பூரம் நட்சத்திரம் 4ம் பாதம்:

Spread the love

பூரம் நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் 4ம் பாதம்.

இது ஜாதகர் சிம்ம லக்னம் இயங்கும் பொழுது
தொழில் சம்மந்தப்பட்ட, வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்ட,
எதிர்பாராத லாபங்கள் சம்பந்தப்பட்ட,
கேள்விகள் அதிகமாக இருக்கும்.

இவர்களுக்கு தொழில் சம்பந்தப்பட்ட,
மாற்றம், முதலீடுகள்,
எதிர்பாராத திடீர் யோகங்களை
கொடுக்கக்கூடிய காலகட்டமாக உள்ளது.
கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும்.

திடீர் பணவரவுகள்,
எதிர்பாராத ஜாதகருடைய முயற்சிக்கு பணம்,
வீடு வாங்குவது, வீடு கட்டுவது, தொழில் சம்பந்தப்பட்டது,
வேலை சம்பந்தப்பட்டது,
இந்த கேள்விகளுக்காக வருவார்.

ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும்.எதிர்பார்த்த நிகழ்வாக அமையும்.

அதேபோல்,
குழந்தைகள் சம்பந்தப்பட்டது,
வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் யோகத்தைக் கொடுக்கும்.

எதிர்பாராத இடங்களில் பிரச்சனைக்குரிய இடங்களில்
மனை அமைவது,
மூன்று சாலை சந்திக்கக் கூடிய இடங்களில் மனை அமைவது,
வெளியூர்,
வெளிநாடு,
இடங்கள் மூலமாக யோகத்தை தரக்கூடிய நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் 4ம் பாதம்.

ஒவ்வொரு ஜாதகங்களிலும் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் பார்க்கும் பொழுது கடந்த வருடங்களில் எல்லாருடைய ஜாதகங்களிலும் இந்த 108 நட்சத்திர பாதங்கள் சிறிதளவாக 30 (or) 40 (or) 50 நட்சத்திர பாதங்கள் கடந்து வந்திருக்கும்.

அந்த கால கட்டங்களில் என்ன நடந்தது என்று ஒவ்வொரு ஜோதிடரும் எழுதிப் பாருங்கள்.
அதை பார்த்தால் தான் உங்களுக்கு வாய்ப்பு வரும்.
எழுதாமல் எதையும் கற்றுக்கொள்ள முடியாது.

நான் சொல்லக் கூடிய விஷயம் லக்னாதிபதி நல்ல இருக்கணும். நட்சத்திராதிபதி நல்லா இருக்கணும். இதை பார்த்தால் போதும்.

உதாரணமாக ALP லக்னாதிபதி தனுசு லக்னமாக இருந்தால் குரு பலமாக இருக்க வேண்டும்.

கேது உடைய நட்சத்திரம் மூலம் நட்சத்திரமாக இருந்தால் கேது பலமாக இருக்க வேண்டும்.

குரு கேது பலமாக இருந்தால் 10 வருடம் நன்றாக இருக்கும்.

குருவும் சுக்ரனும் பலமாக இருந்தால் அடுத்த 4 வருடம் 5 மாதம் நன்றாக இருக்கும்.

குரு சூரியன் நன்றாக இருந்தால் அடுத்த ஒரு வருடம் நன்றாக இருக்கும்.

ஜாதகர் எப்படி இருக்கிறார்?
வருமானம் எப்படி இருக்கு?
ஒவ்வொன்றிற்கும் இப்படி 12 கட்டங்களை பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு நட்சத்திரத்தையும், நட்சத்திர புள்ளியையும் பாவக ரீதியாக பார்க்க வேண்டும்.
இப்படி ஆய்வு செய்யும் பொழுது
இப்படி நடக்கும்,
இப்படி நடக்காது,
என்று எல்லாவற்றையும் சொல்லி விடலாம்.

அதே போல் தான் பூரம் நட்சத்திரம் 4ம் பாதம் எதிர்பாரத வாய்ப்புகளை தரக்கூடியது.
எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம்தான்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://youtu.be/O85SwDRI3uY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *