ஆயில்யம் நட்சத்திரம் 2ம் பாதம்:

Spread the love

ஆயில்யம் நட்சத்திரம் 2ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

ALP என்ற ஜோதிட முறை கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளது.
அதை பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

நம்முடைய வாழ்க்கையில் இவ்வளவு நாள் ஜோதிடம், ஆன்மீகம் எல்லாம் சித்தர்கள்,முனிவர்கள் மறைபொருளாக கொடுத்துள்ளார்கள்.

இது நாள் வரையில் பிறப்பு லக்கனம் இருக்கும்.
ஆனால் இன்றைக்கு என்னவென்றால்
ALP முறைப்படி ஒவ்வொரு 10 வயதிற்க்கும் லக்னம் மாறும்.

திருமண பொருத்தம் இன்றைய அட்சய லக்னத்திற்கும், அட்சய ராசிக்கும் பார்க்க வேண்டும்.
ஏனென்றால்?
பிறக்கும் பொழுது தனுசு லக்னமாக இருந்தால் அடுத்து 10 வருடம் மகரம் அடுத்து கும்பம் இப்படி வரும்.
இதில் ஒவ்வொரு காலத்திற்கும் எந்த காலம் யோகம் பெற வேண்டும்.
எந்த காலம் அவயோகம் பெற வேண்டும், என்பதை தான் அட்சய லக்னம் சொல்கிறது.

அட்சயம் என்றால் வளருதல்.
லக்னம் என்றால் தோற்றம். உங்களுடைய தோற்றம் எப்படி வளர்கிறதோ அதேபோல் உங்களுடைய லக்னமும் வளரும்.
அதேபோல் உங்களுடைய வாழ்க்கை முறையும் மாறும்.
அதுதான் உண்மை.

இது புரியவில்லை என்றால் அட்சய லக்ன பத்ததி புத்தகம் உள்ளது.
அதை வாங்கி படித்து பாருங்கள்.

தயவு செய்து உங்களுடைய அட்சய லக்னத்திற்கு ஜோதிடம் பாருங்கள். உங்களுடைய வாழ்க்கை மாறும்.

108 நட்சத்திரபாதம் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை இயக்கும்.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் ஆயில்யம் நட்சத்திரம் 2ம் பாதம்.

கடக லக்னம் ஆயில்யம் நட்சத்திரம் 2ம் பாதம் சென்றால் திருமணம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்காக அறிந்திருக்கிறீர்களா?
குழந்தைகள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு வந்திருக்கிறீர்களா?
வெளிநாடு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்காக வந்திருக்கிறீர்களா ?
வெளியூர் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக வந்திருக்கிறீர்களா?

வெளிநாட்டில் பணம் கொடுத்து ஏமாந்து விட்டீர்களா?
உடல் சம்பந்தப்பட்ட உபாதைகள் உள்ளதா?
மனைவி சம்பந்தப்பட்ட கேள்விகள் ஜாதகருடைய நண்பர்கள் சம்பந்தப்பட்ட கேள்விகள்,
கூட்டுத் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
ஜாதகருக்கு போட்டித்தேர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், “அக்கவுண்ட் சம்பந்தப்பட்ட விஷயங்கள் படிக்கலாமா?
இப்படி நிறைய கேள்விகளை கேட்டு வந்திருப்பார்.
இந்தக் கேள்விகள் எல்லாம் உங்கள் மனதில் இருக்கா என்று பாருங்கள்.

அட்சய லக்னம் கடக லக்கனமாக சென்று ஆயில்யம் நட்சத்திரம் 2ம் பாதம் சென்றால் உங்களுடைய வாழ்க்கை கண்டிப்பாக மாறும்.

மிகப்பெரிய யோகம் உண்டு. திருமணம் என்றால் எதிர்பாராத திடீர் திருமணம்.
ஆயில்யம் 2ம் பாதம் வந்தால் எதிர்பாராத திடீர் திருமணங்கள்.
எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் திருமணம் எதிர்பாராதவிதமாக நடக்கும்.
மிக யோகமான காலம்.

ஆயில்யம் நட்சத்திரம் 2ம் பாதம் மிகப்பெரிய நல்ல காலத்தை உருவாக்கக்கூடிய நேரம்.
1 வருடம், 1 மாதம் 10 நாள் இயங்கும்.

ஜாதகருடைய எல்லா கேள்விகளுக்கும் இந்த காலம் யோகமான நேரம்.
நிகழ்காலத்தில் ஒரு ஜாதகர் முயற்சிகள் எல்லாமே முயற்சி செய்ய வேண்டும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

https://www.youtube.com/channel/UCDDgx1ug0tzbJUMKSHJJf4A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *