கிருத்திகை நட்சத்திரம்

ஓம் நமசிவாய …குரு வாழ்க… குருவே துணை..

….. கிருத்திகை நட்சத்திரம்….

…. வார்த்தைகள் உடையன ஆகும்…
… வழக்கு அறிந்து உரைக்க வல்லான்….
… கூத்து மனத்தன் ஆகும்…
… குணமுடைகிளையனாகும்…
… போர்த்தொழில் வல்லதாகும்.. புகழுடன்
பொருளும் தேடும்…
… கார்த்திகை நாளில் தோன்றும் கருத்துடை காளை தானே….

…..27.. நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் கிருத்திகை…

… இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல வாக்கு வன்மை உடையவர்கள்…

…. வழக்குகளை மிகவும் தெளிவாக பேசி தீர்த்து வைக்கும் ஆற்றல் படைத்தவர்கள்…

… நடனம் போன்ற கலைகளில் நாட்டம் உள்ளவர்கள்…

…. நல்ல குணம் உள்ளவர்கள்…

… உறவினரிடம் சுமூகமாக நடந்து கொள்ளக் கூடியவர்கள்…

… போர்த் தொழில் புரிவதில் வல்லவர்கள்…

… ராணுவம் …போலீஸ் …பணியில் இவர்கள் தொழில் அமைந்து இருக்கலாம்…

…. பொன் பொருள் இவற்றுடன் புகழையும் தேடி உயர்ந்து வாழ்வார்கள்…

…. தெளிந்த கருத்து சொல்லும் பண்புடையவர்கள்….

…. மேலே உள்ள செய்யுளுக்கு இதுதான் பொருள்….

… மரிச கோத்திரத்தைச் சேர்ந்த பெண் நட்சத்திரம் கிருத்திகை…

… ஆகாயத்தில் கத்தி அல்லது வாள் போன்ற உருவம் உடையது…

… விருட்சங்களில் இது அத்திமரம் ஆகவும்..

… மிருகங்களில் பெண் ஆடாகவும்…

…. திசைகளில் தெற்காகவும்… விளங்குகிறது…

.. மேஷ ராசி யையும் ரிஷப ராசியை யும் இணைக்கும் பாதையாக கிருத்திகை நட்சத்திரம் விளங்குகின்றது….

… மேஷ ராசியில் முதல் பாதமும்…

… ரிஷப ராசியில் மீதி 3 பாதங்களும் பரவி உள்ளது….

…. நட்சத்திர அதிபதி சூரிய பகவான்…

…. கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி பகவான்…

…. வழிபட வேண்டிய தெய்வம் சுப்பிரமணிய பெருமான்….

… கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம் ….

.,.நாகப்பட்டினம் நாகநாதர் கோவில்..

… கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த நாயன்மார்கள்…
…. இடங்கழியார்…
… கணம்புல்லார்…
…. புகழ்ச்சோழர் மூர்த்தியார்….

… கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஆழ்வார்கள்….
… உய்யக்கொண்டார் நம்பிள்ளை…
…. திருமங்கையாழ்வார்…

…. கடன் தொல்லைகளில் இருந்து விடுபட நினைப்பவர்கள்…

…. தொடர்ந்து 6 மாத காலம் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் விரதமிருந்து…

… முருகப் பெருமானின் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதன் மூலம் ..

…. கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்…

… ஆண்கள் வெள்ளிக்கிழமையும்,, கிருத்திகை நட்சத்திரமும் _ இணைந்து வரும் நாட்களில் விரதம் இருந்தால்…!!!

… கணவன் மனைவி உறவு பலப்படும்…

…. கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய விருட்சம் அத்திமரம்…

… அத்தி மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட திருக்கோவில்கள்….

… கடலூர் …காட்டுமன்னார்குடி..
… பதஞ்சலி ஈஸ்வரர்…

… தஞ்சாவூர் ..சேங்கனூர்…
…. சத்தியகிரீஸ்வரர்….

….. திண்டுக்கல்… கீரனூர்…
…… சிவலோகநாதர்….

….. தூத்துக்குடி… திருச்செந்தூர்…
….. முருகப்பெருமான்…

…காஞ்சிபுரம்… வரதராஜ பெருமாள் கோவில்…

…. சென்னை…. திருவொற்றியூர் …
….வன்மீக நாதர்…

…. நாகப்பட்டினம் …திருச்செங்காட்டாங்குடி..
……. ஆத்தி வனநாதர்..

… திருவாரூர் ….திருமீயச்சூர்…
…. சகலபுவனேஸ்வரர்…

…. வருடத்திற்கு ஒருமுறையாவது …

…இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு
… ஸ்தலத்திற்கு சென்று…

… கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய விருட்சமான அத்தி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வந்தால்…

…. நாம் ஊற்றும் தண்ணீர் வேருக்கு பட்டதும்….

….. நம்முடைய வாழ்க்கை தரம் துளிர்க்க ஆரம்பிக்கும்…..

….. தென்னாடுடைய சிவனே போற்றி…
.., என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி…

…( கீழே உள்ள படத்தில் அடியேன் உடன் இருப்பவர் என் வாழ்க்கை துணைவி..

.. 35 ஆண்டு திருமண வாழ்வில் ஒரு சிறு கீறல் கூட விழாமல் வாழ்க்கையைச் செவ்வனே நடத்திச் சென்று என்னை ஒரு குழந்தை போல பாதுகாத்து வரும் என் மனைவியாகிய தாய்…)

… ( தாய்க்குப்பின் தாரம் என்ற பழமொழிக்கு உதாரணமாக விளங்கியவர்..)..

…. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது..

… இந்தப் பிறவியில் எனக்கு வாழ்க்கை துணைவியாக அவரை அமைத்துக் கொடுத்த..

… எம்பெருமான் சிவபெருமான் அவர்களின் கருணையே கருணை…

… சிவனை நம்பியவர்கள் தோற்றதில்லை…

… திருவாசகத்தை படித்தவர்கள் கெட்டதில்லை…

.. குறைவிலா நிறைவே, கோதிலா அமுதே..
.. ஈறிலா கொழுஞ்சுடர் குன்றே…
.. மறையுமாய் மறையின் பொருளுமாய்
வந்தென்..
,.. மனத்திடை மன்னிய மன்னே…
.. சிறை பெறா நீர்போல் சிந்தை வாய்ப்
பாயுந் திருப்பெருந்துறை சிவனே..
.. இறைவனே நீயென் உடலிடங்
.. கொண்டாய்
. இனி உன்னை என்னிரக்கேனே..
..( திருவாசகம்..).. திருச்சிற்றம்பலம்..

.. ஜோதிடம் அடிப்படை …உயர்நிலைக் கல்வி கற்றுத்தரப்படும்…

..M.S. செல்வராஜ்…D A.B.A..Astro..
… நல்லூர்… திருப்பூர்….
… மொபைல் எண்…
..9965742366..
…9360354122…

01.02.2017இந்த நாள் இனிய நாள்.

 

 

இந்த நாள் இனிய நாள்.
01.02.2017
புதன் கிழமை
நட்சத்திர பலன்கள் :
அஸ்வினி நட்சத்திரம் – குடும்ப உறுப்பினர்களின் விவாதம் வேண்டாம்.
பரணி – பணவரவு, வாகனம், வீடு சார்ந்த பேச்சுவார்த்தை அமையும், மகிழ்ச்சி, கோவில் வழிபாடு, குலதெய்வ வழிபாடு.
கார்த்திகை – வீண் வார்த்தையால் விபரிதம், கணவன் மனைவி இருவரும் பொறுமையாக இருத்தல், விரயம் , கவனம் தேவை.
ரோகிணி – லாபம்.
மிருகசீரிடம் – தொழில் முன்னேற்றம் உண்டு, லாபமும் உண்டு.
திருவாதிரை – கணவன் மனைவி வீண் விவாதம் வேண்டாம்.
புனர்பூசம் – பொறுமை மிகவும் அவசியம், அவசரபட வேண்டாம்.
பூசம் – திடிர் அதிர்ஷ்மான செய்தி உண்டு.
ஆயில்யம் – கடன், உடல்நிலை கவனம், விரயம்.
மகம் – மகிழ்ச்சி.
பூரம் – புதிய வாய்ப்பு பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்துதல்.
உத்திரம் – மறக்க முடியாத நாள், கவனம் .
அஸ்தம் – சொந்த தொழில் மேன்மை உண்டு, கடன் வாங்குதல், விரயமான காலம் கவனம் .
சித்திரை – மகிழ்ச்சி, லாபம்.
சுவாதி – பதவி, புகழ், வெற்றி மகிழ்ச்சி.
விசாகம் – ஆன்மிக பயணம், மக்கள் தொடர்பு விஷயங்களிள் பங்களிப்பு.
அனுசம் – தன வரவு .
கேட்டை – வாகனத்தில் கவனம் .
மூலம் – பயணம், முன்னோர்கள் வழிபாடு, அரசு தொடர்பான நபரை சந்தித்தல், லாபம்.
பூராடம் – மன உளைச்சல்.
உத்திராடம் – பணம் சார்ந்த பிரச்சினை தலையிட வேண்டாம், அருகில் உள்ள ஐயனார் கோவில் வழிபடவும்.
திருவோணம் – எதோ பயம் வாட்டி வதைக்கும்.
அவிட்டம் – வாகனத்தில் கவனம், அலைச்சல், குழம்ப்பமான மனநிலை ஒரு முடிவும் எடுக்க முடியாது.
சதயம் – வெற்றி.
பூராட்டாதி – அரசு வகையில் லாபம், மன உளைச்சல்
உத்திரட்டாதி – தொழில் மேம்படும்.
ரேவதி – குலத்தொழில், சொந்த தொழில் மேம்பாடு ,பயணம், புதிய நபரை சந்தித்தல் .
நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.

மன்மத வருட தமிழ் புத்தாண்டு

02-1425269516-manmatha-varudam11

 

அனைவருக்கும் மன்மத வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்…
நமது தமிழ் வருட பஞ்சாங்கங்களில் முதல் பக்கத்தில் அந்த வருடத்தின் நவ நாயகர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும், இதனை எவ்வாறு கணிதம் செய்கின்றனர் என்பது பெரும்பாலும் பஞ்சாங்க கணிதர்களுக்கும், பரம்பரை ஜோதிடர்களுக்கும் மட்டும் தெரிந்திருக்கும் விடயம்

மன்மத வருட- நவ நாயகர்கள்

இராஜா – சனி
மந்திரி – செவ்வாய்
சேனாதிபதி – சந்திரன்
அர்க்காதிபதி – சந்திரன்
ஸஸ்யாதிபதி – குரு
இரஸாதிபதி – சனி
தான்யாதிபதி – புதன்
மேகாதிபதி – சந்திரன்
நீரஸாதிபதி – குரு

இது போல ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் இராஜா,மந்திரி,சேனாதிபதி, அர்க்காதிபதி, ஸஸ்யாதிபதி, இரஸாதிபதி, தான்யாதிபதி, மேகாதிபதி, நீரஸாதிபதி ஆக சில கிரகங்கள் வருவார்கள் இவைகளை எவ்வாறு கணிதம் செய்கின்றனர் என்பதனை பார்ப்போம்.

1.ராஜா
ஒருவருடத்தின் கடைசி மாதமான பங்குனி மாதம் வளர்பிறை பிரதமை திதி வரும் கிழமையின் அதிபதி , அடுத்த தமிழ் வருடத்தின் இராஜா ஆவார்.

ஜய வருஷம் பங்குனி மாதம் வளர்பிறை பிரதமை சனிக்கிழமை வருவதால் சனி பகவான் அடுத்து வரும் மன்மத வருஷத்தின் ராஜா ஆவார்.

2.மந்திரி
தமிழ் வருடத்தின் முதல் நாள் ( சித்திரை -1 ) என்ன கிழமையில் வருகிறது அதன் அதிபதி அந்த வருடத்தின் மந்திரி ஆவார்.

மன்மத வருஷம் சித்திரை 1ம் நாள் செவ்வாய்க்கிழமை வருவதால் செவ்வாய் இந்த வருஷ மந்திரி ஆவார்.

3.சேனாதிபதி
சிம்ம ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி சேனாதிபதி அந்த வருடத்தின் ஆவார்.

மன்மத வருஷம் ஆடி மாதம் 32ம் நாள் 16 நாழிகை, 02 வினாடிக்கு சூரியன் மகம் 1ம் பாதத்தில் சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று திங்கள் கிழமை ஆதலால் மன்மத வருஷ சேனாதிபதி சந்திரன் ஆவார்.

4.அர்க்காதிபதி
மிதுன ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி அந்த வருடத்தின் அர்க்காதிபதி ஆவார்.

மன்மத வருஷம் வைகாசி மாதம் 32ம் நாள் 28 நாழிகை, 23 வினாடிக்கு சூரியன் மிருகசீரிசம் 3ம் பாதத்தில் மிதுன ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று திங்கள் கிழமை ஆதலால் மன்மத வருஷ அர்க்காதிபதி சந்திரன் ஆவார்.

5.ஸஸ்யாதிபதி
கடக ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி அந்த வருடத்தின் ஸஸ்யாதிபதி ஆவார்.

மன்மத வருஷம் ஆனி மாதம் 31ம் நாள் 15 நாழிகை, 10 வினாடிக்கு சூரியன் புனர்பூசம் 4ம் பாதத்தில் கடக ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று வியாழக்கிழமை ஆதலால் மன்மத வருஷ ஸஸ்யாதிபதி குரு ஆவார்.

6.இரஸாதிபதி
துலாம் ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி அந்த வருடத்தின் இரஸாதிபதி ஆவார்.

மன்மத வருஷம் புரட்டாசி மாதம் 30ம் நாள் 45 நாழிகை, 29 வினாடிக்கு சூரியன் சித்திரை 3ம் பாதத்தில் துலாம் ராசியில் பிரவேசிக்கிறார் .
அன்று சனிக்கிழமை ஆதலால் மன்மத வருஷ இரஸாதிபதி சனி பகவான் ஆவார்.

7.தான்யாதிபதி
தனுசு ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி அந்த வருடத்தின் தான்யாதிபதி ஆவார்.

மன்மத வருஷம் கார்த்திகை மாதம் 30ம் நாள் 20 நாழிகை, 29 வினாடிக்கு சூரியன் மூலம் 1ம் பாதத்தில் தனுசு ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று புதன்கிழமை ஆதலால் மன்மத வருஷ தான்யாதிபதி புதன் ஆவார்.

8. மேகாதிபதி
திருவாதிரை முதல் பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி அந்த வருடத்தின் மேகாதிபதி ஆவார்.

மன்மத வருஷம் ஆனி மாதம் 7ம் நாள் திங்கள் கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிப்பதால் , மன்மத வருஷ மேகாதிபதி சந்திரன் ஆவார்.

9. நீரஸாதிபதி
மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் (கிழமை) நாளின் அதிபதி அந்த வருடத்தின் நீரஸாதிபதி ஆவார்.

மன்மத வருஷம் மார்கழி மாதம் 29ம் நாள் 45 நாழிகை, 41 வினாடிக்கு சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறார் . அன்று வியாழக்கிழமை ஆதலால் மன்மத வருஷ நீரஸாதிபதி குரு ஆவார்.

12 ராசிகளின் ஆதாய விரய கணிதம் எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்பது இனி வரும் பதிவுகளில்

நன்றி
அஸ்ட்ரோ கண்ணன்