கால்வலி உள்ளது (உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை )

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். எல்லாருடைய கேள்வியும் எனக்கு எப்படி இருக்கும் என்பதை விட உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிகமாக வராமல் உடல் சார்ந்த பிரச்சனைகளோ, மனம் சார்ந்த பிரச்சனைகளோ. உடலில் ஒரு பிரச்சனை வரும் பொழுது அது மனசாக மாறும். மனதில் ஒரு பிரச்சனை வரும் பொழுது அது உடலாக மாறும். கண்டிப்பாக மிக மிக கவனமாக இருக்க வேண்டும். உடல் வேறு மனம் வேறு இல்லை. கண்டிப்பாக மிக மிக கவனமாக ஆய்வு பண்ணனும். உடலில் ஒரு காயம் ஏற்பட்டால் அந்த மனம் எந்த ஒரு வேலையும் செய்யாத அளவுக்கு சிதைக்கப்படும். ரொம்ப ஆழ்ந்த போராட்டத்தில் இருக்கும். அதே போல் மனதில் ஒரு வலி வந்தால் எனக்கு கஷ்டமாக இருக்கு, பயமாக இருக்கு,துன்பமாக இருக்கு என்றால் அது இந்த உடலை சோர்வடைய வைக்கும். மருத்துவ அஸ்ட்ராலஜி அட்சய லக்ன பத்ததி முறையில் ஒரு புத்தகம் எழுதிட்டு இருக்கேன். இந்த இந்த காலகட்டங்களில் இந்த இந்த லக்ன புள்ளி வரும்பொழுது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உடல் வலி, மேல் வலி, சின்ன பிரச்சனையாக இருந்தாலும் பெரிய பிரச்சனையாக இருக்கலாம். ஏன்னா? ஆறாம் வீடு ராகு உடைய சம்பந்தப்பட்ட இடங்கள் வைரஸ்பீவர் அதிகமாக பாதிக்கும். 8ம் வீடு 6ம் வீடு தொடர்பாக இருந்தால் இன்னும் அதிகமாக பாதிக்கும். கோட்சார கிரகங்களும், ஜெனன கால கிரகங்களும்,6,8 ஆக வரக்கூடிய காலகட்டங்களில் லக்ன புள்ளி ராகுவோடு சம்பந்தப்பட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதனாலேயே மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் கூட இருக்கு ஒரு சில ஜாதகங்களில், கண்டிப்பாக மிக மிக கவனமாக இருக்கணும். அதாவது நாம் முன்கூட்டியே அதற்கான மருந்து மாத்திரைகள் அதற்கான வழி முறைகளை எடுத்துக் கொள்வது மிக முக்கியமாக இருக்கணும். அட்சய லக்ன பத்ததி படித்த நண்பர்களிடம் மட்டும் கேளுங்கள் கண்டிப்பாக வாழ்க்கையில் நிறைய நிகழ்வுகள் உங்களால் புரிந்து கொள்ள முடியும். நன்றி

https://youtu.be/It__sRa3j0E

உங்களுக்கு செவ்வாய் புதன் சேர்க்கை உள்ளதா காதல் திருமணம்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு நாளும் ஒரு ஜாதகத்தில் எந்தக் காலம் யோகமான காலம் என்பதைப் பார்க்கிறோம். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை உங்கள் ஜாதகத்தை, உங்களுக்கு வேண்டியவர்களின் ஜாதகத்தை இந்த வீடியோவின் பின்பகுதியில் பதிவு செய்யுங்கள். கண்டிப்பாக ஒரு நாள் உங்கள் ஜாதகத்தை பற்றி பேசலாம். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் வயதின் லக்னம், நம்முடைய லக்னம் வளரும், நகரும் என்பது தான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை. உங்கள் ஜாதகத்தில் பிறந்த நேரம் என்பது 10, 20 நிமிடம் மாறி இருக்கும். பிறந்த நேரத்தை சரி செய்வதுதான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் மிக முக்கியமான ஒரு விஷயம். ஒவ்வொரு நிமிடம் மாற்றும் பொழுது 45 நாள் ஒரு வருடம் வரை மாறுவதற்கு வாய்ப்பு இருக்கு. ஏன்னா? லக்ன சந்தியில் வரும்பொழுது மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணும். கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை எடுத்து திருமணம் எப்பொழுது நடந்தது, இடம் எப்ப வாங்குனிங்க, வெளிநாடு எப்ப போனீங்க, படிக்கக்கூடிய காலகட்டத்தில் என்ன நிகழ்வு நடந்தது, ஏன்னா? 20 வருடம் நடந்த சுப,அசுப நிகழ்வுகளை நீங்கள் ஆய்வு பண்ணனும். ஜாதகம் பார்ப்பது என்பது உங்களுடைய வாழ்க்கையில் எளிமையாக நீங்கள் உணர முடியும். ஆனால் கடந்த கால நிகழ்வுகள் உங்களுடைய ஜாதகத்தில் இருந்தால் தான், நீங்கள் வருங்காலத்தில் சொல்லக்கூடிய பலன்கள் உங்களுக்கு யோகத்தை கொடுக்கும். பிறப்பு லக்னத்தை சரி செய்வது மிக மிக முக்கியமானது இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில், ஏன்னா? ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் இங்க நேரம் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு நிமிடத்திற்கும் 45 நாள் time மாறிக்கொண்டே இருக்கும். இன்றைக்கு நடக்கும்னு சொல்லுவோம் 45 நாள் கழித்து நடக்கும், இப்படி மாறும்பொழுது மிக மிக கவனமாக பிறப்பு நேரத்தை சரி செய்யணும். வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் 1992 ல் திருமணம் நடந்திருக்கு Sir? அந்த திருமணத்திற்கும் என்னுடைய ஜாதகத்திற்கும் ஒத்து போகிறதானு கேளுங்க, நீங்கள் எப்பொழுதும் இந்த மாதிரி நிகழ்வுகளை மறுபடி மறுபடி ஆய்வு செய்யும் பொழுது ஒரு யோகத்தை கொடுக்கக்கூடிய அமைப்பு உண்டு. குறிப்பிட்ட நிகழ்வுகளை எடுத்துக்கொண்டு சரியாக வருதானு பாருங்கள். நம்முடைய ஜாதகத்தை வைத்து கடந்தகாலத்தை ஆய்வு செய்தால் கண்டிப்பாக ஒவ்வொரு ஜாதகத்திலும் இருக்கக்கூடிய ஒரு துல்லியமான அமைப்புகளை , யோகமான காலங்களை கணக்கீடு செய்ய முடியும். ஜாதகம் பார்க்கும் பொழுது அட்சய லக்ன பத்ததியில் 10 நிமிடத்திற்கு ஒரு கிரகம் இயக்கும்னு சொல்லிருக்கோம். அடுத்து 1.30 மணி நேரம் ஒரு கிரகம் இயக்கும். அடுத்து 13 1/2 மணி நேரம் ஒரு கிரகம் இயக்கும். அடுத்து 5 நாட்களுக்கு ஒரு கிரகம், அடுத்து 45 நாட்களுக்கு ஒரு கிரகம் அடுத்து 405 நாட்களுக்கு ஒரு கிரகம் ஒரு லக்ன புள்ளியை இயக்கும். இந்த மாதிரி பிரிவுகளுக்கு பிறப்பு நேரத்தை சரி செய்வது மிக முக்கியம். அப்பொழுதான் ALP முறையில் யார் பார்த்தாலும் ஒரே பலன் வரும். இது தான் அட்சயலக்ன பத்ததி ஜோதிட முறை. நன்றி

#அட்சய_லக்னம்_பத்ததி_ஜோதிடம்

#ஜோதிடம்

#அட்சய_லக்ன_பத்ததி_புத்தகம்

#அட்சய_லக்ன_பத்ததி_pdf

#ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156

https://youtu.be/Pyhgpr9Bfks

மீனராசி நேயர்களே உங்களுக்கு வெளிநாடு யோகம் உண்டு

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். வெளிநாடு வாய்ப்பு மீன லக்னம் மீன ராசிக்கு கிடைக்குமா? நீர் ராசியான கடகம் விருச்சிகம் மீனம் ராசி ALP லக்னம் மீன லக்னம் போனால் இந்த காலகட்டங்கள் கண்டிப்பாக வெளிநாடு போக வாய்ப்பு உள்ளது. பலமாக முயற்சி செய்யுங்கள் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள். நேரத்தையும் காலத்தையும் சரியான நேரத்தில் பயன்படுத்தினால் உங்களுக்கு நினைவுகள் செயல்கள் அதனுடைய எண்ணங்கள் தூண்டப்பட்டால் உங்கள் ஜாதகத்தில் அதற்கான யோகம் உண்டு. வெளிநாடு போகலாமா என்று யார் கேட்பார்கள் என்றால் வெளிநாட்டு யோகம் இருந்தால் தான் கேட்பார்கள். போவதும் போக முடியாததும் அவருடைய ஜாதகத்தில் பாவகதன்மை. உங்களுக்கு வீடு வாங்கலாமா என்று ஆசை வந்தால் ,வீடு வாங்க கூடிய அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இருக்கு. எல்லாரும் ஆசைப்படுகிறார்கள் நடந்திடுமா? நடந்துவிடாது. உங்களுடைய எண்ணங்கள் வலிமையாக இருந்தால் கண்டிப்பாக அது தான் உங்களுடைய ஜாதகத்தில் இருக்கும். அதைத்தான் யோசிக்க முடியும் அதைத்தான் செயல்படுத்த முடியும். அதுதான் வாழ்க்கை. வாழ்க்கையை வெற்றி பெற வைக்க முடியும். நீங்கள் அந்த அளவிற்கு ஆழமாக நம்புங்கள் உங்கள் வாழ்க்கை வெற்றியடையும். மீன லக்னம் மீன ராசி குரு பகவான் பலமாக இருக்கிறது வெளிநாடு போகலாம். 12ம் அதிபதி நட்சத்திரம். உத்திரட்டாதி நட்சத்திரம் வந்தால் எளிதாக வெளிநாடு போகலாம். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நகர்ந்து கொண்டே இருப்பார்கள். ஒரே இடத்தில் இருக்க மாட்டார்கள் நகர்ந்து கொண்டே இருக்கணும் அவர்களுடைய வாழ்க்கை. அப்பொழுதுதான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். நடந்துகொண்டே பேசுபவர்கள் வாழ்க்கையில் ஜெயித்து விடுவார்கள். அந்த மாதிரி அமைப்பு உள்ளவர்கள் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள். பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் மீன லக்னம் ALP லக்னமாக வளரும் லக்னமாக உங்களுக்கு வந்தால் கண்டிப்பாக வெளிநாட்டு யோகம் உண்டு. அதேபோல் உங்களுடைய ஜாதகத்தில் விருப்பப்பட்டு ஆசைப்பட்டு கேட்டால் அதுதான் மனதில் தோன்றும். வெளிநாடு செல்ல போறிங்க. வீடு வாங்க போறீங்க. திருமண காலம் வந்துட்டுவிட்டது. முயற்சி எடுத்து எதுவும் உடனே நடந்துவிடாது. கண்டிப்பாக உங்கள் எண்ணங்களை ஆழ்மனதில் பலமாக பதிய வையுங்கள். உங்களுடைய குறிக்கோள்கள் உங்களுடைய இலக்குகளை திட்டமிட்டு செய்யுங்கள். நேற்று ஒரு நண்பரிடம் சொன்னேன் மிகப் பெரிய சாதனையாளர் மிகப்பெரிய வெற்றியாளர் ஆனால் 2, 3 துறைகளில் சென்றதால் மிகப்பெரிய வெற்றி பெற முடியவில்லை. நான் சொன்னேன் மரம் நான்காக இருந்தால் கிளை பலமாக இருந்தால் நீங்கள் வெற்றி பெற்று இருப்பீர்கள். நான்கு மரத்தில் நான் ஒரே நேரத்தில் ஏற முடியாது. அதுவே ஒரே மரத்தில் பல கிளைகள் இருந்தால் ஜெயிக்க முடியும். 4 மரம் ஒரு மனிதன் எப்படி ஏற முடியும், எப்படி ஜெயிக்க முடியும். நீங்கள் செய்வது ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையாக இருந்தால் வெற்றிபெறுவது எளிமையாக இருக்காது. வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரே குறிக்கோள். அந்த குறிக்கோளை ஆய்வு செய்து பாருங்கள். உங்களுடைய ஜாதகத்தில் ஒரு விஷயம் இருந்தால் தான் உங்களுடைய மனதில் சில விஷயங்கள் தோன்றும். மனதில் தோன்றுவதை ஆழ்ந்து சிந்தித்து உங்கள் இலக்குகளை அடைய வேண்டும். நன்றி.

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_1pdf

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_3

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_2

#ALP_astrology_contact_alpastrologynumber_9786556156

https://youtu.be/OvHMszzL6aI

2ல் ராகு 8ல் கேது கவனமாக திருமணம் செய்யவேண்டும்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஜோதிடம் என்பது ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையில் பங்கு வகிப்பது எப்படி என்றால், காலையில் நாம் எழுந்தவுடன் இன்றைய ராசி பலன், நம்முடைய ராசிக்கு அன்றைய நாளில் தினபலன் பார்க்கிறோம். நாம் ஒவ்வொரு நாளும் தினபலன் பார்க்கிறோம் அதை என்றைக்காவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைபட்டு இருந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை மாறும். உங்கள் வாழ்க்கை வளமாக போகிறது. வாழ்க்கை புரிதலுக்கான காலம் வரப்போகிறது. உங்கள் வாழ்க்கையில் நீங்களே விளக்கேற்ற கூடிய அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இருக்கு என்பதை நீங்களே உணரனும். நம் வீட்டில் ஜோதிட புத்தகம் இருக்கும் பெயர், ராசி, திருமண பொருத்தம் புத்தகம் இருக்கும் இந்தப் புத்தகங்களை ஒரு 15 நிமிடம் படித்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு ஏதாவது நடந்திருக்கா என்பதை பாருங்கள். தினப்பலன் எப்படி சொல்கிறோம், கோச்சார கிரகங்கள் எப்படி எல்லாம் நகர்கிறது, சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன், சனி, செவ்வாய், ராகு கேது இந்த கிரகங்கள் எப்படி நகர்கிறது, வான் வெளி மண்டலத்தில் இருந்து வரக்கூடிய ஒளிக்கற்றைகள் மனிதனுடைய வாழ்க்கையை எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதை அழகாக புரிந்துகொள்ளுங்கள் நாளடைவில் உங்களை அறியாமல் இந்த கிரகங்கள் உடைய தன்மையை உணரும் பொழுது, ஆமாம் சார் இந்த காலகட்டம் எதிர்பார்த்த மாதிரி அமைப்பு இல்லை அதை உணரணும், நீங்கள் புரிந்து கொள்ளனும், ஜோதிட புத்தகத்தை வாங்கிப் படிங்கள். புரியவில்லை என்றாலும் படிங்கள், எப்பொழுதும் விளக்கு ஏற்றுங்கள், சாமி கும்பிடுங்கள், வாசலில் இந்த பொருளை கட்டுங்கள் இது எல்லாம் அந்த காலத்தில் தாத்தா பாட்டி சொல்லிக்கொடுத்த ஒரு விஷயம். வீட்டில் ஏதாவது ஒரு இயந்திரம் வைத்திருப்போம், ஏதாவது சாமி பூஜை செய்வோம், எந்த சாமி போட்டோவாக இருந்தாலும் உங்களுக்கு விருப்பமாக இருந்தால் வையுங்கள். சாமி கும்பிடுங்கள், சரணாகதி அடையுங்கள். கிரகங்களும் கடவுள்களும் தேவதைகளும் நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கு வழி காட்டுவார்கள். தெய்வங்கள் எல்லாம் உங்களுடைய வாழ்க்கையை வழி காட்டும். அதில் மாற்று கருத்து கிடையாது. இல்லை இந்த தெய்வத்தை வைத்து வணங்க பயம் உள்ளது என்றால் அதைக் கொண்டு கோயிலில் வைத்து விடுங்கள். இந்த இயந்திரம் கொடுத்தார்கள். அதை வைத்து வணங்க பயம் உள்ளது என்றால் அதையும் வைக்காதீர்கள் கோவிலில் கொண்டு வைத்து விடுங்கள். உங்கள் மனம் புரியவில்லை என்றால் உங்கள் மனம் பயப்பட்டால் கண்டிப்பாக அதை பக்கத்தில் உள்ள கோவிலில் வைத்து விடுங்கள். நீங்கள் அந்த ஜோதிடத்தை படித்துக் கொண்டால் உங்கள் வீட்டில் விளக்கேற்றி இருளை அகற்றுவது போல் உங்களுடைய மன இருளை அகற்றுவதற்க்கு ஜோதிடம் என்பது உங்களுடைய வாழ்க்கையை வழிகாட்டும். இதைப் படிக்கும் பொழுது உங்களுடைய தன்மைகளை உணர முடியும் அதான் படிக்க சொல்கிறேன். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு காரணிகள் இருக்கு. அதில் ஜோதிடமும் ஒரு அங்கம்தான். அதைப்பற்றி தெரிந்து கொண்டால் அந்த ஜோதிடத்தின் மூலமாக பல அங்கங்கள் உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கும். நன்றி

#அட்சய_லக்ன_பத்ததி_Alp_astrology_method

#alp_astrology_software_free_download

#download_ALP_Astrology

#alp_Astrologer

#ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156

https://youtu.be/bQI7m3AFOKY

செக்கு இருந்த இடத்தில் வீடு கட்டலாமா

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். கேள்வி ஊரில் செக்கு இருந்த இடத்தை வாங்கக்கூடாது என்கிறார்கள். ஏன் இது வாங்கக் கூடாதா? வாங்கலாமா? ஊரில் செக்கு இருந்த இடத்தை யாரும் வாங்க மாட்டார்கள். குறிப்பிட்ட ஒரு சில நபர்கள் தான் வாங்குவார்கள். செக்கு இருந்த இடத்தில் வீடு கட்டினால், செக்கு சுழலும் கஷ்டப்படும் அந்த மாதிரி இடத்தில் வீடு கட்டினால் ஒரு சந்தோஷமான நிலையை குறிக்காது. அதை வாங்க மாட்டார்கள். அந்த இடத்தில் வீடு கட்டமாட்டார்கள். செக்கு இந்த இடத்தில் இருந்தது, இந்த இடத்தில் இல்லை என்று தெரிந்துகொள்ள அந்த நிலத்தை சுற்றி சுத்தி செய்ய வேண்டும். சுத்தி என்பது மண்ணில் இருக்கக்கூடிய சல்லிய தோஷத்தை நீக்குவது. அந்தக் காலத்தில் நவதானியங்களை தெளித்து விட்டு உழுவார்கள். சிலபேர் அந்த இடத்தில் மாடு கட்டிமையாக்குவார்கள். அதுபோல் செய்து வந்த இடத்தை சுத்தி செய்வார்கள். சுத்தி என்பது அந்த இடத்தை சமநிலைப்படுத்துவது சாந்தப்படுத்துவது,அந்த இடத்தை சுத்தப்படுத்துவது. இன்றைக்கு நாம் அவசர உலகத்தில் இருக்கிறோம். அந்த இடத்தை சுற்றி எலும்புகூடோ அல்லது புதைகுழியோ ஏதாவது ஒரு பிரச்சனை அந்த இடத்தில் இருந்தால் ALP க்கு 4ம் இடத்தில் ராகு சம்பந்தப்பட்டு இருந்தால் கண்டிப்பாக வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும். இதை அட்சய லக்ன பத்ததி ஜோதிட மென்பொருளில் இரண்டு பகுதியாகப் பிரித்து உள்ளேன். வீடு சம்பந்தப்பட்ட கேள்வி என்றால் 4ம் பாவகத்திற்கு மேல் சிகப்பு கலர் இருக்கா? 4ம் பாவகத்திற்கு கீழ் சிகப்பு கலர் இருக்கா? 4ம் பாவகத்திற்கு கீழ் சிகப்பு கலர் இருந்தால் அந்த வீட்டில் வாஸ்து சம்பந்தப்பட்ட குறைபாடு இருக்கும். வாஸ்து சம்பந்தப்பட்ட நிபுணர்களை அழைத்து சரி செய்யணும். ஜாதகருக்கு நேரம் நன்றாக இருக்கும்பொழுது வாஸ்து சம்பந்தப்பட்ட நிபுணர்களை அழைத்து சரியான வழிகாட்டுதல் கொடுப்பாங்க. ஜாதகம் ,தசா புத்தி நன்றாக இருந்தால் இதை மாற்றி வையுங்கள் என்று சொன்னால் உடனே மாற்றுவார்கள். அதில் ஒரு மாற்றம் உண்டாகும் அந்த மாற்றத்தை பிடித்து ஏணிப்படியாக அந்த ஜாதகர் முன்னேறுவார். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். அதனால் மனை என்பது மிக மிக பார்த்து சதுரமாக இருக்கிறதா, செவ்வகமாக இருக்கிறதா, நீள் வடிவமா,வடக்கும் தெற்கும் அருங்கோணம் ஆக இருக்கா, ரொம்ப ரொம்ப கவனமாக பார்க்கணும். கண்டிப்பாக மனை பார்க்கும்பொழுது நல்ல ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து பார்க்க வேண்டும். அந்தக் காலத்தில் நிலத்தில் தோஷம் இல்லாமல் வீட்டில் இருக்கக்கூடிய மற்ற பொருள்கள் மீது இருக்கும். பொருள்கள் மீது இருக்கும் தோஷம் மற்றொருவரிடம் தானமாக கொடுக்கும் பொழுது அதன் பிறகு அந்த ஜாதகர் சந்தோஷமாக இருப்பார். கண்டிப்பாக இதை உணரவேண்டும் உணரக் கூடிய அமைப்பு உள்ளது. உங்கள் ஜாதகத்தில் இப்படி அமைப்பு இருந்தால் அதை நாம் தான் மாற்றிக் கொள்ள வேண்டும். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை கண்டிப்பாக எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். Alp Astology வீடியோஸ் நிறைய உள்ளது. பாருங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வீட்டுக்கு ஒரு ஜோதிடர் உருவாக வேண்டும். நன்றி.

#அட்சய_லக்ன_பத்ததி_book pdf

#ALP_Astrology_English_class

#ALP_Astrology_Basic_Training_Classes

#ALP_Astrology_apps_on_google_play

#ALP_astrology_contact_Alpofficenumber_9786556156

https://youtu.be/Mw-8lbxUXu4