27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவருக்கும் தேவாரப் பாடல்கள்….

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
தினமும் பாராயணம் செய்யவேண்டிய தேவார பதிகம் !

சர்வம்சிவார்ப்பணம்

#அசுவினி :

தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து
உந்தன் சரண் புகுந்தேன்
எக்கால் எப்பயன் நின் திறம்
அல்லால் எனக்கு உளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா
மிக வடமேரு என்னும்
திக்கா! திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.!

#பரணி :

கரும்பினும் இனியான் தன்னைக்
காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை
இறப்பொடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவியானைப்
பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதாம் நினைந்தவாறே..!

#கிருத்திகை :

செல்வியைப் பாகம் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு
மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரை இலாத
காஞ்சி மாநகர் தன்னுள்ளார்
எல்லிய விளங்க நின்றார்
இலங்கு மேற்றளியனாரே..!

#ரோகிணி :

எங்கேனும் இருந்து உன்
அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னோடும்
உடன் ஆகி நின்றருளி
இங்கே என் வினையை
அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே
கழிப்பாலை மேயோனே..!

#மிருக சீரிடம் :

பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி..!

#திருவாதிரை

கவ்வைக் கடல் கதறிக் கொணர்
முத்தம் கரைக்கு ஏற்றக்
கொவ்வைத் துவர் வாயார்
குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து
எழுவார் அடி தொழுவார்
அவ்வத் திசைக்கு அரசு
ஆகுவர் அலராள் பிரியாளே..!

#புனர்பூசம் :

மன்னும் மலைமகள் கையால்
வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருள்
ஆயின தூக்கமலத்து
அன்னவடிவின அன்புடைத்
தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன இன்னம்பரான்
தன் இணை அடியே..!

#பூசம் :

பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய
மூர்த்திப் புலி அதளன்
உருவுடை அம்மலைமங்கை
மணாளன் உலகுக்கு எல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
தில்லை சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு
மற்று இனிக் காண்பது என்னே..!

#ஆயில்யம் :

கருநட்ட கண்டனை அண்டத்
தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய
வல்லானைச் செந்நீ முழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு
இறையைச் சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர்
கோன் என்று வாழ்த்துவனே..!

#மகம் :

பொடி ஆர் மேனியனே! புரிநூல்
ஒருபால் பொருந்த
வடி ஆர் மூவிலை வேல் வளர்
கங்கையின் மங்கையொடும்
கடிஆர் கொன்றையனே! கடவூர்
தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே!
எனக்கு ஆர்துணை நீ அலதே..!

#பூரம் :

நூல் அடைந்த கொள்கையாலே
நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க
நல்கிய நல்லறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி
அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண்கழனிச்
சேய்ன்ஞலூர் மேயவனே..!

#உத்திரம் :

போழும் மதியும் புனக் கொன்றைப்
புனர்சேர் சென்னிப் புண்ணியா!
சூழம் அரவச் சுடர்ச் சோதீ
உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்து ஆட்ட
ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளே..!

#அஸ்தம் :

வேதியா வேத கீதா விண்ணவர்
அண்ணா என்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு
நின் கழல்கள் காணப்
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்
படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே
அருள் செயாயே..!

#சித்திரை :

நின் அடியே வழிபடுவான்
நிமலா நினைக் கருத
என் அடியான் உயிரை வவ்வேல்
என்று அடர்கூற்று உதைத்த
பொன் அடியே இடர் களையாய்
நெடுங்களம் மேயவனே..!

#சுவாதி :

காவினை இட்டும் குளம் பல
தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்று
எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்
தீண்டப்பெறா திருநீலகண்டம்..!

#விசாகம் :

விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதம் தான் விரித்து ஓத வல்லனை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே..!

#அனுஷம் :

மயிலார் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே..!

#கேட்டை :

முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே..!

#மூலம் :
கீளார் கோவணமும் திருநீறும்
மெய்பூசி உன் தன்
தாளே வந்து அடைந்தேன் தலைவா
எனை ஏற்றுக்கொள் நீ
வாள் ஆர் கண்ணி பங்கா!
மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே..!

#பூராடம் :

நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய்
நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்
மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்
பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே..!

#உத்திராடம் :

குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்காது உடையோனே
உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்
ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்
செம்பொனே திருவடுதுறையுள்
அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே..!

#திருவோணம் :

வேதம் ஓதி வெண்நூல் பூண்ட
வெள்ளை எருது ஏறி
பூதம் சூழப் பொலிய வருவார்
புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும்
நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம்
தீர்ப்பார் பழன நகராரே..!

#அவிட்டம் :

எண்ணும் எழுத்தும் குறியும்
அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இடைமொழி பாடிய
வானவரதா பணிவார்
திண்ணென் வினைகளைத்
தீர்க்கும் பிரா திருவேதிக்குடி
நண்ணரிய அமுதினை
நாம் அடைந்து ஆடுதுமே..!

#சதயம் :

கூடிய இலயம் சதி பிழையாமைக்
கொடி இடை இமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்கு உற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.

#பூரட்டாதி :

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின்
நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த
வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித்
தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்
கூத்தன் குரை கழலே..!

#உத்திரட்டாதி :

நாளாய போகாமே நஞ்சு
அணியும் கண்டனுக்கு
ஆளாய அன்பு செய்வோம்
மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும்
கேடுபடாத்திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்
கோளிலி எம்பெருமானே..!

#ரேவதி :

நாயினும் கடைப்பட்டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த
அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்
நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி
நீ அருள் செய்வாயே..!

உன்னதமான வாழ்வுக்கும்
உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும்..

அன்பு உள்ளம் கொண்ட முகநூல்
நண்பர்களே
பகிருங்கள் அப்பொழுதுதான்
பலரும் பயன் பெறுவார்கள்.

தன்னம்பிக்கையை அதிகரிக்க :-

தன்னம்பிக்கையை அதிகரிக்க :-
1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன்
வரிசைக்கு வாருங்கள்.
2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப்
பார்த்துப் பேசுங்கள்.
அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும்,
தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம்
போடுவதெல்லாம் வேண்டாம்.
3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள்.
நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள்
செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.
4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும்
என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல்
உங்களுடையதாகட்டும்.
5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்.
அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.

ஜோதிடம் இன்னும் எளிமையாக வேண்டும்.

ஜோதிடம் இன்னும் எளிமையாக வேண்டும்.
—————————————————————–
ஜோதிடத்துறைக்குள் நுழைவதற்கு முன் வெளியே நின்று பார்த்தபோது எனக்குள் ஒரு பிரமிப்பு இருந்தது. ஜோதிடர்களிடம் ஏதோ மிகப்பெரிய திறமை இருப்பதாக கருதியதுண்டு. ஏதோ அவர்களில் சிலரிடம் ஒரு வித அமானுஷ்ய சக்தி இருப்பதாகக்கூட நினைத்ததுண்டு. நான் ஜோதிடத்திற்குள் நுழைந்து பலரை பக்கத்திலிருந்து கவனித்தபோது எனக்குள் இருந்த பிரமிப்பு படிப்படியாக குறைந்து விட்டது. இந்த துறைக்குள் இருக்கும் போட்டி, பொறாமை, பொச்சரிப்பு, சூது , வஞ்சகம், துரோகம் இவைகளை நேரில் கண்டபோது எனக்குள் ஒரு பெரிய ஆத்திரம் பொங்கி எழுந்தது. என்னுடைய வருத்தங்களை நெருக்கமாக இருந்த சிலரிடம் பகிர்ந்துகொண்டதுண்டு. அவர்களிடம் என் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட பின் அவர்களும் என்னை விட்டு விலகி சென்றார்கள். அவர்கள் எனக்கு எதிராக செயல் பட்டார்கள். நான் பெரும்பாலும் தனியாகவே செயல்பட்டேன். எத்தனை கேலி ,கிண்டல், அவமானம். அத்தனை சூழ்நிலைகளிலும் நான் தனித்தே நின்றேன். ஜோதிடத்துறையில் இருந்துகொண்டு அதற்கு களங்கம் கற்பித்துக்கொண்டிருந்தவர்களை இந்த துறையில் இருந்து ஒழித்துக்கட்டுவேன் என்று வெளிப்படையாக மிகவும் நெருக்கமானவர்களிடம் சுமார் 12 வருடங்களுக்கு முன்பு சொல்லியதுண்டு. நான் யார் யாரையெல்லாம் ஜோதிட துறையிலிருந்து தூக்கி எரிய வேண்டும் என்று நினைத்தேனோ? அவர்கள் எல்லோருமே காணாமல் போய்விட்டார்கள். இவர்களுக்கு எதிராக நான் நேரடியாக எந்த தீங்கும் செய்யவில்லை. என்னால் முடிந்தவரை பல ஜோதிட நூல்களை எழுதி ஜோதிடத்தை எளிமை படுத்தினேன். அவ்வளவுதான்.
எனக்கு எதிராக ஜோதிட மேடைகளில் பலர் என் முன்னாலேயே கர்ஜித்ததுண்டு. அவர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஜோதிடத்தை என்னால் முடிந்தவரை எளிமை படுத்துவேன். புதியவர்களை உருவாக்குவேன். ஜோதிடத்துறைக்குள் இருக்கும் தனி மனித ஆதிக்கங்களை நிச்சயம் இல்லாமல் செய்வேன். இதற்கு ருத்திரன் எனக்கு துணையிருப்பான்.

சித்திர குப்தரும் எமதர்மரும்

சித்திர குப்தரும் எமதர்மரும்
★★★★★★★★★★★★★★★
SG யின் ஜோதிட பார்வை
★★★★★★★★★★★★★

சித்திர குப்தர்
★★★★★★★★
சித்திரை மாதம் பௌர்ணமி திதி சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் சித்திர குப்தர்.
சித்திரகுப்தரின் இராசி துலாம்.

காலப்புருஷ ராசியின் ஏழாம் இராசி துலாம்.இந்த ராசியில் கர்மக்காரகன் சனிக்கு உச்ச ராசியாக அமைந்துள்ளது.
துலாம் ராசியின் உருவ அமைப்பு தராசு. ஒரு மனிதனின் கர்மா துல்லியமாக எடைப் போடப்படும் ராசியாக இருப்பதால் தான் இதில் கர்மகாரகன் சனி உச்சம் அடைகிறார்.

சித்திர குப்தரின் பணி ஒரு மனிதனின் கர்மவினை கணக்கை துல்லியமாக எழுதி வைப்பது, அதனால் தான் சித்திர குப்தர் துலாம் ராசியில் அவதரித்துள்ளார்.துலாம் இராசி என்பது தராசு. தராசில் ஒரு தட்டில் பாவமும் மறு தட்டில் புண்ணியமும் எடை போடப்படுகிறது.

நீதிமானாகிய சனியை ஆயுள்காரகன் என்றும் கர்மகாரகன் என்றும் கூறுகிறோம்.துலாமில் நீச்சம் அடையும் கிரகம் சூரியன்.சூரியனை ஆத்மகாரகன் உயிர்காரகன் என்கிறோம்.ஒரு மனிதனின் ஆயுள் முடிந்தவுடன் அம் மனிதனின் உயிர் அதாவது ஆத்மா பிரிந்து சென்றுவிடும்.
எஞ்சி இருப்பது அந்த
மனிதனின் கர்மவினையே அதனால் தான் துலாமில் சனி உச்சமடைகிறார்.

சூரியன் நீச்சம் உயிர் பிரிகிறது.சனி உச்சம் கர்மா வலுப்பெறுகிறது. உயிர் போனாலும் ஒருவரின் கர்மவினை அவரின் பாவ புண்ணியத்திற்கு தக்கவாறு மீண்டும் பிறவி எடுக்கும் என்பதை தெளிவாக உணர்த்தவே ஏழாம் இடம் என்னும் இல்லற பாவத்தில் மீண்டும் தாம்பத்தியம் துவங்குகிறது.ஆக பிறவிக்கு வித்திடும் பாவம் ஏழாம் பாவம்.ஏழாம் பாவகத்தை அஸ்தமனம் என்றும் லக்கினத்தை உதயம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எந்த இடத்தில் உயிர் பிரிகிறதோ அதே இடத்தில் உயிரை தோற்றுவிக்க ஆண் பெண் இல்லற சுகத்தை வைத்தது இறைவன் திருவிளையாடல் என்றே கூற வேண்டும்.

முடிவு என்று எங்கு உள்ளதோ அங்கேயே அதன் உதயமும் தோன்ற வித்திடுவது ஏழாம் பாவமே.இப்படிப்பட்ட சிறப்பு மிக்க துலாம் ராசி சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்த சித்திர குப்தரே மானுட உலகின் பாவபுண்ணிய கணக்கை துல்லியமாக கணக்கிட்டு காட்டும் உயர்நீதி மன்ற நீதிபதியாவர்.

எமதர்மராஜர்
★★★★★★★★
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் எமதர்மர். விசாக நட்சத்திரத்தின் 1 2 3 ஆம் பாதங்கள் துலாம் ராசியிலும்,
விசாகம் 4 ஆம் பாதம் விருச்சிக ராசியிலும் உள்ளது.
காலப்புருஷ ராசியின் ஏழாம் பாவம் துலாம்.ஏழாம் பாவத்தை நாம் மாரக பாவம் என்றும், எட்டாம் பாவமான விருச்சிகம் ஆயுள் பாவம் என்று அறிவோம்.பொதுவாக விசாக நட்சத்திரம் உடைந்த நட்சத்திரங்களில் தலையற்ற நட்சத்திரமாகும்.எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். ஒருவருக்கு தலையின் செயல்பாடுகள் நின்று விட்டால் அவருக்கு ஆயுள் முடிந்துவிட்டது என்கிறோம்.

எமதர்மர் அதனால் தான் தலையற்ற நட்சத்திரத்தில் அவதரித்துள்ளார் என எண்ண தோன்றுகிறது.
ஆயுள் முடிந்தவர்களை தன் பாசக்கயிற்றால் இழுத்து செல்வதற்காகவே விசாக நட்சத்திரத்தில் அவதரித்துள்ளார்.

விருச்சிக ராசி காலப்
புருஷனுக்கு ஆயுள் பாவம். அதில் நீச்சமாகும் கிரகம் சந்திரன். சந்திரனை உடல் காரகன் என்கிறோம்.
உடல் தன் செயல்பாட்டை நிறுத்திவிட்டால் ஆயுள் பிரிந்துவிட்டது என்கிறோம்.
விருச்சிகத்தில் சந்திரன் 3 டிகிரியில் நீச்சமடைவதும், அதுவும் விசாகம் 4ம் பாதத்தில் நீச்சமடைவதும் இந்த நீச்சமான பூத உடலையும் உயிரையும் கைப்பற்ற விசாக நட்சத்திரத்தில் அவதரித்த எமதர்மராஜாவே வருவது தான் இறை தன் கடமையை செவ்வனே செய்கிறது என்பதை அற்புதமாக உணரச் செய்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி சித்திரகுப்தர் என்றால் உச்ச நீதிமன்ற நீதிபதி எமதர்மரே.
பூலோக நீதிபதிகளின் தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டாலும்
மேலோக நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து யாவரும் தப்பிக்கவே முடியாது.

சித்திரகுப்தர் உடலற்ற நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர் .
உடலை பூலோகத்தில் விட்டுவரும் மனிதர்களின் கர்மகணக்கை துல்லியமாக எழுதிவைப்பவர் உடலற்ற நட்சத்திரத்தில் அவதரித்த சித்திரகுப்தரே.

உடலற்ற நட்சத்திரமான
சித்திரையில் பிறந்த சித்திரகுப்தர் உடலின் கர்ம கணக்கையும்,
தலையற்ற நட்சத்திரமான விசாகத்தில் பிறந்த எமதர்மர் ஒரு மனிதனின் உயிர் கணக்கையும் (ஆயுளையும் ) துல்லியமாக நிர்ணயம் செய்யவல்லவர்கள்
என்பதை உணரலாம்.

உடலும் உயிரும் அற்றவர்களால் தான் உடலைப்பற்றியும் உயிரைப்பற்றியும் கணக்கிட முடியும் என்பதற்கு இதுவே சாட்சி. உடைந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முன் ஜென்மவாசனையும்,சூட்சும உலகைப்பற்றிய அறிவும் நிச்சயம் அறிந்திருப்பார்கள்.
ஆவிலோக தொடர்பு கொண்டு பேசுபவர்களும் நிச்சயம் இந்த உடலற்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக தான் இருப்பார்கள்.

நம் முன்னோர்கள் சித்திரகுப்தரையும் எமதர்மரை பற்றியும்
இந்து மதத்தில் புராண வாயிலாக கூறியுள்ளார்கள் என்றாலும் அவை ஜோதிடத்துடன் ஒப்பிட்டு வருவது ஜோதிடம் வேதத்தின் கண்ணாக செயல்புரிகிறது என்பதை தெள்ளத்தெளிவாக அறியலாம்.

நன்றி

அன்புடன்
அஸ்ட்ரோ சக்திகுரு
நாமக்கல்

முதலாளியின் கதை :

ஒரு ஓட்டல் முதலாளியின் கதை :

தன்னுடைய கடையில் சேரும் முருகனான என்னை அவர் ஒரு நிபந்தனையுடன் சேர்த்து கொள்கிறார் .

அத்தியாவசியம் தவிர வேறு எந்த செலவுக்கும் நீ காசு கேட்க கூடாது என கண்டித்து சொன்னார்.

உனக்கு தேவையான நேரத்தில் நானே மொத்தமாக கொடுப்பேன் என்றும் சொன்னார்.

பசியால் வாடி வதங்கியிருந்த அவனுக்கு அப்பொழுது உணவு மட்டுமே தேவையாயிருந்தது .

அவனும் சரியன்று ஒத்துக்கொண்டான்.

அதற்கு பிறகு அவன் தன்னை முழுமையாக வேலையில் ஈடுபடுத்திக் கொண்டான் .

அந்த முருக பவனை தனது பவனாக நினைத்து முழுமையாக உழைத்தான்.

இடையில் ஊருக்கு போகவேண்டும் என்று அவன் எவ்வளவு பணம் கேட்டும் அவர் தரவில்லை .

ஒருவேளை சோறு போடக் கூட வழியின்றி உன்னை விரட்டியடித்த ஊருக்கு நீ ஏன் செல்கிறாய் என்று அவனை அடக்கி அமைதியாக இருக்க வைத்தார்.

சில வருடங்கள் ஓடியது .
அவனுக்கும் அவரின் அன்பும் கண்டிப்பும் பிடித்துப் போனது .

எதைப்பற்றியும் கேட்பதில்லை.

கடையில் இருந்த மற்ற ஊழியர்கள் அவனை பெண் பார்க்க அழைத்துச் சென்றார்கள் ,சில விடுமுறை தினங்களில் ….முதலாளிக்கு தெரியாமல்….

ஓட்டல் கடையில் வேலை செய்பவருக்கு பெண்ணை தர முடியாது என்று பல இடங்களில் மறுத்துவிட்டனர் .

அதை எல்லாம் முதலாளி கண்டும் காணாமலும் இருந்தார் .
அவனை ஏதும் கேட்கவும் இல்லை. அவன் மேல் பரிதாபப்படவும் இல்லை.

இன்றோடு வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது .

ஒரு நாள் முதலாளி அவனை அழைத்தார்.
அதிக ஓட்டல் இல்லாத ,ஆனால் பரபரப்பு நிறைந்த ஒரு இடத்திற்குக் கூட்டிச் சென்று புதிய கடையை பார்த்தார் .

முருகா இந்த இடத்தில் கடையை வைத்தால் ஓடுமா என்று என்னிடம் கேட்டார் ..

நானும் ஆமாங்க முதலாளி இந்த இடம் நல்ல இடம் நல்ல வியாபாரம் ஆகும் என்றேன் .

கடைக்கு முன் பணம் கொடுத்தார் .

அந்த கடைக்கு தேவையான எல்லாத் தட்டு முட்டு சாமான்களையும் வாங்குதற்கு என்னையே அனுப்பி வைத்தார் .

என்னோடு இணக்கமாக இருந்த சக தோழர்களையும் என்னோடு பணிக்கு ஒத்தாசை செய்யச் சொன்னார்.

கடை ஆரம்பமாக நாள் குறிக்கப்பட்டது. ஐந்து நாள் முன் அவர் என்னை அழைத்தார் .

கடை வேலை எல்லாம் சரியாக செல்கிறதா முருகா என கேட்டார்.

பின்னர் கடை சாவியை என்னிடம் கொடுத்து ,
நீதான் முருகா கடைக்கு சொந்தக்காரன் என்றார் .

முதலாளி என்ன இது திடீரென்று இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.

உன்னுடைய பணம்தான் முருகா …

அதில் எனது பங்கும் கொஞ்சம் இருக்கிறது. அது உன் மேல் நான் வைத்திருக்கும் அன்பின் சிறிது சன்மானம் அவ்வளவே…

நீ உன்னுடைய உறவுக்காரர்களை கடை திறப்பு விழாவிற்கு தற்பொழுது அழைத்து உபசரி….

பிறகு தானாக எல்லாம் நடக்கும் என்றார்.

அப்படியே கடை திறப்பு விழாவும் தடபுடலாக இருந்தது .

சாப்பாடு போடாமல் விரட்டியடித்த உறவினர்கள் கடை அருமை, சாப்பாடும் அருமை என சொன்னார்கள் .

பிறகு எனது தூரத்து மாமா ,வசதியான மாமா அவர்களே தனது பெண்ணை அளிக்க முன்வந்தார் .

பிறகு எனது முதலாளியின் தலைமையில் மாமா பெண்ணை திருமணம் செய்து மிகவும் வசதியாக வாழ்ந்து வருகிறேன் .

ஆனால் அவர் சொன்ன ஒரு தாரக மந்திரம் அது இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது .

அதை நான் இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன்

உனக்காக மட்டும் வாழாதே….
உன்னை நம்பி இருக்கும் அனைவரையும் வாழ வை ….

என்றதை இன்றுவரை நான் கடைபிடித்து வருகிறேன் .

அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட உறவினர்களை காட்டிலும் ,
அவரால் வளர்த்துக் உருவாக்கப்பட்ட மனிதர்களின் அழுகையே அதிகமாக இருந்தது என்னையும் சேர்த்து ….

சில மனிதர்களின் சாதனைகள் வெளியில் தெரிவதில்லை ஆனால் அவர்களது இறுதி ஊர்வலத்தில் தெரியும் என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன் எனது முதலாளி இறுதி ஊர்வலத்தில்…..