கட்டுரை சுருக்கம்: அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிட முறை – ராகுவோ கேதுவோ லக்னத்தில் இருந்தால் – திருமண தாமதத்திற்கு யார் காரணம்? – மக்களுக்கு இருக்கும் பிரச்சனை என்ன? – புரிதல் இல்லாததால் ஏற்படும் பாதிப்புகள் – தோஷம் உள்ள ஜாதகங்களை கையாளுவது எப்படி? – ALP லக்னம் மட்டும் பார்த்தால் போதும் – வேறு கிரகங்களால் கூட திருமணம் தாமதம் ஆகுமா? – பெற்றவர்களே ஜோதிடம் படிக்காமல் நீங்களாக முடிவு செய்யாதீர்கள் – மாறும் லக்னம் மாறும் வாழ்க்கை – லக்னப்பொருத்தம் பார்ப்பது அவசியமா – திருமண பொருத்தம் பார்த்தும் திருமண வாழ்வில் சங்கடங்கள் ஏற்படுகிறது காரணம் என்ன? – அட்சய லக்ன பத்ததி ஏன் படிக்க வேண்டும்? – ஒரு வாழ்க்கையை பற்றி முடிவு எடுக்கும் போது ஜோதிடம் கற்பது அவசியம் – முடிவுரை.
அறிமுகம்
அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிட முறையில் ராகு கேது தோஷம் மற்றும் திருமணத்தில் கிரகங்களின் பங்கு என்ன என்றும் பல ஜோதிட ரகசியங்களை, அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய டாக்டர். சி. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் ஒரு காணொளியில் கூறிய விளக்கத்தை இக்கட்டுரையில் காண்போம்.

அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிட முறை
அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிட முறை என்பது வளரும் லக்னத்தை அடிப்படையாக கொண்டு பலன் எடுக்கும் ஓர் எளிய ஜோதிட முறை.
ராகு கேது தோஷம்: ராகுவோ கேதுவோ லக்னத்தில் இருந்தால்?
கேள்வி : திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது ராகுவோ கேதுவோ லக்னத்தில் இருந்தால் அதே மாதிரி லக்னத்தில் ராகு கேது இருக்கிற வரனை சேர்க்கலாமா?
பதில் : நீங்கள் பிறந்த அன்றைக்கு லக்னத்தில் ராகு இருந்ததா என்றால் இருந்தது. ALP லக்னம் வளர்ந்து இரண்டாம் வீடு, மூன்றாம் வீடு என வந்துவிட்டது. 21 வயது முதல் 30 வயது வரைக்கும் உங்கள் லக்னமே மாறிவிட்டது. ALP லக்னம் மாறி இருக்கும். அப்போது ALP லக்னத்திற்குதான் நீங்கள் ஜாதகம் பார்க்க வேண்டும்.
இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் ஜென்ம லக்னத்தில் ராகு கேது இருக்கும் போது அதே அமைப்புள்ள வரனை சேர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
திருமண தாமதத்திற்கு யார் காரணம்?
திருமணம் நடக்காததற்கு தோஷம் தான் காரணமா?
தோஷம் காரணம் இல்லை என்று சொல்லும் ஜோதிடர் யார்?
திருமணம் நடக்காததற்கு வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கும். ஏதோ ஒரு கிரக நிலைகளோ, கால சூழ்நிலைகளோ இங்கே நிறைய இருக்கின்றன. ஆனால், இவர்கள் என்ன சொல்வார்கள், ராகு கேதுதான் திருமணத்தை தடை செய்து, நடத்த விடவில்லை, வாய்ப்பே கொடுக்கவில்லை என்று சொல்வார்கள்.
- உங்களுக்கு தோஷம் இருக்கிறது,
- நாகதோஷம் இருக்கிறது,
- பெண் சாபம் இருக்கிறது
இப்படி ஏதோ ஒன்று. இவர்கள் என்ன பண்ணுவார்கள் நீங்க அப்படி சேர்க்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. ஆனால், நாம் சொல்வது இந்த வீடியோ பார்க்கும் நீங்கள் இந்த வீடியோ எடுத்து மற்றவர்களுக்கு காண்பிக்க வேண்டும்.
ஒரு ஜோதிடர் ஜென்ம லக்னத்தில் ராகு கேது இருக்கிறது. அதே ராகு கேது ஆணையோ பெண்ணையோ சேர்க்க வேண்டாம் அப்படி என்று ஒரு ஜோதிடர் சொல்கிறார்.
மக்களுக்கு இருக்கும் பிரச்சனை என்ன?
- இதுதான் இப்போது இன்றைக்கு மக்களுக்கு இருக்கிற பிரச்சனை.
- ராகு கேது அதே மாதிரி அமைப்பில் இருக்கிற ஜாதகத்தை தான் சேர்க்கிறார்கள்.
- இதனாலும் நிறைய பேர் கஷ்டபடுகிறார்கள். ஆனால், புரிதல் இல்லாமல் இருக்கிறது.
புரிதல் இல்லாததால் ஏற்படும் பாதிப்புகள்
- புரிதல் இல்லாமல் பெற்றவர்கள் ராகு கேது அமைப்புள்ள ஜாதகங்களை சேர்க்கிறார்கள். புரிதல் இல்லாமல் இருக்கிறது. அது என்ன என்றால், நான் ஒரு ஜோதிடராக இருந்துதான் அதை சொல்கிறேன்.
- ஆனால், அந்த பொண்ணோட அம்மாவோ, பையனோட அம்மாவோ, பொண்ணோட அப்பாவோ, பையனோட அப்பாவோ என்ன பண்றாங்க, இதை அவர்களாகவே ஒரு கற்பனையில் ஒரு புத்தகத்தில் இருக்கக்கூடிய நிறைகுறைகளை வைத்து இவர்கள் லக்னத்தில் ராகு இருக்கிறது. ஏழாம் வீட்டில் ராகு கேது இருக்கிறது. இதே பையன் இதே பொண்ணைதான் நான் சேர்ப்பேன் என இவர்களே முடிவு செய்கிறார்கள்.
- ஜோதிடர் கூட சொல்லவில்லை. பொண்ணோட அம்மா என்ன சொல்கிறார், என் பொண்ணிற்கு லக்னத்தில் ராகு கேது இருக்கிறது. என் பையனுக்கு லக்னத்தில் ராகு கேது இருக்கிறது. ராகு தோஷம் என்று எழுதுகிறார்கள். செவ்வாய் தோஷம் என்று எழுதுகிறார்கள். மணமகன், மணமகள் சம்பந்தப்பட்டது Profile லில் பதிவிடுகிறார்கள்.
- ராகு கேது தோஷம் இருக்கிறது. செவ்வாய் தோஷம் இருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் இப்போது சனிபகவான் எழுதிவிட்டார்கள். சுக்கிரன் எழுதிவிட்டார்கள். செவ்வாய் எழுதிவிட்டார்கள். ஆறு கிரகம் வந்துவிட்டது. இன்னும் இருக்கின்ற மூன்று கிரகம் எழுதவில்லை. இதில், தனியாகவே ஒரு பெரிய ஒரு புத்தகமே வைத்துள்ளார்கள்.
தோஷம் உள்ள ஜாதகங்களை கையாளுவது எப்படி?
- செவ்வாய் தோஷம் இரண்டு வருஷம்தான். 4 வருஷம் தான் அதிகபட்சமாக. அந்த காலகட்டத்தில் நடந்தால் மறுபடியும் 40 வருஷம் கழித்து தான் வரப்போகிறது.
- ஆனால் நாம் என்ன செய்கிறோம் ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் இருக்கிறது என்கிறோம்.
- செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷம்தான் சேர்க்க வேண்டும். ராகு கேதுவிற்கு ராகு கேதுதான் சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
ALP லக்னம் மட்டும் பார்த்தால் போதும்
- திருமண பொருத்தம் பார்ப்பதற்கு நீங்கள் ALP லக்னத்திற்கு ALP லக்னம் எப்படி இருக்கிறது என்று பார்த்தாலே போதும்.
- இது மேஷ லக்னமாக இருந்து இப்போது துலாம் லக்னம் ஒரு பொண்ணுக்கோ பையனுக்கோ நடக்கிறது என்றால் நன்றாக உள்ளது. இதை மட்டும் பொருத்தமாக பாருங்கள்.
- ஒருவேளை ஒரு ஜோதிடரிடம் சென்று பார்க்க வேண்டும் அப்படி என்றால் அவர் என்ன பண்ணுவார், இந்த லக்னத்திற்கு லக்னாதிபதி எப்படி இருக்கிறார், நட்சத்திராதிபதி எப்படி இருக்கிறார், பெண்ணோட ஜாதகத்தில் பெண்ணோட லக்னாதிபதி எப்படி இருக்கிறார், நட்சத்திராதிபதி எப்படி இருக்கிறார் கணவன் மனைவி ஜாதகம் எப்படி இருக்கிறது அந்த பொண்ணிற்கும் பையனுக்கும் எப்படி பொருத்தம் இருக்கிறது அப்படி என்று இவர்கள் ஒரு பொருத்தம் ALP லக்ன வயதிற்கு தான், உதாரணமாக 23 வயதிற்கு தான் பொருத்தம் பார்க்க வேண்டும், 25 வயதிற்கு தான் பொருத்தம் பார்க்க வேண்டும்.
- ஆனால், நீங்கள் பிறந்த அன்றைக்கு உள்ள லக்னத்திற்கு பொருத்தம் பார்க்கிறீர்கள் எல்லோரும். திரும்ப திரும்ப சொல்கிறோம் ஆனால் இவர்கள் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள்.
- மறுபடியும் ராகு கேது, செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று யாரும் சொல்லாதீர்கள். இதனால் யாருக்கு கஷ்டம் அந்த பெண்ணிற்கும் பையனுக்கும்தான்.
வேறு கிரகங்களால் கூட திருமணம் தாமதம் ஆகுமா?
- நன்றாக படித்துள்ளார்கள், நல்ல வேலையில் உள்ளார்கள்.
- வேறு கிரகங்கள் வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கும் , அது இல்லை என்று சொல்லவில்லை. நடக்கவில்லை என்றால் நீங்கள் வேறு ஏதோ கிரகம் கண்டிப்பாக கிரகம் நன்றாக இல்லை என்று நமக்கு தெரிகிறது.
- இப்போது ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இல்லை என்றால் அந்த ஜாதகத்தில், ALP பூராடம் நட்சத்திரம் எனில், சுக்கிரன் உதாரணமாக 9 ல், 10ல் இல்லை 7,8 ல் இருக்கிறது என்றால் அழகான பெண் தான் வேண்டும். எனக்கு படித்த பெண் தான் வேண்டும். நான் படித்த அதே படிப்பு உள்ள பெண் தான் வேண்டும்.
- சுக்கிரன் பலவீனமாக அமையும் போது சுக்கிரன் என்றால் அழகு என்ன பண்ணும்? அழகான பெண் வேண்டும் என்றால் எப்படி அழகான பெண் வரும். எதிர்பார்க்கலாம், அந்த அழகிலும் ஏதோ ஒரு குறை இருக்கும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஆனால், நாம் என்ன செய்கிறோம் ? இங்கே பிரச்சனை சுக்கிரன் என்ற ஒரு கிரகத்தில் கூட நிறைகுறைகள் இருக்கும். ஆனால், அவர்கள் என்ன சொல்வார்கள் ராகு கேது இருக்கிறது அதனால் தான் திருமணம் நடக்கவில்லை. ஆனால் பையன் அப்படி சொல்கிறார் என சொல்வார்கள்.
பெற்றவர்களே ஜோதிடம் படிக்காமல் நீங்களாக முடிவு செய்யாதீர்கள்
- மாற வேண்டியது பெண்ணை பெற்ற அப்பா அம்மா, ஆணை பெற்ற அப்பா அம்மா. தயவு செய்து நீங்களே ஒரு முடிவு பண்ணாதீர்கள். அதுதான் ஜோதிடம் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லியதற்கு காரணம்.
- ஏனெனில், எவ்வளவோ வாழ்க்கையில் நீங்கள் கஷ்டப்பட்டு இருப்பீர்கள், படிக்க வைத்திருப்பீர்கள். ஜோதிடத்தை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை என்றால் நீங்கள் எப்படி முடிவெடுக்கிறீர்கள்.
- ஜோதிடம் படிக்காமல் நீங்கள் எப்படி முடிவெடுக்கிறீர்கள். எப்படி யார் முடிவெடுத்தார்கள். நன்றாக இருந்தால் சரி சந்தோஷம்தான். ஏனென்றால் இங்கே ஜோதிடம் என்று ஒரு வழி இருக்கிறது, எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு ஒரு வழி இருக்கிறது.
- இந்த நட்சத்திரம் இந்த நட்சத்திரம் பொருந்தும் இந்த நட்சத்திரம் இந்த நட்சத்திரம் பொருந்தாது அப்படி இல்லாமல் இன்றைக்கு உள்ள நட்சத்திரத்தை பாருங்கள்.
- இன்றைக்கு பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்காக ஜாதகத்தை எடுத்து கொண்டு போகிறார்கள்.
- பத்து பொருத்தம் சொல்லிவிட்டு அதில் ஏழு பொருத்தம் எட்டு பொருத்தம் இருக்கிறது. இருந்தாலும் அந்த ஜாதகத்தை வேண்டாம் என்று சொல்ல காரணம் தசா சந்தி இல்லை, பாபசாமியம் இல்லை என சொல்கிறார்கள். இது பெற்றவர்களுக்கு நூற்றுக்கணக்கில் ஜாதகம் எடுத்து கொண்டு போகிற மாதிரி இருக்கிறது. இது உண்மையிலேயே எந்த அளவுக்கு சரி என்று சொல்லுங்கள்?
- பொதுவாகவே தசா பொருத்தம் எப்படி ALP லக்னத்தை எப்படி பார்க்கிறோமோ தசாவை பார்க்க வேண்டும். தசா நின்ற நட்சத்திரத்தை நாம் கிரகமாக பார்க்க வேண்டும். இவர்கள் என்ன செய்கிறார்கள் ஏதோ ஒரு 10 ஜாதகத்தில் 2 ஜாதகத்தில் நிறை இருக்கும், குறையும் இருக்கும். அப்படியே எல்லாமே ஒத்து போகுமா என்றால் ஒத்து போகாது.
- 4 ஜாதகம் பொருத்தமாக இருக்கிறது என்று 4 பேரை பேச சொல்லுங்கள். 4 பேர் பொருத்தமாக இருந்தால் பேசினால் சரி என்று தான் சொல்ல வேண்டும். 4 பேரும் ஒப்புக்கொண்டார்கள் சார், 4 பேரில் 2 பேருக்கு சரி பேசலாம் என்று சொல்வார்கள். ஒருத்தர் தான் கிட்ட வந்து பேசுவார்கள்.அவர்களும் கிட்ட வந்த பிறகு ஏதோ ஒரு எதிர்பார்ப்பு மாறி இருக்கும்.
- அவர்கள் என்ன பண்ணுவாங்க நான் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள். இங்கே பொருத்தமாக இருந்தது என்றால் அங்கே பொருத்தமாக நடக்கணும். பொருத்தமாக இருந்தது என்றாலே அங்கே ஒரு விஷயம் பொருத்தமாக நடந்து திருமணமே நடந்திருக்கணும். இவர்கள் என்ன செய்வார்கள், தசா பொருத்தம் பார்க்கலாம்.
- தசா சந்தி பொருத்தம் பார்க்கலாம், பாப சாமியம் பொருத்தம் பார்க்கலாம். பொருத்தத்தில் நீங்கள்,
- லக்ன பொருத்தம்
- ராசி பொருத்தம்
- உடல் பொருத்தம்
- மன பொருத்தம் பார்க்கலாம்.
- பத்து பொருத்தத்தில் தினம், கணம், யோனி, ராசி, ராசி அதிபதி, மகேந்திர பொருத்தம் பார்க்கலாம். ஆனால், இங்கே என்ன நடக்கிறது, நிஜத்தில் இது எல்லாமே ஜென்ம லக்னத்திற்கு. நாம் சொல்வது எல்லாமே ALP லக்னத்திற்கு.
மாறும் லக்னம் மாறும் வாழ்க்கை
- ALP லக்னம் மாறும் போது எல்லாமே மாறுகிறது.
- கிரகம் மாறுகிறது,
- பாவகம் மாறுகிறது,
- ஆதிபத்தியம் மாறுகிறது,
- நட்சத்திரங்கள் மாறுகிறது,
- கிரகங்கள் நின்ற நிலைகள் மாறுகிறது. எவ்வளவு அழகாக இங்கே கடவுள் நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
- இன்றைக்கு ALP லக்னத்திற்கு நீங்கள் தசா பொருத்தம் பார்க்கலாமே தவிர நீங்கள் அதற்க்காக அந்த பொண்ணோ பையனோ ஒரு தசா மட்டும் வைத்துக்கொண்டு பாப சாமியத்தை மட்டும் வைத்துக்கொண்டு முடிவெடுக்க கூடாது.
- 10 பொருத்தம் பார்க்கிறது அவரவர் விருப்பம். தசா பொருத்தம் பாப சாமியம் பார்ப்பதும் அவரவர் விருப்பம்.
- ALP லக்னத்திற்கு ALP லக்னம் பொருத்தம் இருக்கும். முதலில் அது, பிறகுதான் நாம் அடுத்த விஷயம் பற்றி பேசணும்.
- நாம் ALP லக்னத்திற்கு ALP லக்னம் பார்க்க, மேஷ லக்னத்திற்கும் கன்னி லக்னத்திற்கும் பொருத்தம் சேரவே சேராது.
- இந்த 10 வருஷம் நன்றாக இருக்காது. 10 வருஷம்தான் வாழ்க்கையே வாழ்வாங்க. அப்புறம் 23ல், 25ல் இருந்து 35 வயது வரைக்கும் வாழவில்லை எனில் எப்போது வாழ போகிறார்கள்.
லக்னப் பொருத்தம் பார்ப்பது அவசியமா?
- ALP லக்னத்திற்கு ALP லக்னம் பொருத்தம் இருக்கிறதா, என்று பார்ங்கள். மற்ற பொருத்தங்கள் அதன் பின் பாருங்கள்.
- இல்லையெனில் நீங்கள் பார்க்காதீர்கள். இதை முதலில் பார்க்காமல் முதல் வழியே இது தான். முதல் பாதையே இதுதான். அந்த பாதையை தெரிந்து கொள்ளாமல் நீங்கள் 10 பொருத்தம் பார்த்தேன் என்று சொல்வது எப்படி?
திருமண பொருத்தம் பார்த்தும் திருமண வாழ்வில் சங்கடங்கள் ஏற்படுகிறது காரணம் என்ன?
- இன்றைக்கு நிறைய பேர் சொல்லுவார்கள் நான் திருமண பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணிணேன் என,
- எங்கள் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டம் இருக்கிறது.
- பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணா நன்றாக தானே இருக்க வேண்டும்.
- ஏன் நன்றாக இல்லை என்று கேட்டால் அதற்கு பதில் தெரியாது.
- எல்லாருக்குமே கஷ்டம். திருமணத்திற்கு பின் எல்லாருமே கஷ்டப்படுறாங்க.
- திருமணத்திற்கு பின் எல்லாருக்குமே ரொம்ப அதிகமாக சண்டை சச்சரவு வருகிறது.
- திருமணம் பண்ணினால் அதிகமாக விவாகரத்துக்கு வருகிறது.
- அங்கே திருமணம் என்று ஒன்று வந்தால் பொருத்தம் என்று ஒன்று இருக்கு. பொருத்தம் நீங்கள் பார்த்திருந்தால் அங்கே நன்றாக தானே இருந்திருக்க வேண்டும்.
- ஆனால், நான் இங்கே ஒரு போல்டு ஒரு நட் இருக்கிறது என்றால் , அவற்றை டைட் பண்றேன். அந்த நட்டை திருக முடியவில்லை. அப்படி என்றால் அது எப்படி பொருத்தமாக மாறும். வாழ்க்கை என்றால் இரண்டுமே ஒத்து போக வேண்டும்.
- சைக்கிள் இருந்தால் ஓட்ட வேண்டும். சைக்கிள் வாங்கி வைத்து நான் அதனை ஓட்டவில்லை என்றால் எப்படி
- பொருத்தம் பார்த்தால் வாழ்க்கை சந்தோஷமாக ஓட வேண்டும். ஏன் ஓடவில்லை என்று கேட்டால் எங்களுக்குள் பொருத்தமே இல்லை என்கிறார்கள்.
- இதனை 10 வருடத்திற்கு பின் சொல்வார்கள். இல்லை என்றால் 20 வருஷம் கழித்து சொல்வார்கள் . நீங்கள் இதனை திருமணத்திற்கு முன்பே பார்க்க வேண்டும்.
- இப்போது கல்யாணம் நடந்தது முடிந்து ஒரு 10 வருடம் 20 வருடம் கழித்து பொருந்தவில்லை என்று சொல்பவர்களுக்கு ALP லக்னம் பார்த்தால் ஆறு எட்டாக இருக்கும். கும்பமும் கன்னியாகவும் இருக்கும். கும்பமும் கடகமாகவும் இருக்கும்.
- அப்போது எப்படி இருக்கும்? பொருந்தாதுதான்.
- என்ன செய்வார்கள்? அந்த கஷ்டத்துடன் கஷ்டம், வலியுடன் வலி, வேதனையுடன் வேதனையாக வாழ்க்கையை நகர்த்தி கொண்டே செல்வார்கள்.
- சில பேர் ஜாதக பொருத்தமே பார்க்கவில்லை. எங்களுக்கு அப்படியே நாங்கள் இருவரும் பார்த்து திருமணம் செய்துகொண்டோம் நன்றாக இருக்கிறது.
- உண்மையிலேயே, உங்களுக்கு ALP லக்னம் நன்றாக இருக்கிறது. உங்களுக்கு மேஷமாக இருக்கு உங்களுக்கு சிம்மமாக இருக்கு, உங்களுக்கு சிம்மமாக இருக்கு உங்களுக்கு தனுசுவாக இருக்கு, உங்களுக்கு தனுசுவாக இருக்கு உங்களுக்கு மேஷமாக இருக்கு, மேஷமாக இருக்கு மிதுனமாக இருக்கு, மிதுனமாக இருக்கு சிம்மமாக இருக்கு நன்றாக ஒத்துப்போகும். எப்படி? தானாகவே அமைந்தது.
அட்சய லக்ன பத்ததி ஏன் படிக்க வேண்டும்?
- இங்கே பொருத்தம் என்ற விஷயத்தில் இயற்கையை மீறி அப்படி ஒரு நிகழ்வு இருக்கு.
- அட்சய லக்ன பத்ததியில் லக்னம் வளரும் போது அட்சய லக்னம் வளரும்போது கவனமாக நாம் பார்க்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.
- ஆனால், நாம் என்ன செய்கிறோம். அதை பார்ப்பதே கிடையாது, பேசுவதே கிடையாது. நாம் என்ன செய்கிறோம் நம் விருப்பத்திற்கு என்ன செய்கிறோம் 10 பொருத்தம் பார்த்தோம் என கல்யாணம் செய்து வைக்கிறோம். கஷ்டப்படுவது யார்? அந்த பொண்ணும் அந்த பையனும்.
- நீங்கள் அதை படித்து இருக்க வேண்டுமல்லவா, ஒரு பொண்ணோட அப்பா , பையனோட அப்பா தெரிந்து வைத்து இருக்க வேண்டுமல்லவா? தெரியவில்லை. தெரிந்திருந்தால் தான் நீங்கள் கேள்வியே கேட்க முடியும்.
ஒரு வாழ்க்கையை பற்றி முடிவு எடுக்கும் போது ஜோதிடம் கற்பது அவசியம்
ஜோதிடத்தை பற்றி ஒரு விழிப்புணர்வே வரவில்லையே. நீங்கள் இவ்வளவு பெரிய விஷயம் முடிவு எடுக்க போகிறீர்கள். பணம் செலவானால் பரவாயில்லை.
இது , ஒரு பொண்ணோட வாழ்க்கை, ஒரு பையனோட வாழ்க்கை. நீங்கள் சாதாரணமாக முடிவெடுக்கறீர்கள் சாதாரணமாக டீல் செய்கிறீர்கள். எவ்வளவு கஷ்டம் அது? முடிந்த பிறகு, சார் அப்படி பார்த்தோம், சார் இப்படி பார்த்தோம் சார். அது எவ்வளவு பெரிய கஷ்டமாக இருக்கும்? அப்படி செய்யக்கூடாது.
வீடியோ
– டாக்டர். சி. பொதுவுடைமூர்த்தி, அட்சய லக்ன பத்ததி – ALP ஜோதிட முறையை உருவாக்கியவர்.
முடிவுரை
பொருத்தம் பார்க்கும்போது ALP லக்னத்திற்கு ALP லக்னம் பொருத்தம் பாருங்கள், இல்லையென்றால் பார்க்காதீர்கள். நன்றி.
ராகு கேது தோஷம் மற்றும் திருமணப் பொருத்தம் – மேலும் அறிய
ராகு கேது தோஷம் பற்றிய அச்சம் இல்லாமல், உங்கள் ALP லக்னத்தின் அடிப்படையில் திருமணப் பொருத்தம் பார்க்க விரும்பினால், எங்கள் திருமணப் பொருத்தம் ஆலோசனை பக்கத்தைப் பாருங்கள். லக்னம் மாறும்போது பொருத்தம் எப்படி மாறுகிறது என்பதை லக்ன மாற்றத்தால் திருமணப் பொருத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் கட்டுரையில் விரிவாகப் படிக்கலாம்.
பெற்றோர்களும் ஜோதிடத்தை அடிப்படையிலிருந்து கற்றுக்கொள்ள ALP அடிப்படை ஜோதிட வகுப்பில் இணையலாம். உங்கள் ஜாதகத்திற்குத் தனிப்பட்ட வழிகாட்டுதல் தேவைப்பட்டால் ஆலோசனைக்கு முன்பதிவு செய்யுங்கள். ராகு, கேது பற்றிய பொதுவான தகவலுக்கு: Rahu – Wikipedia.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
- லக்னத்தில் ராகு கேது இருந்தால் ராகு கேது லக்னத்தில் இருக்கும் ஜாதகத்தையே திருமணத்திற்கு சேர்க்க வேண்டுமா?
- பொருத்தம் பார்த்து நடந்த திருமணத்திலும் கஷ்டங்கள் ஏன்? காரணம் என்ன?
- ALP லக்னத்திற்கு ALP லக்னம் பொருத்தம் திருமணத்திற்கு அவசியம் ஏன்?
- பெற்றவர்கள் ஏன் ஜோதிடம் படிக்க வேண்டும்?
- திருமணத்தில் ராகு கேது தோஷம் எப்படி செயல்படுகிறது?
- திருமணப்பொருத்தத்தில் நிகழும் தவறுகள் என்னென்ன?
- 10 பொருத்தங்கள் மட்டும் பார்த்து திருமணம் செய்வது சரியா?
- பிறப்பு ராசி – நட்சத்திரத்திற்கு பொருத்தம் பார்க்க வேண்டுமா? அல்லது இன்றைய ராசி – நட்சத்திரத்திற்கு பொருத்தம் பார்க்க வேண்டுமா?
- திருமணத்தடைக்கான காரணங்கள் என்ன?
- துல்லியமாக திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படி?
- திருமணப்பொருத்தம் எப்படி பார்க்க வேண்டும்?
- திருமணத்தடைக்கு காரணம் கிரகங்களா அல்லது மனிதர்களா?
- திருமணத்தடைக்கு கிரகங்கள் காரணமா?
- 10 பொருத்தங்கள் பார்த்து நடக்கும் திருமணங்கள் தோல்வியுறுவது ஏன்?
