பூராடம் நட்சத்திரம் 1 ம் பாதம் :

பூராடம் நட்சத்திரம் 1 ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளமும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரப் பாதம் பூராடம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.
தனுசு லக்னம்.

ஒரு நட்சத்திர பாதம் 1 வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும்.

உடலுடைய அமைப்புக்கு நம்முடைய நிலை என்ன என்பதை வைத்து தான் பண்ண முடியும்.

பூராடம் நட்சத்திரம் 1ஆம் பாதம் ஜாதகருக்கு எதிர்பாராத சந்தோஷத்தையும்,
எதிர்பாராத மகிழ்ச்சியையும்,
நோய் நொடிகளையும் கொடுக்கக்கூடியது.

அதாவது 6ம் ஆதிபத்தியம் சுக்கிரன் 11ம் ஆதிபத்தியம் பெறுவதால் நோய் நொடிகளை கொடுக்கும்.
9ல் சுக்கிரன் இருந்தால் அப்பாவை பாதிக்கும்.
4ல் சுக்கிரன் இருந்தால் அம்மாவை பாதிக்கும்.
7ல் சுக்கிரன் இருந்தால் மனைவியை பாதிக்கும்.

நோய்நொடி சம்பந்தப்பட்ட
காரகத் தன்மைகளை ஜாதகர் அனுபவிப்பார்.
குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கடன், வம்பு, வழக்கு, நோய்நொடி,
அதிகப்படியான லாபங்கள்,
ஜாதகருக்கு பெரிய வருமானம் கிடைத்தால் அவருக்கு நோய் நொடி கொடுத்து விடும்.
பூராடம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.

ஜாதகருக்கு யோகம் உண்டு.
ஆனால்,இதுநாள் வரையில் நடக்காத விஷயங்கள் எல்லாம் நடக்கும்.
தொலைதொடர்பு மூலம் வருமானம்,
வெளிநாட்டு தொடர்புகள்,
தொழிலில் முதலீடு செய்து ஜாதகருடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்ளக் கூடிய அமைப்பு பூராடம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.

தாயாருடைய உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் இந்த காலகட்டம்.

குழந்தையுடைய படிப்பிற்காக கடன் வாங்கி வெளிநாடு அனுப்பக் கூடிய வாய்ப்பு உண்டு.

வெளிநாடு செல்லும் பொழுது தொற்று நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும்.
தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி வர வாய்ப்பு உள்ளது.

உங்களுடைய ஜாதகம் முறையில் சுக்கிரன் பலமாக இருந்து லக்னாதிபதி பலமாக இருந்தால் இந்த ஜாதகத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படும்.
60 லட்சம் கடன் வருவதற்கு 10 லட்சம் கடனாக வரும்.

கடன், நோய்நொடி, வம்பு, வழக்கு எல்லா விஷயங்களும் இந்த கால கட்டத்தில் இருக்கும்.
ஜாதகர் கவனமாக இருக்கவேண்டும்.
நிறைய விஷயங்களுக்கு கோர்ட் செல்ல வேண்டி இருக்கும். தேவையில்லாத அலைச்சல்களை உருவாக்கும்.
பூராடம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.
மிக மிக கவனமாக இருக்கக்கூடிய காலகட்டம். ஆனால்,மகிழ்ச்சியையும் கொடுத்து உடல் உபாதைகள் கொடுக்கக்கூடிய நட்சத்திர பாதம்.

நன்றி வணக்கம்

கேட்டை நட்சத்திரம் 2ம்பாதம்:

கேட்டை நட்சத்திரம் 2ம்பாதம்:

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையில் எந்த நேரம் அதிர்ஷ்டமான நேரம் என்பதைப் பார்க்கிறோம்.
1 வருடம், 1 மாதம், 10 நாள் தான் அதிர்ஷ்டம் தரக் கூடிய காலம்.

வாழ்க்கையில் வெற்றியாளர்கள், சாதனையாளர்கள் சிறிய சிறிய வாய்ப்புகளை பயன்படுத்தும்போதுதான் பெரிய ஆளாக இருக்கிறார்கள்.

உங்கள் வாழ்க்கையை
வழி நடத்துவதற்கு ஜோதிடம் என்பது தேவைப்படுகிறது.
எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும்

யார் என்ன தொழில் செய்யவேண்டும், எந்த காலகட்டத்தில் செய்யவேண்டும், எந்த தொழில் செய்தால் யோகம் என்பதை ஜாதகம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிடம் நீங்களே கற்றுக் கொண்டால் இதை தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் ஜோதிடம் கற்றுக் கொள்ளும்போது உங்கள் வாழ்க்கை மாறும்.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் கேட்டை நட்சத்திரம் 2ம் பாதம்.

கேட்டை நட்சத்திரம் 2ம் பாதம் போகும் பொழுது ஜாதகருடைய எல்லா முயற்சிகளும் தோல்வி அடையும்.

தொழிலாக இருக்கட்டும்,
ஜாதகராக இருக்கட்டும்,
மருத்துவமனை சென்று மருத்துவமனை பார்ப்பதாக இருக்கட்டும்,
10 தடவை முயற்சி செய்ய வேண்டும்.

கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக அலைய வேண்டும்.
ஆனால் கேட்டை நட்சத்திரம் 1ஆம் பாதம் உடனே கடன் கிடைக்கும்.

கேட்டை நட்சத்திரம் 2ம் பாதம் வரும்பொழுது அமைதியாக இருக்கவும்,
ஜாதகரிடம் என்ன இருக்கோ அதை வைத்து அமைதியாக இருக்கவும்.
இப்பொழுது காதல் திருமணம் வந்தால் எதிர்பார்த்த யோகம் இருக்காது.

கேட்டை நட்சத்திரம் 2ம் பாதம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்

நன்றி, வணக்கம்.

உத்திரம் நட்சத்திரம் 2ம்பாதம்:

உத்திரம் நட்சத்திரம் 2ம்பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெறவேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

நீங்கள் நல்ல காரியங்கள் செய்தால் புண்ணிய கர்மா சேரும்.
அதுவே கெட்ட காரியங்கள் செய்தால்
அசுப கிரகங்கள் சேர்ந்து கெட்ட கர்மா ஆகும்.
இவை இரண்டும் உங்களுடைய ஜாதகங்களில் விதிவிலக்காக இருக்கும்.

ஒவ்வொரு வயதிற்கும் லக்னம் நகர்ந்து செல்லும்.
கடந்து செல்லும்,
லக்னம் நகர நகர,
வயது மாற மாற,
உடல் வளர்ச்சி மாற மாற லக்னம் மாறும் என்பதுதான் உண்மை.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம்.

கடக லக்னத்தில் பிறக்கும் ஒருவருக்கு இன்றைய அட்சய லக்னம்
உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் போனால் அந்த காலகட்டத்தில் அவர் குழந்தைகளை பற்றிய கேள்விகளை கேட்பார்.

திருமணம் ஆகி மூன்று வருடம் ஆகியும் குழந்தை பேறு இல்லை என்ற கேள்விகளை கேட்பார்.

10 வருடத்தை இயக்கக்கூடிய அதிபதி புதன்.
புதன் எந்த பாவகத்தில் இருந்தாலும்,
அதனுடைய நட்சத்திரம் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4.
அந்த 3 வருடம் 4 மாதம் சூரியன் விரயாதிபதியாக இருந்து அந்த காலகட்டத்தில் உங்களுடைய வாழ்க்கையில் குழந்தைகள் சம்மந்தப்பட்டது,
பூர்வபுண்ணியம் சம்மந்தப்பட்டது,

குழந்தைபேறு பெறுவதற்காக மருத்துவ செலவுகள் செய்யக்கூடிய காலம் இந்த 3 வருடம் 4 மாதம்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இதை யார் சொன்னாலும் ஒரே மாதிரியான பலன் தான்.

நான் சொல்லி கொடுக்கக் கூடிய முறையில் ஜோதிடம் பார்த்தால் கண்டிப்பாக ஒரே மாதிரியான பலன்தான் வரும்.

ஒருவருக்கு குழந்தைகள் சம்மந்தப்பட்ட படிப்புக்காக விரயம் வரும்.
ஒருவர் குல தெய்வம், குலதெய்வ கோயில்களுக்காக செலவு செய்வார்.
ஒருவர் பரம்பரை சொத்து விஷயமாக கோர்ட், கேஸ்களுக்காக விரயம் செய்வார்.

விரயாதிபதி, நட்சத்திர அதிபதி சூரியனாக இருப்பதால் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
விரய செலவுகள் அதிகமாகும்.

லக்னம் மாறும்பொழுது, ஆதிபத்தியம் மாறும் பொழுது , தசாபுத்திகளுடைய தன்மைகளும் மாறும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://youtu.be/q0-pPXOxjSM

அட்சய லக்ன பத்ததி

பிறப்பின் ஜாதகம் அவரின் உடல் வளர்ச்சிக்கு ஏற்ப ஜாதக லக்ன புள்ளி வளரும் முறையே.

ஜாதகரின் மனம் வளர்ச்சியை திசா புத்தி கொண்டு அளவிடலாம்.

ஜாதகரின் உடல் வளர்ச்சியை ALP அட்சய லக்ன புள்ளியை கொண்டு அளவிடலாம்.

இது என்னுடைய அய்வு .

இதில் 32 விதமான புதிய கருத்துக்களை தெரிவித்து உள்ளேன்.

இதில் ஒன்று மட்டும் கொண்டு பலன் அறியலாம்.

ஆனால் 32 விதமும் தெரிந்து கொண்டால் முழுமையாக பலன் அறிய முடியும்.

துல்லியமாக பலன் அறிய Alp அட்சய லக்ன பத்ததி முறையாகும்.

பொதுவுடை மூர்த்தி என்னும் நான் அட்சய லக்ன பத்ததி முறையை ஆய்வு செய்து உள்ளேன்.

ஸ்ரீரமண மகரிஷி

*ஸ்ரீரமண மகரிஷி

*கேள்வி:நான் தியானம் செய்து வருகிறேன். ஆனால் அதில் முன்னேற்றம் இல்லை*.”

*பதில்:”முன்னேற்றம் இல்லை என்பது உனக்கு எப்படி தெரியும்? ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் என்பதை எளிதில் அறிய முடியாது*.”

*கேள்வி:”என் எதிர்காலம் எப்படி இருக்கும்?” பிரண்டன் மிக சாதாரணமான ஒரு கேள்வியைக் கேட்கிறார்*.

*பதில்:”நிகழ்காலத்தைப் பற்றியே தெரிந்து கொள்ள முடியாதபோது, எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்வதில் என்ன பயன்? இப்போதுள்ள உன்னைக் கவனி*.”

*கேள்வி:”உலகத்தை சுற்றி பல பிரச்சினைகள் உள்ளன. எதிர்காலத்தில் மக்கள் நட்போடு பழகுவார்களா அல்லது யுத்தத்தில் இந்த உலகம் முழுவதும் மூழ்கிப் போகுமா*?”

*பதில்:”இந்த உலகை படிப்பவனுக்கு இந்த உலகத்தைக் காப்பதற்கும் தெரியும் உலகத்தைப் படைப்பவனே காப்பான்; நீ அல்ல! எனவே, இதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை*.

*கேள்வி:”மகரிஷி, நான் சுற்றிப் பார்க்கிறேன் கடவுளுடைய கருணையைக் காண்பது அரிதாக இருக்கிறது*.

*பதில்:”நீ யாரென்று அறியாமல்”, உலகத்தைப் பற்றி அறிந்து என்ன புண்ணியம்? அதுவும் இல்லாமல், உன் சக்தியை உலக விவகாரங்களில் செலுத்தி ஏன் வீண் செய்கிறாய்? உன்னை நீ அறி. அப்போது, உலகம் பற்றிய தெளிவும் உனக்கு நிச்சயம் ஏற்படும்*.

*பதில்:”ஒருவன் உண்மையை அறிய வேண்டுமென்றால் அல்லது தன்னை அறிய வேண்டுமென்றால், காட்டுக்குப் போய் தனியே அமர்ந்து தவம் செய்ய வேண்டுமென்று யோகிகள் சொல்கிறார்களே இது உண்மைதானா*?”

*பதில்:”அவசியம் இல்லை. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ கண்மூடி அமர்ந்து தியானம் செய்தால் போதும். அந்தத் தியானம் உன் மற்ற வேலைகளை மிகத் தெளிவாக்க உதவும். அதாவது, செய்கின்ற வேலைகளையெல்லாம் கூட தியான நிலையில் இருந்து செய்யமுடியும். தியானம் என்பது, ஒரு நாள் முழுவதும் வாழும் வாழ்க்கையாகிவிடும் தியானத்தின்போது இருந்த உணர்வை மற்ற வேலைகள் செய்யும்போது ஏற்படும்*.”

*கேள்வி:”இதனால் ஏற்படும் விளைவு என்ன*?”

*பதில்:”அப்போது உலகத்தின் மீதும், மற்றவர் மீதும் உன் மீதும் நீ கொண்டிருந்த கருத்துக்கள் மாறும்*.”

*கேள்வி:” ஒருவன் தன்னுடைய வேலைகளைச் செய்துகொண்டே ஞானம் அடையலாம் என்று சொல்கிறீர்களா*?”

*பதில்:ஏன் முடியாது? அப்போது, ஒருவன் எந்த வேலையையும் தான் செய்வதாக நினைக்க மாட்டான்*. *அதில் உள்ள லாப- நஷ்டங்களுக்கு அப்பால், எது சத்தோ அதில் மனம் லியித்திருக்கும். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என்பது ஆரம்ப சாதகர்களுக்கு ஒதுக்கப்பட்டது. எல்லா நேரமும் தியானத்தில் இருப்பது என்பது இதனால் ஏற்பட்ட பிறகு, வாழ்க்கை வேறு விதமாக இருக்கும்*.”