திருவாதிரை நட்சத்திரம் 1 ம் பாதம்:

திருவாதிரை நட்சத்திரம் 1 ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையில் ஏதாவது சந்தோஷமான நிகழ்வு நடந்து விடாதா என்ற கேள்வி வரும்.

நான் எப்படி இருப்பேன், என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.

ஒவ்வொரு நட்சத்திர பாதமும் 405 நாள் இயங்கும். 405 நாள் 45 நாள் இயக்கும். 45 நாள் 5 நாளை இயக்கும்.
அந்த 5 நாள் 13 மணி 20 நிமிடம் இயங்கும்.
13 மணி 20 நிமிடம் 1 1/2 மணி நேரம் இயங்கும்.
11/2 மணி அடுத்த 10 நிமிடத்தை இயக்கும்.

பத்து நிமிடத்தை ஒரு கிரகம் இயக்கினால் ஒவ்வொரு பாவகத்துக்கும் 12 பாவகமாக பிரித்து
ஒவ்வொன்றுக்கும் 10 நிமிடம் தனித்தனியாக கிரகம் இயங்கும்.

இந்த அட்சய நட்சத்திர புள்ளிக்கு
ALP லக்னம் மிதுனம் திருவாதிரை நட்சத்திரம் 1ஆம் பாதம் அவருடைய வாழ்க்கையில் எப்படி இருக்கும்?

திருவாதிரை நட்சத்திரம் 1ஆம் பாதம் 1வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும். தாத்தா பாட்டிகளிடம் இருந்து வரக்கூடிய சொத்து இந்த நட்சத்திர பாதம் வரும்பொழுது வந்துவிடும்.

பூர்வ புண்ணியம் சம்பந்தப்பட்டது.
சொத்துக்கள் சம்பந்தப்பட்டது.
தாத்தா உடைய வாரிசு அடிப்படையில் வேலைகள் சம்பந்தப்பட்டது.
எதிர்பாராத சந்தோஷங்கள் சம்பந்தப்பட்டது.
குலதெய்வம் சம்பந்தப்பட்டது.
கோயில் சம்பந்தப்பட்டது.
மந்திரம், மாயம் இந்த விஷயங்களை ஜாதகர் நோக்கி பயணிப்பார்.

வாய்ப்புகள் தரக்கூடிய இந்த கால கட்டங்கள் எதிர்பாராத திடீர் திருமணங்கள்.
மதம் மாறிய திருமணங்கள்.
கலப்பு திருமணங்கள்.
காதல் திருமணங்கள் இப்படி எதிர்பாராத திருமணங்கள் நடைபெறக் கூடிய வாய்ப்பு உள்ளது.
சந்தோஷமான காலம்.

இவர் வேலையில் மட்டும் மிக கவனமாக இருக்க வேண்டும்.

என்னுடைய அட்சய லக்ன புள்ளி திருவாதிரை 1ஆம் பாதம் சென்றால் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களை சுற்றி நடக்கக்கூடியது கற்பனை உலகமாக இருக்கும்.
அதை புரிந்து உங்கள் வாழ்கையில் நடந்தால் உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இந்த அட்சய லக்ன புள்ளி மாறும்.
1வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரம் மாறி எப்படி பலன் அளிக்கிறது என்பதையும் பதிவு செய்திருக்கிறேன்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

https://play.google.com/store/apps/details?id=com.guruvashishta.akshayalagnapaddati&hl=ta&gl=US

மிருகசீரிஷம் நட்சத்திரம் 4ம் பாதம் :

மிருகசீரிஷம் நட்சத்திரம் 4ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி, “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் எனது வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்கள் சந்தோஷமான நிகழ்வுகளை கொடுக்திடாதா என்ற எதிர்பார்ப்பு எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையிலும் இருக்கும்.

ஒரு மனிதன் எப்பொழுதும் கஷ்டப்பட வேண்டும் என்று ஜாதகத்தில் எழுதவில்லை.
ஆனால் குறிப்பிட்ட கால அளவில் அந்த ஜாதகம் யோகத்தை பெற வேண்டும், அவயோகத்தை பெற வேண்டும்.

அவயோகம் என்பது நல்ல காலம் அல்ல, என்பது நாம் ஏற்படுத்திகக்கூடிய வழி வாய்ப்பு முறைகள் தான்.

கிருஷ்ண பரமாத்மா சொல்லும்போது எல்லா குழந்தைகளும் மண்ணில் பிறக்கும்போது தூய உள்ளங்கள் உடன் தான் படைக்கிறேன்.
பிறந்த பிறகு அதனுடைய நிலைகளுக்கு ஏற்ப
அதனுடைய நிலைகள், தன்மைகள் மாறுகிறது.

வாழ்க்கையில் ஒப்பீடுகள் ஒரு சில நேரங்களில் யோகத்தையும்,
ஒரு சில நேரங்களில் அவ யோகத்தையும் கொடுக்கும்.

இன்றைக்கு பார்க்கக் கூடிய
அட்சய நட்சத்திரம் மிருகசீரிஷம் நட்சத்திரம் 4ம் பாதம்.
மிதுன லக்னம் ALP லக்னமாக செல்லும்பொழுது 1 வருடம், 1 மாதம்,
10 நாள் ஜாதகருக்கு கடன் சார்ந்த, நோய் சார்ந்த,வழக்குகள் சார்ந்த பிரச்சனைகளை கொடுக்கும். எதிர்பாராத கஷ்டங்களைக் கொடுக்கும்.

சம்பந்தமில்லாத நிகழ்வுகளால் ஜாதகர் கஷ்டப்படுவார்.
அதுதான் மிருகசீரிஷம் நட்சத்திரம் 4ம் பாதம்.

இடம் சம்மந்தப்பட்டது,
வாகனம் சம்பந்தப்பட்டது,
சொத்து சம்பந்தப்பட்டது,
சகோதரன் சம்பந்தப்பட்டது, சகோதரிகள் சம்பந்தப்பட்டது,
உறவுகள் சம்பந்தப்பட்டது
கணக்கு சம்பந்தப்பட்டது,
உடல்நிலை சம்பந்தப்பட்டது,
வயிறு சம்பந்தப்பட்டது,
அறுவை சிகிச்சை சம்பந்தப்பட்டது இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் இந்த மிருகசீரிஷம் நட்சத்திரம் 4ம் பாதம் போகக்கூடிய காலகட்டத்தில் ஜாதகருக்கு அவயோகம் ஏற்படக்கூடிய காலமாக அமையும்.
அதனால் இந்த காலகட்டத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

நாம் பார்க்கக் கூடிய விஷயம் இந்த இடத்தில் பிரச்சனை என்றால் அதில் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் பொறுமையாக இருக்க வேண்டும் கவனமாக இருக்க வேண்டும் என்ற விஷயம் உள்ளது.

மிருகசீரிஷம் நட்சத்திரம் 4ம் பாதம் யோகத்தைக் கொடுக்க வேண்டுமென்றால் நீங்கள்
இரத்த தானம் செய்ய வேண்டும்.

முருங்கைக்கீரை சம்பந்தப்பட்ட விஷயங்கள் பயன்படுத்த வேண்டும்.
10 மரக் கன்றுகள் வில்வம் சம்பந்தப்பட்ட மரக்கன்றுகள் இந்த காலகட்டத்தில் ஒன்பது மரக்கன்றுகள் அல்லது 27 மரக்கன்றுகள் நட வேண்டும் அப்படி நட்டால் இந்த காலகட்டத்தில் யோகத்தை கொடுக்கும்.

27 நட்சத்திரக்காரர்களும் தன்னுடைய வீட்டில் வில்வ மரக்கன்றுகள் நட்டால்
நல்லது.

கண்டிப்பாக வில்வ மரம் நட்டால் யோகத்தைக் கொடுக்கும்.

அதேபோல் இலுப்பை மரம் நடுவது நல்லது.
மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும் இந்த மாதிரி பாலில் உள்ள மரங்களை நட்டால் பால் உள்ள மரங்களை விலங்கினங்களும் தொந்தரவு செய்யாது அது நன்றாக வளரும்.

இந்தக் காலகட்டத்தில் மிருகசீரிஷம் நட்சத்திரம் 4ம் பாதம் மிக கவனமாக செயல்பட வேண்டும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

https://www.amazon.in/dp/B0984V57RH