சித்திரை நட்சத்திரம் 1ம் பாதம்:

Spread the love

சித்திரை நட்சத்திரம் 1ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையில் இந்த காலம் அதிர்ஷடமான நேரம் என்பதை பார்க்கிறோம்.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் சித்திரை நட்சத்திரம் 1ம் பாதம்.

3, 8 ஆதிபத்தியம் பெறக்கூடிய செவ்வாய் உடைய நட்சத்திரம் சித்திரை நட்சத்திரம்.

கண்டிப்பாக பெரும் புகழையும், யோகத்தையும் கொடுக்கும்.
ஆனால் பாதகத்தையும் கொடுக்கும்.

3 என்றால் முயற்சி, வெற்றி, சந்தோஷம், லாபம் எதிர்பார்ப்பு எல்லாமே கொடுக்கும்.

யோகமான நட்சத்திரம் என்றால் 3ம் வீடு சம்மந்தப்படனும்.
3, 11 சம்மந்தப்பட்டால் வாழ்க்கையில் யோகம் உண்டு.

சித்திரை நட்சத்திரம் 1ம் பாதம் வரும்பொழுது யோகம் உண்டு.

சித்திரை நட்சத்திர அதிபதி செவ்வாய் 6, 8, 10, 12 ல் இருக்கக்கூடாது.
இருந்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள்
முயற்சிகள் எல்லாம் கடனாகும்.
முயற்சிகள் எல்லாம் விரயத்தை கொடுக்கும்.
முயற்சிகள் எல்லாம் நோயை கொடுக்கும்.

6, 8, 10, 12ல் செவ்வாய் இல்லை என்றால் கண்டிப்பாக ஜாதகருக்கு அத்தனை முயற்சிகளும் யோகத்தை கொடுக்கும்.

3,8 சம்மந்தப்பட்டால் தீடீர் யோகத்தை கொடுக்கும்.
அதாவது தென்னைமரம் இவ்வுளவு நாள் வளர்ந்து காய் கொடுத்திருக்காது.
ஆனால் இப்பொழுது மழை பெய்திருந்தால் திடீர் யோகத்தை கொடுக்கும்.
எதிர்பாராத நடப்புகள் மூலமாக பெரும் யோகத்தை பெறலாம்.
ஒரே நாளில் அந்த சந்தோஷம் மறையக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

90% ஜாதகருக்கு யோகத்தை கொடுக்கும். 10% ஜாதகருக்கு யோகத்தை கொடுக்காது.

அதனால் ஜாதகர் சித்திரை நட்சத்திரம் வரும்பொழுது மிக கவனமாக
போராடக் கூடிய அமைப்பு உள்ளது.

ஒரு சந்தோஷமான யோகத்தை கொடுக்கக்கூடிய அமைப்பும் உள்ளது.

சித்திரை உடைய நட்சத்திரம் செவ்வாய் பலப்பட வேண்டும்.

ஜாதகருக்கு செவ்வாய் பலப்பட்டால் ஒரு வலிமையான அமைப்பை கொடுக்கும்.

செவ்வாய் பலப்பட்டால் தான் ஜாதகருக்கு வலிமையான தோற்றம், வலிமையான எண்ணம்,
முயற்சி ஜாதகருக்கு அவ்வுளவு சந்தோஷத்தை கொடுக்கும்.

நாம் எந்த அளவிற்கு போராடுகிறமோ அந்த அளவிற்கு முயற்சி கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரம் 1ம் பாதம் ஜாதகருக்கு கண்டிப்பாக ஒரு பெரிய மாற்றம் உண்டு.

மீண்டும் ஒரு இனிய தொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://youtu.be/026Yf4qz-sU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *