சதயம் நட்சத்திரம் 3ம் பாதம்:

Spread the love

சதயம் நட்சத்திரம் 3ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் சதயம் நட்சத்திரம் 3ம் பாதம்.
கும்ப லக்னம்.

ஒவ்வொரு நட்சத்திர பாதமும்
1 வருடம், 1 மாதம், 10 நாள் இயக்கும்.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில்120 வருடங்கள் ஒரு மனிதனுடைய
நிம்சோத்ரி தசா வருடங்கள்,
360° என்பது 12 ராசி கட்டங்களின் அளவு.
360 / 120 = 3°
ஒரு ஜாதகருக்கு 3° என்பது நான்கு மாதங்கள் உடல் நகரக்கூடிய ஒரு அமைப்பு.
30° என்பது 30 பாகைகள்,
அதனால் 30 x 4 = 120 பாகைகள்.
120 / 12 = 10 வருடங்கள்.
அதனால் ஒரு லக்னம் நகரக் கூடிய அமைப்பு 10 வருடங்கள்.

ஒரு நட்சத்திர பாதம் என்பது 1 வருடம், 1 மாதம், 10 நாள் இயக்கும்.

சதயம் நட்சத்திரம் 3ஆம் பாதம் ஜாதகர் வந்தால்,
குழந்தைகள் சம்பந்தப்பட்டது,
பூர்வீகம் சம்பந்தப்பட்டது,
எதிர்பாராத யோகங்கள் சம்பந்தப்பட்டது,
ராகு கேது என்றால் பூர்வபுண்ணியம் சம்பந்தப்பட்டது,
என்னுடைய குலதெய்வம் சம்பந்தப்பட்டது,
ராகு கடந்து செல்லக்கூடிய அமைப்பு இருந்தால் பூர்வபுண்ணியம் சம்பந்தப்பட்ட கேள்விகள் வரும்.
எதிர்பாராத கஷ்டங்கள்,
எதிர்பாராத கனவுகள்,
கற்பனைகள்.
இதுதான் கேள்வியாக வரும்.

ஜாதகர் சரியான வேலையை செய்யும் பொழுது அவர் ஜெயிக்க முடியும்.

எனக்கும், ஜாதகத்திற்கும் தொடர்பில்லாத வேலையை நான் செய்கிறேன் என்றாள் அந்த அமைப்பு ஜாதகத்தில் இருக்கும்.

நான்கு வருடங்கள் ஜாதகர் கஷ்டப்பட வேண்டும்.

சதயம் நட்சத்திரம் 3ஆம் பாதம் எதிர்பாராத திடீர் யோகத்தை கொடுக்ககூடிய அமைப்பு உண்டு.
எதிர்பாராத யோகம் உண்டு.

சதயம் நட்சத்திரம் 3ஆம் பாதம் எதிர்பாராத யோகத்தையும், அவ யோகத்தையும் கொடுக்கக்கூடிய அமைப்பு உண்டு.

திருவாதிரை, சுவாதி, சதயம், நட்சத்திரம் வரும்பொழுது எதிர்பாராத திடீர் வெற்றிகளை கொடுக்கக்கூடியது.

ஒவ்வொரு கிரகமும், ஒவ்வொரு நட்சத்திரமும் பலமாக உள்ளது.

அட்சய லக்னத்திற்கும், அட்சய ராசிக்கும் 6, 8, 10, 12 ஆக வந்தால் ஜாதகரின் உடலும் மனமும் பொருந்தவில்லை.
இரண்டு பாவகங்கள் சரியாக இருந்தால்தான் அந்த வாழ்க்கையை நடத்த முடியும்.

சதயம் நட்சத்திரம் 3ஆம் பாதம் யோகத்தை கொடுக்ககூடிய வாய்ப்பு உண்டு.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *