சிவன்

Spread the love
ஈசன் என்பதன் பொருள் தெரியுமா?
ஈசன் என்ற சொல்லுக்கு அரசன்,
ஆள்பவன்,இறைவன், மூத்தவன்,
கடவுள், குரு, தலைவன் என பல
பொருள்கள் உண்டு. உலகைக்
கட்டிக் காக்கின்ற சிவனே உலகின்
தலைவனாக இருப்பதால் ஈசன் என
குறிப்பிடப்படுகிறார். அவருடைய
இடப்பாகத்தில் இடம்
பெற்றிருக்கும் தேவிக்கு ஈஸ்வரி,
ஈசானி, ஈசி என்றெல்லாம்
பெயர்கள் உண்டு.
சிவனுக்குரியநட்சத்திரமான
திருவாதிரையை ஈசன் நாள்
என்பர். அவர் விரும்பி அணியும்
கொன்றை மாலைக்கு ஈசன் தார்
என்று பெயர். சிவன்
உறைந்திருக்கும் கைலாய
மலை ஈசான மேரு எனப்படும்.
தன்னை நம்பி வந்தவருக்கு,
அள்ளித் தரும் ஈர நெஞ்சமும்,
ஈகை குணமும்கொண்டவர்
என்பதால், இவரை ஈசன் என்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *