Akshaya Lagna Paddhati

ASTROLOGY

Dr.S.Pothuvudaimoorthy, Ph.D.

அதிகரித்து வரும் விவாகரத்துக்களின் காரணம் என்ன?

ALP Astrology

நிகழ்வு தலைப்பு
1

முன்னுரை

full video link: https://youtu.be/_4iobWHUIvQ?si=1Er1uniAnRBumxqo

 

அதிகரித்து வரும் விவாக ரத்துக்களின் காரணம் என்ன? தம்பதிகளின் ஜாதகக் கட்டம் மட்டும் தானா அல்லது இந்தக் கால சூழ் நிலையா? - ALP ஜோதிட ஆய்வு.

 

அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சார்பில் அட்சய இல்லத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

 

அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தின் தந்தை. வாக்குயோகி. உயர்திரு. Dr. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள், ஜோதிட ஆர்வலர்களின் கேள்விகளுக்கு பதில்  அளித்தார்.

 

கலந்துரையாடல் நிகழ்வில் சில துளிகள்…….

 

என் பெயர் ஷகிலா. தாழம்பூரில் இருந்து வருகின்றேன். இப்போது எல்லாம் நிறைய விவாக ரத்து ஆகுது. அதற்குக் காரணம், ரெண்டு பேரோட, அந்த தம்பதியோட ஜாதகக் கட்டம் மட்டும் தானா? இல்லை என்றால் இந்தக் கால சூழ் நிலையும் தானா? 

 

ஐயாவின் பதில்:


நான் கையில் என்ன வைத்துள்ளேன் என்று கேட்டால் எப்படி இருக்கும்?அப்படித் தான் வாழ்க்கை. எப்படி? இது என்னவென்றால் இது இருந்தா தானே நடக்கும். ஜாதகக் கட்டத்தில் இருந்தால் தானே நடக்கும். 

 

உதாரணத்திற்கு, வெளியில் இருந்து பார்த்தால், ஏதோ வந்து இந்த காலங்கள் மாறிப் போச்சு, இந்த நிகழ்வுகள் எல்லாம் தெரிஞ்சுக் கிட்டாங்க. பெண்கள் வந்து மாறி விட்டார்கள். இல்லை, ஆண்கள் வந்து மாறி விட்டார்கள். இல்லை, பெண்களின் கல்வி உயர்ந்து விட்டது. பெண்கள் நன்கு சம்பாதிக்கிறார்கள். அல்லது பெண்கள் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார்கள். இப்படி நிறைய காரணங்களை நாம் சொல்லலாம். ஆனாலும், வாழ்ந்து கிட்டு தானே இருக்கிறார்கள், இவ்ளோ பேரும். இவ்வளவு காலமாக வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள். அதில் ஒருத்தருக்கோ, ரெண்டு பேருக்கோ, பத்து பேருக்கோ, 50 பேருக்கோ கிரக அமைப்பு நல்லா இல்லேன்னா? இது வந்து  ஆண் மட்டுமே முடிவு அல்ல. பெண் மட்டுமே முடிவு அல்ல. 

 

இப்போ உதாரணமாக வந்து, ALP-ல் என்ன சொல்வோம் அப்படின்னா, நான் - எனக்கு ஆப்போஸிட்டில் இருக்கும் சூழ் நிலைகள். அதே போல் மனைவி, மனைவிக்கு ஆப்போஸிட்டில் இருக்கும் சூழ் நிலைகள். 

 

என்னுடைய ஜாதகத்தில் என் மனைவியோட நிலை எப்படி இருக்கு? என் மனைவியோட ஜாதகத்தில் கணவரின் (என்) நிலை எப்படி இருக்கு? அப்படின்னா, எவ்வளவு சூழ் நிலைகளை கையாள்வது? கையாளவே முடியாதுங்க, இதில்.

 

இதில் என்னவென்றால், இவர்கள் தன்னிச்சையாக எடுக்கக் கூடிய முடிவுகள், ஜாதகத்தில் உள்ள அமைப்புப்படி தான் நடக்குது. இதில் மாற்றுக் கருத்தே கிடையாது. 

 

இதில் என்னவென்றால், ஒரு ரெண்டு வருடம் மட்டும்  கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அந்த நேரத்தில், அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடிய திறன்கள், உடனுக்கு உடனே முடிவு எடுக்கக் கூடிய முடிவுகள், பின்னால் கஷ்டத்தைத் தரும். www.alpastrology.org

 

ஏன் என்றால், இப்போ கூகுள் மேப் பற்றி சொன்னேன் பாருங்க. நீ இந்த முடிவு எடுத்தாய் என்றால், நான் இந்த ட்ராக்ல உனக்கு வழி காண்பிக்கிறேன், என்பது போல. 

 

உதாரணத்துக்கு, கொஞ்ச தூரம், ஒரு ரெண்டு வருடத்துக்கு பள்ளமாக இருக்கு, ரெண்டு வருடம் கடந்து போகணும், ஒரு 200 மீட்டர் கடந்து போகணும். கஷ்டமாக இருக்கு. இல்லை, இல்லை, உன்னால் தான் கஷ்டம் வந்தது. தெரியுது, தெரியல. ஆனா, இந்த ரெண்டு வருஷத்துல அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டாங்கன்னா, கடைசி வரைக்கும், எப்படி 30 வயசோ, 40 வயசோ, 50 வயசோ, 60 வயசோ, கடைசி வரைக்கும், இந்தக் காலங்களை கழிக்க வேண்டியிருக்கும். இந்த முடிவு எடுத்து விட்டு, மறுபடியும் ஒரு முடிவுக்கு தேடுவாங்க பாருங்க, அந்தக் கேள்விக் குறி இருக்கு பாருங்க, அந்த வலியும், வேதனையும், முடிந்த பின் தான் தெரியும். 

 

அதனால், தயவு செய்து, இந்தக் காலங்கள் எல்லாம் கிடையவே கிடையாது. இன்னிக்கு டெக்னாலஜி எல்லாம் வளர்ந்து விட்டது, 2025-ல் நிற்கிறோம், இப்படி எல்லாம் சொல்லிக்கலாமே தவிர, இந்த ஜாதக அமைப்பு நன்றாக இருந்தால் அவங்களுக்கு இழுத்துக் கிட்டு நல்லாத் தான் ஓடுது. அவங்களுக்கு ஜாதக அமைப்பு நன்றாக இல்லை என்றால், முழுக்க, முழுக்க அவங்க அவசரப் பட்டு எடுக்கக் கூடிய முடிவுகள், அவர்கள் வாழ்க்கையில் நிலையை மாற்றுது. 

 

இப்போ ஒண்ணும் இல்ல. இப்போ நாம் அடிக்கடி சொல்கிறோம் இல்லையா. கேட்டை நட்சத்திரம் சொல்வோம். கேட்டை நட்சத்திரம் 3,4 போகும் போது, அவசரப்பட்டு முடிவு எடுத்து விடாதப்பா. தயவு செய்து முடிவு எடுத்து விடாதே. கேட்டை நட்சத்திரம் 4 ஆம் பாதம் போகும் போது, கண்டிப்பாக எப்படியோ பிச்சுக் கிட்டு போகும். www.alpastrology.com

 

அதே மாதிரி, இந்த விசாகம் நட்சத்திரம் 2 ஆம் பாதம் போகும் போது, எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள். விசாகம் 2 ஆம் பாதம் போகும் போது, ஒண்ணு மனைவியை விட்டு பிரிந்து வெளியூரில் இருப்பார். வெளி நாட்டில், வெளி இடத்தில் இருப்பாங்க தூரமாக இருப்பாங்க. கோர்ட் கேஸா இருக்கும். சம்பந்தமே இருக்காது. இதை வெற்றிடம் என்று சொல்வோம் என்று சொல்வோம் இந்த இடத்தை. ஒரு நட்சத்திரப் புள்ளி தான். கிரகம் எங்க இருக்குன்னு சொல்லவேயில்லை. குரு எங்கே இருக்கிறார், லக்ன அதிபதி சுக்ரன் எங்கே இருக்கிறார், துலாம் லக்னத்தில் சுக்ரன் எங்கே இருக்கிறார், இதை எல்லாம் நாம் சொல்லவே இல்லை. உதாரணத்துக்கு என்ன பண்ணுகிறோம், விசாகம் நட்சத்திரம் 2 ஆம் பாதம் போகும் போது, என்ன பண்ணுவோம், வெற்றிடம். வெற்றிடத்தில் போகும் போது ஒண்ணுமே இருக்காது. எனக்கு நீ இத வாங்கிக் கொடுக்கல. எனக்கு நீ இதை செய்யல. உன்னிடம் இவ்ளோ இருக்கு, உன்னிடம் அவ்ளோ இருக்கு. நீ அதை பண்ணினாய். நீ இதைப் பண்ணினாய். அப்போ கஷ்டப் பட்டோம், அப்போ ஒண்ணுமே இல்ல. இப்ப நீ இதை செய்ய வேண்டியது தானே, அதை செய்ய வேண்டியது தானே. இப்படி வந்து, ஏதாவது ஒரு மோட்டிவ், சண்டை போட்டுக் கிட்டு. ஒரு ஒன்றுமில்லாதது. இந்த காந்தத்தில் ஒத்த துருவங்கள் எதிர்க்கும், இல்லையா. நானும் சம்பாதிக்கிறேன். நீயும் சம்பாதிக்கிறாய். அப்படின்னு, பெரிய போராட்டமா வந்து, ஒண்ணுமேயில்லாத ஒண்ணுக்கு சண்டை போட்டுக் கிட்டு, பிரிஞ்சுக் கிட்டு இருப்பாங்க. 

 

 

விசாகம் நட்சத்திரம் 2 ஆம் பாதம். இப்போது பாருங்களேன். இவ்வளவு நட்சத்திரப் பாதம் இருக்கு இல்ல. 108 நட்சத்திரப் பாதம் சொல்கிறோம்.  ஏன், விசாக நட்சத்திரம் 2 ஆம் பாதம் அப்படின்னா, ஒரு 100 பேரு ஜாதகம் எடுத்தோம்னா, 65 பேருக்கு இந்த இடத்துல போகும் போது, ஒரு பிரச்சினை இருக்கு. இதை நாம் பாத்து வைச்சுட்டோம். அப்போ, விசாகம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் போகும் போது 60 பேருக்கும், விசாக நட்சத்திரம் 2 ஆம் பாதம் போகும் போது 65 பேருக்கும், விசாக நட்சத்திரம் 3 ஆம் பாதம் வரும் போது ஒரு 40 பேருக்கும் பிரச்சினை இருக்கா, இருக்கு. 

 

அப்போ என்ன பண்ணுறோம். ஐயா, இந்த விசாகம் நட்சத்திரம் 3 ஆம் பாதம் போகும் போது, ரெண்டாவது கல்யாணம், ரெண்டாவது தார அமைப்பு, இல்ல ரெண்டாவது தார யோகம், இல்ல ரெண்டாவது தாரத்துக்கு தொடர்பு, ஏதோ ஒண்ணு ஏற்படுத்திக் கொடுக்குமா, கொடுக்கும். நமக்கு, கிரகம் எங்க இருக்கு, சூர்யன் எங்க இருக்கிறார், சந்திரன் எங்க இருக்கிறார், செவ்வாய் எங்க இருக்கிறார், புதன் எங்க இருக்கிறார், சுக்ரன் எங்க இருக்கிறார், சனி எங்க இருக்கிறார், ராகு எங்க இருக்கிறார், கேது எங்க இருக்கிறார்ன்னு கேட்கவேயில்லை. இந்த நட்சத்திரம் போகும் போது, இது தான் உன்னோட அமைப்பு. 

 

இதை நீங்கள் எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் பார்க்கலாம். இந்த கிரகங்கள், முழுக்க, முழுக்க, கிரகத்தோட அமைப்புக்கு தகுந்த மாதிரி தான் இந்த விவாக ரத்து நடக்கிறதே தவிர, காலங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமே கிடையாது. 

 

நன்றி. 

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


ALP Astrology

Phone

+91 9786556156

Address

S.POTHUVUDAIMOORTHY
ALP ILLAM, No.18A Ganesh Nagar(First Right),
Old Perungalathur (NEAR LOTUS POND),
S.V Nagar Post, Chennai - 600063,
Tamil Nadu, India.

Email

alpastrologyoffice@gmail.com

alpastrology.org@gmail.com

Contact Us

© , ALP Astrology Created By Codriveit. All rights reserved