மிருகசீரிஷம் 3ம் பாதம் :

Spread the love

மிருகசீரிஷம் 3ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
” அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்

ஜாதகங்களில் இந்த காலகட்டம் உங்களுடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டமான நேரம் என்பதை
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட முறையில் இருந்து கண்டுபிடிக்கிறோம்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை எனக்குள் ஏன் தோன்றியது ?
என்றால் நான் சில ஜாதகங்களை ஆய்வு செய்யும் பொழுது
இந்த காலகட்டத்தில் இது நடந்தது, இந்த காலகட்டத்தில் இது நடக்கவில்லை, என்று பார்க்கும் பொழுது இந்த காலகட்டத்தில் ஒரே மாதிரியான பலன்கள் வரணும்,ஒரே மாதிரியாக நடக்கணும் என்பதற்காகத்தான் நான் ஒவ்வொரு வயதிற்கும் ஒரு லக்னத்தை மாற்றினேன்.லக்னத்தை நகர்த்தி பலன் பார்க்கும் முறையை கண்டுபிடித்தேன்.

லக்னத்தை நகர்த்தி பலன் பார்ப்பது இந்த காலகட்டத்தில் என்ன ? 20 வயதில் சுக்ரதிசை ? 60 வயதில் சுக்ர திசை என்றால் அதற்கான பலன் தெளிவாக சொல்லலாம்.

அட்சய லக்னத்தை நகர்த்தி அந்த அட்சய லக்னத்திற்கு தசாபுத்தி மட்டும் பார்த்தாலே முழு யோகம் உண்டு.

இன்றைக்கு பார்க்கக்கூடிய
அட்சய நட்சத்திர புள்ளி மிருகசீரிஷ நட்சத்திரம் 3ம் பாதம்.
ALP லக்னம் : மிதுனம்
மிருகசீரிஷம் நட்சத்திரம் 3ஆம் பாதம்
1 வருடம், 1 மாதம், 10 நாள் கடந்து போகக் கூடிய காலகட்டத்தில் 6 ,11 ஆதிபத்தியம் வாங்கக்கூடிய மிருகசீரிஷம் நட்சத்திரம் 3ஆம் பாதம் எதிர்பாராத சந்தோஷத்தை கொடுக்கும்.

எதன் மூலமாக என்றால் காதல் மூலமாக, நட்பு மூலமாக, கனவு கற்பனை மூலமாக எதிர்பாராத துன்பத்தையும் கொடுக்கும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
அதுதான் மிருகசீரிஷம் நட்சத்திரம் 3ம் பாதம்.

கனவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் மிருகசீரிஷம் நட்சத்திரம் 3ஆம் பாதம்.
வீடு சம்பந்தப்பட்டது,
தொழில் சம்பந்தப்பட்டது,
எதிர்பாராத நட்புகள் மூலமாக கடன் சார்ந்த விஷயங்களில் ரொம்ப கஷ்டப்படுவார்.
மிருகசீரிஷம் நட்சத்திரம் 3ஆம் பாதம் மிகமிக போராட்டமான சூழலை ஏற்படுத்தும்.

Alp லக்னம் மிதுன லக்னத்திற்கு செவ்வாய் பல பட்டால் யோகமான வாய்ப்பு கொடுக்கும்.
அதுவே 4 ல் இருக்கும் பொழுது, செவ்வாய் எங்கு இருக்கிறார்களோ அந்த வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
6,11 ம் அதிபதியில் இருந்தால் யோகத்தை கொடுக்கும் 1 வருடம்,
1 மாதம், 10 நாள்.

ஜாதகம் என்பது எல்லோரும் பார்க்கலாம். கணக்கு முறைகள்தான்.
கணக்கையும் அறிவியலையும் இணைத்து ஆன்மீகத்துடன் இணைக்கும் பொழுது அது ஜோதிடம் ஆகிறது.

மிருகசீரிஷம் நட்சத்திரம் 3ஆம் பாதம் கஷ்டத்தைக் கொடுத்து பின் சந்தோஷத்தைக் கொடுக்கும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://play.google.com/store/apps/details?id=com.guruvashishta.akshayalagnapaddati&hl=ta&gl=US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *