ஐந்து நிமிடத்தில் ஜாதகத்தை ஆய்வு செய்வது.

அனைவருக்கும் வணக்கம்

ஐந்து நிமிடத்தில் ஜாதகத்தை ஆய்வு செய்வது.

இன்றைக்கு ஜாதகருடைய லக்னம் கன்னி லக்னம் தற்சமயம் அக்ஷய லக்னம் மூல நட்சத்திரம் மூன்றாவது பாதம்.தனுசு லக்னத்தை ஏற்கக்கூடிய 10 வருஷ அதிபதி குருபகவான்பாக்கியாதிபதியாக லக்னத்தில் உள்ளார் .பாக்கியாதிபதியான சூரியன் லக்னத்தில் உள்ளார். பஞ்சம் அதிபதியான செவ்வாய் ,விரயாதிபதியான செவ்வாய், அட்டமதிபதியானசந்திரன் லக்னத்தில் உள்ளார். 7,10க்குஅதிபதியான புதன் லக்னத்தில் உள்ளார். அங்கே ராகுவும் உள்ளது.ஜாதகருடைய பத்து வருட பலன்கள் எப்படி இருக்கும் அப்படினா ஜாதகர் பாக்கியத்திற்கு நல்ல இடத்தில் உள்ளார்.ஆனால் ஜாதகரை சுற்றி சூரியன் ,செவ்வாய், புதன் ,சந்திரன், ராகு இவரை இந்த ஐந்து பேரும் இயக்குகிறாங்க.ஜாதகருடைய தனிப்பட்ட முறையில் அவருடைய அமைப்பு நல்ல நிலையில் உள்ளது.சனி பலமாகஇருப்பதால் வருமானத்தில்பிரச்சனைகள் இல்லை.தொழில் ஸ்தானத்தின் அதிபதி லக்னத்தில் உள்ளார். தொழில் பிரச்சினைகளும் இல்லை.அட்டம் அதிபதியான சந்திரன் லக்னத்தில் உள்ளார் .நாலாம் இடத்தின் அதிபதி குரு,குரு 4 க்கு ஆறாம் இடத்தில் உள்ளார்.இந்த ஜாதகத்தில் சந்திரன் காரகத்துவத்தையும் பார்க்கணும் பாகதத்துவத்தையும் பார்க்கவும்.நான்காம் இடமான பாகதத்துவத்துக்குஅதிபதியான கிரகம் ஜாதகருக்கு நல்லா இருக்கும் .ஆனால் 4 க்கு ஆறாம் இடத்தில் உள்ளது.இந்த சந்திரன் அட்டம் அதிபதியாக உள்ளார். இந்த ஜாதகருக்கும் அம்மாவுக்கும்கொஞ்சம் மனஸ்தாபங்கள் ஏற்படும் சூழ்நிலைஉண்டு. 7க்கும் 10க்கும் அதிபதியான புதன் ,அடுத்து இந்த ஜாதகரை மனைவி இயக்குறாங்க.பூர்வ புண்ணியம் ஐந்து 12-க்கு அதிபதியான செவ்வாய் இருக்கும், பூர்வபுண்ணிய தன்மைஇவரை இயக்குகிறது இந்த கிரகங்களின் கூட்டு அவரை இயக்குகிறது ஐந்தாம் இடத்தின் அதிபதி லக்னத்தில் உள்ளார் தேவை இல்லாத மன சஞ்சலங்கள் உருவாகும் அவரை 12 க்கு அதிபதியாகி கிரக சேர்க்கை தன்மைகள் அவருக்கு சில சஞ்சலங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலையும் இருக்கும்.ஜாதகருக்கு சஞ்சலமான சஞ்சலம் தேவையில்லாத எண்ணங்கள் , சிந்தனைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை இந்த காலகட்டங்களில் கொடுகும். மூல நட்சத்திரம் மூன்றாவது பாதம் என்பது கேதுடைய நட்சத்திரம். கேதுக்கு அதிபத்திய வீடுகள் கிடையாது. ராகு கேது வரும் பொழுது நிற்கக் கூடிய இடத்தை பலமாக எடுத்துக்கனும். மூல நட்சத்திரத்தின் அதிபதி கேது.கேது 7ஆம் இடத்தில் உள்ளார் .கேதுவுக்கும் குருவுக்கும் உள்ள சம்பந்தம் எப்படி இருக்கும் .கேது 7ல் நல்லா இருக்காரு, ஆனால் லக்னத்துக்கு அதிபதியாக குரு 11-ஆம் இடத்தில் உள்ளார்.கேது உடைய நட்சத்திரம் வர காலகட்டங்களில் 4 வருடம் ஐந்துமாத காலங்கள் எப்படி இருக்கும்னா,கேது 7ம் இடத்தில் உள்ளதால் மனைவி ரீதியான சில பிரச்சனைகள் ஏற்படுத்தக்கூடிய காலகட்டமாக இருக்கும் .ஆனால் ஜாதகருக்கு பிரச்சனை இல்லை. மூல நட்சத்திரம் 3ஆம் பாதம் லக்னத்திற்கு 7-ம் வீட்டு லக்னத்தை தொடும் பொழுது 1,4,7 சம்பந்தப்படும்போது எதிர்பார்த்த யோகங்கள் தரும்.
7-ம் இடத்தை லக்னப்புள்ளி தொடக் கூடியக்காலகட்டத்தில் இவருக்கு சுப பலன் களுக்கான வாய்ப்புகள் உள்ளது .இடம், வீடு ,வண்டி ,வாகனங்கள் வாங்கலாம்பாக்கியத்தில் குரு இருப்பதால் எதிர்காலத்தில் லாபமாக நினைக்கக்கூடிய எந்த விஷயங்களாக இருந்தாலும் மூல நட்சத்திரம் மூன்றாவது புள்ளி காலகட்டங்களில் மட்டும் இதை பயன்படுத்தலாம்.
அடுத்து வரக்கூடிய 4-வது புள்ளிஅட்டம ஸ்தானத்தில் வரும்.லக்னத்திற்கு எட்டாம் இடத்தை தொட்டுச்செல்லும் எட்டாம் அதிபதி கேது சந்திரன் பார்வை வரும் அப்பொழுது பிரச்சனைகள் மன சங்கடங்கள் இன்னும் அதிகமான சூழ்நிலை உருவாகும் மன உளைச்சல் அதிகமாகும்.
மூல நட்சத்திரம் 4 – வது பாதம் கவனமாக கடக்கக்கூடிய காலகட்டம். லக்க ததை இயக்கக்கூடிய 10வருஷத்தின்அதிபதி பலமாக இருக்கும். இதில் உள் சூட்சமமாக இயங்கக்கூடிய கேது ,சுக்கிரன், சூரியன் இந்த பத்து வருசத்தை எப்படி அனுபவிக்க போகிறார் என்பதை குறியிட்டு காமிக்கும். கேது ஓரளவுக்கு பரவாயில்லை. சுக்கிரன் 6-ம் 11 ம் இடத்திற்கு அதிபதியாகி அவர் 12ம் இடத்துல் உள்ளார்.இது கடன்பட கூடிய காலமாக அமையும். பூராட நட்சத்திரம் லக்கன புள்ளி வரக்கூடிய காலகட்டத்தில் இவருடைய ஜாதகத்தில் 6, 11 க்கு அதிபதி சுக்கிரன் போய் 12 ம் வீட்டில் உள்ளார்.12-ல் உள்ளதுசிறப்பு, அதற்காக கடன் வாங்கி லாபத்தை அடைவதற்கு விரயம் பண்ணுவதற்கான சூழ்நிலை உருவாகும். ஜாதகர் செலவு பண்ணக்கூடியசூழ்நிலையை கொடுக்கும்.

 

01.02.2017இந்த நாள் இனிய நாள்.

 

 

இந்த நாள் இனிய நாள்.
01.02.2017
புதன் கிழமை
நட்சத்திர பலன்கள் :
அஸ்வினி நட்சத்திரம் – குடும்ப உறுப்பினர்களின் விவாதம் வேண்டாம்.
பரணி – பணவரவு, வாகனம், வீடு சார்ந்த பேச்சுவார்த்தை அமையும், மகிழ்ச்சி, கோவில் வழிபாடு, குலதெய்வ வழிபாடு.
கார்த்திகை – வீண் வார்த்தையால் விபரிதம், கணவன் மனைவி இருவரும் பொறுமையாக இருத்தல், விரயம் , கவனம் தேவை.
ரோகிணி – லாபம்.
மிருகசீரிடம் – தொழில் முன்னேற்றம் உண்டு, லாபமும் உண்டு.
திருவாதிரை – கணவன் மனைவி வீண் விவாதம் வேண்டாம்.
புனர்பூசம் – பொறுமை மிகவும் அவசியம், அவசரபட வேண்டாம்.
பூசம் – திடிர் அதிர்ஷ்மான செய்தி உண்டு.
ஆயில்யம் – கடன், உடல்நிலை கவனம், விரயம்.
மகம் – மகிழ்ச்சி.
பூரம் – புதிய வாய்ப்பு பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்துதல்.
உத்திரம் – மறக்க முடியாத நாள், கவனம் .
அஸ்தம் – சொந்த தொழில் மேன்மை உண்டு, கடன் வாங்குதல், விரயமான காலம் கவனம் .
சித்திரை – மகிழ்ச்சி, லாபம்.
சுவாதி – பதவி, புகழ், வெற்றி மகிழ்ச்சி.
விசாகம் – ஆன்மிக பயணம், மக்கள் தொடர்பு விஷயங்களிள் பங்களிப்பு.
அனுசம் – தன வரவு .
கேட்டை – வாகனத்தில் கவனம் .
மூலம் – பயணம், முன்னோர்கள் வழிபாடு, அரசு தொடர்பான நபரை சந்தித்தல், லாபம்.
பூராடம் – மன உளைச்சல்.
உத்திராடம் – பணம் சார்ந்த பிரச்சினை தலையிட வேண்டாம், அருகில் உள்ள ஐயனார் கோவில் வழிபடவும்.
திருவோணம் – எதோ பயம் வாட்டி வதைக்கும்.
அவிட்டம் – வாகனத்தில் கவனம், அலைச்சல், குழம்ப்பமான மனநிலை ஒரு முடிவும் எடுக்க முடியாது.
சதயம் – வெற்றி.
பூராட்டாதி – அரசு வகையில் லாபம், மன உளைச்சல்
உத்திரட்டாதி – தொழில் மேம்படும்.
ரேவதி – குலத்தொழில், சொந்த தொழில் மேம்பாடு ,பயணம், புதிய நபரை சந்தித்தல் .
நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

                                                       
                                             353a3a4
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:
1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள்.
2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.
3. பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.
4. விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள்.
5. பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள்.
6. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள்.
7. விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள்.
8. கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.
9. மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள்.
10. கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள்.

ருத்ராட்சமும் ஜோதிடமும்

ருத்ராட்சமும் ஜோதிடமும்

  1. அஸ்வினி – ஒன்பது முகம்.images(2)
  2. பரணி – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
  3. கார்த்திகை – பனிரெண்டு முகம்.
  4. ரோஹிணி – இரண்டு முகம்.
  5. மிருகசீரிஷம் – மூன்று முகம்.
  6. திருவாதிரை – எட்டு முகம்.
  7. புனர்பூசம் – ஐந்து முகம்.
  8. பூசம் – ஏழு முகம்.
  9. ஆயில்யம் – நான்கு முகம்.
  10. மகம் – ஒன்பது முகம்.
  11. பூரம் – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
  12. உத்திரம் – பனிரெண்டு முகம்
  13. ஹஸ்தம் – இரண்டு முகம்.
  14. சித்திரை – மூன்று முகம்.
  15. ஸ்வாதி – எட்டு முகம்.
  16. விசாகம் – ஐந்து முகம்.
  17. அனுஷம் – ஏழு முகம்.
  18. கேட்டை – நான்கு முகம்.
  19. மூலம் – ஒன்பது முகம்.
  20. பூராடம் – ஆறுமுகம். பதிமூன்று முகம்.
  21. உத்திராடம் – பனிரெண்டு முகம்.
  22. திருவோணம் – இரண்டு முகம்.
  23. அவிட்டம் – மூன்று முகம்.
  24. சதயம் – எட்டு முகம்.
  25. பூரட்டாதி – ஐந்து முகம்.
  26. உத்திரட்டாதி – ஏழு முகம்.
  27. ரேவதி – நான்கு முகம்.