Akshaya Lagna Paddhati

ASTROLOGY

Dr.S.Pothuvudaimoorthy, Ph.D.

அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு | மன நோய் ஏன் ஏற்படுகிறது?

ALP Astrology

நிகழ்வு தலைப்பு
1

முன்னுரை

 

Full Video Link 👉 https://youtu.be/8VzH-jUi0Hk?si=UAHItrgoAc_aHGLN

 

மன நோய் ஏன் ஏற்படுகிறது?

~ அட்சய லக்ன பத்ததி என்னும் ALP முறையில் ஜோதிட நுணுக்கங்களின் ஆய்வு. 

அனைவருக்கும் வணக்கம்.

அனைவருக்கும் தெரியும், நூறு வருடங்களுக்கு முன்பு ஜோதிடர் சொல்வார், நீங்கள் இந்த ராசி என்று. 

சமீப காலமாக 20 வருடமாக தான் லக்னம் என்றால் என்ன என்று தெரிகிறது. ஆனால், இன்றைக்கு இருக்கும் மக்கள் லக்னம் என்றால் என்ன, ராசி என்றால் என்ன, யோகம் என்றால் என்ன, கர்ணம் என்றால் என்ன, என்று அவர்கள் ஜாதகத்தை அவர்களே 50 சதவிகிதம் கணிப்பு சொல்லும் அளவிற்கு நல்ல ஜோதிட ஆர்வம் தேடலும் நிறைந்திருக்கிறது. 

ஒரு ஜாதகத்தில் ஏதாவது ஒரு கிரகம் உச்சமாக இருந்தால், என் ஜாதகத்தில் குரு உச்சம், என் ஜாதகத்தில் சனி உச்சம், என் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம். நேற்று ஒருவர் சொன்னார் என் ஜாதகத்தில் சூரியன் உச்சமாக இருப்பதால், நான் பெரிய ஆளாகி ஆகிவிட்டேன், என்று கூறினார். அப்படி இல்லை. 

என்னிடம் பலரும் கேட்பார்கள். பெயர் வைப்பது பற்றி கேட்பார்கள். அதிகபட்சமாக பெயர் வைப்பதற்கு நான் ALP முறையில் உபயோகப்படுத்தும் முறை மிகவும் வித்தியாசமாக இருக்கும். எதற்காக இந்த நேரத்தில் சொல்கிறேன் என்றால், ஒவ்வொரு பெயருக்கும் ஒரு பாசிட்டிவ் இருந்தால் அதே பெயருக்கு ஒரு நெகட்டிவ் இருக்கும். இந்தப் பெயரை மாற்றி விட்டால் நன்றாக இருக்கும் என்றால், நீங்கள் மாற்றிய பெயருக்கு ஒரு பாசிட்டிவ் இருக்கும், ஒரு நெகட்டிவ் இருக்கும். இது நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கிரகம் இருந்தால், அந்த கிரகத்தால் ஒரு பிளஸ், ஒரு மைனஸ் கண்டிப்பாக உண்டு. 

உச்சமான கிரகமாக இருந்தால், உச்சமான பிரச்சனை உண்டு. நீச்சமான கிரகம் இருந்தால் ஓரளவிற்கு அந்த கிரகத்தால் பாதிப்பு குறைவாக இருக்கும். எல்லோரும் நினைப்பது, உச்சமான கிரகமாக இருந்தால், அந்த கிரகம் கொட்டிக் கொடுக்கும் என்று. அது முழுவதும் தவறு என்பது ALP யில் நாம் தெளிவாக இன்று பார்க்கப் போகிறோம்.

ஒரு ஜாதகத்தில் சனி உச்சமாக இருக்கிறது என்றால், இங்கு நாம் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த ஜாதகத்தில், துலாமில் சனி பகவான் இருக்கிறார். இந்த ஜாதகர் ஒரு பெரிய கம்பெனி வைத்திருக்கிறார். கீழே  வேலை செய்பவர்கள் எல்லாம் எப்படி இருப்பார்கள் என்று ஒரு ஜோதிடரிடம் நான் பேசினேன். சனி பகவான் உச்சமான ஜாதகம். வேலை ஆட்கள் மிகவும் நிறைந்திருப்பார்கள். சொல்வதை எல்லாம் கேட்பார்கள்,  என்று பலன் சொன்னார். அவரும் நானும் பாரம்பரிய ஜோதிடம் ஒன்றாக படித்தோம். இந்த ஜாதகர் யார் என்று அவருக்கு தெரியாது. நான் சும்மா கொடுத்து கேட்டு பார்க்கிறேன். அவர் சொன்னார் சனி உச்சமான ஜாதகம் பெரிய அளவில் சாதிப்பார். இவர் கீழே  நூறு பேர் வேலை செய்வார்கள். வேலை செய்பவர்கள், உண்மையாக இருப்பார்கள் என்றெல்லாம் சொன்னார். 

அவர் நெடுங் காலமாக என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ALP பற்றி சொல்லுங்கள். நானும் படிக்க வேண்டும் என்று சொன்னார். இந்த ஜாதகத்தை போட்டு, நேற்று இரவு அவரிடம் விளக்கமாக பேசிக் கொண்டிருந்தேன். இது உங்கள் அனைவருக்கும் பெரிய புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக, இதைப்  போட்டிருக்கிறேன். 

இவர் பிறந்தது மேஷ லக்னத்தில். ஜாதகருக்கு 27 வயதாகிறது. சின்ன வயதில் 23 வயதில் இருக்கும் பொழுது, அவர் அப்பா ஒரு தொழிலதிபர். அவருடைய கம்பெனிக்கு கூட கூட்டிக் கொண்டு போகிறார், வருகிறார். அதை அப்படியே பையன் பார்த்து அந்த கம்பெனியை இவர் மெயின்டைன் செய்ய ஆரம்பிக்கிறார். அப்பா ஒரு கட்சியில் பெரிய பொறுப்பில் இருக்கிறார். இந்த ஜாதகர் என்ன செய்கிறார் என்றால் புதிதாக ஒரு ஃபீல்டில் நுழைந்து மேனேஜ்மென்ட்டை  எடுக்கிறோம். என்ன செய்யலாம் என்பதற்காக ஜாதகம் பார்க்கிறார். 

இந்த விஷயம் நீங்கள் புரிந்து கொண்டால், இதற்குப் பின் உங்கள் ஜாதகத்தில் உச்சமான கிரகமே வேண்டாம், என்று சொல்லக்கூடிய நிலைமை உங்கள் மனதிற்கு தோன்றும். இந்த ஜாதகத்தில், இவருடைய தற்போதைய ALP லக்னம்: மிதுனம். அதற்கு அஷ்டமாதிபதி யார் என்றால் சனி பகவான். ALP லக்னத்திற்கு அஷ்டமாதிபதி சனி பகவான், ஐந்தாம் இடத்தில் துலாமில் இருக்கிறார். ஐந்தாம் இடத்தில் இருந்து தன் மூன்றாம் பார்வையாக, ஏழாம் இடமாகிய தனுசு வீட்டைப் பார்க்கிறார். 

இவர் யாரிடம் பார்த்தாலும் சைக்கோ போல நடந்து கொள்வார். ஏனென்றால் அஷ்டமாதிபதி சனி பகவான் ஐந்தில் வந்து அமர்ந்திருக்கிறார். 

ஐந்து என்றால், நம்முடைய மைண்ட்,நாம் யோசிப்பது, நாம் பேசுவது, செய்கின்ற செயல், நாம் ரியாக்ட் செய்யும் விதம், சமுதாயத்தில் நாம் நடந்து கொள்ளும் விதம். அதிலும் சனி பகவான் மூன்றாம் பார்வையாக ஏழாம் இடம் தனுசு வீட்டை பார்ப்பதனால், தன்னிடம் நேரடியாக சந்திக்கக்கூடிய நபர்களிடம், இவர் நடந்து கொள்கின்ற விதம், மிகவும் மோசமாக இருக்கும். இவரிடம் என்ன செய்கிறார்கள் என்றால், மேனேஜ்மென்ட் இவர் அப்பாவிடம் இருந்து, கை மாறி பையனிடம் வந்த அடுத்த மூன்று மாசத்தில், எல்லா வேலை ஆட்களும் வேலையிலிருந்து நின்று விட்டார்கள். அப்பா வேலை ஆட்களிடம் கேட்கும் பொழுது, என்ன ஆச்சு உங்களுக்குத் தான் எல்லாம் சரியாக செய்து கொண்டிருக்கிறேனே,  ஏன் இப்படி செய்கிறீர்கள் என்றால், உங்க பையன் சைக்கோ போல பேசுகிறார். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை. எங்களுக்கு இந்த கம்பெனியில் வேலை இல்லை என்றாலும் பரவாயில்லை. நீங்க வேற ஆட்களை போடுங்கள் இல்லை என்றால் நீங்கள் மேனேஜ் செய்யுங்கள்.  இல்லை என்றால் நாங்கள் வரவில்லை, என்று வேலை ஆட்கள் சொன்னார்கள்.  

பாரம்பரியத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, பத்தாம் அதிபதி ஏழாம் இடத்தில் உச்சம். இவ்வாறு சனி பகவான் இருக்கும் அமைப்பில்,  வேலையாட்கள் நன்றாக கிடைக்க வேண்டும், நன்றாக இருக்க வேண்டும்  என்று தான் நாம் சொல்லுவோம். ஆனால், ALP ஜோதிட முறைப்படி ஆய்வு செய்யும் போது, இந்தப் பையனுக்கு அஷ்டமாதிபதி, ஐந்தாம் இடத்தில் அமர்ந்து மொத்தமாக பெயரைக்  கெடுத்து, கம்பெனியில் வேலை செய்தவர்களை வெளியில் அனுப்பி, இந்த பையனுடைய அப்பா பேசினாலும், அப்பாவைப் புரிந்து கொள்ளாமல், அப்பாவிற்கும் மகனுக்கும் பெரிய மோதல். காரணம் என்னவென்றால், ALP மிதுன லக்னத்துக்கு, 9 ஆம் அதிபதியும் ஆன சனி பகவான், ஐந்தாம் இடத்தில். இந்த ஒரு காரணத்தை, நீங்கள் தெளிவாகப்  புரிந்து கொள்ள வேண்டும். 

எனவே, ஒரு கிரகம் உச்சமாக இருந்தால், அந்த கிரகம் நல்லது மட்டுமே செய்யும் என்று நம்ப வேண்டாம். ஒரு கிரகம் நீச்சமாக இருந்தால் அது பலனை தராது என்று கிடையாது. ஒரு நபருக்குள் ஒரு பிளஸ்சும் இருக்கும். மைனஸும் இருக்கும். அதே போல, ஒரு கிரகம் நல்லதும் செய்யும். அதே கிரகத்துடைய காரகத்துவம் பலனை மாற்றியும் செய்யும். அதேபோல மிதுன லக்னத்தில் இருப்பவருக்கு சனி உச்சமாக இருக்கக்கூடிய காலகட்டங்களில், பிள்ளைகளால், குலதெய்வத்தால், மனரீதியாக பாதிப்பு நிச்சயமாக ஏற்படும். தான் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்றே செய்வார். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு ஸ்கேல் போட்டு இருப்பார்கள். ஆனால் அது சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் என்னவென்றால்,  மனரீதியாக இவர்கள் பாதிக்கப்பட்ட விஷயம், அவர்களுக்கே தெரியாமல் இருக்கும். அது தெரிந்து கொண்டால் தானே மாற முடியும்.  

எப்பொழுது தெரிந்து கொள்வார்கள் என்றால், அடுத்து ALP கடக லக்னம் வரும் போது, அஷ்டமாதிபதி சனி பகவான் ஆகிவிடுவார். அவர் நாலாம் இடமாகிய துலாமில் இருக்கிறார். அஷ்டமாதிபதி, நாலாம் இடத்தில் இருக்கும் போது, அந்த பத்து வருடங்கள், வீடு சம்பந்தப்பட்ட விஷயங்கள், வண்டி வாகனங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், மாற்றத்துக்கு உள்ளாகும். ALP மிதுன லக்னத்தில் இவர் எப்படி இருந்தாரோ, அதே போல்  ALP கடக லக்னத்திற்கு வரும் போதும் மாறுவார். ஆனால் அப்போதும், வீடு வண்டி வாகனம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள் தவறாக தான் எடுப்பார். அதனால் உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் உச்சமாக இருக்கிறார், குரு பகவான் உச்சமாக இருக்கிறார், செவ்வாய் பகவான் உச்சமாக இருக்கிறார், என்று நீங்களே ஒரு கற்பனையை உங்களுக்குள் உருவாக்கிக் கொண்டு,  உங்கள் வாழ்க்கை இப்படியாகத்தான் போகும் என்று ஒரு ஸ்கேல் போட்டுக்கொள்ள வேண்டாம். அதனுடைய பலன் ALP ஜோதிட முறையில் பார்க்கும் போது, முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். 

 

 

 

நிறைய நபர்களுக்கு சனி பகவான் உச்சம். சமீபத்தில் முதலமைச்சர் ஆக இருந்த எடப்பாடி அவர்களுடைய ஜாதகத்தில் சனி பகவான், உச்சம். ஸ்டாலின் சார் அவர்களுடைய ஜாதகத்தில் சனி பகவான், உச்சம். அவர்களுக்கு ALP லக்னம், வேறு வேறு போகின்றது. அந்த சனி பகவான் அவர்களுக்கு ரியாக்ட் செய்யும் விதம் வேறு மாதிரி இருக்கிறது. ஆனால் சனி பகவான் உச்சம் ஆகின்ற ஜாதகம் இப்படித்தான் இருக்கும் என்று தயவு செய்து யாரும் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டாம். உங்களுடைய ஜாதகத்தில் ALP ஜோதிட முறையில், ஒவ்வொரு கிரகமும் உச்சமாக இருந்தால் என்ன பலன், நீச்சமாக இருந்தால் என்ன பலன் என்று ஆய்வு செய்து, கண்டிப்பாக முறையாகக் கையாண்டால், கண்டிப்பாக சிக்கலான சூழ்நிலையிலும் நீங்கள் வெற்றி பெற முடியும். மீண்டும் இது போன்ற ஒரு நிகழ்வில் நாம் மீண்டும் சந்திப்போம். நன்றி. வணக்கம். 

முடிவுரை

என்றென்றும் நன்றியுடன்....


ALP Astrology

Phone

+91 9786556156

Address

S.POTHUVUDAIMOORTHY
ALP ILLAM, No.18A Ganesh Nagar(First Right),
Old Perungalathur (NEAR LOTUS POND),
S.V Nagar Post, Chennai - 600063,
Tamil Nadu, India.

Email

alpastrologyoffice@gmail.com

alpastrology.org@gmail.com

Contact Us

© , ALP Astrology Created By Codriveit. All rights reserved