இனிய பிறந்த நள்!

அப்படியே ஒவ்வொரு விஷயமும் உன் பின் அதற்கான காரணத்தைத் தேடி இருக்கீங்க

நவதிருப்பதி

நவதிருப்பதி என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணிநதிக்கரையோரம் அமைந்துள்ள 9 முக்கிய இந்துவைணவ தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயராகும். இந்த ஒன்பது தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகத்துக்குஉரியவையாக விளங்குகின்றன. இவை திவ்ய தேசங்களாகவும் உள்ளன.

நவக்கிரங்கள்தொகு

நவக்கிரகங்கள் பொதுவாக இந்து சைவவழிபாட்டுத்தலங்களில் முக்கிய பங்கு வகிப்பன. நவதிருப்பதி என அழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களும், நவக்கிரகங்களுடன் தொடர்புடையவையாகக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவக்கிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது.[1][2]

சோழநாட்டில் அமைந்துள்ள நவக்கிரகங்களுக்குஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவக்கிரகங்களாகப் போற்றப்படுகின்றன. இங்கு பெருமாளே நவக்கிரகங்‌களாகச் செயல்படுவதால் நவக்கிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது தொன்நம்பிக்கை.