மிருகசீரிஷம் நட்சத்திரம் 4ம் பாதம் :

Spread the love

மிருகசீரிஷம் நட்சத்திரம் 4ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி, “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் எனது வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்கள் சந்தோஷமான நிகழ்வுகளை கொடுக்திடாதா என்ற எதிர்பார்ப்பு எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையிலும் இருக்கும்.

ஒரு மனிதன் எப்பொழுதும் கஷ்டப்பட வேண்டும் என்று ஜாதகத்தில் எழுதவில்லை.
ஆனால் குறிப்பிட்ட கால அளவில் அந்த ஜாதகம் யோகத்தை பெற வேண்டும், அவயோகத்தை பெற வேண்டும்.

அவயோகம் என்பது நல்ல காலம் அல்ல, என்பது நாம் ஏற்படுத்திகக்கூடிய வழி வாய்ப்பு முறைகள் தான்.

கிருஷ்ண பரமாத்மா சொல்லும்போது எல்லா குழந்தைகளும் மண்ணில் பிறக்கும்போது தூய உள்ளங்கள் உடன் தான் படைக்கிறேன்.
பிறந்த பிறகு அதனுடைய நிலைகளுக்கு ஏற்ப
அதனுடைய நிலைகள், தன்மைகள் மாறுகிறது.

வாழ்க்கையில் ஒப்பீடுகள் ஒரு சில நேரங்களில் யோகத்தையும்,
ஒரு சில நேரங்களில் அவ யோகத்தையும் கொடுக்கும்.

இன்றைக்கு பார்க்கக் கூடிய
அட்சய நட்சத்திரம் மிருகசீரிஷம் நட்சத்திரம் 4ம் பாதம்.
மிதுன லக்னம் ALP லக்னமாக செல்லும்பொழுது 1 வருடம், 1 மாதம்,
10 நாள் ஜாதகருக்கு கடன் சார்ந்த, நோய் சார்ந்த,வழக்குகள் சார்ந்த பிரச்சனைகளை கொடுக்கும். எதிர்பாராத கஷ்டங்களைக் கொடுக்கும்.

சம்பந்தமில்லாத நிகழ்வுகளால் ஜாதகர் கஷ்டப்படுவார்.
அதுதான் மிருகசீரிஷம் நட்சத்திரம் 4ம் பாதம்.

இடம் சம்மந்தப்பட்டது,
வாகனம் சம்பந்தப்பட்டது,
சொத்து சம்பந்தப்பட்டது,
சகோதரன் சம்பந்தப்பட்டது, சகோதரிகள் சம்பந்தப்பட்டது,
உறவுகள் சம்பந்தப்பட்டது
கணக்கு சம்பந்தப்பட்டது,
உடல்நிலை சம்பந்தப்பட்டது,
வயிறு சம்பந்தப்பட்டது,
அறுவை சிகிச்சை சம்பந்தப்பட்டது இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் இந்த மிருகசீரிஷம் நட்சத்திரம் 4ம் பாதம் போகக்கூடிய காலகட்டத்தில் ஜாதகருக்கு அவயோகம் ஏற்படக்கூடிய காலமாக அமையும்.
அதனால் இந்த காலகட்டத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

நாம் பார்க்கக் கூடிய விஷயம் இந்த இடத்தில் பிரச்சனை என்றால் அதில் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் பொறுமையாக இருக்க வேண்டும் கவனமாக இருக்க வேண்டும் என்ற விஷயம் உள்ளது.

மிருகசீரிஷம் நட்சத்திரம் 4ம் பாதம் யோகத்தைக் கொடுக்க வேண்டுமென்றால் நீங்கள்
இரத்த தானம் செய்ய வேண்டும்.

முருங்கைக்கீரை சம்பந்தப்பட்ட விஷயங்கள் பயன்படுத்த வேண்டும்.
10 மரக் கன்றுகள் வில்வம் சம்பந்தப்பட்ட மரக்கன்றுகள் இந்த காலகட்டத்தில் ஒன்பது மரக்கன்றுகள் அல்லது 27 மரக்கன்றுகள் நட வேண்டும் அப்படி நட்டால் இந்த காலகட்டத்தில் யோகத்தை கொடுக்கும்.

27 நட்சத்திரக்காரர்களும் தன்னுடைய வீட்டில் வில்வ மரக்கன்றுகள் நட்டால்
நல்லது.

கண்டிப்பாக வில்வ மரம் நட்டால் யோகத்தைக் கொடுக்கும்.

அதேபோல் இலுப்பை மரம் நடுவது நல்லது.
மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும் இந்த மாதிரி பாலில் உள்ள மரங்களை நட்டால் பால் உள்ள மரங்களை விலங்கினங்களும் தொந்தரவு செய்யாது அது நன்றாக வளரும்.

இந்தக் காலகட்டத்தில் மிருகசீரிஷம் நட்சத்திரம் 4ம் பாதம் மிக கவனமாக செயல்பட வேண்டும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

https://www.amazon.in/dp/B0984V57RH

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *