ஏமாற்றமாக அமைந்த திருமணம்

ALP முறையில் ஒரு நிகழ்வு.

ALP முறையில் ஒரு லக்னாதிபதி, ஒரு நட்சத்திரபாதம் இதை மட்டும் வைத்து எப்படி பார்க்கலாம் என்று பார்ப்போம்.
லக்னம் 5ம் வீடு,மனம் சம்பந்தப்பட்டது, உடல் சம்பந்தப்பட்டது ,இன்பம் சம்பந்தப்பட்டது, காதல் சம்மந்தப்பட்டது, குழந்தைகள் சம்பந்தப்பட்டது
யோக நிலைகளை குறிக்கக்கூடிய பாவகம்.
லக்னாதிபதி நல்லா இருக்கு, மூலம் நட்சத்திரம் 11ஆம் இடத்தில் இருப்பதால் இந்த காலகட்டங்கள் எதிர்பார்த்த யோகத்தை கொடுக்கும்.
ஒரு குறுகிய காலத்தில் குருவும் , கேதுவும் பார்வையில் இருக்கு,இது யோகத்தை கொடுக்குமா? கொடுக்கும்.
மூலம் நட்சத்திரம் 1, 2 பாதம் போனாலே எதிர்பாரத திடீர் திருமண வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும்.
ALP முறையில் மூலம் நட்சத்திரம் 1ம் பாதம் திடீர் யோகம், காதல் திருமணம் எதிர்பாராத திடீர் வாய்ப்புகளை கொடுக்கக்கூடிய அமைப்பு உண்டு.
5ம் அதிபதியாக செவ்வாய் லக்னத்தில் இருக்கு.
1,2 ,4, 7 ,8 , 12 ல் செவ்வாய் இருந்தால் ஒரு அழுத்தத்தைக் கொடுக்கும்.
எதிர்பாராத திடீர் திருமணத்தில் அழுத்தத்தை கொடுக்கும்.
ஒரு போராட்டத்தை கொடுக்கும்.
ஆனாலும் எதிர்பாராத திடீர் திருமண வாழ்க்கை இந்த காலகட்டத்தில் கொடுக்கும்.

இந்த லக்னத்திற்கு அட்டமாதிபதி திசை 5லிருந்து நடக்கிறது.
5, 8 சம்பந்தப்பட்டது சித்த பிரம்மையான காலம்.
மனம் எதிர்பார்த்த அளவு இருக்காது.
புதன் அட்டமாதிபதி புத்தியில் எதிர்பாராத திடீர் திருமணத்தை அமைத்து வைத்திருக்கும்.

ஒவ்வொரு ஜாதகத்திலும் நடந்த நிகழ்களோடு ALP முறையை பொருத்திப் பார்க்கிறோம்.
ஜென்ம லக்னத்திற்கும், ALP லக்னத்திற்கும் பொருத்தம் பார்க்கும் பொழுது எது உங்களோடு அதிகமாக தொடர்பு பெறுகிறது என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
எவ்வளவு தூரம் பயணிக்றோம், எப்படி பயணிக்கிறோம், வாழ்க்கையில் சந்தோஷமாக பயணிக்க போகிறோமா? என்பது பார்ப்பது தான் அட்சய லக்னம்.
தொடங்கிய இடத்திலிருந்து நான் எதை அனுபவிக்கப் போகிறேன் ,
எதை அனுபவிக்க முடியாது ,
எதை சந்தோஷமாக அமையப்போகிறது,

இந்த ஜாதகத்தில் திருமண வாழ்க்கை ஒரு பிரச்சனைக்குரிய வாழ்க்கையாக தான் அமைந்திருக்கும்.