வள்ளலார் பெருமான்

மூன்று மந்திரங்கள்.

தனித்திரு என்பதற்கு ஏகாந்தமாய்

இரு என்பது பொருளாகும்.ஏகாந்தமாக
இருந்து இறைவனை மனதில்
இருத்தி வழிபடவேண்டும்.அதன் மூலம்
மோட்சம் கிட்டும்.

உடலால் தனித்திருந்து பழகினால் உள்ளத்தால்
தனித்து நின்று வாழும் மனோபக்குவம்
உண்டாகும்.இவ்வாறு இறைவனை சதாகாலமும்
சிந்தித்து தனிமையில் இருப்பதே பெரும்
சுகமாகும்.

விழித்திரு

தூங்காமல் தூங்குவதே சித்தர்
வாக்காகும்.அதாவது இறை சிந்தனையில்
ஆழ்ந்து பேரின்பக் களிப்பில்
மூழ்குவதே உண்மையான இன்பம்
தரும்.தூங்காமல் தூங்கி அறிதுயிலாய் நிற்கும்
அன்பர்கள் சிவனையும் சிவ உலகையும்
தம்முன்னே காண்பர்.ஆகாரம்
அரை,நித்திரை அரைக்கால்
என்பர்.சாவாநிலை பெற்ற சித்தர்கள் தூக்க
மொழிந்தவர்களாய் சதா பேரின்பத்தில்
ஆழ்ந்திருப்பார்கள்.அதனால்தான் சாகாக்
கலையின் இரண்டாவது மந்திரமாக
விழித்திரு என்று வள்ளலார் கூறுகின்றார்.

மனிதன் உறக்க நேரத்தில் 48 அங்குல சுவாசம்
வெளியே பாய உள்ளே 24 அங்குலம்
மட்டுமே மூச்சாக இழுக்கப்படுகிறது.இந்த
சுவாசமே விழிப்பு நேரத்தில்
சமமானதாகவோ அல்லது வெளிவிடும்
மூச்சு அளவு குறைவானதாகவோ இருக்கிறது.
நம் உடலின் ஆயுள் சுவாசத்தால்
கணக்கிடப்படுகிறது.விழிப்பு நிலையே நம்
ஆயுளை அதிகரிக்கச் செய்யும்
வழியாகும்.மகா சிவராத்திரியன்றும் வைகுண்ட
ஏகாதசியன்றும் கண்விழிக்கச் சொல்லும்
ரகசியமும் இதுவே.

உறக்கத்தைச் சுத்தமாக ஒழித்த
நிலையே தேவர்நிலை. அதனால்தான்
தேவர்களை இமையை மூடாதவர்e
என்று புராணங்கள் சுட்டுகின்றன. ஆனால் இந்த
உறக்கமற்றநிலை தவம் செய்வோரின்
இறுதி முயற்சியாகும். ஆரம்ப
கட்டநிலைகளுக்கு பயன் விளைவிக்காது.
3மணிநேர உறக்கம் போதுமானது என்கிறார்
வள்ளலார் பெருமான்.

பசித்திரு

அதிக உணவும் அடிக்கடி உண்பதும்
நோய்க்கு வித்திடும்.குறைந்த உணவும்
சத்தில்லாத உணவும்
நோய்க்கு அடிகோலிடும் .எனவே பட்டினியால்
இறந்தவரைக் காட்டிலும் அதிக
உணவு உண்டு நோய்வாய்ப்பட்டு சீக்கிரத்தில்
மடிந்தவரே அனேகர்.

“ஆகாரம் அரை : நித்திரை அரைக்கால்:
மைதுனம் வீசம்: பயம் பூஜ்யம்” வள்ளலார்.
அதாவது அரை வயிறு உணவு உண்ணவேண்டும்.கால்
வயிறு நீர் பருக
வேண்டும்.கால்வயிறு காலியாக
காற்று சென்று உணவைக் கூழாக்க இடம்
தரவேண்டும். வள்ளலார் உபதேசித்த
இம்மந்திரங்களை தாயுமானவரும்
கடைபிடித்தார் என்பதை அவரது பாடலின்
வாயிலாக அறியலாம். ஓம் சிவாய நம!