அருள் சார்ந்த மூட்டை என்பது நம்முடைய மனம்

Spread the love

அன்பே சிவம், அன்பே ஆனந்தம் ,

அன்பே வாழ்க்கை,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

இன்றைக்கு நிறைய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த நிகழ் காலத்தில் நிறைய பேர் தன்னுடைய பயணம் உடைமைகளை தூக்க முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டு வந்தனர்.இது பொருள் சார்ந்த மூட்டை, பொருள் சார்ந்த மூட்டையை தூக்கிக் கொண்டு நம்மால் ரொம்ப தூரம் பயணிக்க முடியவில்லை.

அருள் சார்ந்த மூட்டை என்பது நம்முடைய மனம்.

நம்முடைய வாழ்க்கையில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நம்முடைய உயிர் பிரிந்து செல்லும் பொழுது,எண்ணங்களும் நிறைவேறாத ஆசைகளும் தூக்கிக் கொண்டு இன்னொரு லோகத்திற்கு செல்லும் பொழுது மிகப்பெரிய அளவில் கஷ்டப்படுவார்கள்.

சில விஷயங்கள் வேணும், வேண்டாம், நம்புகிறோம், நம்பல  இதுதான் உண்மை.

நம் ஜோதிட முறையில் அடைப்பு நட்சத்திரம் என்று சொல்வார்கள்,

அதற்கு 45 நாள் விளக்கு ஏற்றி பரிகாரம் சொல்லுவார்கள்.

 

சுமையுடைய மூலாதாரம் எங்கிருந்து ஆரம்பிக்கும் என்றால் நம்முடைய ஆசைகள் தான்.நான் பார்த்த நான் கேட்ட அத்தனை விஷயங்களும் ஆசைகளில் இருந்து தான் ஆரம்பமாகிறது.ஆசைகள் தான் அடிப்படைக் காரணம் அதிலிருந்து பரிணமித்து இன்பமாக, துன்பமாக ,நல்லதாக, கெட்டதாக, பயணமாக,வாழ்க்கையாக, நோய்நொடி யாக, வருமானமாக,சந்தோஷமாக உள்ளது.

மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது மனம் சந்தோஷமாக இருக்காது, அதுவே சங்கடமாக உள்ளபோது மனம் ரொம்ப இறுக்கமாக இருக்கும்.இதனுடைய மூலாதாரம் ஆசை.

இந்த ஆசைகள் உடைய தன்மைகள் ஒவ்வொரு பயணம் முடியும் பொழுது அந்த மூட்டைகளை தூக்கும் பொழுது  தான் நமக்கு தெரியும். ஒண்ணுமே இல்லாத விஷயத்திற்கு தான் நாம் இவ்வளவு நாள் ஆசைப்பட்டுள்ளேன்.ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு தான் சுமைகளாக சுமந்து கஷ்டப்பட்டு உள்ளோம்.

வாழ்க்கையின் சுமைகளை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ வாழ்க்கையில் மாற்றம் உருவாகும்.

எனக்கு தெரிந்த நிறைய நண்பர்கள் உடல் சார்ந்தும், மனம் சார்ந்தும் நிறைய மூட்டைகளை சுமக்கிறோம்.

நமக்கு ஒரு நாளைக்கு 60 ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைகிறது.நம்முடைய எல்லா எண்ணங்களும் ஒரு மூட்டையாக கட்டி கட்டி வைத்துள்ளோம்.அதனுடைய ஆரம்பமும், முடிவும் ,அன்றைய நாள் இரவில் முடியும் பொழுது மன இறுக்கங்களும், சங்கடங்களும், சார், எனக்கு இரவு சரியாக தூக்கம் வரவில்லை என்று சொல்வார்கள்.

எப்படி தூக்கம் வரும். மனது முழுவதும் அடைத்து வைத்துள்ளோம்.

காலையில் இருந்து இந்த இரண்டு விஷயங்களை முக்கியமாக  கவனிக்கணும். காலையில் மனித உடலின் கழிவுகள், மலம் என்று சொல்லக்கூடிய கழிவுகள்.இரவில் மனம் சொல்லக்கூடிய எண்ணங்கள்.

இந்த இரண்டையும் சுத்தப்படுத்தினால் தான் நம் வாழ்க்கை வாழ முடியும்.

உணவு உண்பது, எண்ணங்களை தூண்டுவது ,இது நம் வாழ்க்கையில் மறுக்க முடியாதது.மறைக்க முடியாது ஏற்றுக்கொண்டுதான் ஆகணும்.

தேவையான விஷயத்துக்கு மட்டும் பயணிக்கணும், தேவையான விஷயத்தை மட்டும் பார்க்கணும்.

சுமையை நிறைய தூக்கி சுமந்தால் கண்டிப்பாக உடலும், மனமும் பாதிக்கப்படும்.

சுமையை தூக்கி சுமந்தால்

நெடுந்தூரத்திற்கு பயணிக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுமைகள் வரலாம்.

வாழ்க்கை பயணத்தில்நிறைய சுமைகளை தூக்கி,

அந்த சுமைகள் நம்முடைய ஆசைகள்.

எல்லாவற்றிற்கும் ஆசைப்படலாம். ஆனால், உங்கள் மனம் விரும்பக் கூடிய ஒரு விஷயத்தை மட்டும் தான் அடைய முடியும்.அந்த ஒரு விஷயத்தில் மட்டும் புரிந்து இன்னும் ஆசைப்பட்டால் சந்தோஷமாக இருக்கும்.

10 பொருள்கள் ஆசைப்பட்டு வாங்க முடியாது.

அதே போல் 10 பாதைகளில் உங்கள் வாழ்க்கை செல்ல முடியாது. அந்த ஒரு பாதையில் தான் செல்ல முடியும்.அந்த ஒரு பாதையை முழுவதுமாக அடைந்து விட்டு, மறு பாதையில் செல்லலாம்.

எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டால் எந்த பாதையிலும் செல்ல முடியாது.

ஆசைகளும் சுமைகளும் வாழ்க்கையின் இரு கண்கள்.இதை இரண்டையும் சரியாக பயன்படுத்தி,சந்தோஷமாக சென்றால் என்னுடைய ஆசைகளும் நிறைவேறும், என்னுடைய எண்ணங்களும் நிறைவேறும். இதன்படி சென்றால்

வாழ்க்கைப் பயணத்தில் வெற்றியை அடைய முடியும் என்பதுதான் என்னுடைய வாதம்.

அடுத்தவங்க பாதையில் நாம் பயணிக்க முடியாது.

சுமைகளை தேவையான அளவு தூக்கி வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி பெற வேண்டும்.நல்லதொரு நிகழ்வே அமையட்டும்.

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.

நன்றி, வணக்கம்.

கட்டுரை தொடர்பான நிகழ்வில் https://alpastrology.com/blog/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.

https://youtu.be/z2ymsfgoONk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *