​முற்பிறவியில் செய்த பாவம் 

​முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா? பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய் பிறக்குமா?
திருத்ராஷ்ட்ரனுக்கு ஏன் கண் குருடானது? ஏன் அவனுக்கு நூறு குழந்தைகள்?
அடியேன் சமீபத்தில் படித்த ஒரு நிகழவு தங்களுக்காக,
குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது.
அப்போது திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி

செய்தேன். 
அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.
அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன்.
 நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில் தருகிறேன்! என்ற பகவான், கதையைக் கூறினார்.
நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் அரசனிடம் மிகவும் வறியவன் ஒருவன் சமையற்காரனாகச் சேர்ந்தான்.
 மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.
அரசருக்கு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது.
 அதன்படி,அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான்.
 தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த்தத்தின் சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதை சமைக்கவும்

கட்டளை இட்டு, சமையற்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.
திருதராஷ்டிரா, இப்போது சொல்… அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.
வசிஷ்டரின்  சமையற்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்து விட்டார். 
ஆயினும் வசிஷ்டர் அதைக் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார்.
 அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! சமையற்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது. 
ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான்! என்றார், திருதராஷ்டிரன்.
புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா! நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது, மன்னவன் செய்ததே தவறு! என கூறினாய்.
அத்தகைய நீதி  பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர்,

போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி,

நூறு குழந்தைகள் என  நல்வாழ்க்கையைத் தந்தது. 
ஆனால், நான்

சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை  உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.
அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு  பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்.
 ஆனால் தினம்தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு, கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.
தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார். தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.
“ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம் ”
   

​ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…

​ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…
எவனோ ஒருவனுக்கு அடிமையாகியே தீர வேண்டும் என்பது மனித குலத்திற்கான விதி! – அது

 சிவனுக்காயிருந்தால் எத்தனை ஆனந்தம் என உணர ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்… 
எந்த முதலாளியும் தன் தொழிலாளியை தனக்கு நிகரான வளமையோடு வாழ வைத்துப்பார்க்க எண்ணியதில்லை. ஆனால்
 தன்னிலமை மண்ணுயிர்கள் சாரத்தரும்சக்தி 

 பின்னமிலான் எங்கள் பிரான்!
எந்தத் தலைவனும் தன் தொண்டனுக்கு தான் வகிக்கும் அதே பதவியை கொடுக்க எண்ணியதாக வரலாறு இல்லை. ஆனால்
 சித்தமலம் அறுவித்து சிவமாக்கும் 

 தன்னிகரில்லாத்தலைவன் சிவபெருமான்!
எந்தத்தாயும் இதுவரை பசித்து அழும் முன்னரே 

 தன் சிசுவிற்கு பாலூட்டியதில்லை . ஆனால்
 பால் நினைந்தூட்டும் தாயினும்சாலப்பரிந்தருள் செய்யும்

 தாயிற்சிறந்த தயாவான தத்துவன் எம்சிவபெருமான்!
தோழமையின் பொருட்டு தூது சென்றவனும். பிட்டிற்காய் மண் சுமந்து பிரம்படி பட்டவனும். ஏன் இவ்வுலக உயிர்கள் இன்புற வாழ வேண்டி கொடிய நஞ்சுதனைத் தானுண்டு இன்று வரை அதை தன் கண்டத்தில் சுமப்பவனுமான பெருங்கருணையாüன் சிவபெருமானே!
– அந்தச்சிவனுக்கு அடிமையாயிருத்தல் எத்தனை ஆனந்தம் என உணர ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்… 
சாதி. குலம் எனும் சுழிப்பட்டுத்திரியும் அவல நிலை நீங்கி. சிவக்கோலமே சிவமெனக்கருதி அடியார்க்கு அடியாராய் சிவ குடும்பங்களாய் அன்புசெய்து வாழும் அடியார் திருக்கூட்டத்தின் ஆனந்தத்தை அனுபவிக்க ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்… 
வெற்றித்திருமகள் எப்போதும் உன்தோள் பற்றித்திரிவாள் உன் நெற்றியில் பொலியும் வெண்ணீறு கண்டு, ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்… 
எத்தனை பெரிய கண்டம் தோன்றிடினும் உனை வந்து அண்டாமல் காக்கும் நீ அணிந்திருக்கும் கண்டமணி உருத்திராக்கம், ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்… 
21 தலைமுறையை நரகத்தில் வீழாது காக்கும் நீ படிக்கும் திருவாசகம் ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்… 
துன்பங்களைக்கண்டு நீ ஓடிய காலம் போய். துன்பங்கள் உன்னைக்கண்டு ஓடும் நீ ஓதும் திருவைந்தெழுத்தைக்கேட்டு சிவாயநம! ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்… 
• அறியாமை விலகும் 

• ஆனந்தம் பெருகும்

• இருள் அகலும்

• ஈசனருள் பெருகும்

• உண்மை விளங்கும்

• ஊழ்வினை துலங்கும்

• எப்போதும் மலர்ந்திருப்பாய்

• ஏகாந்தத்தில் கலந்திருப்பாய்

• ஐம்பூதங்களும் உன்வசமாகும்

• ஒருவன் என்னும் ஒருவன் வருவான்

•ஓங்காரத்துட்பொருளை தானே விரிப்பான்

• ஒளடதமாய் உன் பிறவி நோய்த்தீர்ப்பான்.

​ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…
படித்ததில் பிடித்தது.

பேராசை

ஸ்வாமி சின்மயானந்தா அவர்கள் சொன்ன  

அருமையான கதை ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்)
கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது. 
அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான். இந்த நோட்டைக் கண்டு, ‘,இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல’ என நினைத்து,  மிகவும் சந்தோஷமடைகிறான். அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி – ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான். சந்தோஷமாக வீடு திரும்பினான்.
மீதி 99 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. அந்த வழியாக ஒருவன் வந்தான். இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான். 
பரபரவென்று எண்ணினான். 99 நோட்டுகள். 

மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான். 

99 நோட்டுகள்தான். 

வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்கமாட்டார்களே….

அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இங்கே பக்கத்தில் எங்கேனும்தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தான்…………… 
அந்த ஒற்றை பத்துரூபாயைத் 

தேடினான்….  தேடினான்….  தேடினான்….  

இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான் ——–
–என்று சொல்லி கலகலவென்று சிரித்தார் பூஜ்ய குருதேவ் அவர்கள்.
பத்து ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றான்.
990 ரூபாய் கிடைத்தவன் அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு பத்து ரூபாய்க்காக அல்லாடிக்கொண்டிருக்கிறான்.
கருத்து : நம்மில் பலர் இப்படித்தான்

கிடைத்தவைகளை அனுபவிக்கத்

தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி

அலைந்து உடலும் மனமும் சோர்ந்து

அல்லலுறுகிறோம் .

#படித்ததில் பிடித்தது.

27 நட்சத்திரத்திற்கும் உரிய தெய்வங்கள்

​27 நட்சத்திரத்திற்கும் உரிய தெய்வங்கள்!

நட்சத்திரங்கள் மற்றும் அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் :

அஸ்வினி – ஸ்ரீசரஸ்வதி தேவி.
பரணி – ஸ்ரீதுர்கா தேவி.
கார்த்திகை – ஸ்ரீசரஹணபவன் (முருகப் பெருமான்).
ரோகிணி – ஸ்ரீகிருஷ்ணன் (விஷ்ணு பெருமான்).
மிருகசீரிடம் – ஸ்ரீசந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்).
திருவாதிரை – ஸ்ரீசிவபெருமான்.
புனர்பூசம் – ஸ்ரீராமர் (விஸ்ணு பெருமான்).
பூசம் – ஸ்ரீதட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்).
ஆயில்யம் – ஸ்ரீஆதிசேசன் (நாகம்மாள்).
மகம் – ஸ்ரீசூரிய பகவான் (சூரிய நாராயணர்).
பூரம் – ஸ்ரீஆண்டாள் தேவி.
உத்திரம் – ஸ்ரீமகாலட்சுமி தேவி.
அஸ்தம் – ஸ்ரீகாயத்ரி தேவி.
சித்திரை – ஸ்ரீசக்கரத்தாழ்வார்.
சுவாதி – ஸ்ரீநரசிம்மமூர்த்தி.
விசாகம் – ஸ்ரீமுருகப் பெருமான்.
அனுசம் – ஸ்ரீலட்சுமி நாரயணர்.
கேட்டை – ஸ்ரீவராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்).
மூலம் – ஸ்ரீஆஞ்சநேயர்.
பூராடம் – ஸ்ரீஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்).
உத்திராடம் – ஸ்ரீவிநாயகப் பெருமான்.
திருவோணம் – ஸ்ரீஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்).
அவிட்டம் – ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்).
சதயம் – ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்).
பூரட்டாதி – ஸ்ரீஏகபாதர் (சிவபெருமான்).
உத்திரட்டாதி – ஸ்ரீமகாஈஸ்வரர் (சிவபெருமான்).
ரேவதி – ஸ்ரீஅரங்கநாதன்.
இவைகள் அனைத்தும் அந்தந்த நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்கள் ஆகும். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.
இதனைத் தவிர அவரவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகம் எதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வந்தால் வாழ்வில்.

108 நற்பண்புகள்

​’108 நற்பண்புகள்’
1.  வைராக்கியம்  (Assertiveness)

2.  தேசநலன் (Citizenship)

3.  நிறைவேற்றுதல் (Chivalry)

4.  துணிச்சல்  (Courage)

5.  கீழ்படிதல்  (Obedience)

6.  வெளிப்படையாக  (Openness)

7.  ஒழுங்குமுறை  (Order)

8.  ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)

9.  ஆன்மிகம்  (Spirituality)

10.கருணை  (Mercy)

11.இரக்கம் (Compassion)

12.காரணம் அறிதல் (Consideration)

13.அக்கறையுடன்  (Mindfulness)

14.பெருந்தன்மை (Endurance)

15.பண்புடைமை (Piety)

16. அஹிம்சை  (Non violence)

17.துணையாக  (Subsidiarity)

18.சகிப்புத்தன்மை (Tolerance)

19. ஆர்வம் (Curiosity)

20. வளைந்து கொடுத்தல்  (Flexibility)

21.நகைச்சுவை (Humor)

22. படைப்பிக்கும் கலை  (Inventiveness)

23.வழிமுறை  (Logic)

24.எழுத்து கற்க பிரியம் (Philomathy)

25.காரணம்  (Reason)

26.தந்திரமாக  (Tactfulness)

27.புரிந்து கொள்ளுதல்  (Understanding)

28.பிறர் நலம் பேணுதல் ( Altruism )

29.நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)

30.அறம் (Charity)

31.உதவுகின்ற  (Helpfulness)

32.தயாராக  இருப்பது  (Readiness)

33.ஞாபகம் வைத்தல்  (Remembrance)

34.தொண்டு செய்தல்  (Service)

35.ஞாபகசக்தி  (Tenacity)

36மன்னித்தல்  (Forgiveness)

37.வாக்குறுதி  (Commitment)

38.ஒத்துழைப்பு  (Cooperativeness)

39.சுதந்திரம்  (Freedom)

40.ஒருங்கிணைத்தல்  (Integrity)

41.பொறுப்பு (Responsibility)

42.ஒற்றுமை  (Unity)

43.தயாள குணம் (Generosity)

44.இனிமை  (Kindness)

45.பகிர்ந்து கொள்ளுதல்  (Sharing)

46.சுத்தமாயிருத்தல்  (Cleanliness)

47.அருள் (Charisma)

48. தனித்திருத்தல்  (Detachment)

49.சுதந்திரமான நிலை (Independent)

50.தனிநபர் உரிமை (Individualism)

51.தூய்மை  (Purity)

52.உண்மையாக  (Sincerity)

53.ஸ்திரத்தன்மை  (Stability)

54.நல்ஒழுக்கம்  (Virtue ethics)

55.சமநிலை காத்தல் (Balance)

56.பாரபட்சமின்மை (Candor)

57.மனஉணர்வு (Conscientiousness)

58.உள்ளத்தின் சமநிலை  (Equanimity)

59.நியாயம் (Fairness)

60. நடுநிலையாக  (Impartiality)

61. நீதி (Justice)

62.  நன்னெறி  (Morality)

63.நேர்மை  (Honesty)

64.கவனமாக இருத்தல்(Attention)

65.விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)

66.எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)

67.சீரிய யோசனை (Consideration)

68.பகுத்தரிதல்  (Discernment)

69. உள் உணர்வு  (Intuition)

70.சிந்தனைமிகுந்த  (Thoughtfulness)

71.கண்காணிப்பு  (Vigilence)

72.அறிவுநுட்பம் (Wisdom)

73.லட்சியம்  (Ambition)

74.திடமான நோக்கம்  (Determination)

75.உழைப்பை நேசிப்பது  (Diligence)

76.நம்பிக்கையுடன்  (Faithfulness)

77.விடாமுயற்சி  (Persistence)

78.சாத்தியமாகின்ற  (Potential)

79.நம்பிக்கைக்குரிய  (Trustworthiness)

80.உறுதி (Confidence)

81.ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)

82.கண்ணியம்  (Diginity)

83.சாந்த குணம் (Gentleness)

84.அடக்கம்  (Moderation)

85.அமைதி (Peacefulness)

86.சாதுவான  (Meekness)

87.மீளும் தன்மை  (Resilience)

88.மௌனம் (Silence)

89.பொறுமை (Patience)

90.செழுமை  (Wealth)

91.சுய அதிகாரம் (Autonomy)

92.திருப்தி (Contentment)

93.மரியாதை (Honor)

94.மதிப்புமிக்க  (Respectfulness)

95.கட்டுப்படுத்துதல்  (Restraint)

96.பொது கட்டுப்பாடு  (Solidarity)

97.புலனடக்கம்  (Chasity)

98.தற்சார்பு  (Self Reliance)

99. சுயமரியாதை  (Self-Respect)

100.உருவாக்கும் கலை (Creativity)

101.சார்ந்திருத்தல்  (Dependability)

102.முன்னறிவு  (Foresight)

103.நற்குணம் (Goodness)

104.சந்தோஷம்  (Happiness)

105.ஞானம் (Knowledge)

106.நேர்மறை சிந்தனை  (Optimism)

107.முன்யோசனை  (Prudence)

108.விருந்தோம்பல் (Hospitality)