நட்சத்திரங்கள்

நட்சத்திரங்கள் -அதிஸ்டம் தரும் தெய்வங்கள்

 

நட்சத்திரங்கள்  தெய்வங்கள்

01           அஸ்வினி ஸ்ரீ சரஸ்வதி தேவி

02           பரணி    ஸ்ரீ துர்கா தேவி

03           கார்த்திகை     ஸ்ரீ சரஹணபவன்

04           ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன்.

05           மிருகசீரிடம்    ஸ்ரீ சந்திர சூடேஸ்வர்

06           திருவாதிரை    ஸ்ரீ சிவபெருமான்

07           புனர்பூசம் ஸ்ரீ ராமர்

08           பூசம்     ஸ்ரீ தட்சிணாமூர்த்தி

09           ஆயில்யம்     ஸ்ரீ ஆதிசேசன்

10           மகம்     ஸ்ரீ சூரிய பகவான்

11           பூரம்     ஸ்ரீ ஆண்டாள் தேவி

12           உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி

13           அத்தம்   ஸ்ரீ காயத்திரி தேவி

14           சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

15           சுவாதி    ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

16           விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்.

17           அனுசம்  ஸ்ரீ லக்மி நாரயணர்.

18           கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள்

19           மூலம்    ஸ்ரீ ஆஞ்சனேயர்

20           பூராடம்   ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்

21           உத்திராடம்     ஸ்ரீ வினாயகப் பெருமான்.

22           திருவோணம்   ஸ்ரீ ஹயக்கிரீவர்

23           அவிட்டம் ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள்

24           சதயம்    ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர்

25           பூரட்டாதி ஸ்ரீ ஏகபாதர்

26           உத்திரட்டாதி   ஸ்ரீ மகா ஈஸ்வரர்

27           ரேவதி    ஸ்ரீ அரங்கநாதன்.

பத்து பொருத்தம்

பத்து பொருத்தம்:
ஜோதிடர் ஏதோ சொல்கிறார், நாங்களும் கேட்கிறோம் என்று தான் இந்த கேள்விக்கு நம்மில் பலர் பதில் சொல்வார்கள்.
நீங்களும் அந்த பத்து பொருத்தம் என்னவென்று அறிய வேண்டாமா?
1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.
2. கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம்.
4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான், திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் கொட்டும். அதனால், இதுவும் முக்கியம் தான்.
5. யோனிப் பொருத்தம் : இது மிக, மிக முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக்கூடியது இது. அதனால், இந்த பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
6. ராசிப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.
7. ராசி அதிபதி பொருத்தம் : குடும்பம் சுபிட்சமாக-சந்தோஷமாக இருக்குமா என்பது தெரிவிக்கக்கூடியது இந்த பொருத்தம்.
8. வசிய பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இல்லையென்றால் சண்டைக்கோழி தான்.
9. ரஜ்ஜூப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை உறுதி செய்யும் இந்த பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.
10. வேதைப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் தம்பதியர் வாழ்வில் சுக துக்கங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த பொருத்தம்.

ஜாதகம்

images (1)

என்பது 12பாவகங்களுடன் இறை அருளால், ஒவ்வொருவரும் தாம் செய்த வினை பதிவிற்கு ஏற்றார் போல் 12 பாவக அமைப்பில் இருந்து பாவக வலிமை மற்றும் சிறப்பு தன்மை என்ற அடிப்படையில் வழங்கபடுகிறது, எப்படி ஒரு நபருக்கு ஆதார் அடையாள அட்டையில் உள்ள விபரங்கள் மற்ற ஒருவருக்கு ஒத்து போகாதோ, அதை போன்றே ஒருவரின் ஜாதகத்தில் உள்ள பாவகத்தின் தன்மை மற்ற ஒருவருக்கு ஒத்து போகாது, ஆதார் அடையாள அட்டையில் உள்ள பொதுவான விஷயங்களான கண்ணின் விழித்திரை, கைரேகை,பெயர், முகவரி, பிற சுய குறிப்புகள்,புள்ளி விவரங்கள் ஆகியவை அனைவருக்கும் பொதுவாக இருப்பது போல், நவகிரகங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே விதமான அமைப்புடன், தனது ஜீவ சக்தியை வழங்குகிறது, மேற்கண்ட குறிப்புகளான கண்ணின் விழித்திரை, கைரேகை,பெயர், முகவரி, பிற சுய குறிப்புகள்,புள்ளி விவரங்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசம் பெறுவது போல், சுய ஜாதகத்தில் 12 பாவகங்களும் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலை என்ற அமைப்பில் வித்தியாசபடுகிறது. எனவே நவகிரகங்கள் பூமியில் ஜெனனம் செய்யத மனிதர்கள் அனைவருக்கும், ஒரே மாதிரியான ஜீவ காந்த சக்தியையே தருகிறது, மனிதர்களின் சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்கள் தனது கொள்ளளவுக்கு ஏற்றவகையில் கிரகங்களின் ஜீவசக்தியை பெற்று ஒரு ஜாதகருக்கு தனது பாவக வழியில் இருந்து யோக பலன்களையோ, அவயோக பலன்களையோ வாரி வழங்குகிறது.