வாழ்க்கையை பல கோணங்களில் துணிலியமாக கணிக்கும் நவீனமுறைதான் ALP ஜோதிடம் | PART -1|

Spread the love

வாழ்க்கையை பல கோணங்களில் துணிலியமாக கணிக்கும் நவீனமுறைதான் ALP ஜோதிடம் | PART -1

அனைவருக்கும் வணக்கம் நம்முடைய வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்குமா? இல்லை பாதுகாப்பு இருக்குமா? என்பதை நாம் இன்றைக்கு தேடிக்கொண்டிருக்கும் ஒரு விசயம். இதுபோன்ற நிகழ்வுகளை நம் வாழ்வில் கணித்து கூறமுடியுமா? என்பது ஒரு கேள்விகுறியான செயலாகவே உள்ளது. இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் துல்லியம் என்பது ஒரு அறிதான விசயமாக போய்கொண்டு இருக்கிறது, இந்த சூழ்நிலையில் நம்முடைய எதிர்காலத்தையும் கடந்தக்காலத்தையும் தற்போது நடக்கும் நிகழ்வுகளையும் மிகவும் எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் மிக மிக துல்லியமாகவும் கணித்து கூறக்கூடிய ஒரு அற்புதமான ஜோதிடமுறைதான் அட்சய லக்ன பத்ததி (ALP) ஜோதிடம்.

நம் அன்றாட வாழ்க்கையில் அனைவரும் ஜோதிடத்தை அடிப்படையாய் கொண்டே அனைத்து நிகழ்வுகளையும் திட்டமிடுகிறோம் ஆனால் இவை எல்லாம் சரியாக நடக்கிறதா? இல்லையா? என்பது நம் அனைவரின் மனதில் உள்ள கேள்வியாக இருக்கிறது. இந்த கேள்விகளை அனைத்தையும் ALP ஜோதிட முறையினை கண்டுபிடித்த அய்யா, முனைவர் சி. பொதுவுடைமூர்த்தி அவர்களிடம் கேட்டபொழுது அவர் நமக்காக சில பதில்கள் அளித்தார், வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனிடமும் தேடல் என்பது இருந்துகொண்டேதான் இருக்கிறது நாளை என்ன? அடுத்து என்ன ? இப்படி கேள்விகள் அடுக்கடுக்காக இருந்து கொண்டேதான் இருக்கிறது, அறிவியலையும் கடந்து இந்த நம்பிக்கை வீண் போகாமல் இருக்க ALP அட்சய லக்ன பத்ததி என்ற ஓர் அற்புதமான ஜோதிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக முனைவர் சி.பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்கள் கூறினார்கள். மேற்கொண்டு அவர் நம்மிடையே காலநிலை மாற்றங்கள் பருவநிலை மாற்றங்கள், வானிலை மற்று பிரபஞ்ச நிகழ்வுகளையும் அதன் நகர்வுகளையும் விரிவாக எடுத்து கூறினார்கள். நாம் எப்படி பேசுவது என்பது முதல் எந்த ஆடையினை அனியவேண்டும் போன்ற நம்பிக்கை சார்ந்த செயல்களையும் எடுத்து கூறினார்கள். மேலும் பிரபஞ்சம் என்பது பல வண்ண ஒளிகளால் நிரம்பியுள்ளது என்றும் கூறினார்கள். மேலும் ஜோதிடம் என்பது மூட நம்பிக்கையா? என்ற கேள்வியும் அவரிடம் கேட்டபொழுது, அதற்கு பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்கள் கூறிய பதில்கள், அனைத்திலும் கடவுள் இருக்கிறார் அவர் கிரகங்கள் இருக்கும் இடத்தை பொருத்து அவரவர் செயல்களுக்கு ஏற்றவாறு நன்மைகளையும், சோதனைகளையும் தருகிறார் என்றும் மாற்றம் தரக்கூடிய அனைத்தையும் மாற்றுவார் என்றும் கூறினார்கள். மேலும் அவர் “உணர்வதும் உணர்த்துவதும்தான் வாழ்க்கை” என்பதையும் நம்மிடையே ஆழமாக பதிவிட்டார்.

 

https://youtu.be/5E1nEb-OgQ4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *