இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா..!

அம்மா..!இந்த சொல்லை உச்சரிக்காதஜீவன் இவ்வுலகில்லைவேற்று மொழிக்காரனிடம்தொற்றிக்கொள்ளும் தவிர்க்கமுடியாஆனந்த தமிழ்ச்சொல் இது.எழுத்து தளத்திலும்எந்த கவிஞரும் தவிர்க்கமுடியாஅற்புத கவிதை இது.அம்மா……!” திருமதி.பத்மாவதி சிங்கரவேல்”வெண்பா இயற்றிஅழகு கவிதை வடிப்பார்.அன்பால் உற்சாகமூட்டி -தன்உறவால் சாலை அமைப்பார்.அம்மா இயற்றும்பக்தி பாமாலையில்- அந்தசக்திக்கும் தமிழ்பக்தி வரும்.கருத்து பரிமாறலில்-எந்தகல்நெஞ்சனுக்கும் அன்பு சுரக்கும்.சந்தோஷத்திலும் துக்கத்திலும்வெற்றியிலும் தோல்வியிலும்விழிநீர் என்மடியில் வீழ்வதற்குள்ஆறுதலுக்கும் வாழ்த்துக்கும்என் அலைபேசி திரையில்அம்மாவின் பாசம் பளிச்சிடும் .அன்பாய் எடுத்துரைத்துபக்குவமாய் கடிந்துரைத்துஉரிமையாய் அறிவுரைக்கும்தமிழ் தாய் கொடுத்தஅன்புத்தாய் இவர் மட்டுமே..!அம்மா…!உங்கள் கைப்பக்குவத்தில்கவிதை நளப்பாகத்தில்எங்களுக்கு என்றுமேநீங்கள் இலக்கியச்சோறுஊட்டிவிட வேண்டும்.ஜுன் 4 அன்றுஉங்களுக்கு பிறந்தநாள்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா..!இன்னும் இன்னும்இனிமையாய் இளமையாய்ஆரோக்கியமாய் நிம்மதியாய்பல்லாண்டு வாழ்ந்துஎங்களை வழிநடத்தி நீங்கள்எப்போதும் ஆசிர்வதிக்க வேண்டும். அம்மா….