சதயம் நட்சத்திரம் 3ம் பாதம்:

சதயம் நட்சத்திரம் 3ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் சதயம் நட்சத்திரம் 3ம் பாதம்.
கும்ப லக்னம்.

ஒவ்வொரு நட்சத்திர பாதமும்
1 வருடம், 1 மாதம், 10 நாள் இயக்கும்.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில்120 வருடங்கள் ஒரு மனிதனுடைய
நிம்சோத்ரி தசா வருடங்கள்,
360° என்பது 12 ராசி கட்டங்களின் அளவு.
360 / 120 = 3°
ஒரு ஜாதகருக்கு 3° என்பது நான்கு மாதங்கள் உடல் நகரக்கூடிய ஒரு அமைப்பு.
30° என்பது 30 பாகைகள்,
அதனால் 30 x 4 = 120 பாகைகள்.
120 / 12 = 10 வருடங்கள்.
அதனால் ஒரு லக்னம் நகரக் கூடிய அமைப்பு 10 வருடங்கள்.

ஒரு நட்சத்திர பாதம் என்பது 1 வருடம், 1 மாதம், 10 நாள் இயக்கும்.

சதயம் நட்சத்திரம் 3ஆம் பாதம் ஜாதகர் வந்தால்,
குழந்தைகள் சம்பந்தப்பட்டது,
பூர்வீகம் சம்பந்தப்பட்டது,
எதிர்பாராத யோகங்கள் சம்பந்தப்பட்டது,
ராகு கேது என்றால் பூர்வபுண்ணியம் சம்பந்தப்பட்டது,
என்னுடைய குலதெய்வம் சம்பந்தப்பட்டது,
ராகு கடந்து செல்லக்கூடிய அமைப்பு இருந்தால் பூர்வபுண்ணியம் சம்பந்தப்பட்ட கேள்விகள் வரும்.
எதிர்பாராத கஷ்டங்கள்,
எதிர்பாராத கனவுகள்,
கற்பனைகள்.
இதுதான் கேள்வியாக வரும்.

ஜாதகர் சரியான வேலையை செய்யும் பொழுது அவர் ஜெயிக்க முடியும்.

எனக்கும், ஜாதகத்திற்கும் தொடர்பில்லாத வேலையை நான் செய்கிறேன் என்றாள் அந்த அமைப்பு ஜாதகத்தில் இருக்கும்.

நான்கு வருடங்கள் ஜாதகர் கஷ்டப்பட வேண்டும்.

சதயம் நட்சத்திரம் 3ஆம் பாதம் எதிர்பாராத திடீர் யோகத்தை கொடுக்ககூடிய அமைப்பு உண்டு.
எதிர்பாராத யோகம் உண்டு.

சதயம் நட்சத்திரம் 3ஆம் பாதம் எதிர்பாராத யோகத்தையும், அவ யோகத்தையும் கொடுக்கக்கூடிய அமைப்பு உண்டு.

திருவாதிரை, சுவாதி, சதயம், நட்சத்திரம் வரும்பொழுது எதிர்பாராத திடீர் வெற்றிகளை கொடுக்கக்கூடியது.

ஒவ்வொரு கிரகமும், ஒவ்வொரு நட்சத்திரமும் பலமாக உள்ளது.

அட்சய லக்னத்திற்கும், அட்சய ராசிக்கும் 6, 8, 10, 12 ஆக வந்தால் ஜாதகரின் உடலும் மனமும் பொருந்தவில்லை.
இரண்டு பாவகங்கள் சரியாக இருந்தால்தான் அந்த வாழ்க்கையை நடத்த முடியும்.

சதயம் நட்சத்திரம் 3ஆம் பாதம் யோகத்தை கொடுக்ககூடிய வாய்ப்பு உண்டு.

நன்றி, வணக்கம்.

அவிட்டம் நட்சத்திரம் 1ம் பாதம் :

அவிட்டம் நட்சத்திரம் 1ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடை மூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் அவிட்டம் நட்சத்திரம் 4ம் பாதம்.
மகர லக்னம்.

ஜாதகர் என்ன கேள்விகளுக்காக வருவார்,

என்னுடைய பதவி உயர்வு எப்படி இருக்கும்,
பேர், புகழ் கொடுக்கக் கூடிய நட்சத்திர பாதம் அவிட்டம் நட்சத்திரம் 1ம் பாதம்.

வீடு வாங்கலாமா,
வாகனம் வாங்கலாமா,
சொத்து வாங்கலாமா,
வெளிநாடு போகலாமா,
இப்படி நிறைய கேள்விகள் வரக்கூடிய காலகட்டங்கள்.

அவிட்டம் நட்சத்திரம் 1ம் பாதம் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொடுக்கக்கூடிய நட்சத்திர பாதம்.
இந்த 1 வருடம், 1 மாதம், 10 நாள் வாழ்க்கையில் மிக முக்கியமான காலமாக இருக்கும்.

அதிர்ஷ்டம் என்பது,
மனை சார்ந்த விஷயங்கள்,
பூமி சார்ந்த விஷயங்கள்,
இரண்டாம் தாரம் திருமணம்,
முதல் தாரம் திருமணத்தை விட இரண்டாம் தாரம் திருமணம் யோகத்தை கொடுக்ககூடிய அமைப்பு அவிட்டம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.

அவிட்டம் நட்சத்திரம் 1ஆம் பாதம் திருமணம் நடந்தால் பிரச்சனைக்குரிய திருமணமாக நடந்திருக்கும்.

குழந்தைகள் சம்பந்தபட்ட கேள்வி என்றால் ஐந்தாம் வீடு சம்பந்தப்பட வேண்டும்.

மகர லக்னத்திற்கு 4ம் அதிபதி, 11ம் அதிபதி செவ்வாய்.
4ம் அதிபதி வீடு, வண்டி, வாகனம் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
அம்மா உடல்நலம்,
8ம் அதிபதி, 11ம் அதிபதி சம்பந்தப்பட்டால் அறுவைசிகிச்சை சம்மந்தப்பட்ட பாதிப்பு உண்டாகும்,

மகர லக்னத்திற்கு லாபாதிபதி செவ்வாய்,
திடீர் யோகத்தை கொடுக்கக்கூடியது. வெளிநாடு சம்பந்தப்பட்டது,
முதலீடுகள் சம்பந்தப்பட்டது,
பதவி உயர்வு சம்பந்தப்பட்டது,
எதிர்பாராத லாபங்கள்,
எதிர்பாராத பண வரவுகள்,
இதுநாள் வரையில் பணம் வரவில்லை என்று நினைப்பவர்களுக்கு இந்த 1 வருடம், 1 மாதம் 10 நாள், பணம் உண்டு.

405 நாளும் இல்லை.
முதல் 45 நாள் செவ்வாய் இயக்கும்.

405 நாள் அவிட்டம் நட்சத்திரம் 1ஆம் பாதம் யோகத்தையும் கொடுக்காது, அவ யோகத்தையும் கொடுக்காது. இதை ஆய்வு செய்ய வேண்டும்.

45 நாள் எப்படி இருக்கு,
5 நாள் எப்படி இருக்கும்,
13 மணி 20 நிமிடம் எப்படி இருக்கும்,
1 மணி 30 நிமிடம் எப்படி இருக்கும்,
10 நிமிடம் எப்படி இருக்கும், என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

பத்து நிமிடத்தை இயக்கக்கூடிய புள்ளியை தான் மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

அவிட்டம் நட்சத்திரம் 1ஆம் பாதம் ஒரு யோகமான காலம்.
வரும் வாய்ப்புகளை வரமாக பயன்படுத்தக்கூடிய நட்சத்திர பாதம்.

நன்றி, வணக்கம்.

அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதம்:

அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதம்.

அவிட்டம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் அவருடைய கேள்வி
வெளிநாடு செல்லலாமா,
எனக்கு குழந்தை பாக்கியம் சம்பந்தப்பட்டது,
பாக்கியங்கள் சம்பந்தப்பட்டது,
நான் கோவில் கட்டி இருக்கேன் கும்பாபிஷேகம் எப்பொழுது நடக்கும்,
குழந்தைகள் சம்பந்தப்பட்டது, குலதெய்வம் சம்மந்தப்பட்டது,
இஷ்ட தெய்வம் சம்பந்தப்பட்டது,
வெளிநாடு பயணங்கள் சம்பந்தப்பட்டது,
தொழில் முதலீடுகள் சம்பந்தப்பட்டது, இந்த கேள்விகளுக்கெல்லாம் ஜாதகர் வருவார்.

மகர லக்னம், அவிட்டம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் ஒரு யோகமான நட்சத்திரப் பாதம்.

நீங்கள் உங்கள் குலதெய்வம்,
இஷ்ட தெய்வம், கால பைரவர் எல்லா தெய்வங்களையும் வணங்கும் பொழுது உங்களுடைய பாக்கியம், உங்களுடைய அனுகூலம் இரட்டிப்பாகும்.

அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதம் போகும் பொழுது உங்களுடைய காலபைரவருக்கு சரணாகதி அடையுங்கள்.
காலபைரவரிடம் சரணாகதி அடையும்போது ஜாதகர் மிகப்பெரிய யோகத்தை அடைவார்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நட்சத்திர பாதம் வரும்.
20 வயதில் ஒரு நட்சத்திர பாதம்,
60 வயதில் ஒரு நட்சத்திர பாதம்,
அதில் நட்சத்திரப் பாதத்தின் தன்மையைப் பார்த்து பலன் சொல்ல வேண்டும்.

ஜோதிடர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பலன் சொல்ல வேண்டும் என்பதற்காக “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட முறையை உருவாக்கினேன்.

அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதம் குலதெய்வ கோயில்களுக்கு பூஜைகள் சம்பந்தப்பட்டது,
அதாவது இந்த காலகட்டம் அவர் சரணாகதி அடைய வேண்டும்.

குழந்தைகள் இல்லை என்றால் குலதெய்வ கோவிலுக்கு, இஷ்டதெய்வ கோவிலுக்கு சென்று வரும் பொழுது உங்களுடைய வாழ்க்கை மாறும்.

இடம் சம்பந்தப்பட்டது,
வீடு சம்பந்தப்பட்டது,
வண்டி சம்பந்தபட்டது,
வாகனம் சம்பந்தப்பட்டது,
பதவி உயர்வு சம்பந்தப்பட்டது,
யோகநிலையை கொடுக்கக்கூடிய நட்சத்திர பாதம் அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதம்.

கண்டிப்பாக இந்த நட்சத்திர பாதம் ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான யோகத்தைக் கொடுக்கும்.

நன்றி, வணக்கம்.