முருகா! முருகா! முருகா!

Spread the love

images (5)

கலியுகத்துக்கு உரிய தெய்வம் கந்தன் என்றே

போற்றுகின்றன, வேதங்களும் புராணங்களும்.

அந்த தெய்வத்தை இந்தக் கலியுகத்தில் தன்
பாடல் திறத்தாலேயே நேரில் வரவழைத்திருக்கிறார் ஒருவர்.

வேதப் பிரமாணங்கள் அனைத்துக்கும் பொருளாக

இருப்பவன் முருகன் என்பதால் அவனை ப்ரமண்யன்

என்றே அழைக்கின்றன வேதங்கள். அந்தப் புனிதமான
பெயரைத் தமதாகக் கொண்ட அந்த பக்தர் வேறு
யாருமல்லர், மகாகவி பாரதியார்தான்.

மகாகவி மனம் ஒன்றிப் பாடி மயில்வாகனனை

வரச்செய்து நேரில் கண்ட துதி, இதோ இங்கே
உங்களுக்காகத் தரப்பட்டிருக்கிறது.

எளிய இத்தமிழ்த்துதிரை இதயபூர்வமாகச் சொல்லுங்கள்.
பக்தர்கள் இதயக்குகையில் வசிப்பவனும், தமிழுக்குத்
தலைசாய்ப்பவனுமான முருகன், நிச்சயம் உங்கள்
எண்ணம்போல் வடிவு கொண்டு வந்து அருள்வான்.

பாரதியார் பாடிய, முருகனை நேரே எழுந்தருளச் செய்யக்கூடிய பாடல்…

முருகா! முருகா! முருகா!
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)

அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே! அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)

சுருதிப் பொருளே, வருக!
துணிவே, கனலே, வருக!
கருதிக் கருதிக் கவலைப்படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா)

அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்! சரணம் சரணம்
குமரா, பிணி யாவையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே, சரணம்! (முருகா)

அறிவாகிய கோயிலிலே
அருளாகிய தாய் மடிமேல்
பொறிவேலுடனே வளர்வாய்! அடியார்
புதுவாழ்வுறவே புவி மீதருள்வாய் (முருகா)

குருவே! பரமன் மகனே!
குகையில் வளருங் கனலே!
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே! சரணம்! சரணம்! (முருகா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *