முருகப்பெருமான் அகத்தியருக்கு அருளிய தமிழை போல்

அனைவருக்கும் வணக்கம்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் சாந்திதேவி ராஜேஷ்குமார் தஞ்சாவூர்.

ஒரு முருக பக்தரை பற்றி அறிந்து கொள்ளபோகிறோம்.

16 வருடங்களாக மாலை அணிந்து பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கும் பழனிமலைக்கு சென்று வருகிறார்.முருகப்பெருமான் அகத்தியருக்கு அருளிய தமிழை போல்

ஸ்ரீபாலதண்டாயுதபாணி அருள் பெற்று

அவர் உருவாக்கிய ஜோதிட முறையான அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தில் முதன்முதலில் புத்தகம் எழுதிய காலத்திலிருந்து கூட இருந்த நபராக நான் உணர்ந்த அறிந்த ஆச்சரியப்பட்ட சில விஷயங்களை இந்த கட்டுரை வாயிலா சமர்ப்பிக்கின்றேன்.

 

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தென்னடார் நடுக்காட்டில் ப. சிங்காரவேலன் சி. பத்மாவதி அவர்களுக்கு மகனாக  பிறந்தார். ஆசிரியர் பயிற்சி கல்வியும், இளங்கலை பட்டப் படிப்பும், முதுகலை தமிழ் பட்டமும் பெற்றார். ஓலைச்சுவடி தமிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்து உள்ளார். ஓலைச்சுவடியில் ஜோதிடம் சார்ந்த

பதிப்புகள் செய்துள்ளார்.

ஜோதிடத் துறையில் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே அவருக்கு ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டது. அவர் குடும்பத்தில் அவர் ஆசிரியராக வரவேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. அதற்கான படிப்பும் பயிற்சியும் பெற்றுள்ளார். ஆனால் அவரை ஏதோ ஒரு விஷயம் இந்த ஜோதிடத் துறைக்குள் இழுத்துக் கொண்டே இருந்தது. அதில் நிறைய தேடுதல்களும் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ளக்கூடிய தூண்டுதல்களும் அவருக்கு நிறையவே இருந்தது. அதன் காரணமாக நிறைய ஜோதிடம் சார்ந்த விஷயங்களை அவர் ஆழ்ந்து உற்று நோக்கிக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த ஆழ்ந்த உற்றுநோக்கின் காரணமாக ஜோதிடத்தில் ஏன் வெவ்வேறான பலன்கள் வருகிறது ஜோதிடம் என்பது ஒரு கணித முறை. கணிதத்தை எந்த முறையில் போட்டாலும் ஒரே விடைதானே வரவேண்டும். இதில் மட்டும் ஏன் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி வெவ்வேறான பலன்கள் சொல்கிறார்கள் என்ற கேள்வி அவருள் எழுந்து கொண்டே இருந்தது

 

அதே போல் ஒரு அம்மாவுடைய கண்ணீர் துளிதான் அவருக்கு இந்த ஜோதிட துறையில் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை உண்டாக்கியே தீரவேண்டும் என்கிற ஒரு எண்ணத்தை அவருக்குள் விதைத்தது என்று சொல்லலாம், என்ன காரணம் என்றால் அந்த அம்மா உடைய பொண்ணுக்கு ரொம்ப நாளாகியும் திருமணம் நடக்கவில்லை. எல்லாருமே செவ்வாய் தோஷம் என்று சொல்லி ஜாதகம் பொருத்தம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. அதனால் பொண்ணுக்கு வரன் அமையவில்லை அப்படின்னு அவங்க அழுத்தினால் அந்த கண்ணீர் வந்து அவருக்குள் ஒரு தீராத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனுடைய விளைவாக ஜோதிடத்தில் எப்படி ஒரு கிரகம் மட்டும் திருமண வாழ்க்கையை முடிவு செய்யும். அப்போ மற்ற கிரகங்கள் எல்லாம் வேலை செய்வது இல்லையா? என்பது போன்ற ஒரு தேடுதல் அவருக்குள்ளே தோன்ற ஆரம்பித்தது. அதை நோக்கி பயணம் செய்தார் அவருக்குள் நிறைய விஷயங்கள் புலப்பட ஆரம்பித்தது.

 

அவர் ஒரு தீவிரமான முருக பக்தர் அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் முருகன் மேல் மிகுந்த பற்றுதல் உள்ள ஒரு குடும்பம். எப்படி முருகப்பெருமான் வந்து அகத்திய மாமுனிவருக்கு ஆசி கொடுத்து இந்த தமிழ் அப்படிங்கிற ஒரு விஷயத்தை இந்த உலகுக்கு அகத்தியர் கொடுத்தாரோ அதே மாதிரி அந்த முருகனுடைய அருளாலும் கருணையினாலும் அந்த முருகன் அவருக்கு அருளிய மிகப்பெரிய நன்கொடை அப்படின்னு தான் சொல்லணும்.

இந்த ஒரு ஜோதிட முறை அவருக்குள்ள ஏற்பட்டதற்கு காரணம் அவருடைய முருக பக்தியும் இந்த ஜோதிட உலகிற்கு ஏதாவது ஒரு விஷயத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் தான் காரணம். முருகன் மட்டுமல்ல அவர் தீவிரமான ஆஞ்சநேயர் பக்தரும் கூட, நிறைய தேடுதல்களால் நிறைய இடங்களுக்கு போயிருக்காரு இமயமலை பயணங்கள் அடிக்கடி மேற்கொள்வார். அப்படி ஒரு முறை இமயமலை போயிருந்த போது தான் அவர் நீம் கரோலி பாபாஜி ஆசிரமத்துக்கு சென்றுள்ளார். அங்கு அந்த பாபாஜியிடம் கேட்கிறார் யார் யாருக்கோ என்னன்மோ கொடுக்குறீங்க எனக்கு ஏதாது குடுங்க ஜோதிடத்தில்

ஒரே பலன்கள் மாதிரியான எல்லோராலும் சொல்ல முடிவதில்லை மக்களுக்கு, வெவ்வேறான பலன்கள் சொல்றாங்க, அப்போ ஒரே பலனை சொல்லக்கூடிய ஒரு ஜோதிட முறை என்ன அட்டிங்கிற மாதிரி சிந்தனை செய்து கொண்டே அவர் பார்த்த விஷயங்கள் எல்லாமே ஒரு வளரும் தோற்றத்தை தான் அவருக்கு உணர்த்தியிருக்கு

ஒரு ஆலமரத்தடியில் கண்ண மூடி தியானத்தில் இருக்காரு.

அப்போ அவருக்கு வந்த ஒரு உள்ளுணர்வு அவர் கண்ணு முன்னாடி அந்த ஆலமரத்தின் விழுதுகள் வளர்ந்த நிலையில் அவருக்கு காட்சி கொடுக்கிறது. அந்த காட்சியில் அந்த விழுதுகள் வளரும் பொழுது,

ஏன் லக்னம் வளர கூடாது அப்படின்னு யோசிச்சு அதுக்கு அப்புறம் அதுக்காக நிறைய கணிதங்களையும் நிறைய ஆய்வுகளையும் பல வருடங்களாக மேற்கொண்டு இந்த அட்சய லக்ன பத்ததி என்ற அற்புதமான ஜோதிட முறையை நமக்கு கொடுத்திருக்கார் . வளரும் லக்கன பாவக முறை லக்கனத்தை நகர்த்தி பலன் எடுக்கக் கூடிய ஒரு ஜோதிட முறையை ரொம்ப எளிமையாக எல்லாரும் புரிந்து கொள்ள கூடிய வகையில் கொடுத்திருக்கார்.

இது எத்தனை பேருக்கு புரியுதுனு தெரியல ஆனா இன்றைக்கு நிறைய பேரு புரிஞ்சுக்கிட்டு பார்க்கக்கூடிய ஒரு எளிமையான ஜோதிட முறையாக இன்னைக்கு நம்ம கையில அட்சய லக்ன பத்ததி என்கிற ஒரு ஜோதிட முறையையும், அதற்கான மென்பொருளும் இருக்கு. அப்படிங்கற போது இந்த காலத்தில் அவர் கூட நம்ம பயணிக்கிறோம், அவர் கூட நாம் இருக்கிறோம் என்பதே ஒரு பெரிய மகிழ்ச்சியான பாக்கியமான விஷயமாக உணர முடிகிறது.

 

வருங்காலத்தில் ஜோதிடத்தின் அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு பொக்கிஷமாக பலன் சொல்வதற்கு எளிமையான ஒரு துல்லிதமான ஒரு ஜோதிட முறையாக இந்த அட்சய லக்ன பத்ததி இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

 

இதை பற்றி நிறைய விஷயங்கள் பேசும்போது நான் சார் கிட்ட கேட்டு இருக்கேன். ஏன் சார் இந்த ஜோதிட முறைக்கு உங்க பெயர் வைக்கல ? அவங்கவங்க கண்டுபிடித்த ஜோதிட முறைக்கு அவங்கங்க பேரு வச்சிக்கிறாங்களே . உங்களுடைய இந்த அரிய உழைப்புக்காக நீங்க கண்டுபிடிச்ச இந்த ஜோதிட முறைக்கு ஏன் உங்க பேரு வைக்கலன்னு

அப்ப, அவங்க சொல்வாங்க இது தனிப்பட்ட என்னுடைய கண்டுபிடிப்பு அப்படினு நான் சொல்ல விரும்பல, இது இறைவன் எனக்கு அளித்த ஒரு கொடை. இதை மத்தவங்களும் பயன்படுத்தனும் என்பதற்காக கொடுக்கிறேன். இதில் என் தனிப்பட்ட பெயரை கொண்டு வரணும்னு நான் விரும்பல. அப்படினு சொன்னாங்க. அதனாலதான் இது வளர்தல் என்று ஒரு பொருள் படனும் அப்படிங்கிறதுக்காக அந்த வளரும் பெயருடைய தன்மையான அட்சய என்பதை பெயராக வச்சாங்க.

ஏன்னா என்னைக்குமே காலங்காலமாக அட்சய பாத்திரம் போல் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கக்கூடிய ஜோதிட முறையாக இருக்கும். ஒவ்வொரு லக்னமும் மாறிக்கொண்டே இருக்கும். எப்படி ஆளுடைய தோற்றம் வளர்கிறதோ அதே போல் அந்த லக்ன புள்ளியும் வளர்ந்து கொண்டே இருக்கும் அப்படிங்கிற பொருள் படும் விதமாக அட்சய லக்ன பத்ததி அப்படினு அதுக்கு பேரு வச்சிருக்காங்க.

 

வருங்கால ஜோதிட தலைமுறைக்கு இது ஒரு மைல்கல்லாக இருக்கும்.

 

ஏன் சார் லக்கனத்தை மட்டும் வைத்து பலன் பார்காம இப்படி லக்னம் மாறும் என்ற ஒரு விஷயத்தை கண்டு பிடிக்கணும்னு உங்களுக்கு தோணுச்சுனு நான் கேட்டேன். அப்போ வந்து பிறப்புடைய ரகசியத்தை தெரிந்து கொள்வதுதான் அந்த லக்ன புள்ளி. இந்த ஜென்மத்தில் நாம் என்னவாக இருக்கப் போகிறோம், என்ன அனுபவிக்கப் போகிறோம் அதை தெரிஞ்சுக்க கூடிய ஒரு ஆரம்பப் புள்ளி தான் நம்முடைய ஜென்ம லக்னம் பிறப்பின் லக்னம் என்பது. ஆனால் அதை எந்த வழியில் நாம் அனுபவிக்கப் போகிறோம். இப்போ ஒரு ஊருக்கு போகணும்னா எந்த பஸ்ல போகனும் எத்தனை மணிக்கு அந்த பஸ் வரும், அந்த பஸ் எந்த வழில போகும் அப்படிங்கிறதை தெரிஞ்சிக்கிற மாதிரிதான் இப்போ இந்த transit லக்கனமும். இப்ப நம்ம எந்தப் பாதையில் நாம் போகனும், எந்த பாதை வழியாக சென்று அனுபவிக்கப் போகிறோம், அந்த பாதைகள் எப்படி இருக்கும், கரடுமுரடாக இருக்குமா, இல்ல சீராக இருக்குமா, இல்ல நல்ல பைபாஸ் மாதிரி நல்லா இருக்குமா, என்பதை தெரிஞ்சிக்கூடிய ஒரு தன்மைதான் இந்த அட்சய லக்ன புள்ளின்னு அவங்க சொல்லும்போது

 

எப்படி யாருக்குமே தோன்றாத விஷயங்கள் இவருக்குள் தோணுச்சு? எப்படி இத அவங்க கொண்டு வந்தாங்க அப்படின்னு ஒரு தடவை இல்ல இரண்டு தடவை இல்ல ஒரு நூறு தடவை அவருடைய இந்த ஜோதிட ஞானங்களை பார்த்து பிரமித்துப் போயிருக்கிறேன்.

 

ஒரு நேரத்தில் கஷ்டப்படுறவங்க ஒரு நேரத்தில் நல்லா இருப்பாங்க அது ஏன்? எப்போதுமே கஷ்டப்பட்ட ஜாதகரும் கிடையாது, அதே போல் எப்போதுமே நல்ல வாழ்ந்த ஜாதகமும் கிடையாது.

 

ஏதாவது ஒரு கால கட்டங்களில் அவங்க பிரச்சினைகளையும் கஷ்டங்களை அனுபவித்து இருப்பார்கள். இந்த மாதிரி இதுக்கெல்லாம் காரண காரியங்கள் என்ன அப்படிங்கற

தேடுதல்களை மேற்கொண்டு அந்த தேடுதலின் விடை தான் நமக்கெல்லாம் இன்றைக்கு ஒரு அரிய பொக்கிஷமாக இருக்கக்கூடிய இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை என்று

சொல்லலாம்.

அதேபோல் 6 வருட கடுமையான உழைப்பில் தான் மென்பொருள் தயாரிச்சிருக்காங்க. ஏன்னா? இந்த கணிதம் என்பது எல்லோருக்கும் எளிமையாக இருக்கணும், எல்லாரும் புரிஞ்சுக்கூடிய அமைப்பில் இருக்கணும் என்பதற்காகவே அவங்க வந்து இந்த அட்சய லக்ன பத்ததி மென்பொருளை உருவாக்கி அதற்காக நிறைய நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து யார் பலன் சொன்னாலும் ஒரே பலன்தான் வரணும் அப்படிங்கிறத்துக்காக எளிமையாக அதனுடைய கால அளவுகளை ஒரு 360° டிகிரி கொண்ட ஒரு ராசி மண்டலத்தில் 120 வருட விம்சோத்தரி தசா வருடங்களை இணைத்து 10 வருடத்திற்கு ஒரு லக்னம் மாறும் 1 வருடம், 1 மாதம் , 10 நாள் ஒரு நட்சத்திர பாதத்தில் travel பண்ணும் அது எந்த தேதியில் இருந்து எந்த தேதிவரை செயல்படும் என்ற கணித முறையை மென்பொருளில் கொடுத்துள்ளார்.

 

இன்றைக்கு நிறைய மாணவர்கள் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். கிட்டதட்ட ஒரு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை கற்றுக்கொண்டு இருக்காங்க.

அதேபோல் 200 மாணவர்கள் வந்து இதில் பலன் சொல்லும் அளவுக்கு ரெடியாகி அவங்க வந்து பலன் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அந்த அளவுக்கு ஒரு எளிமையான ஒரு ஜோதிட முறையாக இந்த அட்சய லக்ன பத்ததி இருக்கு.

 

அவங்களுடைய

அந்தப் போராட்டங்கள், அவங்க வாழ்க்கையில் அவங்க அனுபவித்த கஷ்டங்கள், அதுக்காக அவங்க தியாகம் செய்த காலங்கள், இது எல்லாமே நாம கூடவே இருந்து பயணித்ததனால் எங்களால் நிறைய விஷயங்களை புரிஞ்சிக்க முடிஞ்சது, உரை முடிந்தது.

 

சார்பலன் சொல்லும் போது ஆச்சரியமான நிறைய விஷயங்கள் சொல்லி இருக்காங்க. அது வந்து கணிதத்திற்கும் அப்பாற்பட்டு அவங்க சொன்ன விஷயங்கள் அப்படிங்கறது எங்களால் நிறைய நேரத்துல புரிஞ்சுக்க முடிஞ்சது.

ஏன்னா?

ஒரு விஷயத்தை ஜாதகத்தை கணித்து பாத்து சொல்லனும் என்பதை விட அவங்க வந்தவுடனேயே அவங்களுக்கு இப்படித்தான் நடக்கும் என்பதை எண்ணங்கள் மூலமாக வெளிப்படுத்தும் போது அது ரொம்ப ஆச்சர்ய படக்கூடிய ஒரு விஷயமாகவே இருந்தது.

ஒரு நாள் ஒரு ஜாதகர் வரும்போது அவர் வந்து இந்த இடத்துக்கு போகலாமா வேண்டாமான்னு அவர் நினைத்து 3 தடவை சட்டையை கழட்டி மாட்டி இருக்காரு. அந்த விஷயத்தை அவர் வந்து உட்கார்ந்த Second la சொன்னாரு, ஏய்யா வந்திங்க, உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் தானே 3 மூணு தடவை சட்டையை கழட்டி மாத்தினிங்க, இப்ப ஏன் வந்தீங்கனு கேட்கும் போது எங்களுக்கெல்லாம் அவ்வுளவு ஆச்சரியம். எப்படி இத கேட்க முடிந்தது.

 

இந்த மாதிரி ஒரு நிகழ்வு கிடையாது பல ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் நம்மலால் சொல்ல முடியும், அத சொல்றதுக்கு இந்த ஒரு கட்டுரை எனக்குப் போதாது அப்படின்னு தான் சொல்லணும். ஏன்னா அந்தளவுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு.

 

அதே மாதிரி அவங்க இந்த ஆய்வில் 18 புத்தகம் இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை பற்றி அவங்க எழுதறாங்க. இந்த பதினெட்டு புத்தகத்துல என்ன எழுதனும் என்னென்ன விஷயங்களை மக்களுக்கு கொடுக்கணும் முடிவு பண்ணின அப்புறம் தான் இந்த மாதிரி ஒரு ஜோதிட முறையே இருக்கு அப்படிங்கறத அவங்க வெளியிட்டாங்க.

 

இந்த ஜோதிட முறையை அவங்க Copyright பண்ணி இருக்காங்க. ஏன் சார் இதற்கு உங்க பேரு வைக்கல, ஆனா Copyright மட்டும் பண்றீங்களே எதனால அப்படினு சொல்லி நான்

கேட்ட போ என்ன சொன்னாங்க தெரியுமா அப்பாவது இந்த ஜோதிட முறையை Copyright பண்ற அளவுக்கு இதுல என்ன இருக்கு அப்படின்னு யாராவது வந்து பார்ப்பாங்க அப்படிங்கறதுக்காக தான் இந்த Copyright பண்ணதா கூட சொன்னாங்க. அந்த மாதிரி அவருடைய அந்த உழைப்பு இந்த ஜோதிடமுறை காக அவர் அற்பணிச்சது என்பது நிறைய இருக்கு.

 

 

அட்சயலக்ன பத்ததியில் கிரகங்கள், நட்சத்திரங்கள் ஒவ்வொரு வயதுக்குத் தகுந்த மாதிரிதான் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று முதன்முதலில் சொன்னது இவர்தான். அதே போல் லக்னம் நகரும் என்று சொன்னது இவர் தான். அதுவும் 12 கட்டங்களுக்கு பத்து பத்து வருடம் 12 கட்டத்திற்கு 120 வருடம் நகரும்னு ரொம்ப எளிமையாக சொல்லி எல்லாருக்கும் புரிய வைத்திருக்கிறார். அதுக்கு ஒரு தனி மென்பொருளே கண்டுபிடித்து இருக்கிறார். இந்த சாப்ட்வேர் உருவாக்கறத்துக்கு மட்டும் அவருக்கு 6 வருடம் உழைத்திருக்கிறார். அதில் உள்ள கணக்கு முறைகளை நாம கையாள கணக்கு போட்டம்னா ஒரு நாளைக்கு ஒரு ஜாதகம் கூட முழுமையாக நம்மால் பார்க்க முடியாது. ஏன்னா? அந்த அளவுக்கு ஒரு கடுமையான கணக்கு முறைகளை ரொம்ப எளிமையாக்கி அந்த மென்பொருள்ல கொடுத்து இருக்கதனால இன்றைக்கு நிறைய பேர் அதை பயன்படுத்த முடியுது.

 

அதே போல அந்த மென்பொருளிலும் முன்ஜென்மத்தை பற்றியும் தனியாக ஆய்வு பண்ணிருக்காங்க. மறுஜென்மத்தை பற்றியும் ஆய்வு செஞ்சு இருக்காங்க. ஆனால் மறு ஜென்மம் என்பது புரிபட்டால் யாரும் இந்த ஜென்மத்தில் வாழ முடியாது அப்படிங்கறதுக்காக அதை பற்றி வெளில அவங்க யாருக்கும் சொல்லல அதேபோல் முன் ஜென்ம ஜாதகத்தையும் இப்ப உள்ள ஜாதகத்தையும் ஒப்பீடு பன்றாங்க. ஒப்பீடு பண்ணி அந்த காரணகாரியங்கள் எதனால் இந்த ஜென்மத்துல நல்லாஇருக்காங்க, எதனால் கஷ்டபடுறாங்க அப்படிங்கறதையும் அவங்க தெரிந்து அதையும் அவரால் சொல்ல முடியும். கடந்த காலத்தில் எந்த வருடம் பிறந்திருக்காங்க என்பதை கூட ஒரு அனுமானமாக சொல்லும் அளவிற்கு மென்பொருளை உருவாக்கி இருக்காங்க.அந்த ஜாதகத்தையும் தற்போதைய நிகழ்வுகளையும் ஒப்பிடு செய்கிறாங்க. அது தான் அவருடைய ஆய்வுகள். எல்லாமே ஒரு சாதாரண மனிதருடைய ஆய்வுகள் அல்ல. அதை யாராலும் தற்போது புரிந்துகொள்ளமுடியாது. போக போக புரிந்து கொள்வார்கள்

 

எல்லாருக்கும் ஜாதகம் பார்ப்பது கிடையாது அவங்க சில பேருக்க தான் பாக்குறாங்க.

 

வேறு ஒருவர் புத்திக்கு இந்த ஜோதிட முறை எட்டி இருந்தால் இப்போது பல கோடி பில்லியன்களை குவிச்சிருப்பாங்க. ஆனால் இவர் அப்படி நினைக்கல. தேவைகளுக்கு மட்டுமே பணம் பெறுகிறார். இருந்தால் கொடு, இல்லைனா விடு அப்படி சொல்லிடுறாங்க.

 

மெடிக்கல் அஸ்ட்ராலஜிக்குனு தனிய ஆய்வு செய்திருக்கிறார்.

ஒவ்வொரு 10 நிமிடத்திற்க்கும் கிரகங்கள் அமைப்பு எப்படி இருக்கும், அன்றாட நிகழ்வுகளில் கூட ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கும், என்பதை ஜோதிடம் தெரியாத ஒரு நபர் கூட அறிந்து கொள்ளக்கூடிய வகையில் அந்த மென்பொருளை வடிவமைத்திருக்கிறார். அதில் எல்லாமே குறியீடு மூலமாகவும், எண்கள் மூலமாகவும், சதவிகித மூலமாகவும் குறிச்சிருக்காங்க.

 

எண் கணிதத்தை ALP லக்னத்தோடு பொருத்தி 10 வருட கிரகங்கள் நன்றாக இருந்தால் அவர் அந்த கிரகங்களுக்குரிய எண்களையோ, பெயர்களையோ மாற்றி அமைத்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதையும் மென்பொருளில் வடிவமைத்துள்ளார்.

 

திருமணப் பொருத்தம் பார்த்து செய்யும் திருமணங்கள் பல விவாகரத்தில் முடிவதின் காரணகாரியங்களை ஆராய்ந்து அதை தவிர்க்கும் வகையில் அட்சய லக்ன பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதற்கான மென்பொருளையும் உருவாக்கியுள்ளர்.

 

18 புத்தகங்களில் 4 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 5, 6 ம் அச்சுப் பதிப்பில் இருக்கு. அடுத்தடுத்த பதிப்புகளும் வரவிருக்கிறது.

 

2017ல் இந்த ஜோதிட

முறைக்காண புத்தகத்தை Copyright செஞ்சிருக்காங்க. இந்திய அரசால் அந்த Copyright அவருக்கு வழங்கப்பட்டிருக்கு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவிலும் வெளிநாடுகளில் இருந்தும் நிறைய பேர் படிக்கிறாங்க இவர்கிட்ட. பொது நிகழ்சிகளில் நிறைய உலகியல் ஜோதிடத்தை ஆய்வு செஞ்சு செல்லி இருக்காங்க. அதிலும் குறிப்பாக இந்த 2021 மே மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல் கணிப்பில் 29ம் தேதி ஏப்ரல் மாதமே மாலை முரசு பத்திரிகையில் தி.மு.க பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும், ஜெயிக்கும் என்று சொல்லி இருக்கார். இதுபோல நிறைய விஷயங்களை இவரால் கணிக்க முடியும். அமானுஷ்ய விஷயங்களாக இருக்கட்டும் முன்ஜென்ம விஷயங்களைப் பற்றியும் நிறைய இவரால் பார்க்க முடியும். கடந்தகால ஜாதகத்தையும் பதிவு செய்திருக்கிறார். இந்த வினைப்பயன் யாருடையது அப்பா வழியில் வந்ததா , அம்மா வந்ததா , ஜாதகரின் சுய கர்ம வினைப் பயனால் வந்ததா, என்பதையும் ஆய்வு செஞ்சு ரொம்ப எளிமையாக அதை எல்லோருக்கும் புரிகிற மாரி சொல்லிருக்காங்க. புத்தகங்களையும் அது சம்பந்தமான விளக்கங்களையும் கொடுத்திருக்காங்க. அதே போல் ஒரு சில ஜாதகங்களை மட்டும் தான் நம்மளால் இயக்க முடியும் இயக்க வைக்க முடியும். பரிகாரம் என்பது எல்லோ ஜாதகங்களுக்கும் பொருந்தாது. சில ஜாதகங்கள் மட்டுமே பரிகாரம் செய்து இயங்கவைக்க முடியும் | சில ஜாதகங்கள் எவ்ளோ பரிகாரம் செய்தாலும் அதை இயக்கவைக்க முடியாது, அந்த வினைப்பயனை அவங்க அனுபவித்து மட்டுமே தீர்க்கணும் அப்படின்னு அவங்க ரொம்ப துல்லிதமாக சொல்லி இருக்காங்க. இது எல்லாமே அவங்க சொல்லும்போதும் அவங்க எழுதும் போது அது எல்லாமே நமக்கு ரொம்ப ஆச்சரியமான ஒரு நிகழ்வுகளாக தான் இருக்கும்.

 

அதே மாதிரி நிறைய அமானுஷ்யமான நிகழ்வுகளை கூட இருந்து பார்த்ததினால் இதெல்லாம் எங்களால் உணர முடிஞ்சுது ஒருநாள் கோவில ஒரு அம்மா வருதத்தோட உட்கார்ந்திருந்தாங்க. அம்மா உன் பேரனுக்கு நல்ல மார்க்கு கிடைக்கும். மெடிக்கல் சீட்டு கிடைக்க போகுது ஏன் கவலைபடுறிங்க, இந்த கல்லை கொண்டுபோய் வீட்டில் வைத்து சாமி கும்பிடுங்கன்னு சொல்லி, பக்கத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து அவங்க கையில் கொடுத்தார்.

 

அந்த அம்மாவுக்கு ஒன்னுமே புரியல என் பேரன் மெடிக்கல் காலேஜுக்காக பரிட்சை எழுதிருக்கான். அத நெனச்சு தான் நான் கவலையோட உட்கார்ந்திருந்தேன். நீங்க எப்படி ஐயா இதை கரெக்டா சொன்னீங்கனு சொல்லி அவங்களுக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

 

அந்த மாதிரி போறபோக்கில் நிறைய பேருக்கு ஒரு வாக்காக அவங்க கொடுத்திருக்காங்க. அதனால தானோ என்னமோ அவங்களுக்கு வாக்கு யோகி என்ற பெயரும் அவங்களுக்கு இருக்கு. இன்னும் சொல்லபோனால் ஒவ்வொரு விஷயங்களையும் ஆழ்ந்து , உற்று நோக்கி , ஒரு ஜோதிடராக இருக்கக்கூடியவருக்கு 360°ளையும் கண்கள் இருக்கனும்னு பல தடவை அவங்க சொல்லுவாங்க. தன்னிடம் படிக்கும் மாணவர்கள் ஒரு சின்ன தவறு கூட செஞ்சிரக்கூடாது ,

ஏன்னா? எல்லாரும் ஒரே விதமான பலன்களை சொல்லணும். அது தான் அவருடைய ஆசை. ஜோதிடம் அப்படிங்கறதுனா அது ஒரு கணக்கு தான்.அந்த கணக்கு என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கணும். அது வசதியானவங்களுக்கு ஒரு கணக்கு, ஏழைகளுக்கு ஒரு கணக்கு அப்படிங்கற மாதிரி எல்லாம் கிடையாது. அதே மாதிரி வெவ்வேறான பலன்களையும் தராது. இந்த கிரகங்கள் இந்த நட்சத்திரத்தில் பயணம் செய்யும் பொழுது அது இந்த விதமான விளைவுகளை மட்டும் தான் கொடுக்கும். இந்த ஆதிபத்தியங்களின்

பலன்களை தான் கொடுக்கும் அப்படிங்கறதா ரொம்ப எளிமையாக சொல்லிகொடுக்கிறார்.

 

இது எல்லாமே ஒரு சாதாரண மனிதரால் இதெல்லாம் கண்டிப்பா சாத்தியமே கிடையாது. ஒரு இறைநிலை, அல்லது இறை சக்தி அதிகம் பெற்ற ஒரு மகானால் மட்டும்தான் இதெல்லாம் சாத்தியமாகும். ஏன்னா? அந்த அளவுக்கு அவருக்கு பக்தியும் அதிகமாகவே இருந்தது. வருஷம் தவறாமல் கிட்டதட்ட 16 வருடமாக மாலை போட்டு பிள்ளையார்பட்டிக்கும் பழநிமலை முருகன் கோவிலுக்கும் போய்ட்டு வருவார். அதேமாதிரி இமயமலைக்கும் அடிக்கடி போயிட்டு வருவார். இது ஏதோ ஒரு இறை சக்தி அல்லது ஏதோ ஒரு சித்த ஆத்மாக்கள் தான் இவருக்குள்ள இருந்து இந்த மாதிரி ஒரு ஜோதிட முறையை மக்களுக்கு வெளிக்கொண்டுவந்து அதனால் மக்கள் பயன்பெறணும், ஒரே விதமான பலன்கள் எல்லாருக்கும் கிடைக்கனும். ஒரே விதமான ஜோதிடம். ஜோதிடம்னா? இந்த ஜோதிடத்தில் யார் பலன் சொன்னாலும் ஒரே மாதிரி பலன் தான் வரணும் அப்படிங்கிறத எல்லாருக்கும் புரிய வைக்க இவர் மூலமாக ஜோதிட உலகிற்கு வழங்கிக்கொண்டிருக்கிறது என்பதை பதிவு செய்கிறேன்.

இந்த மாதிரி நிகழ்காலத்தில் வாழக்கூடிய ஒரு மனிதர் இருக்கக்கூடிய ஒரு காலத்திலேயே நாமும் வாழறோம் அவர் பக்கத்துல இருக்கிறோம், என்பதை ஒரு பெருமைக்குரிய விஷயம்னு தான் சொல்லணும்.

 

நிறைய விஷயங்கள் இருக்கு இதுல, நிறைய கணித முறைகள் இருக்கு, ஒவ்வொரு விஷயத்தையும் அவங்க ரொம்ப ரொம்ப பார்த்து பார்த்துதான் பண்ணிட்டு இருக்காங்க, அதுல பங்குச் சந்தைக்கான ஆய்வுகளும் நிறையவே பண்ணி இருக்காங்க, ஆனா அதை யாருக்கும் இப்ப சொல்லிக்கொடுக்கல, எத்தனையோ பேரு ரொம்ப request பண்ணி கேட்டும் அவங்க யாருக்கும் சொல்லிக் கொடுக்க விருப்பபடல. ஏன்னா? அந்த ஆய்வு முழுமையடையல அதனால் இப்ப அதை சொல்ல முடியாது. சொல்லவும் மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டாங்க. அந்த மாதிரி அவருடைய சிறப்புகள் வந்து ரகசியமாகவும் ,அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். இருக்கு, அப்படிங்கறத தான் நாம புரிஞ்சுக்கனும்.

 

அவருடைய ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் , எல்லாமே ஒரு வீட்டுக்கு ஒரு ஜோதிடராவது இருக்கணும்னு அப்படிங்கறது தான்.ஏன்னா? நாம எதுக்காக இந்த பூமியில் பிறப்பெடுதிருக்கோம், என்ன காரணத்துக்காக படைக்கப்பட்டிருக்கோம், எந்த நோக்கத்துக்காக நம்ம போராட போறோம், எந்த வழியில் பயணம் செய்யப் போறோம் அப்படிங்கறத ஒரு குடும்பத்துல ஒருத்தர் உணர்ந்துட்டாலே அந்த குடும்பத்தையே வழிநடத்திச் செல்வாங்க என்பதில் அவருக்கு அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை இருக்கு. அதனால் எல்லாருமே வீட்டுக்கு ஒருவராவது ஜோதிடராகனும் என்பது தான் அவருடைய லட்சியம்.

அதற்காக அவங்க நிறைய வகுப்புகள் எடுத்துட்டு இருக்காங்க. நிறைய அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் வெளிக்கொண்டு வந்து எல்லாருக்கும் புரியும் படியாக ரொம்ப எளிய முறையில் அவங்க சொல்லிக் கொடுத்திருக்காங்க. ஆனால் இது எத்தனை பேரை சென்றடைய போகுதுனு தெரியல ஆனால் இதை யாரெல்லாம் கற்றுக் கொண்டார்களோ, யாரெல்லாம் இந்த முறையில் பலன் பாக்குறாங்களோ, அவங்க எல்லாருமே பாக்கியம் செய்தவர்கள்.

 

நிறைய பேருக்கு அவங்க வந்து பலன் சொல்லும்போது ரொம்ப ஆச்சரியமா இருக்கும். அதுக்கு எல்லாமே கணக்கு முறைகள் இருக்கு அப்படின்னு தான் சொல்லுவாங்க ஆனால் கணக்கு முறைகள் மட்டும் காரணமல்ல எல்லாமே கணக்கு முறைகள் தான், ஆனால அந்த கணக்குமுறைகள் அவங்களுக்கு தேவையான விஷயத்தில் அது வெளிப்படுத்துகிறதா அப்படிங்கறது தான் ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். ஒருத்தங்க என்ன தேவைக்காக வருவாங்க, என்ன நோக்கத்துக்காக வருவாங்க, அவங்க என்ன கேள்வி எல்லாம் கேப்பாங்க, அப்படிங்கறத இந்த வளரும் அட்சய லக்ன பத்ததி முறையில் ரொம்ப எளிமையாக சொல்ல முடியும்னு நிருபிச்சிருக்காங்க.

 

உதாரணமாக ஒரு பிறப்பு லக்னத்தில் இருந்து ஒரு மூன்றாவது லக்கனத்தில் ஒரு ஜாதகர் வராரு, ஒரு 20 to 30 வயசுக்குள்ள ஒருத்தர் ஜாதகம் பார்க்க வராருனா, அவருடைய முயற்சி பற்றிய கேள்விகள் தான் அதிகமாக இருக்கும். திருமணம் சார்ந்த விஷயங்கள் இருக்கும், குழந்தை பிறப்பு சார்ந்த விஷயங்கள் அதிகமாய் இருக்கும், அப்படிங்கறதா அவங்க பதிவு செய்றாங்க. அதைப் போல ஜென்ம லக்கினத்திற்கு ஐந்தாவது லக்னமாக அட்சய லக்னம் வரும்போது ஜாதகரை பற்றிய கேள்விகள் அதிகமாக இருக்கும். குழந்தைகள் பற்றிய கேள்விகள் அதிகமாக இருக்கும், அப்படிங்கறத பதிவு செய்றாங்க. அதேபோல் 6ம் இடம் அட்சய லக்கனமாக செல்லும்போது ஒருத்தர் வராருனா அவங்களுக்கு ருண, ரோக, சத்ரு உபாதைகளை அனுபவிக்கக் கூடிய ஒரு காலமாக தான் இருக்கும். அப்படிங்கறத பதிவு செய்றாங்க.

 

ஒருவர் பிறக்கும்போது அவருடைய வினைப்பயன் எத்தனை சதவீதம் இருந்தது அவருடைய தற்போதைய வினைப்பயன் எத்தனை சதவீதம் உள்ளது, அவருடைய சாதகமான ஒரு சூழ்நிலை அமைப்புகள் எப்படி இருக்கு, அந்த பாதகமான ஒரு சூழ்நிலைகளை தடுப்பதற்கான வழிமுறைகள் இருக்கா? அது எத்தனை சதவீதம் உள்ளது அப்படிங்கறதை எல்லாமே இதில் வந்து ரொம்ப ஈசியா நம்மளால் அறிஞ்சு பலன் சொல்ல முடியும்.

 

இப்படி ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒரு ஜாதகர் வயதுக்கு ஏற்ப தான் பலா பலன்களை அடைவார் அப்படிங்கறததையும் அதுவும் தசாபுக்திகளை வைத்துப் பார்க்கும்போதும் அந்த வயதுக்குரிய தசை தான் அவங்களுக்கு பலன்களைத் தரும்.

 

20 வயசில ஒருத்தருக்கு சுக்கிர தசை நடக்குது, 60 வயசுல ஒருவருக்கு சுக்கிர தசை நந்தால் 20 வயசில் நடக்கக்கூடிய அந்தச் சுக்கிர தசை அவருக்கு சுகபோகங்களையும், பெண்களால் ஆதாயத்தையும், திருமண உறவுகளால் பாக்கியத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்,

 

ஆனால் அதுவே 60 வயதில் அந்த சுக்கிர திசைனா அவருக்கு அந்த மாதிரி ஆதாயங்களை தராது இல்லையா, அது மாதிரி ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு வயதிற்கும் தகுந்த பலன் தான் இன்றைக்கு நமக்கு நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும் அப்படிங்கறத இந்த நவீன உலகத்திற்கு ஏற்ற மாதிரி நவீன ஜோதிட முறையாக இந்த அட்சயலக்ன பத்ததி ஜோதிட முறையை நமக்கெல்லாம் தந்துருக்காருனா அது ரொம்ப பெருமைப்படக்கூடிய விஷயம்.

 

இந்த நேரத்தில் நான் ஒரு விஷயத்தை சொல்லணும், நம்முடைய தமிழ் புலவர் பாரதியார் அவர் எழுதின கவிதைகள் எதுவுமே அவர்கள் இருக்கும்போது பிரபலமாகல, அவரைப் பற்றி யாருக்கும் தெரியல, ஆனால் அவருக்கு அப்புறம், அவர் காலம் ஆனதுக்கு அப்புறம் தான் அவர் எழுதிய கவிதைகள் என்பது இன்றைக்கும்

“ஓடி விளையாடு பாப்பா நீ

ஓய்ந்திருக்கலாகாது ”

இந்த மாதிரியான அவருடைய பாடல் வரிகள் மக்கள் மனதில் இன்றும் நிலைத்து இருக்கு. அது பாடப்புத்தகத்திலும் இருக்கு, அவருடைய கவிதைகள் இன்றைக்கும் இன்னும் பல ஆண்டுகள் கடந்தும் பேசப்படும் அப்படின்னா அது வந்து அவர் இருக்கும்போது உணர்திருந்தா எவ்வுளவு சந்தோஷமா இருந்திருக்கும், அதை அவர் எவ்வளவு சந்தோஷமாக கொண்டாடி இருப்பார், இன்னும் எவ்வளவு கவிதைகளை நமக்கு கொடுத்து இருப்பார், அந்த மாதிரி ஒருத்தர் இருக்கும்போது அவருடைய திறமைகளை வந்து நம்ம அங்கீகரிக்கிறது இல்லை, அவரை Appreciate பண்றது இல்லை, அவருக்கு ஊக்கம் கொடுக்கிறது இல்லை, அந்த விஷயத்துக்கு நாம மதிப்பு கொடுக்கறதே இல்லை, என்ன பெருசா கண்டுபிடிச்சிட்டாரு, அல்லது வயது ஒரு காரணமாக அமைஞ்சிடுது, இது ஒரு கலைக்கு, ஒரு கண்டுபிடிப்புக்கு வயதுங்கறதெல்லாம் ஒரு காரணமே கிடையாதுங்க, அதேபோல் இவரின் இந்த விஷயத்தை கண்டுபிடிச்சிருக்காரு, இந்த ஜோதிட முறையில் இதுவரைக்கும் யாருமே செய்யாத ஒரு புதிய முயற்சியை செஞ்சு நமக்கு எளிமையாக பயன்படக்கூடிய ஒரு வகையில இது கொடுத்திருக்காரு, அப்படின்னா அது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம், அதுவும் ஒரு தமிழ்நாட்டில் ஒரு தமிழர் கண்டுபிடித்திருக்கிறார் அப்படிங்கிறபோது அதை அங்கீகரிக்கிறத்துக்கு நம்மளால் என்ன முடியுமோ அதை நாம கண்டிப்பா செய்யணும். அப்படி செஞ்சாதான் இந்த ஜோதிட உலகிற்கு நாம செய்யக்கூடிய ஒரு சிறு உதவியாக இருக்கும். அந்த சித்தர் பெருமக்கள் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புறாங்க அப்படிங்கறது இவர் மூலியமாக அது வெளிப்பட்டு இருக்கு, அத நம்மளால் முடிஞ்ச அளவு மக்களுக்கு வெளிப்படுத்துவோம்.

 

கடவுள் நமக்கு இவர் மூலமாக ஒரு அரிய பொக்கிஷத்தை, ஒரு அரிய ஒரு விஷயத்தை நமக்கெல்லாம் கொடுத்தது ஒரு வரபிரசாதம். இதை நாம எத்தனை பேர் பயன்படுத்திக்க போறோம், எத்தனை பேரு அத உணரப்போறோம் என்பது எனக்கு தெரியல.

 

நான் உணர்ந்தேன் அப்படிங்கற முறையில் இதை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

 

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கு ஜோதிட உலகிற்க்கு அறிமுகபடுத்திய

 

திரு.பொதுவுடைமூர்த்தி சார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

எண் கணித பிறந்த நாள் பலன்

எண் கணித பிறந்த நாள் பலன்
சூரியன் -1
நீங்கள் 1,10,19,28 தேதிகளி;ல் பிறந்திருந்தால் உங்கள் எண்ணில் நாயகராக சூரியன் வருவார். உங்களை நாடிவருபவர்களை ஆதரிக்க கூடியவர் நீங்கள் தலைமை தாங்கும் எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். கலைரசனையும், துல்லிதமான அறிவும். பிறருக்கு போதிக்க கூடிய தன்மையும் கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் வெற்றி வாய்ப்புகளை கொடுக்கும். பத்திரிக்கை தொடர்புடைய தொழில்களும், அரசியல், அரசியலை நிர்வகித்து நடத்தி செல்லகூடிய ஆற்றலும், உருவாகும். நீங்கள் எவருடன் இணைந்தாலும் உங்களின் தனித்தன்மையை இழக்கமாட்டீர்கள். எண்களிலேயே இது ராஐh,நீங்கள் விரும்பாவிட்டாலும் தலைமை பொறுப்பு உங்களை தேடிவரும். பொறுப்புகளை ஏற்றபின் அந்த பதவிக்கு வலிமையை சேர்;ப்பீர்கள். சில வேலைகளில் மற்றவர்களுடைய குறைகளை பலர்முன்பு கேட்டுவருவீர்கள். இதனால் மறைமுக எதிர்ப்புகள் உருவாகி விடும். அத்துடன் தங்களிடம் பிடிவாதங்கள் நிறைந்து காணப்படும். படிபடிப்பாக குறைந்துக் கொள்வது உங்;கள் வளர்ச்சியில் மேலும் மெருகேற்றும். உங்களுக்கு ஏற்படும் நோய்கள். சோர்வு, அதிகதூக்கம். மலச்சிக்கல், கண்நோய்கள், அஜீரணம், இருதயபலகீனம். வயிற்று பச்சிகள் நிவர்த்திக்குரியவைகள் பகல் தூக்கம். கூடாது. இரவு விழித்தல் கூடாது. எண்ணைக்குளியல் அவசியம். பழைய உணவு கூடாது நோய்நிவர்த்தி செய்து அதிர்ஷ்டத்தை தேடி தரும். நவரத்தினம் – மாணிக்கம் (Ruby) உபரெத்தினம் – சன்ஸ்டோன், (Sun Stone) டோபாஸ், (Topax) ப்ளட்ஸ்டோன் (Blood Stone) அதிர்ஷ்ட எண் – 1.4.கூட்டு எண்கள் அதிர்ஷ்ட நிறம் – வெளீர் சிவப்பு, சந்தனம், ஆரஞ்சு, நீலம் கலந்த வெள்ளை அதிர்ஷ்ட ரத்தினக்கல் – கனகபுஷ்பராகம், மாணிக்கம், ப்ளட் ஸ்டோன் அதிர்ஷ்ட திசை – கிழக்கு அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு வணங்க வேண்டிய தெய்வம் – சிவன்
சந்திரன் – 2
நீங்கள் 2,11,20,29 தேதிகளில் பிறந்திருந்தால் பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தையும் கூட்டி வருகிற ஒற்றை எண்ணாக 2 எண் வந்தாலும், உங்கள் எண்ணின்; நாயகராக சந்திரன் ஆவார். இந்த எண் மனதை ஆளும் தன்மையுடையது உங்கள் கற்பனை உலகத்தின் முதன்மையான நபர் என்று குறிப்பிடலாம். இந்த எண் வலிமை குன்றினால்- திருட்டு,மற்றும் மோசமான செயல்கள் தொடர்பான சிந்தனைகளை அதிகப்படுத்தும் வலிமையாக இருந்தால் நுண்ணிறிவுடன் உங்களை வளப்படுத்தி வாழ வைக்கும், கருத்துக்களை சொல்லிக் கொண்டே இருப்பீர்கள். ஆலோசனையே சிலருக்கு தொழிலாக மாறிவிடும்.முன் கூட்டியே உணரும் அதீத சக்தியும், உண்டாகும். பஞ்சப+த தத்துவத்தில் நீர் தன்மையை இந்த குறிப்பதால் எளிமையான வழிகளையே தேர்வு செய்வீர்கள். அன்பு உங்களிடம் மேலோங்கி இருக்கும். எண்ணங்கள், நீர்வீழ்ச்சி போன்று கொட்டிய வண்ணம் இருக்கும். உங்களிடம் மேலோங்கி எண்ணங்கள் நீர்வீழ்ச்சி போன்று கொட்டிய வண்ணம் இருக்கும் உங்களிடம் இருக்கும் ஒரே குறை. சந்தேகம், சந்தேகம்தான், குறைத்து கொள்க. உங்கள் செயல் இன்னும் வேகப்படும்,போற்றப்படுவீர்கள். உங்களுக்கு ஏற்படும் நோய்கள் ரத்தகுறைவு, ஐலதோஷம், தலையில் நீர்கோர்த்தல், நூரையீரல் நோய், நீரழிவு, புண்களில் நீர்வடிதல், மூட்டுவலி, போன்றவைகள், கவலை, மனநோய். நிவர்த்திகுரியவைகள். தனிமை கூடாது. தனித்து இல்லாமல் மற்றவர்களுட.ன் கூடிஇருத்தல்-எல்லாவற்றை இறைவன் மீது பாரத்தை போட்டு மனதளர்ச்சியுடன் செயல்படுதல் பிரச்சனைகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளுங்க.நோய் என்பது மனதை குறித்த தொடர்புடையதாகவே இருக்கும். அலர்சி சம்பந்தமாக வருமானால் மனம் இறுக்கம் உண்டு என்பதை அறித்துக் கொள்ளவும் உங்களுரிய நோயையும் பிரச்சனையும் போக்க கூடிய அதிர்ஷ்ட ரெத்தின கற்கள் – முத்து, சந்திரகாந்த கல்.(Moon Stone) உபலகம் (opel) உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண் – 2ன் வரிசை, 7ன் வரிசை உங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறம் – வெண்மை, சந்தனகலர் உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை – வடமேற்கு உங்களுக்குரிய அதிர்ஷ்ட கிழமை – திங்கள் உங்களுக்குரிய அதிர்ஷ்ட வணங்க வேண்டிய தெய்வம் – பார்வதி
.
குரு- 3
நீங்கள் 3,12,21,30 தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணின் நாயகன், வியாழன் வருவார். பிறருக்கு வழிகாட்டிடும் போதகர், முனிவர், தர்ம கர்த்தர். மந்திரி, நல் ஆசிரியர் போன்ற நல் உள்ளம்,படைத்தவர் நீங்கள், கௌரவமான வாழ்க்கை அமையும்.பொது காரியங்களின் உங்களை ஈடுபடுத்தி மற்றவர்களுக்கு வழிக்காட்டுவீர்கள். சமாதானப்பிரியர், பெரியோர்களிடம் பணிவும், கீழ்நிலையுள்ளவர்களிடம் அன்பு காட்டுவீர்கள்.தீர்க்கமான சொல் உங்களுடையதாக இருக்கும். பொது ஸ்தாபானங்கள் உங்களால் பெருமையடையும், புதிய விஷயங்களை உலகுக்கு சொல்லக்கூடிய ஆற்றல் உங்களிடம் தான் அதிகம் இருக்கும். வாதிடும் திறமை அதிகம் உள்ளவர்கள் நீங்கள். பிறருக்கு மனமிறங்கி செயல்படுபவர்கள். மருத்துவர்களாகவும் சேவை மையம் நடத்துபவர்களாகவும், சமுக நோக்குடன் அரசியலிலும். ஈடுபடுவீர்கள். பிரயாணகளில் வளர்பதிலும் ஆர்வமிருக்கும். எண்ணில் பலம் குறையும் போது பிறர் அறியாவண்ணம் – சண்டை மூட்ழ விடுவீர்கள்.உங்களின் குறைபாடு குடும்பத்திலுள்ளவர்களை கவனிக்காமல் வெளியுலகத்தை பார்;ப்பீர்கள். குடும்ப அங்கத்தினர்கள் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் உடலில் ஏற்படும் நோய்கள் வயிற்று உபாதைகள். தீராத தலைவலி, எரிச்சலுடன் கூடிய நோய், வாதநோய், மன உளைச்சல், தொண்டை, நாக்கு, காது, தொடர்பான நோய்கள், நிவர்த்திற்குரிய வழிகள் அதிக பொறுப்புகளை ஏற்று கொள்ளாதீர்கள்,சாப்பிடும் நேரத்தையும், உறங்கும் நேரத்தையும் முறைப்படுத்துங்கள் முரண்பாடு உடையவர்களுடன், விவாதம் செய்வதை குறைத்துக் கொள்ளவும், நோய் நிவர்த்தியும். பிரச்சனைகளால் ஏற்படும் குழப்பங்களையும் போக்கி அதிர்ஷ்டத்ததை அள்ளி தரும் ரத்தினகற்கள் – கனகபுஸ்பராகம், அமிதிஸ்;ட், டோபாஸ் உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண் – 3ன் வரிசை, 9ன் வரிசை உங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறம் – தங்கநிறம். ரோஸ் உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை -வட கிழக்கு உங்களுக்குரிய அதிர்ஷ்ட கிழமை- வியாழன் உங்களுக்குரிய வணங்க வேண்டிய தெய்வம் – தெட்சணாமூர்த்தி
ராகு – 4
நீங்கள் 4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணின் நாயகராக ராகு வருவார். எல்லாம் தெரிந்தவர் நீங்கள். பணம் பண்ணுவதை வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டவர் நீங்கள். அதனால் மற்ற விசயங்களில் ஈடுபாடு கொள்ள மாட்டீர்கள். வசதி வாய்ப்புகளை உருவாக்கி கொள்வதில் சமர்த்தர். உங்கள் எண்ணங்கள் யாவும் சித்தியாகும். ஓருவரை வாழ வைக்கவும். வீழச்செய்யவும். உங்களால் முடியும். இவ்வளவு திறமையுள்ள உங்களுக்கு ஒரு வித மனக்குறை இருந்துக் கொண்டே ஏக்கம் கொள்ள வைக்கும். வித விதமான நவீனப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். கடினமான சூழ்நிலையிலும், மனதை தளரவிடாமல், காரியம் ஆற்றி வெற்றி பெறுவீர்கள். நீங்கள் தான் குடியிருக்கும், வீட்டை, தெருவை பகுதியை, நாட்டையை கூடி சீர்படுத்தும் ஓர் சீர்திருத்தவாதி, புதிய சிந்தனைகளால் தூண்டப்பட்டு மற்றவருக்கு வழிகாட்டுவீர்கள். நவீனப்தொழிலகள் நாகரீக தொழில்கள் உங்களுக்கு ஏற்றவை கலைதுறையில் தொழில்நுட்ப பிரிவு உங்களுக்காக காத்திருக்கும், எலக்ட்ரானிக்கல் ஆய்வு கூடங்கள் போன்றவைகளும். உங்களுக்கு தான. இந்த எண்ணீர் பலம் குறைவு ஏற்படின் உடலில் நோயையும் பிறருடன் இணக்கம் கொள்வதில் குறைப்பாடும் காணப்படு;ம் தோல் சம்பந்தமான நோய்களும், நரம்பு தொடர்பனான பாதிப்புகளும், வயிற்றுபுண், குழல்வாழ்வு, பாலியல் நோய்கள் அவதியுற நேரும். நிவர்த்திக்குரிய வழிகள். பெற்றோர்கள், பெரியவர்கள் மனம் புண்படாமல் நடந்துக் கொள்ளுங்கள். தான தருமங்கள் அதிகமாக செய்யுங்கள். நோய் நிவர்த்தியும் புரஉபகார சிந்தனையும் மேலோங்கி அனைத்து வெற்றிகளையும் அளித்திடும். அதிர்ஷ்ட ரெத்தின கல்- கோமேதகம், கார்னட் (Garnet) ஸ்பின்னல் (Spinel) உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண் – 28,31,1,10,19,27.40 உங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறம் – மெருன்,லைட்புளு உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை – கிழக்கு உங்களுக்குரிய அதிர்ஷ்ட கிழமை- ஞாயிறு உங்களுக்குரிய வணங்க வேண்டிய தெய்வம் -துர்க்கை,பத்ரிகாளி
புதன் – 5
நீங்கள் 5,14,23. ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணீன் நாயகன் புதன் ஆவார் தங்கள் பேச்சு திட்டமிடுதலும் வேகமுடையதாக இருக்கும் வளர்ந்தும் மாறியும் வரும் உலகத்திற்கு காரண கர்த்தா யார் தெரியுமா? நீங்கள் தான் நவீனத்தை நோக்கி சிந்திப்பதிலும், மற்றவரை வழிநடத்தி செல்வதும், நீங்கள் தான் வேகத்தையும், விவேகத்தையும், செலுத்தும் நீங்கள், செய்யும் காரியங்களில் ஏற்படும் குறைபாடுகளும், தவறுக்களுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்று குறை கூறிவிடுவீர்கள். உங்களிடமும் குறைகள் உள்ளது என்பதை மறந்து விடுவீர்கள். வியாபார துறைகளில் புதிய நுணுக்கத்தை புகுத்தி வெற்றி காண்பீர்கள். நீங்கள் ஒரு சமாதான ப்ரியர். வீதியி;ல் சண்டைப் போட்டு கொண்டு இருப்பவர்கள் மத்தியில் சென்று சமாதானம் செய்வீர்கள். உங்கள் பேச்சுக்கும் கனிந்த பார்வைக்கும், யாராய் இருந்தாலும் கட்டுபட்டு அமைதி அடைவார்கள். நவின கண்டுபிடிப்புகள்,மனோதத்துவம், அதீத அறிவு சார்ந்த துறைகளிலும் மருத்துவ துறைகளிலும், எலக்ட்ரானிக் துறைகளிலும், பெயர் படைக்கும் அளவிற்கு வெற்றியாளர் நீங்கள் எதையும், எளிமையாக சாதிக்கும் உங்களுக்கு இந்த எண்ணீன் பலம் குறையுமானால், உங்கள் உடலில் ஏற்படும் நோய்கள் தூக்கமின்மை, பயங்கர குழப்பம், நரம்பு தளர்ச்சி, ஆஸ்துமா, புற்று நோய் போன்ற நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாவீர்கள் நோய் நிவர்த்திற்குரிய வழிகள். அதிகமான விசயங்களை பற்றி குழப்பிக் கொள்ளாமல் ஒன்றை வலிமையாக சிந்தித்து பின் மற்றொரு விசயத்திற்கு செல்லுதல் நலம்.நேரம் கழித்து உண்பது கூடாது. அசைவ உணவுகளை குறைத்து சாப்பிடவும். உங்களுடைய குழப்பமான பிரச்சனைகளையும், நோய் வரும் முன் காத்திடவும் உங்களுக்கு அதிர்ஷ்ட ரெத்தின கற்கள்- மரகதம், அனக்ஸ்,பச்சைநிற ஓபல் உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண் – 5.9,ன் வரிசைகள் உங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறம் – வெளீர் பச்சை, சாம்பல் நிறம் உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை – வடக்கு உங்களுக்குரிய அதிர்ஷ்ட கிழமை- புதன் உங்களுக்குரிய வணங்க வேண்டிய தெய்வம் – மகாவிஷ்ணு
சுக்கிரன் – 6
நீங்கள் 6,15,24 தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணின் நாயகர் சுக்கிரன் ஆவார். எதிலும் ஓர் அழகு, அற்புதம், இன்ப அதிர்ச்சி, என்ற நிலையில், உங்கள் மணம் செயல்படும். வாழ்க்கையும். அதுப்போல் இன்பமாய் அமையும் யோக நிலையில் உள்ளவரை பார்த்து அவருக்கு சுக்ர தசை அடிக்குது என்பார்கள், அந்த பாக்கியவான்கள் நீங்கள் தான், மணவாழ்க்கையும், உங்கள் மனம் போல் அமையும், வீடு வாகனம், அதுவும் திருப்தி தரும். துறவறத்திலும் இன்பத்தை முதலில் அடைபவர்கள் இந்த எண்காரர்கள் தான். ரசிக்க தெரிந்தவர். கலைக்காக உங்களை அர்ப்பணம் செய்வீர்கள். இனிமையாக பேசுவீர்கள். ஞாபகசக்தியும். தன்னம்பிக்கையும், உடையவர். புகழுக்காக செலவழிப்பீர்கள் உயர்ந்த நிலையுள்ளவர்களின் நட்பும் தொடர்பையும் மட்டுமே விரும்புவீர்கள். உங்கள் பெயர் சரியாக அமைந்து விட்டாள் நீங்கள் வசிக்கும் பகுதியில் பெரிய செல்வந்தர் நீங்கள் தான் ஆண்களால் பெண்களுக்கும், பெண்களால் ஆண்களுக்கும். பெருத்த உதவிகள் கிட்டும். வாழ்க்கை துணை தன்னை விட வசதியான இடத்தி;ல் அமைத்து கொள்ளுங்கள் வெற்றி எளிமையாக அடையக் கூடிய நீங்கள் எண்ணீன் பல குறைவு (or) பெயரின் எண் பொருத்தி இல்லாமல் இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலையில் போய்விடும். உங்கள் எண்ணீன் பல குறைவால் ஏற்படும் நோய் கண். மூக்கு, முகத்தில் தழும்புகள். நரம்பு பலகீனம், மறைமுக ஸ்தாபன நோய்கள்,தொண்டபுண்,நுரையீரல் நோய் போன்றவைகள் காணப்படும். நோய் நிவர்த்திக்கான வழிகள், அளவான குடும்ப உறவு குளிர்ந்த நீரில் கண்களை கழுவுதல், ஆசைகளை அதிகம் வளர்த்து கொள்ளாமை- உங்களுடைய தோல்வி நிலையை போக்கிடவும், நோயினால் துன்பமடைவதை தவிர்க்கவும். உங்களுக்குரிய அதிர்ஷ்ட ரெத்தின கற்கள் – வைரம். ஜிர்கான், பெரிடாட் உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண் – 6ன் வரிசை, 4,9ன் வரிசை உங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறம் – ரோஸ்.மஞ்சள் உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை – தெ.கிழக்கு உங்களுக்குரிய அதிர்ஷ்ட கிழமை- வெள்ளி உங்களுக்குரிய வணங்க வேண்டிய தெய்வம் – மகாலெட்சுமி
கேது – 7
நீங்கள் 7,16,25 தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணீன் நாயகர் கேது ஆவார். தெய்வ நம்பிக்கையி;ல்,தெய்வ அணுகிரகம் கிடைப்பதிலும், முதல் மனிதர்கள் நீங்கள். எதுவாய் இருந்தாலும், தெய்வத்தின் மீது பாரத்தை போட்டு கடமையை செய்யும் கண்ணியமானவர், வாழ்க்கை சுகம் போகங்கள் கிடைத்தாலும். எளிமையாக காட்சி தருவீர்கள். மற்றவர்களை கண்டு பொறாமை படமாட்டீர்கள். புரட்சிகர கருத்துக்களையும். வெளியீடுவீர்கள். சோதிட, மருத்துவர், தத்துவ ஆராய்ச்சியி;ல் ஈடுபாடு இருக்கும். மூடத்தனமாக எதையும் கடைப்பிடிக்கமாட்டீர்கள். பிடிவாத குணமும் இருக்கும், கணவன், மனைவியுடன், ஒத்துழைப்பு குறைவாக காணப்படும். கணவன், மனைவிடம் முரண்பாடுகளை குறைத்துக் கொள்வது நலம் பயக்கும். நண்பர்கள் குறைவு, ஆனாலும் நல்ல நண்பர்களை பெற்று இருப்பீர்கள். நீண்ட தூர பிரயாணங்கள் சாஸ்திர ஆராய்ச்சிகள் வெற்றி தரும். கடவுளை பற்றி அதிகம் பேசுவீர்கள். கோயிலுக்கு செல்லமாட்டீர்கள். தத்துவ ஞானம் மேலோங்கும். மருத்துவ சார்ந்த தொழில்,புகைப்படத்தொழில், பொருளாசைபடாமல் சேவை தொழில்களில் ஈடுபாடு அதிகம் காணப்படும். இந்த எண்ணீல் பலம் குறைந்தால், மோசடி வேலைகளில் ஈடுபடுதல், தீவிரவாதத்தில் நம்பிக்கை, உலகத்தை மாற்றிவிடுகிறேன் என்று சபதம் மேற்க் கொண்டு பைத்தியம் போல் அலைதல். உங்கள் எண்ணீன் பல குறைவால் ஏற்படும் நோய் மூலம் நோயும் ரத்த மூலம்,தோல் வியாதிகள், வயிற்று உபாதை,மூளை குழப்பம், தலைநோய், பிடிவாதங்கள் நீங்கி நோய் நீங்கவும், வாழ்க்கை வளம் பெற உதவும் உங்களுக்குரிய அதிர்ஷ்ட ரெத்தின கற்கள் – வைடூரியம், டைகர்ஐ (Tiger Eye) கருப்பு நிற ஓபல் (Black open) உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண் – 2ன், 7ன் வரிசை உங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறம் – பலநிறம், பாசபச்சை உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை – வடமேற்கு உங்களுக்குரிய அதிர்ஷ்ட கிழமை – செவ்வாய் உங்களுக்குரிய வணங்க வேண்டிய தெய்வம் – விநாயகர்
சனி – 8
நீங்கள் 8,17,26 தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணீன் நாயகர் சனி ஆவார் கடமை, உணர்;ச்சியும், பொறுப்பும். மிகுதியுடைய நீங்கள், போராட்ட உணர்வும், இடைய+ர்களையும், கொடுத்து பின் வெற்றியை குறிக்கும். இந்த எண் நிதானமாக செயல்படுங்கள்.அவசரமாக செயல்பட்டால் தோல்வியை காண்பீர்கள். கிரங்களில் வலிமையான கிரகம் சனிபகவான் ஆவார். தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும் என்பதற்கு ஏற்ப சோகங்களையும், சோதனைகளையும், கொடுத்த பின்பே சுகங்களை தரும். உங்கள் பாணியே தனி மறைமுக எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கி விடுவீர்கள்.ரகசிய தொழில்களில் ஆர்வம் ஏற்படும். மற்றவரின் நலனுக்கு தன்னையே அர்ப்பணிப்பவர் நீங்கள். பெரிய நிறுவனங்களில் பொறுப்புகள் சுமையாக மாறும், குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும் போது தொழிலி;ல் பிரச்சனையும். தொழிலி;ல் நிம்மதி என்கிற போது குடும்பத்தில் பிரச்சனையும் உண்டாகும் இது விதி. இவ்விதியை விதிக்குள்ளிருக்கு வித்தையை அறிந்து செயல்பட்டால் நீங்களும் பெரிய வெற்றியாளர்தான். உங்கள் பெயரை சரியாக அமைத்து செய்தொழில், வியாபாரம், பதவிகளில் பெயரும் புகழும் பெற்றிருங்கள். எண்ணீன் பலம். அதிகரித்தால் அது பலவீனமாகும். நோய் நுண்ணிய நரம்பு பாதிப்பு, வாதம், கபம்,ஆஸ்துமா, எலும்பு உடைதல். போன்ற நோயின் தாக்குதலை தவிர்க்கவும். மன வேதனையிலிருந்து நீங்கி வளம் பெறவும். உங்களுடைய அதிர்ஷ்ட ரெத்திக கற்கள் – நீலம், லாபீஸ் லசுலி டர்க்வாய்ஸ் உங்களுடைய அதிர்ஷ்ட எண் – 5ன் வரிசை உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் – நீலம். வைலட் உங்களுடைய அதிர்ஷ்ட திசை – கிழக்கு உங்களுடைய அதிர்ஷ்ட கிழமை – சனி,ஞாயிறு உங்களுடைய வணங்க வேண்டிய தெய்வம் – காவல் தெய்வம்
செவ்வாய் – 9
நீங்கள் 9,18,27 தேதிகளில் பிறந்திருந்தால் உங்கள் எண்ணீன் நாயகர் செவ்வாய் ஆவார் வீரம், விவேகம், அதிகம் காணப்படும் எண் இது. பொறுமை எப்படி இருக்கும் எனக் கேட்பவர் நீங்கள். செயலில் வேகம், உறுதி போர்குணம் எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்கிற போக்கு உங்களின் சிறப்பு பிறரிடம் காரியங்களை சாதித்து கொள்ள மென்மையாக அணுக மாட்டீர்கள். அதிகார தோரணையில் கேட்பீர்கள். முரடர், பெரியஆள். சரியான மனிதன் என்கிற மறைமுக பட்ட பேர் விளங்கும், நல்ல கருத்துக்களுக்கு செவி சாய்த்தாலும். மேலோட்டமான உங்கள் அதிகாரம் முரட்டு குணங்கள் தான் மற்றவர் தென்படும். பேச்சில் கூட மற்றவரை பயமுறுத்தி சாதித்துக் கொள்வீர்கள். தோல்வியை ஏற்றுக் கொள்ளாதவர் விளையாட்டுகளில், ஆர்வம் இருக்கும், பிரயாணங்கள் அடிக்கடி ஏற்படும் உடல் ஆரோக்கியம் திடகாத்திரமாக காணப்படும். எண்ணின் பலம் குறையுமானால் சண்டை போட்டு கொள்ளுதல், அடிதடி காயங்கள் எலும்பு முறிவு, திடீர் அறுவை சிகிச்சை காய்ச்சல். அம்மை நோய், காமாலை, போன்ற நோயின் பாதிப்புகள். நீங்கள் அதிகார பதவிகளில் இருந்தாலும். வுpயாபார தொழில் நிறுவனங்களில் செயல்பட்டாலும் மற்றவருடன் பேசும் போது சிரித்த முகத்துடன் பேசி வாருங்கள், நகைச்சுவை விசயங்களை பழகி கொண்டு மன இணக்கத்தை போக்கி கொள்ளுங்கள் நன்மை பல தரும். உங்களுக்குரிய அதிர்ஷ்ட ரெத்தின கற்கள் – பவளம். ப்ளட் ஸ்டோன், கர்னலியன் உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண்கள் – 3,6,9,ன் வரிசைகள் உங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு. வெளீர் நீலம் உங்களுக்குரிய அதிர்ஷ்ட திசை – தெற்கு உங்களுக்குரிய அதிர்ஷ்ட கிழமை – செவ்வாய்,வியாழன் உங்களுக்குரிய வணங்க வேண்டிய தெய்வம் – முருகன்

SASTI TV LIVE

12 மணிநேர தொடர் நேரலை

அனைவருக்கும் வணக்கம்
அட்சய லக்ன பத்ததி என்ற புதிய ஜோதிட முறையில் ஒரு #புதுமுயற்சியாக இந்த #ALP ஜோதிட முறை பலருக்கும் பயன்படும் வகையில் #12மணிநேரம் #தொடர்நேரலை #sasti_TV https://youtu.be/uqpRDDoIMdY யில் அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆய்வில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள்,அனுபவங்கள் மற்றும் நேயர்கள் பலருடைய ஜோதிட சந்தேகத்திற்கான விளக்கங்களை #அட்சயலக்னபத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய திரு சி.#பொதுவுடைமூர்த்தி அவர்களும் ALP Astrologer திருமதி #சாந்திதேவிராஜேஷ்குமார் அவர்களும் கலந்துரையாடல் மூலம் பலன் அளிக்க இருக்கிறார்கள், ஜோதிட நண்பர்களும், ஜோதிட ஆர்வலர்களுக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும். இந்த அரிய வாய்பினை நீங்கள் மற்றும் உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்களுடைய ஜாதகத்திற்கான கேள்விகளை #12 மணிநேர நேரலையில் உங்களோடு.

Please share

DNA component… Astro connection.

From Av Sundaram sir posting….

DNA component… Astro connection.

T. Base.. Aries.- Dharma-தர்ம்ம்
G. Phosphate….. Taurus. Artha-அர்த்தம்
C. Sugar…. Gemini. Kamya-காம்ய
A. Base… Cancer. Mokhsha-மோட்சம்

T. Phosphate.. Leo.
G. Sugar.. Virgin
C. Base… Libra.
A. Phosphate.. Scropio.

T. Sugar. Saggitarious.
G. Base. Capricorn.
C. Phosphate.. Aquarius.
A. Sugar. Pisces.

T. Base.. Aries. Chara-சரம்
G. Phosphate….. Taurus. Sthira-திரம்
C. Sugar…. Gemini. Uphaya-உபயம்

A. Base… Cancer.
T. Phosphate.. Leo.
G. Sugar.. Virgo.

C. Base… Libra.
A. Phosphate.. Scropio.
T. Sugar. Saggitarious.

G. Base. Capricorn.
C. Phosphate.. Aquarius.
A. Sugar. Pisces.

My note.. There are still hidden clues like Earth .. heavy..Air.. lightest..3 division.. Movable, fixed and Dual. Needs more Research..all the best.
By Av Sundaram

மேஷம்- சிம்மம். -தனுசு
T.Base. T.Phospate. T.Sugar Fire-நெருப்பு
செவ்வாய். சூரியன். குரு

ரிஷபம். கன்னி. மகரம்
G.Phosphate. G.Sugar. G.Sugar. Earth-நிலம்
சுக்கிரன். புதன். சனி

மிதுனம். துலாம். கும்பம்
C.Sugar. C.Base. C.Phosphate. Air- காற்று
புதன். சுக்கிரன். சனி

கடகம். விருச்சிகம். மீனம்
A.Base. A.Phosphate. A.Sugar. Water-நீர்
சந்திரன். செவ்வாய். குரு

Base- புரத அடிப்படை
Phosphate-உப்பு
Sugar-சர்க்கரை

Base-புரத அடிப்படை நான்கு பிரிவுகளை உடையது.

Components of DNA.

Terms in this set (…)

oxygen, nitrogen, hydrogen, carbon, phosphorus. five elements that make up DNA.
oxygen, nitrogen, hydrogen, carbon, sulfur. …hydrogen bonds. …5 carbon sugar, a phosphate group, a nitrogen base. …discovered the double helix. …sequence of the bases. …proved DNA was genetic material. …mRNA.

As its alternate name (5-methyluracil) suggests, thymine may be derived by methylation of uracil at the 5th carbon. In RNA, thymine is replaced with uracil in most cases. In DNA, thymine (T) binds to adenine (A) via two hydrogen bonds, thereby stabilizing the nucleic acid structures.

This is because the Adenine( purine base ) pairs only with the Thymine(pyrimidine base ) and not with Cytosine(purine base). … According to chargaff’s law adenine binds with thymine with two hydrogen bonds and cytosine binds with guanine with three hydrogen bonds .

மேலும் தொடர முயற்சிப்போம்

DNA என்பது மரபணு மூலக்கூறு. ஒவ்வொரு டிஎன்ஏ அணுக்கருமூலத்திலும் ஒரு பாஸ்பேட் குரூப், ஒரு சுகர் குரூப் மற்றும் ஒரு நைட்ரஜன் பேஸ் உள்ளது.

டிஎன்ஏவின் செயல்பாட்டை இயக்கும் சாவியாக நைட்ரஜனல் பேஸின் வேதியல் இயக்கமே உள்ளது.

ஒவ்வொரு டிஎன்ஏ நியுக்கிளியேடைடிலும் பாஸ்பேட் குரூப்பும் சர்க்கரை பேஸும் அதாகவே/ஒன்றாகவே உள்ளன.
ஆனால் நைட்ரஜனல் பேசில் நான்குவகை பிரிவுகள் உள்ளன.
அவை
குவாநைன.
அடிநைன்
தைமைன்
சிஸ்டோசைன்

உதாரணமாக அடிநைன் அடினோநைன் ட்ரை பாஸ்பேட்டாக மாறும்போது உடலின் தசைநார் இயக்க செல்களை வேகமாக செயல்பட வைக்கிறது

இதுபோல் அடிப்படையான மூன்று குரூப்புகளும் நைட்ரஜனல் பேசில் உள்ள நான்கு பிரிவுகளும் இணையும்போது உடலின் முழுமையான இயக்கங்களுக்கு காரணமாகின்றன.

இவற்றை ஜோதிடத்தில் ராசிகளுடன் இணைத்து பார்க்கும் முயற்சியே இந்த பதிவு.
Astro Rajasekaran

https://m.facebook.com/story.php?story_fbid=1996468663812805&id=100003490720968