இந்த காலத்து ஆண்கள் கிழிந்த ஆடையை அணிகிறார்கள்.கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கை முறையில் நிறைய கஷ்டப்படுவார்கள்.

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
என்னிடம் ஒரு நண்பர் கேட்ட கேள்வி:
இந்த காலத்து ஆண்கள் கிழிந்த ஆடையை அணிகிறார்கள். இதற்கு என்ன கிரகங்கள் வருது.

என்னை பொறுத்தவரையில் இதற்காக பொருள் விரயம் செய்கிறோம்.அதிகமாக செலவு செய்து அந்த ஆடையை அணியும் பொழுது அவர்களுக்கு சுக்கிரனுடைய தன்மை அதாவது பணத்துடைய மோகம் பணத்துடைய ஆதிக்கம் அவர்களுக்கு குறைவாக இருக்கும்.

கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கை முறையில் நிறைய கஷ்டப்படுவார்கள்.
கலாச்சாரம் மாறிவிட்டது என்று நினைத்து நீங்கள் அந்த ஆடையை அணிந்தால் கண்டிப்பாக சுக்கிரனுடைய அமைப்பு பாதிக்கப்படும்.

சுக்கிரன், சனி சம்பந்தப்பட்ட விஷயங்கள் பாதிக்கப்படும் பொழுது கண்டிப்பாக மனம் சார்ந்த விஷயங்கள், உடல் சார்ந்த விஷயங்கள் கண்டிப்பாக ஜாதகர் சந்திக்கக்கூடும்.
இந்த மாதிரி ஆடைகளை அணிவதால் கண்டிப்பாக பிற்காலத்தில் அவர்கள் நிறைய கஷ்டப்படுவார்கள்.

உடைகள் எப்படி தேர்ந்தெடுக்கிறோமோ அதேபோல்தான் வண்ணங்களும், வண்ணங்களை பொறுத்து தான் உடல் இயங்குகிறது.

இந்த உலகத்தில் இரண்டு விஷயங்கள்தான் 1.வெளிச்சம்
இன்னொன்று நம் காதால் கேட்கக்கூடிய 2.சத்தம்
வெளிச்சமும், சத்தமும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் முக்கியமானவை. நீங்கள் போடக்கூடிய சட்டைகள்,அணிகலன்கள் வண்ணங்கள்,நம் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாகும்.
மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி ,வணக்கம்.

அட்சய லக்ன பத்ததியில் பிரசன்னம் எப்படி பார்பது?

அனைவருக்கும் வணக்கம்,

அட்சய லக்ன பத்ததியில் பிரசன்னம் எப்படி பார்பது?

வந்திருக்கவங்க கேள்வி எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும்

உதாரணமாக சித்திரை, வைகாசி, ஆனி ,ஆடி மாதம் சூரியன் எங்கே இருக்கும்?

பிரசன்ன லக்னம் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் லக்னம் மாரும், உதாரணமாக மென்பொருளில் 1′ முதல்.

120 குள் எதாவது ஒரு எண்,

உதாரணத்திற்கு அவர் சொன்ன எண் 46,  வயது, 46 நம்பர் இரண்டையும் எடுத்துக்கொள்ளலாம். 46 வயது எடுத்தேன். ஒரு வயது 3′ நகரும். 12 ராசி கட்டங்களின் மொத்த அளவு 360′

ஒரு மனிதனுடைய ஆயுள் காலங்கள் தசா வரிசைகள் 120.

360/120 அதாவது ஒரு வயதுக்கு நம்முடைய உடல் 3′ பெருக்கம் அடைகிறது.

இதுதான் நம்முடைய அட்சய லக்னம்.

46 x 3 = 138′

அவருடைய லக்னம் நகர்ந்திருக்கிறது. நாம் இரண்டு முறையில் பிரசன்னம் பார்க்கிறோம்.

போன ஜென்மத்தில் நம்முடைய உடல் அழிந்த பகுதியிலிருந்து இப்பொழுது ஆரம்பிக்கப் படுவதை லக்னம் என்கிறோம்.

சூரியனுடைய ஆத்ம கிரகம் எங்கிருந்து அழிக்கப்பட்டதோ அங்கிருந்துதான் தொடங்கும். ரிஷப லக்னத்தில் 8′ மீதம் இருக்கும்.ஒரு நட்சத்திர பாதத்தில் 3, 20 பாகை  6,40 பாகை லக்னப்புள்ளி செல்லும்.

கார்த்திகை 4ம் பாதம் லக்கனத்திலிருந்து ALP லக்னம் என்ன என்பது தான் கேள்வி, 6 என்றால் கடன், வம்பு, வழக்கு, நோய் நொடி சம்பந்தப்பட்டது உருவாகும். சூரியன் பலமான நட்சத்திரம் என்பதால் 1, 2, 3, 4, வீடு, இடம், பொருள், சொத்து வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்டது. சூரியன்எங்கு உள்ளதோ அங்குதான் பிரச்சனை உண்டாகும். ALPலக்னத்திற்கு சூரியன் 3-ம் இடத்தில் உள்ளது.

3ம் இடம் சகோதரம், அதாவது 3, 8,11 சம்பந்தப்படும் பொழுது சகோதர வழியில் இதன் பிரச்சனை உண்டாகும். ஒரு பங்கு பிரித்தால் பிரச்சனை தீரும். கார்த்திகை முடிந்து ரோகிணி நட்சத்திரம் வந்தால் கண்டிப்பாக மாற்றம் உருவாகும். 1 டிகிரி 4 மாதம். 8 மாதம் பிரச்சனையாக இருக்கும். வீடு வாங்கினால் விரயம் ஏற்படும். விற்றாலும் பணம் சரியாக கிடைக்காது. கேட்கக் கூடிய நேரத்தில் கேள்விக்கான பதில் கொடுக்கனும். இப்படி சில விஷயங்களை

அட்சய லக்ன பத்ததியில் ஆய்வு செய்கிறோம்.

பிரசன்னம் முறையில் ஆய்வு செய்கிறோம்.

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் அட்சய லக்ன

பத்ததியின் மென்பொருளில் இந்த விஷயங்களை, கூட்டி உள்ளோம். மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம். நன்றி, வணக்கம்.

கட்டுரை தொடர்பான நிகழ்வில் https://alpastrology.com/blog/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.

https://youtu.be/tQwoa9hmZQo

 

01.02.2017இந்த நாள் இனிய நாள்.

 

 

இந்த நாள் இனிய நாள்.
01.02.2017
புதன் கிழமை
நட்சத்திர பலன்கள் :
அஸ்வினி நட்சத்திரம் – குடும்ப உறுப்பினர்களின் விவாதம் வேண்டாம்.
பரணி – பணவரவு, வாகனம், வீடு சார்ந்த பேச்சுவார்த்தை அமையும், மகிழ்ச்சி, கோவில் வழிபாடு, குலதெய்வ வழிபாடு.
கார்த்திகை – வீண் வார்த்தையால் விபரிதம், கணவன் மனைவி இருவரும் பொறுமையாக இருத்தல், விரயம் , கவனம் தேவை.
ரோகிணி – லாபம்.
மிருகசீரிடம் – தொழில் முன்னேற்றம் உண்டு, லாபமும் உண்டு.
திருவாதிரை – கணவன் மனைவி வீண் விவாதம் வேண்டாம்.
புனர்பூசம் – பொறுமை மிகவும் அவசியம், அவசரபட வேண்டாம்.
பூசம் – திடிர் அதிர்ஷ்மான செய்தி உண்டு.
ஆயில்யம் – கடன், உடல்நிலை கவனம், விரயம்.
மகம் – மகிழ்ச்சி.
பூரம் – புதிய வாய்ப்பு பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்துதல்.
உத்திரம் – மறக்க முடியாத நாள், கவனம் .
அஸ்தம் – சொந்த தொழில் மேன்மை உண்டு, கடன் வாங்குதல், விரயமான காலம் கவனம் .
சித்திரை – மகிழ்ச்சி, லாபம்.
சுவாதி – பதவி, புகழ், வெற்றி மகிழ்ச்சி.
விசாகம் – ஆன்மிக பயணம், மக்கள் தொடர்பு விஷயங்களிள் பங்களிப்பு.
அனுசம் – தன வரவு .
கேட்டை – வாகனத்தில் கவனம் .
மூலம் – பயணம், முன்னோர்கள் வழிபாடு, அரசு தொடர்பான நபரை சந்தித்தல், லாபம்.
பூராடம் – மன உளைச்சல்.
உத்திராடம் – பணம் சார்ந்த பிரச்சினை தலையிட வேண்டாம், அருகில் உள்ள ஐயனார் கோவில் வழிபடவும்.
திருவோணம் – எதோ பயம் வாட்டி வதைக்கும்.
அவிட்டம் – வாகனத்தில் கவனம், அலைச்சல், குழம்ப்பமான மனநிலை ஒரு முடிவும் எடுக்க முடியாது.
சதயம் – வெற்றி.
பூராட்டாதி – அரசு வகையில் லாபம், மன உளைச்சல்
உத்திரட்டாதி – தொழில் மேம்படும்.
ரேவதி – குலத்தொழில், சொந்த தொழில் மேம்பாடு ,பயணம், புதிய நபரை சந்தித்தல் .
நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.

இந்த நாள் இனிய நாள். 11.01.2017 புதன் கிழமை

இந்த நாள் இனிய நாள்.
11.01.2017
புதன் கிழமை

நட்சத்திர பலன்கள் :

அஸ்வினி நட்சத்திரம் – உணவுகளில் கவனம் தேவை, அலைச்சல், புதிய இடமாற்றம் அமையும், இடம், வீடு புதியதாக அமையும்.
பரணி – எதிர்பாராத பணம் வரும், உஷ்ணம் உடல் நிலை கவனம் , பெண் போகம்.
கார்த்திகை – இன்றைய நாள் உங்களுக்கு மறக்க முடியாத நாள். வெப்பம்சார்ந்த பொருளில் கவனம், ஊர் சுற்றுதல், துணிச்சலான செயலை முடித்தல்.
ரோகிணி – உடன் பிறப்புகளிடம் வார்த்தைகளில் கவனம் .
மிருகசீரிடம் – மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை – வேலை செய்யும் இடத்தில் கவனம் விண் விவாதங்களை தவிர்த்தல்.
புனர்பூசம் – காரிய தடை.
பூசம் – மன குழப்பம்.
ஆயில்யம் – நினைத்ததை முடிப்பது எல்லாத் திலும் வெற்றி .
மகம் – பண பரவு, பூமி சேரும்.
பூரம் – குறுக்குவழி தேட வேண்டாம், பெண் நட்பால் இலாபம் .
உத்திரம் – அரசு வகையில் இலாபம் , கோபத்தை குறைத்து கொள்ளவும்.
அஸ்தம் – இறுதியான முடிவு எடுக்க வேண்டாம். சற்று பொறுமையுடன் இருக்க வேண்டிய காலம் .
சித்திரை – முன்று நபர்களை சேர்ந்து முடிவு எடுத்தல்.
சுவாதி – நெடுந்தூர பயணத்தில் கவனம், வேலை ஆட்களிலினால் பிரச்சினை வராமல் பார்த்து கொள்ளவும், பண வரவு .
விசாகம் – மன குழப்பம், எதிர்பார்த்த காரியம் தடை.
அனுசம் – கடன், தொழில் முன்னேற்திற்காக பேச்சுவார்த்தை.
கேட்டை – திடிர் அதிர்ஷ்டம்.
மூலம் _ பயணம், பண வரவு குடுபத்தாரல் மகிழ்ச்சி.
பூராடம் – சூதாட்டம், கேளிக்கை, உல்லாச பயணம், விரும்பியபொருள் வாங்குதல்.
உத்திராடம் – வாகனத்தில் கவனம் .
திருவோணம் – நிலம், பொன், பொருள் சேர்க்கை .சுப செய்தி.
அவிட்டம் – உற்சாகம், தன்னம்பிக்கை மிகுந்து செயல்படல்.
சதயம் – உடல் நிலைக்கு மருந்து சாப்பிடுதல்.
பூராட்டாதி – வீண் விவாதம் தவிர்த்தல்.
உத்திரட்டாதி – வயிற்று சார்ந்த பிரச்சினை, கடன் வாங்குதல் ( தொழில் முன்னேற்றம் )
ரேவதி – சுகம், பயணம்.
நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.

Image may contain: indoor