தவர்கள் மூன்று வருடம் அல்லது ஐந்து வருடம் உபயோகம் செய்துவிட்டு, அதை விற்பனை செய்வார்கள். அது போல வீடு வாங்கினால், உங்களுக்கு நன்றாக இருக்கும் என்று சொன்னோம். அந்த வீட்டினுடைய அமைப்பு என்பது, அந்த முனை  என்று சொல்லலாம்.  அதாவது கார்னர் சைடு நிலமாக இருக்கும். அந்த மாதிரி பழைய வீடாக பாருங்கள். உங்களுக்கு அமைப்பாக இருக்கும் என்று சொன்னோம். அதே போல வீடு அந்த ஜாதகருக்கு கிடைத்ததா, என்றால் கிடைத்தது. 

 

அதுபோல ஒருவருக்கு மிதுன லக்னம் போகும் போது புதிய வீடு வாங்கக்கூடிய அமைப்பு இருந்தது. நீர் நிலை சம்பந்தப்பட்ட இடத்தில் தான் அவர்களுக்கு வீடு அமையும். அரசு சம்பந்தப்பட்ட அலுவலகம் என்பது உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும். பாருங்கள் உங்களுக்கு அது தான் அமையும் என்று சொன்னோம். அதே போல அவர்களுக்கு அமைந்தது. 

 

அப்போ வீடு எந்த இடத்தில் இருக்கிறது, நமக்கு அது ஏதுவாக இருக்கிறதா என்று தெரிந்து கொண்டு செய்வது, சிறப்பாக இருக்கும். இல்லை என்றால் வீட்டை கொடுத்து விட்டு, இன்னொரு நிலம் வாங்குவதற்கு உகந்த காலமாக அமையுமா என்றால், கண்டிப்பாக அமையும். ஏனென்றால் அந்த மண் மனை என்பது நம் கையில் கிடையாது. அதுவாக நம்மைத் தேடி வர வேண்டும். உகந்த காலத்தில் மட்டுமே வரும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. நம் ஜாதகம் அதற்கு சப்போர்ட் செய்யுமா என்றால், 100% சப்போர்ட் செய்யும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. 

 

நன்றி. 

 

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


ALP Astrology

Phone

+91 9786556156

Address

S.POTHUVUDAIMOORTHY
ALP ILLAM, No.18A Ganesh Nagar(First Right),
Old Perungalathur (NEAR LOTUS POND),
S.V Nagar Post, Chennai - 600063,
Tamil Nadu, India.

Email

alpastrologyoffice@gmail.com

alpastrology.org@gmail.com

Privacy Policy

Contact Us

© , ALP Astrology Created By Codriveit. All rights reserved