செவ்வாய் தோஷம்

Spread the love

அனைவருக்கும் வணக்கம், இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையில் எந்த காலம் யோகமான காலம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அட்சய லக்ன பத்ததி ஜோதிடமுறையில் ஜென்ம லக்னத்திற்கு 1, 2, 4, 7, 8, 12ல் செவ்வாய் இருந்தால் தோஷம் என்பதை எடுத்துக் கொள்வோம். ஆனால் ALP லக்னத்திற்கு 1, 2, 4, 7, 8, 12 ல் இன்றைய லக்னத்திற்கு, இன்றைய வயதுடைய லக்னத்திற்கு, நகரும் லக்னத்திற்கு 1, 2, 4, 7 ,8 , 12ல் செவ்வாய் இருந்தால் எதிர்பார்த்த யோகத்தை கொடுக்காது. உடல் உபாதைகள் எண்ணங்களை மாற்றிக் கொடுக்கும். வேகம், கோபம், அவர்களுடைய தாக்கங்கள் அதிகமாக இருக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். செவ்வாய் என்பது இரத்தம், அதனால் இரத்தம் சார்ந்த உணர்வுகள் அதிகமாக தூண்டப்படும் பொழுது ஜாதகருக்கான வாய்ப்பை தட்டிப் பறிக்கும். சிம்ம லக்னத்திற்கு 4ம் ஆதிபத்தியம் பெறக்கூடிய செவ்வாய், சிம்ம லக்னம் ALP ஆக போகும் பொழுது 9ம் அதிபதியும் செவ்வாய் ஆக வரும். இந்த செவ்வாய் 1, 2, 4 ,7, 8, 12ல் இருந்தால் தாய், தந்தை மூலமாகவே ஜாதகருக்கு திருமணம் தடையாக இருக்கும். அட்சய லக்ன பத்ததி முறையில் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது 100% கண்டிப்பாக பலன் சொல்ல முடியும். மணமகன் மணமகள் யாராவது ஒருவருக்கு பொருத்தம் பார்த்தால் கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கையில் வழிகாட்ட முடியும். ஜென்ம லக்னம் என்பது நான் பிறக்கும் போது உள்ள லக்னம். ஆனால் திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது இன்றைய லக்னம் தான் பார்க்க வேண்டும். பிறக்கும்போது உள்ள மனம், உடல்,….. எல்லாமே நாம் வளர வளர மாறும். அதுதான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் நான் சொல்வது. 28 வயதில் நம்முடைய புத்தி, நம்முடைய மனம், உடல், எல்லாமே வளர்ந்திருக்கும். அதை தான் பார்க்க வேண்டும். அதுதான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை. நன்றி, வணக்கம்.

https://youtu.be/026Yf4qz-sU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *