கர்மா என்றால் என்ன

Spread the love

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். கர்மா என்றால் என்ன? நம்முடைய எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு நிகழ்வு தான் காரணம் என்கிறோம். நிகழ்வுகள் எண்ணங்களாக, செயல்களாக, ஆசைகளாக, யோகங்களாக, அசுப யோகங்களாக, ஒருவருடைய வாழ்க்கையில் நடக்க கூடிய அத்தனை நிகழ்வுகளுக்கு பின் இயங்குவது தான் கர்மா. நம்முடைய வாழ்க்கையின் இயக்குனர் கடவுள். இது நமக்கு தெரியாது. நம்மை உருவாக்கியவர் தான் நம்முடைய அத்தனை செயல்களுடைய கட்டுப்பாடு. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நடக்கக் கூடிய அத்தனை செயல்களே கர்மா. செயல்கள், எண்ணங்கள் என்பதற்கு தான் கர்மா என்ற ஒரு விஷயம். எண்ணங்களும் செயல்களும் எதன் மூலமாக ஒரு மனிதனை இயக்கும் என்றால் ஆசைகள். ஒரு மனிதனுடைய ஆசைகள் மூலமாக தான் கர்மா தொடரும், ஆசைகள் இல்லை என்றால் கர்மா தொடராது. ஆசைகள் இருக்கும் வரையில் கர்மாவும் இருக்கும். கர்மா என்பது குழந்தைகள் முதல் மனிதர்கள் வரை சக மனிதர்களாக வாழும் அத்தனை பேருக்கும்,மரம் விலங்கு உலகத்தில் இருக்கும் அத்தனை உயிர்களுக்கும் கர்மா என்ற செயல் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆசைகள் தான் கர்மா, ஆசைகளை எந்த அளவிற்கு மறுக்க முடியுமோ, அந்த அளவிற்கு கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை மாறும். நன்றி, வணக்கம்.

https://youtu.be/poA9sAK6PH0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *