சதயம் நட்சத்திரம் 2ம் பாதம் :

Spread the love

சதயம் நட்சத்திரம் 2ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் சதயம் நட்சத்திரம் 2ஆம் பாதம்.
லக்னம் கும்பம்.

ஜாதகர் வரும்பொழுது எந்த மாதிரியான கேள்விகளை கேட்பார்.

என்னுடைய தொழில், நிறைய பொருள்கள் விரயமாகிறது,
என்னுடைய முதலீடுகள் எல்லாம் விரயமாகிறது,
நான் வெளிநாடு செல்லலாமா,
கடன் வழக்குகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள்,

இந்த காலகட்டம் தேவையில்லாத, பூர்வ புண்ணிய இடங்கள் சம்பந்தப்பட்ட கோர்ட், கேஸ், வம்பு, வழக்கு, நோய்நொடி சம்பந்தப்பட்ட விஷயங்கள்,

மருத்துவம் சம்பந்தப்பட்ட செலவுகளுக்காக வருவார்.
உடல் உபாதைகள் சம்பந்தப்பட்டது,
உறவுகள் எதிர்பாராத கஷ்டங்களை சம்பந்தப்பட்டது.
திருமண உறவுகள்,
திருமண விஷயங்கள்,
குழந்தைகள் சம்பந்தப்பட்டது,

சதயம் நட்சத்திரம் 2ம் பாதம் வரும் காலகட்டம் ஜாதகரும், குடும்பமும் பெரு அளவில் பாதிக்கப்படும்.
கண்டிப்பாக மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

ஆறு ராசி நன்றாக இருந்தால் ஆறு ராசி நன்றாக இருக்காது என்பதுதான் விதி.

கும்ப லக்னம் சதய நட்சத்திரம் இரண்டாம் பாதம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

தொழில் முதலீடுகளில் கவனமாக இருக்கவேண்டும்.
விரயமான காலம்,
வெளிநாடு செல்லலாமா?
வெளிநாடு செல்லலாம் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்டது யோகத்தை கொடுக்கும்.

தொழில் முதலீடுகள் யோகத்தை கொடுக்காது.

படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆய்வு சம்பந்தப்பட்ட படிப்புகள் படிக்கலாம்.
எதிர்பாராத படிப்புகள் மூலமாக யோகத்தை கொடுக்கக் கூடியது.

ஜாதகருக்கு யோகமான காலம். ஆனால்,ஜாதகர் முதலீடு செய்யக்கூடிய விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

சதயம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் ஒரு வருடம், ஒரு மாதம், பத்து நாள் இயங்கும்.
இந்த காலகட்டம் ஜாதகருக்கு எதிர்பார்த்த யோகத்தை கொடுக்காது.

நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *