If Astrology

Spread the love

ஜோதிடம் என்றால் என்ன? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.

சரி! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.

1. சூரியன்
2. சந்திரன்
3. செவ்வாய்
4. புதன்
5. குரு
6. சுக்கிரன்
7. சனி
8. ராகு
9. கேது

இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் ‘டெலஸ்கோப்’ உதவியுடன்தான் பார்க்க இயலும்.

அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம்? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?

சரி! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றது.

1. அஸ்வினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகினி
5. மிருகசீரிஷம்
6. திருவாதரை
7. புனர்ப்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. ஹஸ்தம்
14. சித்திரை
15. ஸ்வாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி

நாம் என்ன தெரிந்து கொண்டோம்? ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *