​திருவிளக்கு பூஜை

Spread the love

​திருவிளக்கு பூஜை 

..

எந்தப் பூஜை ஆரம்பித்தாலும் அதில் முதலில் குத்து விளக்கு இடம் பெறும். சுபகாரியங்களில் குத்துவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.. குத்து விளக்கு இல்லாதவர் காமாட்சி விளக்காவது வைத்து ஏற்றுவது நல்லது..  

..

தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற 3 சக்திகளும் உள்ளன. தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. வீட்டில் மங்களங்கள் உண்டாகி நிலைத்து நிற்கும்.. 

..

விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.

ஒரு முகமும் ஏற்றி வழிபடுவது-மத்திய பலன்

இரண்டு முகம் ஏற்றி வழிபடுவது-குடும்ப ஒற்றுமை பெருகும்

மூன்று முகம் ஏற்றி வழிபடுவது-புத்திர சுகம் தரும்

நான்கு முகம் ஏற்றி வழிபடுவது-பசு, பூமி இவற்றைத் தரும்

ஐந்து முகம் ஏற்றி வழிபடுவது-செல்வத்தைப் பெருக்கும்.

தீபம் ஏற்ற தூய்மையான அகல் விளக்கு புதியது தான் பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோயில்களில் முறுபடியும் ஏற்றக்கூடாது. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

..

அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம், ஏற்றி வழிபட வேண்டும். துர்க்கை அம்மனுக்கு மட்டும் எலுமிச்சை பழ விளக்கு 2 ஏற்றவேண்டும். தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு 2 அம்மனை தீபம் நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

..

சர்வ மங்கள மாங்கல்யே 

சிவே ஸர்வார்த்த சாதிகே .. 

சரண்யே திரயம்பிகே கௌரி 

நாராயணி நமோஸ்துதே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *