நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

                                                       
                                             353a3a4
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:
1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள்.
2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.
3. பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.
4. விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள்.
5. பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள்.
6. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள்.
7. விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள்.
8. கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.
9. மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள்.
10. கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள்.

27 நட்சத்திரங்களும் சித்தர்களும் …..

 

Images2போகர்

27 நட்சத்திரங்களும் சித்தர்களும் ….  

*அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி *

*பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர் (நாகப்பட்டிணம்),ஸ்ரீபோகர், பழனி

* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.

* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம் * மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்.

*மிருகசீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில்.மிருகசீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில். மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.

* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்.

* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவ – வைத்தீஸ்வரன்கோவில், புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.

* பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)

* ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.

* மகம் (சிம்மம்), ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.

*பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.

* உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம். உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்; * உத்திரம் 3 = ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில் * உத்திரம் 4 = ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்.

* அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் – கரூவூர், ஸ்ரீகரூவூரார் – கரூர்.

* சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடுவிலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்

* சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்

* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்

* அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.

*கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.

* மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்

* பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடையார்கோவில்.

* உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கண – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம் (ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)* உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் – திருப்பதி

* திருவோணம் (மகரம்)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.

* அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).

* சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.

* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம்திட்டா. பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.

* உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்.

* ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.

ஒன்பதின் தத்துவம்……

download (1)   
ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

9ன் சிறப்பு தெரியுமா? 
எண்களில் விசேஷமான 
எண்ணாக கருதப்படுவது 
ஒன்பது. 
அந்த எண்ணில் 
நீண்ட வாழ்வு எனும் 
அர்த்தம் பொதிந்திருப்பதாகச்
சொல்கின்றனர், 

சீனர்களின் சொர்க்க கோபுரம்,
ஒன்பது வளையங்களால்
சூழப்பட்டுள்ளது. 
எகிப்து, ஐரோப்பா, கிரீக் 
முதலான நாடுகளும் 
9-ஆம் எண்ணை 
விசேஷமாகப் பயன்படுத்திப்
போற்றுகின்றன. 
புத்த மதத்தில், 
மிக முக்கியமான 
சடங்குகள் யாவும் 
ஒன்பது துறவிகளைக் கொண்டே
நடைபெறும். 
தங்கம், வெள்ளி மற்றும்
பிளாட்டினத்தின் 
சுத்தத்தை 999 என்று
மதிப்பிடுவார்கள்.

பெண்களின் கர்ப்பம்,
பூரணமாவது ஒன்பதாம் மாத
நிறைவில்தான்!
ஒன்பது எனும் எண் 
இன்னும் மகத்துவங்கள் 
கொண்டது. 
ஒன்பது என்ற எண்ணுக்கு
வடமொழியில் நவம் 
என்று பெயர். 
நவ என்ற சொல் 
புதிய, புதுமை எனும் 
பொருள் உடையது.

நவ சக்திகள்:
1,வாமை, 
2,ஜேஷ்டை, 
3,ரவுத்ரி, 
4,காளி, 
5,கலவிகரணி, 
6,பலவிகரணி, 
7,பலப்பிரமதனி, 
8,சர்வபூததமனி, 
9,மனோன்மணி,

நவ தீர்த்தங்கள்:
1,கங்கை, 
2,யமுனை, 
3,சரஸ்வதி, 
4,கோதாவரி, 
5,சரயு, 
6.நர்மதை, 
7,காவிரி, 
8,பாலாறு, 
9,குமரி

நவ வீரர்கள்:
1,வீரவாகுதேவர், 
2,வீரகேசரி, 
3,வீரமகேந்திரன், 
4,வீரமகேசன், 
5,வீரபுரந்திரன், 
6,வீரராக்ஷசன், 
7,வீரமார்த்தாண்டன், 
8,வீரராந்தகன், 
9,வீரதீரன்

நவ அபிஷேகங்கள்:
1,மஞ்சள், 
2,பஞ்சாமிர்தம், 
3,பால், 
4,நெய், 
5,தேன், 
6,தயிர், 
7,சர்க்கரை, 
8,சந்தனம், 
9,விபூதி.

நவ ரசம்:
1,இன்பம், 
2,நகை, 
3,கருணை, 
4,கோபம், 
5,வீரம், 
6,பயம், 
7,அருவருப்பு, 
8,அற்புதம், 
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள்:
1,சூரியன், 
2,சந்திரன், 
3,செவ்வாய், 
4,புதன், 
5,குரு, 
6,சுக்கிரன், 
7,சனி, 
8,ராகு, 
9.கேது

நவமணிகள்:- 

நவரத்தினங்கள்:
1,கோமேதகம், 
2,நீலம், 
3,வைரம், 
4,பவளம், 
5,புஸ்பராகம், 
6,மரகதம், 
7,மாணிக்கம், 
8,முத்து, 
9,வைடூரியம்

நவ திரவியங்கள்:
1,பிருதிவி, 
2,அப்பு, 
3,தேயு, 
4,வாயு, 
5,ஆகாயம், 
6,காலம்,
7, திக்கு, 
8,ஆன்மா, 
9,மனம்

நவலோகம் (தாது):
1,பொன், 
2,வெள்ளி, 
3,செம்பு, 
4,பித்தளை, 
5,ஈயம், 
6,வெண்கலம், 
7,இரும்பு, 
8,தரா, 
9,துத்தநாகம்

நவ தானியங்கள்:
1,நெல், 
2,கோதுமை, 
3,பாசிப்பயறு, 
4,துவரை, 
5,மொச்சை, 
6,எள், 
7,கொள்ளு, 
8,உளுந்து, 
9,வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது:
1,சோமவார விரதம், 
2,திருவாதிரை விரதம், 
3,உமாகேச்வர விரதம், 
4,சிவராத்ரி விரதம், 
5,பிரதோஷ விரதம், 
6,கேதார விரதம், 
7,ரிஷப விரதம், 
8,கல்யாணசுந்தர விரதம், 
9,சூல விரதம்

நவசந்தி தாளங்கள்:
1,அரிதாளம், 
2,அருமதாளம், 
3,சமதாளம், 
4,சயதாளம், 
5,சித்திரதாளம், 
6,துருவதாளம், 
7,நிவர்த்திதாளம், 
8,படிமதாளம், 
9,விடதாளம்

அடியார்களின் பண்புகள்:
1,எதிர்கொள்ளல், 
2,பணிதல், 
3,ஆசனம் (இருக்கை) தருதல், 
4,கால் கழுவுதல், 
5,அருச்சித்தல், 
6,தூபம் இடல், 
7,தீபம் சாட்டல், 
8,புகழ்தல், 
9,அமுது அளித்தல்,

(விக்ரமார்க்கனின் 
சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்) 
1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி, 
2,க்ஷணபகர், 
3,அமரஸிம்ஹர், 
4,சங்கு, 
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர், 
7,காளிதாசர், 
8,வராகமிஹிரர், 
9,வரருசி

அடியார்களின் நவகுணங்கள்:
1,அன்பு, 
2,இனிமை, 
3,உண்மை, 
4,நன்மை, 
5,மென்மை, 
6,சிந்தனை, 
7,காலம், 
8,சபை, 
9,மவுனம்.

நவ நிதிகள்:
1,சங்கம், 
2,பதுமம், 
3,மகாபதுமம், 
4,மகரம், 
5,கச்சபம், 
6,முகுந்தம், 
7,குந்தம், 
8.நீலம், 
9.வரம்

நவ குண்டங்கள்: 
யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான 
யாக குண்ட அமைப்புக்கள்: 
1,சதுரம்,
2,யோனி, 
3,அர்த்த சந்திரன், 
4,திரிகோணம், 
5,விருத்தம் (வட்டம்), 
6.அறுகோணம், 
பத்மம், 
எண்கோணம்,

பிரதான விருத்தம். 
1,நவவித பக்தி : 
2,சிரவணம், 
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம், 
5,பாத சேவனம்அர்ச்சனம், 
6,வந்தனம், 
7,தாஸ்யம், 
8,சக்கியம், 
9,ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் : 
1,குமார பிரம்மன், 
2,அர்க்க பிரம்மன், 
3,வீர பிரம்மன், 
4,பால பிரம்மன், 
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன், 
7,விஸ்வ பிரம்மன், 
8,பத்ம பிரம்மன், 
9,தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் - 
1,சூரியனார் கோயிவில், 
2,திங்களூர், 
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு, 
5,ஆலங்குடி, 
6,கஞ்சனூர், 
7,திருநள்ளாறு, 
8,திருநாகேஸ்வரம், 9,கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் - 
1,வீரம்,
2, பூரம்,
3, ரசம், 
4,ஜாதிலிங்கம், 
5,கண்டகம், 
6,கவுரி பாஷாணம், 
7,வெள்ளை பாஷாணம், 
8,ம்ருதர்சிங், 
9,சிலாஷத்

நவதுர்க்கா - 
1,ஸித்திதத்ரி, 
2,கஷ்முந்தா, 
3,பிரம்மாச்சாரினி, 
5,ஷைலபுத்ரி, 
7,மகா கவுரி, 
8,சந்திரகாந்தா, 
9,ஸ்கந்தமாதா, 
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி

நவ சக்கரங்கள் - 
1,த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,சர்வசாபுரக சக்கரம், 
3,சர்வ சம்மோகன சக்கரம், 
4,சர்வ சவுபாக்ய சக்கரம், 
5,சர்வார்த்த சாதக சக்கரம், 
6,சர்வ ரக்ஷõகர சக்கரம், 
7,சர்வ ரோஹ ஹர சக்கரம், 
8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,சர்வனந்தமைய சக்கரம்.

நவநாதர்கள் - 
1,ஆதிநாதர், 
2,உதய நாதர், 
3,சத்ய நாதர், 
4,சந்தோஷ நாதர், 
5,ஆச்சாள் அசாம்பயநாதர், 
6,கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், 
7,சித்த சொவ்றங்கி 
8,நாதர், மச்சேந்திர நாதர், 
9,குரு கோரக்க நாதர்

உடலின் நவ துவாரங்கள் : 
இரண்டு கண்கள், 
இரண்டு காதுகள், 
இரண்டு மூக்குத் துவாரங்கள்,
ஒரு வாய், 
இரண்டு மலஜல துவாரங்கள்

உடலின் ஒன்பது சக்கரங்கள் : 
1,தோல், 
2,ரத்தம், 
3,மாமிசம், 
4,மேதஸ், 
5,எலும்பு, 
6,மஜ்ஜை, 
7,சுக்கிலம், 
8,தேஜஸ், 
9,ரோமம் 

18 புராணங்கள், 
18 படிகள் என அனைத்தும் 
9-ன் மூலமாக தான் உள்ளன. 

காயத்ரி மந்திரத்தை 
108 முறை ஜபிக்க வேண்டும். 
எல்லா தெய்வத்தின் 
நாமாவளியும் ஜப மாலையின்
எண்ணிக்கையும் 
இதை அடிப்படையாகக் கொண்டதுதான்! 
புத்த மதத்தினர் 
108 முறை மணியடித்து, 
புது வருடத்தை வரவேற்றுக்
கொண்டாடுகின்றனர். 
சீனாவில், 
36 மணிகளை 
மூன்று பிரிவாகக் கொண்டு, 
சு ஸூ எனப்படும் 
மாலையைக் கொண்டு 
ஜபம் செய்வார்கள்.

ஸ்ரீகிருஷ்ணருக்குப் 
பிரியமான மாதம்... மார்கழி. 
இது வருடத்தின் 9-வது மாதம்!
மனிதராகப் பிறந்தவன் 
எப்படி வாழ வேண்டும் என 
வாழ்ந்து காட்டிய 
ஸ்ரீராமபிரான் பிறந்தது, 
9-ஆம் திதியான 
நவமி நாளில்தான். 
9 என்ற எண்ணை 
கேளிக்கையாக எண்ணாமல்
புராணங்களிலும், 
நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை 
போற்றுவோம்.

 

மன்மத வருட தமிழ் புத்தாண்டு

02-1425269516-manmatha-varudam11

 

அனைவருக்கும் மன்மத வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்…
நமது தமிழ் வருட பஞ்சாங்கங்களில் முதல் பக்கத்தில் அந்த வருடத்தின் நவ நாயகர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும், இதனை எவ்வாறு கணிதம் செய்கின்றனர் என்பது பெரும்பாலும் பஞ்சாங்க கணிதர்களுக்கும், பரம்பரை ஜோதிடர்களுக்கும் மட்டும் தெரிந்திருக்கும் விடயம்

மன்மத வருட- நவ நாயகர்கள்

இராஜா – சனி
மந்திரி – செவ்வாய்
சேனாதிபதி – சந்திரன்
அர்க்காதிபதி – சந்திரன்
ஸஸ்யாதிபதி – குரு
இரஸாதிபதி – சனி
தான்யாதிபதி – புதன்
மேகாதிபதி – சந்திரன்
நீரஸாதிபதி – குரு

இது போல ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் இராஜா,மந்திரி,சேனாதிபதி, அர்க்காதிபதி, ஸஸ்யாதிபதி, இரஸாதிபதி, தான்யாதிபதி, மேகாதிபதி, நீரஸாதிபதி ஆக சில கிரகங்கள் வருவார்கள் இவைகளை எவ்வாறு கணிதம் செய்கின்றனர் என்பதனை பார்ப்போம்.

1.ராஜா
ஒருவருடத்தின் கடைசி மாதமான பங்குனி மாதம் வளர்பிறை பிரதமை திதி வரும் கிழமையின் அதிபதி , அடுத்த தமிழ் வருடத்தின் இராஜா ஆவார்.

ஜய வருஷம் பங்குனி மாதம் வளர்பிறை பிரதமை சனிக்கிழமை வருவதால் சனி பகவான் அடுத்து வரும் மன்மத வருஷத்தின் ராஜா ஆவார்.

2.மந்திரி
தமிழ் வருடத்தின் முதல் நாள் ( சித்திரை -1 ) என்ன கிழமையில் வருகிறது அதன் அதிபதி அந்த வருடத்தின் மந்திரி ஆவார்.

மன்மத வருஷம் சித்திரை 1ம் நாள் செவ்வாய்க்கிழமை வருவதால் செவ்வாய் இந்த வருஷ மந்திரி ஆவார்.

3.சேனாதிபதி
சிம்ம ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி சேனாதிபதி அந்த வருடத்தின் ஆவார்.

மன்மத வருஷம் ஆடி மாதம் 32ம் நாள் 16 நாழிகை, 02 வினாடிக்கு சூரியன் மகம் 1ம் பாதத்தில் சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று திங்கள் கிழமை ஆதலால் மன்மத வருஷ சேனாதிபதி சந்திரன் ஆவார்.

4.அர்க்காதிபதி
மிதுன ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி அந்த வருடத்தின் அர்க்காதிபதி ஆவார்.

மன்மத வருஷம் வைகாசி மாதம் 32ம் நாள் 28 நாழிகை, 23 வினாடிக்கு சூரியன் மிருகசீரிசம் 3ம் பாதத்தில் மிதுன ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று திங்கள் கிழமை ஆதலால் மன்மத வருஷ அர்க்காதிபதி சந்திரன் ஆவார்.

5.ஸஸ்யாதிபதி
கடக ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி அந்த வருடத்தின் ஸஸ்யாதிபதி ஆவார்.

மன்மத வருஷம் ஆனி மாதம் 31ம் நாள் 15 நாழிகை, 10 வினாடிக்கு சூரியன் புனர்பூசம் 4ம் பாதத்தில் கடக ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று வியாழக்கிழமை ஆதலால் மன்மத வருஷ ஸஸ்யாதிபதி குரு ஆவார்.

6.இரஸாதிபதி
துலாம் ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி அந்த வருடத்தின் இரஸாதிபதி ஆவார்.

மன்மத வருஷம் புரட்டாசி மாதம் 30ம் நாள் 45 நாழிகை, 29 வினாடிக்கு சூரியன் சித்திரை 3ம் பாதத்தில் துலாம் ராசியில் பிரவேசிக்கிறார் .
அன்று சனிக்கிழமை ஆதலால் மன்மத வருஷ இரஸாதிபதி சனி பகவான் ஆவார்.

7.தான்யாதிபதி
தனுசு ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி அந்த வருடத்தின் தான்யாதிபதி ஆவார்.

மன்மத வருஷம் கார்த்திகை மாதம் 30ம் நாள் 20 நாழிகை, 29 வினாடிக்கு சூரியன் மூலம் 1ம் பாதத்தில் தனுசு ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று புதன்கிழமை ஆதலால் மன்மத வருஷ தான்யாதிபதி புதன் ஆவார்.

8. மேகாதிபதி
திருவாதிரை முதல் பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி அந்த வருடத்தின் மேகாதிபதி ஆவார்.

மன்மத வருஷம் ஆனி மாதம் 7ம் நாள் திங்கள் கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிப்பதால் , மன்மத வருஷ மேகாதிபதி சந்திரன் ஆவார்.

9. நீரஸாதிபதி
மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி அந்த வருடத்தின் நீரஸாதிபதி ஆவார்.

மன்மத வருஷம் மார்கழி மாதம் 29ம் நாள் 45 நாழிகை, 41 வினாடிக்கு சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று வியாழக்கிழமை ஆதலால் மன்மத வருஷ நீரஸாதிபதி குரு ஆவார்.

12 ராசிகளின் ஆதாய விரய கணிதம் எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்பது இனி வரும் பதிவுகளில்

நன்றி
அஸ்ட்ரோ கண்ணன்

பித்ரு சாபம் நீங்க,பூர்வ ஜன்ம பாபங்களின் தீய விளைவுகள் தீர

ஞாயிற்றுக்கிழமை வரும் அமாவாசை அன்று அல்லது ஏதேனும் ஒரு அமாவாசை அன்று ஆரம்பம் செய்யவும்.பின் இயன்ற வரை ஞாயிறு தோறும் செய்துவர பூர்வ ஜன்ம பாபங்கள் தீரும், சுப காரியங்களில் தடை நீங்கி நினைத்த காரியங்கள் கைகூடி வரும்.ஜாதகத்தில் பித்ரு சாபம் உடையவர்கள் இதைச் செய்ய பித்ரு சாபம் நீங்கி வாழ்வில் மங்களமான நிகழ்வுகள் நடக்கத் தொடங்கும்.

காலைக்கடன்களை முடித்துக் குளித்தபின் ஈர  வஸ்திரத்துடன் சூரியனை  நோக்கி கைகூப்பி நின்று கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்.

மந்திரம்: ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்| சஹசிவ சூரியாய |வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா

 
Ramanathapuram-Temple-SMR02