MARRIAGE MATCHING ALP METHOD | MARIIAGE MATCHING SOFTWARE | ASTROLOGER MOORHTY.

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அட்சய லக்ன பத்ததி முறையில் திருமணப்பொருத்தம்.
அட்சய லக்ன பத்ததியை எந்த அளவுக்கு ஆய்வு செய்கிறீர்களோ, அந்த அளவு எளிமை.

திருமண பொருத்தம் அவ்வளவு சாதாரணமாக எடுக்க கூடாது.
திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.
இருக்கக்கூடிய ஜாதகத்தில் திருமண பொருத்தம், நட்சத்திரம், திருமண பலன் பார்க்கிறோம்.
ராசி கட்டம் பார்க்கிறோம்.
நிறைய வகைகளில் திருமண பொருத்தம் பார்க்கிறோம்.
இந்த திருமண பொருத்தங்கள் ஒருவருடைய வாழ்க்கையில் அதீதமான நல்லது, கெட்டது காலகட்டங்களில் சூழ்நிலைகள் மாறி போயிருக்கும்.

ஏன்னா? அந்த கால கட்டங்களில் உள்ளபொறுமைகள் ,தன்மைகள் இந்த கால கட்டங்களில் இல்லை
என்ற விஷயத்தை பார்க்கணும்.
ஒவ்வொரு கால கட்டமும் நமக்கு நிறைய படிப்பறிவு கொடுக்கிறது, நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்கிறது.

ஒவ்வொரு கால கட்டமும் நிகழ்வுகள் மாறிக்கொண்டே இருக்கின்றது.

கிரகத்தில் தன்மைகளைப் பொறுத்து நம்முடைய வலிமைகளை சொல்லணும்.

அந்த காலகட்டத்தின் ஒரு பரிணாம வளர்ச்சிதான் அட்சய லக்ன பத்ததி.

திருமண காலகட்டம் என்பது பெண்ணுடைய அட்சய லக்னத்திற்கும் ஆணுடைய அட்சய லக்னத்திற்கும் 10 வருடம் எப்படி உள்ளது என்பதை பார்த்தாலேபோதும்.

பெண்ணுடைய அட்சய ராசிக்கும், ஆணுடைய அட்சய ராசிக்கும்,உடல் பொருத்தம் எப்படி உள்ளது மனப் பொருத்தம் எப்படி உள்ளது என்பதை பார்க்கிறோம்.

குறைந்தது 30 வருடத்திற்கு பார்த்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கண்டறியலாம்.
மூன்று கட்டங்கள், 3 பாவகங்கள் பார்க்கணும்.
பெண்ணுடைய 30 வருடம் எப்படி இருக்கும், ஆணுடைய 30 வருடம் எப்படி இருக்கும், என்பதை பார்க்கணும்.

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தசா நாதன், புத்தி நாதன், ஆண் அட்சய லக்னம், பெண் அட்சய லக்னம், அட்சயராசி இந்த விஷயங்களை வைத்து கோச்சார கிரகங்களையும் வைத்து சொன்னால் மட்டும் போதும்.

நல்லது, கெட்டது ,பொறுமை பெண்ணுக்கும் வரும்பொழுது
திருமண வாழ்க்கை நல்லதொரு வாழ்க்கையாக அமையும்.

நன்றி ,வணக்கம்.

குழந்தை பாக்கியம்

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

ஒவ்வொரு ஜாதகத்திலும் எப்போது யோகமான காலம் என்பதை பார்க்கிறோம்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை நான் ஏன் உருவாக்கினேன் என்றால்?
ஒரு காலகட்டத்தில் ஜோதிடம் என்பது எல்லாரும் ஒரு பொதுவான,
ஒரே மாதிரியான பலன் சொல்ல வேண்டும்.
அந்தக் காலகட்டத்தில் அது நடக்க வேண்டும்.

அட்சய லக்ன பத்ததி என்பது
அவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு,
இங்கு இருக்கக் கூடிய நிகழ்வுகள்,
ராசி கட்டத்தில் உண்மையிலேயே அந்த நிகழ்வு இருக்கா என்பதை பார்க்க வேண்டும்.

குழந்தை பற்றிய கேள்வி என்றால்
5ம் வீடு பலமாக இருக்க வேண்டும்.

ஐந்தாம் வீடு பலமாக இல்லை என்றால்
ஆய்வுகள் படி இந்த குறைபாடு இருந்தால் அது சரியான ஜாதகம் தான் என்பதை கண்டு பிடிப்போம்.

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு வயதிற்கும் லக்னம் நகரும் பொழுது
ஐந்தாம் அதிபதி எப்படி இருக்கு?
ஐந்தாம் வீட்டு நட்சத்திர அதிபதி எப்படி இருக்கு?
ஒவ்வொரு ஜாதகத்திலும் பலமாக பார்க்க வேண்டும்.

4ம் வீடு பாதிப்பு கேட்டால் 4ம் வீடே லக்னமாக பாவிப்பார்கள்.
4ம் வீடு தன்மைகள் எப்படி இருக்கு,
4ம் வீடு நட்சத்திர அதிபதி எப்படி இருக்கு
லக்னாதிபதி எப்படி இருக்கு,
நட்சத்திர அதிபதி எப்படி இருக்கு,
ALP லக்னாதிபதிக்கும்,
4 ஆம் வீட்டு லக்னாதிபதிக்கும் உள்ள தொடர்பு என்ன,
என்பதை ஆய்வு செய்யும் பொழுது
யார் யாருக்கு பிரச்சனை?
எதனால் பிரச்சனை?
என்பதை பார்க்க வேண்டும்.

அட்சய லக்ன பத்ததியில்
108 நட்சத்திர பாதமும்,
108 நவாம்ச பாதமும் தெரிந்திருக்கவேண்டும்.

ஒவ்வொரு லக்னமும் நகரும் பொழுது 12 லக்னமும் நகரும்.

நன்றி, வணக்கம்.

செவ்வாய் தோஷம்

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையில் எந்த காலம் யோகமான காலம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிடமுறையில் ஜென்ம லக்னத்திற்கு 1, 2, 4, 7, 8, 12ல் செவ்வாய் இருந்தால் தோஷம் என்பதை எடுத்துக் கொள்வோம்.

ஆனால் ALP லக்னத்திற்கு
1, 2, 4, 7, 8, 12 ல் இன்றைய லக்னத்திற்கு,
இன்றைய வயதுடைய லக்னத்திற்கு,
நகரும் லக்னத்திற்கு 1, 2, 4, 7 ,8 , 12ல் செவ்வாய் இருந்தால் எதிர்பார்த்த யோகத்தை கொடுக்காது.

உடல் உபாதைகள் எண்ணங்களை மாற்றிக் கொடுக்கும்.
வேகம், கோபம், அவர்களுடைய தாக்கங்கள் அதிகமாக இருக்கும்.
தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும்.

செவ்வாய் என்பது இரத்தம்,
அதனால் இரத்தம் சார்ந்த உணர்வுகள் அதிகமாக தூண்டப்படும் பொழுது ஜாதகருக்கான வாய்ப்பை தட்டிப் பறிக்கும்.

சிம்ம லக்னத்திற்கு 4ம் ஆதிபத்தியம் பெறக்கூடிய செவ்வாய், சிம்ம லக்னம் ALP ஆக போகும் பொழுது 9ம் அதிபதியும் செவ்வாய் ஆக வரும்.

இந்த செவ்வாய் 1, 2, 4 ,7, 8, 12ல் இருந்தால் தாய், தந்தை மூலமாகவே ஜாதகருக்கு திருமணம் தடையாக இருக்கும்.

அட்சய லக்ன பத்ததி முறையில் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது 100% கண்டிப்பாக பலன் சொல்ல முடியும்.

மணமகன் மணமகள் யாராவது ஒருவருக்கு பொருத்தம் பார்த்தால் கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கையில் வழிகாட்ட முடியும்.

ஜென்ம லக்னம் என்பது நான் பிறக்கும் போது உள்ள லக்னம்.
ஆனால் திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது இன்றைய லக்னம் தான் பார்க்க வேண்டும்.

பிறக்கும்போது உள்ள மனம், உடல்,….. எல்லாமே நாம் வளர வளர மாறும். அதுதான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் நான் சொல்வது.

28 வயதில் நம்முடைய புத்தி,
நம்முடைய மனம், உடல், எல்லாமே வளர்ந்திருக்கும்.
அதை தான் பார்க்க வேண்டும்.
அதுதான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை.

நன்றி, வணக்கம்.