MARRIAGE MATCHING ALP METHOD | MARIIAGE MATCHING SOFTWARE | ASTROLOGER MOORHTY.

Spread the love

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அட்சய லக்ன பத்ததி முறையில் திருமணப்பொருத்தம்.
அட்சய லக்ன பத்ததியை எந்த அளவுக்கு ஆய்வு செய்கிறீர்களோ, அந்த அளவு எளிமை.

திருமண பொருத்தம் அவ்வளவு சாதாரணமாக எடுக்க கூடாது.
திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.
இருக்கக்கூடிய ஜாதகத்தில் திருமண பொருத்தம், நட்சத்திரம், திருமண பலன் பார்க்கிறோம்.
ராசி கட்டம் பார்க்கிறோம்.
நிறைய வகைகளில் திருமண பொருத்தம் பார்க்கிறோம்.
இந்த திருமண பொருத்தங்கள் ஒருவருடைய வாழ்க்கையில் அதீதமான நல்லது, கெட்டது காலகட்டங்களில் சூழ்நிலைகள் மாறி போயிருக்கும்.

ஏன்னா? அந்த கால கட்டங்களில் உள்ளபொறுமைகள் ,தன்மைகள் இந்த கால கட்டங்களில் இல்லை
என்ற விஷயத்தை பார்க்கணும்.
ஒவ்வொரு கால கட்டமும் நமக்கு நிறைய படிப்பறிவு கொடுக்கிறது, நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்கிறது.

ஒவ்வொரு கால கட்டமும் நிகழ்வுகள் மாறிக்கொண்டே இருக்கின்றது.

கிரகத்தில் தன்மைகளைப் பொறுத்து நம்முடைய வலிமைகளை சொல்லணும்.

அந்த காலகட்டத்தின் ஒரு பரிணாம வளர்ச்சிதான் அட்சய லக்ன பத்ததி.

திருமண காலகட்டம் என்பது பெண்ணுடைய அட்சய லக்னத்திற்கும் ஆணுடைய அட்சய லக்னத்திற்கும் 10 வருடம் எப்படி உள்ளது என்பதை பார்த்தாலேபோதும்.

பெண்ணுடைய அட்சய ராசிக்கும், ஆணுடைய அட்சய ராசிக்கும்,உடல் பொருத்தம் எப்படி உள்ளது மனப் பொருத்தம் எப்படி உள்ளது என்பதை பார்க்கிறோம்.

குறைந்தது 30 வருடத்திற்கு பார்த்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கண்டறியலாம்.
மூன்று கட்டங்கள், 3 பாவகங்கள் பார்க்கணும்.
பெண்ணுடைய 30 வருடம் எப்படி இருக்கும், ஆணுடைய 30 வருடம் எப்படி இருக்கும், என்பதை பார்க்கணும்.

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தசா நாதன், புத்தி நாதன், ஆண் அட்சய லக்னம், பெண் அட்சய லக்னம், அட்சயராசி இந்த விஷயங்களை வைத்து கோச்சார கிரகங்களையும் வைத்து சொன்னால் மட்டும் போதும்.

நல்லது, கெட்டது ,பொறுமை பெண்ணுக்கும் வரும்பொழுது
திருமண வாழ்க்கை நல்லதொரு வாழ்க்கையாக அமையும்.

நன்றி ,வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *