சுவாதி நட்சத்திரம் 3ம் பாதம்:

Spread the love

சுவாதி நட்சத்திரம் 3ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் சுவாதி நட்சத்திரம் 3ம் பாதம்.
துலாம் லக்னம்.

துலாம் லக்னம் கேட்கக்கூடியவர்கள்

குழந்தைகள் சம்மந்தப்பட்டது,
குலதெய்வம் சம்மந்தப்பட்டது,
பூர்வபுண்ணியம் சம்மந்தப்பட்டது,
பூர்வீக சொத்துகள் சம்மந்தப்பட்டது,
எதிர்பாராத பிரச்சனைகள் சம்மந்தப்பட்டது,
தேர்தலில் நிற்கலாமா,
மனதில் பதற்றம், பயம்.
தேவையில்லாத குழப்பங்கள் வரக்கூடிய காலகட்டங்கள்.

குழந்தைகளுடைய படிப்பு,
குழந்தைகள் சம்மந்தப்பட்ட விஷயங்கள்,
குழந்தைகள் பெயரில் வீடு வாங்கலாமா,
குழந்தைகளை என்ன படிக்க வைக்கலாம்,
இப்படி நிறைய கேள்விகள் கண்டிப்பாக வரும்.

சுவாதி நட்சத்திரம் 1ஆம் பாதம் சந்தோஷமான மகிழ்ச்சியான காலம்.
குலதெய்வம், இஷ்ட தெய்வம், துர்க்கை அம்மன், வனபத்ரகாளியிடம் பலமாக வேண்டுங்கள்.
நீங்கள் என்ன கேட்டாலும் அது கிடைக்கும்.
களி செய்து வீட்டில் பெரியாச்சி சுவாமிக்கு வெள்ளிகிழமை மாலைபொழுதில் வீட்டின் மேலண்ட பக்கம் படைக்கலாம்.
செய்தால் கண்டிப்பாக பெரிய மாற்றம் உண்டு.
சுவாதி நட்சத்திரம் 3ஆம் பாதம் செல்பவர்களுக்கு தான் இந்த பரிகாரம்.
இப்படி செய்து பலமாக வேண்டினால் எல்லாவற்றிற்கும் வாய்ப்பு உண்டு.

சுவாதி நட்சத்திரம் 3ஆம் பாதம் திருமணம் சம்பந்தப்பட்ட கேள்விகள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட கேள்விகள், அதிகமாக வரும்.

மனவிருப்பங்கள் ஆசைகளை நிறைவேற்ற கூடிய நட்சத்திரம் சுவாதி நட்சத்திரம் 3ம் பாதம்.
கண்டிப்பாக உங்களுடைய ஆசைகள் நிறைவேறும்.
எல்லா நட்சத்திர பாதத்திற்க்கும் இந்த அமைப்பு வராது.

சுவாதி நட்சத்திரம் 3ஆம் பாதம் ஒருவருடம், ஒரு மாதம், 10 நாள் இயங்கும்.
இந்த காலகட்டம் மகிழ்ச்சியான காலகட்டம்.

நன்றி, வணக்கம்.

https://youtu.be/pNjSfKCHe1o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *