சித்திரை நட்சத்திரம் 4ம் பாதம்:

சித்திரை நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

அட்சய லக்ன பத்ததி என்பது உங்களுடைய ஒவ்வொரு 10 வயதிற்கும் லக்னம் மாறிக்கொண்டே இருக்கும் என்பதுதான்.

ஏன் உருவாக்கினேன் என்றால் ஜென்ம லக்னம் கடகம் சுக்ர தசையில் ராகு புத்தி ஒருவருக்கு திருமணம் நடந்தது. ஒருவருக்கு திருமணம் நடக்கவில்லை. அப்பொழுதுதான் இருவருக்கும் வயது வித்தியாசம் இருந்தது. ஒருவருக்கு 23, மற்றொருவருக்கு 33,அதனால் தான் ஒவ்வொரு 10 வயதிற்கும் 3′ நகர்த்தி பார்த்து ஒருவருக்கு துலாம் லக்னம் மற்றொருவருக்கு விருச்சிக லக்னமாக இருந்தது.

லக்னம் மாறும்பொழுது தசா சுக்ர திசை ராகு புத்தி அப்பொழுதுதான் ஒருவருக்கு திருமணம் நடந்தது,
ஒருவருக்கு நடக்கவில்லை.
அப்பொழுதுதான் எளிமையாக எனக்கு புரிந்தது.
வயதிற்கேற்ப லக்னம் மாறும் என்பது.
அதன் பின்தான் ஆராய்ச்சி.

லக்னமும், ராசியும் வளர்வது தான் அட்சய லக்னம், அட்சய ராசி.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் துலாம் லக்னம்,சித்திரை நட்சத்திரம் 4ம் பாதம்.

சித்திரை நட்சத்திரம் 4ம் பாதம் ஒரு ஜாதகர்
வருமானம் சம்மந்தப்பட்டது,
திருமணம் சம்மந்தப்பட்டது,
வரவுகள் சம்மந்தப்பட்டது,
தீடீர் யோகங்கள் சம்மந்தப்பட்டது,
முயற்சிகள் சம்மந்தப்பட்டது,
வெளிநாடு சம்மந்தப்பட்டது,
கணவன் மனைவி உறவுகள் சம்மந்தப்பட்டது,
இப்படி நிறைய கேள்விகளை கேட்டு வந்திருப்பார்.

எல்லாம் துலாம் லக்னத்திற்கு 2,7 க்கு உடைய செவ்வாய்.

நவாம்ச லக்னம் சித்திரை 4 என்பது விருச்சகத்தில் இருக்கும்.
கொஞ்சம் கவனமாக கடந்து செல்லக்கூடிய காலம்.

வாய், கண், காது சம்மந்தப்பட்டது,
உடல் உபாதைகளை கொடுக்கக்கூடிய
அமைப்பு ஏற்படுத்தப்படும்.

ஒரு நட்சத்திர பாதம் 1 வருடம், 1 மாதம், 10 நாள் கடந்து போகும்.

1 வருடம், 1 மாதம், 10 நாள் பிரச்சனையாக இருக்குமா? இல்லை.
அதை 405 நாள் 45 நாள் ஆக பிரிக்கலாம்.
45 நாள் 5 நாள்.
5 நாள் 13 மணி நேரம்.
13 மணி நேரம் 1 மணி 30 நிமிடம்,
1 மணி 30 நிமிடம் 10 நிமிடம் ஆக பிரிக்கலாம்.

ஒரு நிமிடத்தை 9 வகையான கிரகங்கள் இயக்கும் என்பதுதான் உண்மை.

எல்லா ஜோதிடர்களும் ஒரே மாதிரியான பலன் வர வேண்டும் என்பதற்காகதான் அட்சய லக்ன பத்ததி கொண்டு வந்தேன்.

சித்திரை நட்சத்திரம் 4ம் பாதம் போகக்கூடிய காலகட்டத்தில் திருமணம் சம்மந்தபபட்ட கேள்விகள் அதிகமாக இருக்கும்.
இடம், குடும்ப உறுப்பினர், வருமானம் சம்மந்தப்பட்ட கேள்விகள் அதிகமாக இருக்கும்.

செவ்வாய் எங்கு இருக்கிறதோ அது சம்மந்தப்பட்ட கேள்விகள் அதிகமாக இருக்கும்.

நன்றி, வணக்கம்.

https://youtu.be/VmGK-brGyUc