பூசம் நட்சத்திரம் 2ம் பாதம்:

பூசம் நட்சத்திரம் 2ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் பூசம் நட்சத்திரம் 2ம் பாதம்.

பூசம் நட்சத்திரம் 2ம் பாதம்,
அட்சய லக்னம் கடக லக்கனமாக இருந்தால் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்
வரக்கூடியவர் என்ன கேள்விக்காக வந்திருப்பார்?
என்றால்,
என்னுடைய முயற்சி எப்பொழுது வெற்றி பெறும்?
என்னுடைய திருமண வாழ்க்கையை எப்படி சந்தோசமாக அமையும்? என்னுடைய வாழ்க்கையில் நான் என்ன படிப்பேன் ?

ஜாதகருடைய முயற்சி சம்பந்தப்பட்ட கேள்விகள் அதிகமாக இருக்கும். அதாவது என்னுடைய வாழ்க்கையில் இது நாள் வரைக்கும் எதுவும் நடக்கவில்லை,
ஜயா அரசியலில் நிற்கிறேன் ஜெயிக்கலாமா? ஜெயிக்கலாம்.

அதாவது ஜாதகருடைய முயற்சிக்கு எதிர்பார்த்த யோகத்தை கொடுக்ககூடிய காலம் தான்
பூசம் நட்சத்திரம் 2ம் பாதம்.

சனி பலமாக அமைந்து அந்த ஜாதகத்தில் சந்திரன் பலமாக அமைந்தால் அரசியலில் எம்பி, எம்எல்ஏ, சிஎம், பிஎம் வர வாய்ப்பு உள்ளது.
பூசம் நட்சத்திரம2ம் பாதம்.ஏன்னா? இந்த நட்சத்திரத்திற்கு வலிமை உண்டு.

அவருடைய வாழ்க்கையில் போராடக்கூடிய எண்ணங்கள் அதாவது சாதாரணமாக எதையும் ஏற்ககூடாது என நினைப்பார் பூசம் நட்சத்திரம் 2ம் பாதம்.

பூசம் நட்சத்திரம் 2ம் பாதம் 1வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கக்கூடிய காலகட்டத்தில் சரியாக 47 வயதில் அவர் அரசியலின் நின்றால் ஜெயித்து விடுவார்.
அதேபோல் குரூப் 2 ,குரூப் 4 எக்ஸாம் எழுதினால் போராடக்கூடிய எண்ணங்களினால் அவர் ஜெயித்து விடுவார்.

அதுவே ஜாதகத்தில் சனி பகவான் பலமாக இல்லாமல் அசுப தன்மையில் இருந்தால் கொஞ்சம் போராடி ஜெயிக்க வேண்டும்.
வெற்றி உறுதியானது.
அதை எப்படி வெற்றி என்பதுதான் பூசம் நட்சத்திரம் 2ம் பாதம்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்தன்மை உண்டு.

இந்த பூசம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் வாழ்க்கையில் திருமணமாக இருக்கட்டும்,
குழந்தைகளாக இருக்கட்டும்,
கட்டாயம் குழந்தைப்பேறு உண்டு.

மெடிக்கல் செலவு உண்டு.
பிரச்சனை: கழுத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சனை ஏற்படும்.
கண், காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.

அதாவது ஜாதகருடைய முயற்சிகள் எல்லாம் லாபமாக மாறும்.

உடல் உபாதைகள் அதிகமாக இருக்கும்.
போராடக்கூடிய எண்ணங்கள் அதிகமாக இருக்கும்.

திருமண உறவுகள் எதிர்பார்த்த அளவு சந்தோஷமாக இருக்கும்.

இந்த காலகட்டத்தில் எதிர்பாராத திடீர் திருமணங்கள், திடீர் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

வேலை வாய்ப்பு:
எதிர்பாராத திடீர் வேலை வாய்ப்புகளை கொடுக்கக்கூடியது.
M.Com படித்து வேலை இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக பூசம் நட்சத்திரம் 2 ம் பாதம் வேலை உண்டு.

எதிர்பாராத சந்தோஷங்கள், எதிர்பாராத நட்புகள்,
எதிர்பாராத யோகங்களை கொடுக்கக்கூடியது பூசம் நட்சத்திரம் 2ம் பாதம்.

பிரச்சனைகளையும் கொடுத்து எதிர்பார்த்த யோகத்தையும் கொடுக்கக்கூடிய தான் பூசம் நட்சத்திரம் 2ம் பாதம்.
வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு அமைப்பை ஏற்படுத்தும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

https://www.amazon.in/dp/B096L82T75

பூசம் நட்சத்திரம் 3ம் பாதம்:

பூசம் நட்சத்திரம் 3ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரப் பாதம் பூசம் நட்சத்திரம் 3ம் பாதம்.

கடக லக்னம் அட்சய லக்னமாக செல்லக்கூடிய காலகட்டத்தில் ஒரு மனிதருக்கு அந்த நேரம் யோகமா? அவயோகமா? என்பதை பார்ப்போம்.

பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதம் செல்லக்கூடிய காலகட்டம் மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும்.
அதாவது எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள்,
திடீர் யோகங்கள்,
வீடு சம்பந்தப்பட்ட கேள்விக்காக வந்திருப்பார்.
வீடு கட்டலாமா? என்று கேட்டால் பழைய வீடு வாங்கலாம்.

பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதம் யோகம் உண்டா? உண்டு.
ஆனால் 7 8-க்கு அதிபதியாக இருக்கிறார்.
அதனால் எதிர்பார்த்த விஷயங்கள் யோகங்கள்.

என்னுடைய வாழ்க்கையில் இது நாள் வரைக்கும் நண்பர்கள் மூலமாக,
என்னுடைய தாயின் மூலமாக, இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்து கொள்ளக் கூடிய காலம்.

பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதம் எதிர்பார்த்த யோகம் உண்டு.
தொலைதூரப் பயணங்கள்,
திருமணம் சம்பந்தப்பட்ட உறவுகள்,
வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
சனி புதன் சம்பந்தப்படும் பொழுது technical சம்பந்தப்பட்ட விஷயங்களால் எதிர்பார்த்த யோகம் உண்டு.

ஏதோ ஒரு பூசம் நட்சத்திரத்தில் சனிபகவான் ஆயில்யம், ரேவதி, கேட்டையில் நின்றால் அந்தக் காலகட்டத்தில் தான் அவர் வெளிநாடு செல்லலாமா என்ற கேள்வி கேட்க வந்திருப்பார்.

அந்த நட்சத்திர அதிபதியும்,
அந்த பாவக அதிபதியும் இணைத்தால் அவர் என்ன கேள்விக்காக
வந்திருப்பார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதம்
வதை படுவார்.
8ம் இடம் என்றால் மறை பொருள் சார்ந்த பிரச்சனைகள்.
பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதம் வீட்டு மேல் கடன் வாங்குவார்.

பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதம் நவாம்சத்தில் துலாம் லக்னத்தை செயல்படுத்தும்.
இதனால் இந்த காலகட்டம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
வீடு, அம்மா, உடல்நலம், ஆரோக்கியம் மனைவி,மனைவி உடல்நலம் ஆரோக்கியம்.

மறைபொருள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மறைந்துவிடும்.
இதில் கவனமாக இருக்க வேண்டும்.
தாத்தா பாட்டி சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

யோகமான நட்சத்திரம் ஆனால் வதைப்படுத்தி பிறகு மகிழ்ச்சியை அளிக்கும்.
பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதம் 1 வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://www.amazon.in/dp/B0984V57RH

பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் :

பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்தஇந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடை மூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையில் எந்த நேரம் அதிர்ஷ்டமான நேரம் என்பதை பார்க்கிறோம்.

அதில் ஒவ்வொரு நட்சத்திர பாதம் கடந்து செல்லும் காலம் 1வருடம், 1 மாதம், 10 நாள்.

ஒரு லக்னம் 10 வருடம் கடக்கும்.
அதில் ஒன்பது நட்சத்திரப் பாதங்களில் ஒரு நட்சத்திர பாதம் 1 வருடம், 1 மாதம், 10 நாள் கடந்து செல்லக் கூடிய காலம் தான் ஒரு நட்சத்திர பாதம்.

கடந்த காலத்திற்கு உங்கள் ஜாதகங்களை ஆய்வு செய்து பாருங்கள்.அது அட்சய லக்ன பத்ததி முறையில் சரியாக இருக்கும்.

குழந்தைகளையும் குருவையும் எப்பொழுதும் ஆத்மார்த்தமாக நேசிக்கணும்.
அதுதான் உங்கள் வாழ்க்கை.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் பூசம் நட்சத்திரம் 4ம் பாதம்.

வாழ்க்கையில் எதுவுமே நடக்கவில்லை என்று நினைப்பவர்களுக்கு பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் ஒரு சந்தோஷமான காலகட்டம்.
குழந்தை பேரு சம்பந்தப்பட்டது.
காதல் திருமணம் சம்பந்தப்பட்டது.
பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் ஒரு யோகமான நட்சத்திர பாதம்.

கனவு, கற்பனை, கற்பனைத்திறன், வெளிநாடு, மகிழ்ச்சி, சந்தோஷம் எல்லாவற்றிலும் வயப்படுவார்கள்.

லக்னத்தின் அதிபதி சந்திரனும், நட்சத்திரத்தின் அதிபதி சனியும் பலமாக இருந்தால் வாழ்க்கையில் சந்தோஷமான விஷயம் இருக்கும்.

சந்திரனும், சனியும் சஸ்டாங்கமாக இருந்தால் உங்களுடைய வாழ்க்கை சித்தபிரமை ஆகும்.

இரண்டுவிதமான கர்மாவை நம்மிடம் கொடுத்துவிட்டு,
ஒருவிதமான கர்மாவை கடவுள்தான் தீர்மானிப்பார்.

நாம் என்ன வாழ்க்கையில் செய்கிறோமோ அது தான் நமக்கு திரும்ப வரும்.

நல்ல எண்ணம் மனதில் வரும்பொழுது யார் மூலமாகவாவது ஒரு சந்தோஷத்தை கொடுக்கும் என்பதுதான் பூசம் நட்சத்திரம் 4ம் பாதம்.

1 வருடம், 1 மாதம், பத்து நாள் இயங்கும் பூசம் நட்சத்திரம் 4ம் பாதம்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://play.google.com/store/apps/details?id=com.guruvashishta.akshayalagnapaddati&hl=ta&gl=US