பூரம் நட்சத்திரம் 4ம் பாதம்:

பூரம் நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் 4ம் பாதம்.

இது ஜாதகர் சிம்ம லக்னம் இயங்கும் பொழுது
தொழில் சம்மந்தப்பட்ட, வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்ட,
எதிர்பாராத லாபங்கள் சம்பந்தப்பட்ட,
கேள்விகள் அதிகமாக இருக்கும்.

இவர்களுக்கு தொழில் சம்பந்தப்பட்ட,
மாற்றம், முதலீடுகள்,
எதிர்பாராத திடீர் யோகங்களை
கொடுக்கக்கூடிய காலகட்டமாக உள்ளது.
கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும்.

திடீர் பணவரவுகள்,
எதிர்பாராத ஜாதகருடைய முயற்சிக்கு பணம்,
வீடு வாங்குவது, வீடு கட்டுவது, தொழில் சம்பந்தப்பட்டது,
வேலை சம்பந்தப்பட்டது,
இந்த கேள்விகளுக்காக வருவார்.

ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும்.எதிர்பார்த்த நிகழ்வாக அமையும்.

அதேபோல்,
குழந்தைகள் சம்பந்தப்பட்டது,
வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் யோகத்தைக் கொடுக்கும்.

எதிர்பாராத இடங்களில் பிரச்சனைக்குரிய இடங்களில்
மனை அமைவது,
மூன்று சாலை சந்திக்கக் கூடிய இடங்களில் மனை அமைவது,
வெளியூர்,
வெளிநாடு,
இடங்கள் மூலமாக யோகத்தை தரக்கூடிய நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் 4ம் பாதம்.

ஒவ்வொரு ஜாதகங்களிலும் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் பார்க்கும் பொழுது கடந்த வருடங்களில் எல்லாருடைய ஜாதகங்களிலும் இந்த 108 நட்சத்திர பாதங்கள் சிறிதளவாக 30 (or) 40 (or) 50 நட்சத்திர பாதங்கள் கடந்து வந்திருக்கும்.

அந்த கால கட்டங்களில் என்ன நடந்தது என்று ஒவ்வொரு ஜோதிடரும் எழுதிப் பாருங்கள்.
அதை பார்த்தால் தான் உங்களுக்கு வாய்ப்பு வரும்.
எழுதாமல் எதையும் கற்றுக்கொள்ள முடியாது.

நான் சொல்லக் கூடிய விஷயம் லக்னாதிபதி நல்ல இருக்கணும். நட்சத்திராதிபதி நல்லா இருக்கணும். இதை பார்த்தால் போதும்.

உதாரணமாக ALP லக்னாதிபதி தனுசு லக்னமாக இருந்தால் குரு பலமாக இருக்க வேண்டும்.

கேது உடைய நட்சத்திரம் மூலம் நட்சத்திரமாக இருந்தால் கேது பலமாக இருக்க வேண்டும்.

குரு கேது பலமாக இருந்தால் 10 வருடம் நன்றாக இருக்கும்.

குருவும் சுக்ரனும் பலமாக இருந்தால் அடுத்த 4 வருடம் 5 மாதம் நன்றாக இருக்கும்.

குரு சூரியன் நன்றாக இருந்தால் அடுத்த ஒரு வருடம் நன்றாக இருக்கும்.

ஜாதகர் எப்படி இருக்கிறார்?
வருமானம் எப்படி இருக்கு?
ஒவ்வொன்றிற்கும் இப்படி 12 கட்டங்களை பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு நட்சத்திரத்தையும், நட்சத்திர புள்ளியையும் பாவக ரீதியாக பார்க்க வேண்டும்.
இப்படி ஆய்வு செய்யும் பொழுது
இப்படி நடக்கும்,
இப்படி நடக்காது,
என்று எல்லாவற்றையும் சொல்லி விடலாம்.

அதே போல் தான் பூரம் நட்சத்திரம் 4ம் பாதம் எதிர்பாரத வாய்ப்புகளை தரக்கூடியது.
எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம்தான்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://youtu.be/O85SwDRI3uY

பூரம் நட்சத்திரம் 3ம் பாதம்:

பூரம் நட்சத்திரம் 3ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையில் எந்த காலம் அதிர்ஷ்டமான காலம் என்பதை பார்க்கிறோம்.

10 வருடத்திற்கு ஒரு முறை உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்.
இல்லை நம்பரை மாற்றிகொள்ளுங்கள்.

அட்சய லக்னத்திற்கு
யோகமான வீடு,
யோகமான எண்,
யோகமான பெயர் அமைத்துக்கொள்ளலாம் தவிர நீங்கள் ஒரு தனிப்பட்ட பெயரை மாற்றும் பொழுது இந்த லக்னத்திற்கு,

உதாரணமாக மகர லக்னம் வரும்பொழுது 77 என்ற எண் எதிர்பார்த்த அளவு யோகத்தை கொடுக்காது.
இந்த எண்ணில் வண்டி வாங்கி 3 வருடம் வைத்திருந்தார்.
3 வருடம் பிறகு அந்த வண்டியில் பிரச்சினை உருவாகியது.

பெயர் மாற்றும் பொழுது,
எண்களை மாற்றும் பொழுது மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் 3ஆம் பாதம்.

ஜாதகருக்கு வேலை சம்பந்தப்பட்ட கேள்விகள்,
வருமானம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், ஜாதகருடைய போட்டிகள், போட்டி தேர்வு,
ஜாதகருடைய முயற்சி சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
சொத்து சம்பந்தப்பட்ட பிரிவினைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக கேள்வி கேட்க வந்திருப்பார்.

ஜாதகர் அவருடைய முயற்சிகளால் அவருடைய வாழ்க்கையில் பெரிய அளவில் யோகத்தை பெற முடியும்.

ஆனால் கிடைத்த வேலையை விட்டுவிட்டு இதைவிட பெரிய அளவில் எதிர்பார்த்து மாறாதீர்கள்.

இந்த காலகட்டங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான் உண்மை.

கண்டிப்பாக பூரம் நட்சத்திரம் 3ஆம் பாதம் கொஞ்சம் கவனமாக இருக்க கூடிய வேலை.

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

https://youtu.be/tDJZvYlQhgs

பூரம் நட்சத்திரம் 2ம் பாதம்:

பூரம் நட்சத்திரம் 2ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

ஜாதகத்தில் எந்த நேரம் யோகமான நேரம் என்பதைதான் பார்க்கப்போகிறோம்.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் 2ம் பாதம்.

சிம்ம லக்னம் பூரம் நட்சத்திரம் 2ம் பாதம் செல்லக்கூடிய காலகட்டத்தில்

குடும்பம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள், ஜாதகருடைய முயற்சி சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
ஜாதகருடைய தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
குழந்தைகளுடைய படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள்,

இந்த பரணி நட்சத்திரம்,
பூரம் நட்சத்திரம், பூராடம் நட்சத்திரம்
சம்பந்தப்பட்ட ஜாதகர் வரும்போது மருத்துவம் சம்பந்தப்பட்ட,
மருந்து சம்பந்தப்பட்ட,
நுணுக்கமான அறிவியல் ஆய்வுகள் சம்பந்தப்பட்ட கல்வி கற்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

ஜாதகருக்கு எதிர்பாராத நட்புகள், எதிர்பாராத யோகங்கள், கிடைக்கக்கூடிய நட்சத்திரபாதம்
பூரம் நட்சத்திரம் 2ம் பாதம்.

சில நண்பர்களால் யோகம் உண்டு. சில நண்பர்களால் பாதகம் உண்டு.
மிக மிக அதிகமாக இருக்கக்கூடிய காலகட்டமும் இதுதான்.

ஒரு பெண் குழந்தைக்கு பூரம் நட்சத்திரம் 2ம் பாதம் சென்றால் யோகத்தையும் கொடுக்கும். அவயோகத்தை கொடுக்கும்.
18 – 25 வயது பெண் குழந்தைகள் கவனமாக இருக்க கூடிய காலம்.

காதல் திருமணங்கள்,
குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
கடன் சம்மந்தப்பட்டது,
வருமானம் சம்மந்தப்பட்ட விஷயங்கள்,
நோய் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு ஜாதகர் வருவார்.

இதெல்லாம் பிரச்சனைகளை கொடுக்குமா? கொடுக்கும்.

பிரச்சனைகளை கொடுக்கும். 60% முதல் 70% பிரச்சனை இருக்கும்.
30% யோகமான காலம்.

சுக்ரன் பலமாக இருந்து கோச்சார கிரகங்கள் நகர்ந்தால் கண்டிப்பாக யோகத்தை கொடுக்கும்.

சிம்ம லக்னத்திற்கு 11ல் கோட்சார சுக்ரன் வந்தால் ஆய்வு சம்பந்தப்பட்ட கேள்விகாக வந்திருக்கிறார்களா? என்றால் ஆமாம் என்பார்.

இரண்டாம் திருமணம் சம்மந்தபட்ட விஷயங்களுக்காக வந்திருக்கிறீர்களா? என்றால் ஆமாம் என்பார்.

நுட்பமான கேள்விகளை கேட்க கூடிய நட்சத்திரம் பாதம்.

ஆனால் படிப்பு சம்பந்தப்பட்ட கேள்விகள்,
உடல் உபாயம் சம்பந்தப்பட்ட கேள்விகள் அதிகமாக வரும்.
வேலை இடம் விட்டு இடம் மாறலாமா என்ற கேள்வி வரும்.
இவை மூன்றும் தடைபட்ட விஷயமாக நடக்கும்.
கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

முடிவு செய்யும் பொழுது கவனமாக தனிப்பட்ட ஜாதகத்தை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

பூரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் பார்க்கும்பொழுது தனிப்பட்ட ஜாதகத்தை பார்த்து பலன் சொல்ல வேண்டும்.
இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://youtu.be/hmcWgGwZ59Q

ரேவதி நட்சத்திரம் 2ம் பாதம் :

ரேவதி நட்சத்திரம் 2ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் ரேவதி நட்சத்திரம் 2ம் பாதம்.

ரேவதி நட்சத்திரம் 2ம் பாதம் வரும்பொழுது ஜாதகருக்கு அந்த 1 வருடம், 1 மாதம், 10 நாள்
மிகப்பெரிய யோகத்தையும் ,
மிக பெரிய சந்தோசத்தையும், கொடுக்கக் கூடியது.

ஒரு நட்சத்திரத்திற்கு 500 வகையான பலன்கள் உள்ளது.

இந்தக் கேள்வி வந்தால் பதவி உயர்வு பட்டம்,புகழ், வீடு, செல்வாக்கு, அதிகாரம், ஆட்சி,சந்தோஷம், மகிழ்ச்சி லாபம், குடும்பம்,
குழந்தைகள் சம்பந்தப்பட்டது, வெளிநாடு சம்பந்தப்பட்டது,
இடங்கள் சம்பந்தப்பட்டது,
மனைவி மூலமாக பெயர் புகழ் சம்பந்தப்பட்டது,
கணவன் மனைவி உறவுகள் சம்பந்தப்பட்டது,
திடீர் யோகத்தை கொடுக்ககூடிய ஒரு சந்தோஷமான சூழ்நிலையை குறிக்கக்கூடிய காலகட்டம்.

எல்லாமே சந்தோஷம்.
எந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டுமோ அந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும்.

ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் ஜாதகர் ஒரு சந்தோஷமான மனநிலையில் இருப்பார்.
புதன் குரு பலம் பெற்றால் உங்களுக்கு அதீத யோகம்.
ஒரு சந்தோஷமான காலகட்டம் ரேவதி நட்சத்திரம் 2ம்பாதம்.

நன்றி. வணக்கம்.

https://youtu.be/NrUFnTboV40