சனி பகவான் தனுசு ராசியில்

இன்றைய காலகட்டத்தில்
கோச்சாரம் ஆக சனி பகவான் தனுசு ராசியில் அமர்ந்துள்ளார்.இது வியாழ பகவான் வீடாகும் .வியாழனின் காரகத்துவம் அனைத்தும் பாதிப்படையும் காலகட்டம். வியாழன் காரகத்துவம் தங்கம் விலை மாற்றம் சர்க்கரை விலையில் மாற்றம் பொருளாதார மாற்றம் ஆன்மீகத்தில் புதிய சட்டங்கள் வியாழன் குருவாக இருப்பதால் ஆசிரியர்களுக்கென புதிய சட்டங்கள் வங்கிகளில் புதிய திட்டம் மற்றும் தனுசில் அமர்ந்த சனி பகவான் ஏழாம் பார்வையாக மிதுனத்தையும் பத்தாம் பார்வையாக கன்னியையும் மூன்றாம் பார்வையாக கும்பத்தையும் பார்வை செய்கிறார் புதன் எழுத்தாளர்களையும் ஜோதிடர்களையும் குறிப்பதால் எழுத்தாளர்கள் மறைவு ஏற்பட்டதும் ஜோதிடர்கள் மறைவு ஏற்பட்டதும் புதனுடைய காரகத்துவத்தை பாதித்தது .

மேலும் சனி பகவான் பத்தாம் பார்வையாக கன்னி ராசியை பார்வை செய்வதால் ஆசிரியர்களுக்கு உத்தியோகம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுடைய திறமையை சோதிக்கவும் வாய்ப்பு வந்து சேரும் . இதுபோன்று வங்கி ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம். ஆசிரியர்கள் கவனமாக செயல்பட வேண்டும் இந்த பாதிப்புகள் தஞ்சாவூர் திருச்சி பகுதிகளிலும் கன்னியாகுமரி பகுதிகளிலும் கோவை பகுதிகளிலும் ஏற்பட வாய்ப்பு உண்டு

காரணம் மிதுனம் என்பது திருச்சியின் தென்புறமும் தஞ்சாவூரிலிருந்து திருச்சி வரை உள்ள வடக்குப் பகுதியும் திருச்சியின் தென்பகுதியிலிருந்து தஞ்சாவூர் வரை மிதுன ராசி ஆகும் இது சனி பகவான் பார்வை செய்யும் இடமாகும்

இதுபோன்ற கன்னி ராசி கன்னியாகுமரி மாவட்டத்தை குறிக்கும்

தனுசு கொங்கு மாவட்டத்தை குறிக்கும்

ஆதலால் இந்தப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு

மூன்றாம் பார்வையாக கும்பத்தை பார்வை செய்வதால் கோவில் சொத்துக்களுக்கு புதிய சட்டம் வரும்
இதுபோன்ற இந்தியாவை எடுத்துக்கொண்டால் மிதுன ராசியில் ஆந்திராவின் வடக்கு மேற்கு பகுதிகள் கர்நாடகாவின் வடக்கு கிழக்கு பகுதிகள் அதுபோன்று கன்னிராசியில் மத்திய பிரதேசத்தின் மத்திய பகுதி மகராஷ்டிராவின் கிழக்குப்பகுதி அதுபோன்றே கும்ப ராசியின் ராஜஸ்தானின் வடக்கு மேற்கு பகுதி பஞ்சாபின் மேற்கு பகுதி. மேலே குறிப்பிட்ட பகுதிகள் சனி பகவானின் பார்வை படுவதால் 2020 ஜூன் வரை சனிபகவானின் பார்வை படும்

இந்த பாதிப்பை சந்திப்பவர்கள் இதற்காக ராமேஸ்வரம் சென்று ராமலிங்க சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு.
சில அரசு ஊழியர்கள் கட்சி முத்திரை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.