தொழில் அல்லது வேலை எது சிறந்தது

Spread the love

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒரு முடிவெடுக்க முடியாத அமைப்பு எப்படி இருக்கும் என்றால் ஒரு ஜோதிடரிடம் வரும்பொழுது நான் தொழில் செய்யலாமா? நான் வேலைக்கு போகலாமா? என்று வரும்பொழுது இவர்கள் ஒரு முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியும். நான் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்குமா? இப்படி வேலை விஷயங்களில் 1000 கேள்வி கேட்டால் சரி. ஆனால் எங்க அப்பா செய்த தொழில் இருக்கு , அதை நானும் செய்யலாமா? என்று கேட்பது ஒருவகை. தொழில் செய்யலாமா? வேலை பார்க்கலாமா ? என்று கேட்டால் அங்கேயே முதல் குழப்பம் உண்டாகும். ஒருவருடைய கேள்வி ஒரு தெளிவில்லாத, முடிவில்லாத மனநிலையை காமிக்கும். நீங்கள் ஜோதிடரிடம் செல்லும் பொழுது படித்த படிப்பிற்கு வேலை கிடைக்குமா? கிடைக்காதா? எப்பொழுது வேலை கிடைக்கும்? இதை மட்டும் சரியாக கேட்டால் உங்கள் வாழ்க்கையில் நடக்க கூடிய அத்தனை விஷயங்களுக்கும் அந்த ஜோதிடர் வழிகாட்டியாக வருவார். கண்டிப்பாக வழி காட்டுவார். எதை நோக்கி நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்று முன்கூட்டியே முடிவு செய்தால் இந்த பயணம் வெற்றி பெறும். வாழ்க்கை என்பது நெடுந்தூர பயணம். அதை தொலைநோக்குடன் பார்த்தால் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். உடனே உடனே ஒரு முடிவை மாற்றிக் கொண்டிருந்தால் அதில் நிறைய பிரச்சனைகள், குழப்பங்கள், இடையூறுகள், அலைக்கழிப்புகள் இப்படி நிறைய பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய காலமாக அமையும். திட்டமிட்டு வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். 20 – 30 வயது வரை இனம் புரியாத பருவமாக மாணவர்கள் செல்வார்கள் ஏன்னா? படித்து முடித்து வேலைக்கு செல்லும் பொழுது குறைந்தது 6 வருடமாவது வேலை பார்த்து அந்த வேலையைக் கற்றுக் கொண்டால் மட்டுமே அவருடைய வாழ்க்கை வளமாகும். ஒரு தொழிலில் நேராக வந்து உட்கார்ந்தால் அதில் என்ன நுணுக்கங்கள், எதில் லாபம், எதில் நஷ்டம் என்பது தெரியாது இப்படி நிறைய விஷயங்களில் கஷ்டப்பட்டு அந்த முதல் கடனாக மாறும். 20 to 30 வயது வரை உள்ள ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இது புரியணும் சொல்லிக் கொடுங்கள். ஒரு இடத்தில் வேலை பார்த்தால்தான் காசு உடைய அருமை தெரியும். எந்த தொழிலாக இருந்தாலும் குறைந்தது 6 வருடமாவது தொழிலில் இருந்து கற்றுக் கொண்டால்தான் வாழ்க்கை வளமாகும். இதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். நன்றி.

#அட்சய_லக்ன_பத்ததி_Alp_astrology_method

#alp_astrology_software_free_download

#download_ALP_Astrology

#alp_Astrologer

#ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156

https://youtu.be/gm3FnDhKz28

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *