உத்திரம் நட்சத்திரம் 2ம்பாதம்:

Spread the love

உத்திரம் நட்சத்திரம் 2ம்பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெறவேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

நீங்கள் நல்ல காரியங்கள் செய்தால் புண்ணிய கர்மா சேரும்.
அதுவே கெட்ட காரியங்கள் செய்தால்
அசுப கிரகங்கள் சேர்ந்து கெட்ட கர்மா ஆகும்.
இவை இரண்டும் உங்களுடைய ஜாதகங்களில் விதிவிலக்காக இருக்கும்.

ஒவ்வொரு வயதிற்கும் லக்னம் நகர்ந்து செல்லும்.
கடந்து செல்லும்,
லக்னம் நகர நகர,
வயது மாற மாற,
உடல் வளர்ச்சி மாற மாற லக்னம் மாறும் என்பதுதான் உண்மை.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம்.

கடக லக்னத்தில் பிறக்கும் ஒருவருக்கு இன்றைய அட்சய லக்னம்
உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் போனால் அந்த காலகட்டத்தில் அவர் குழந்தைகளை பற்றிய கேள்விகளை கேட்பார்.

திருமணம் ஆகி மூன்று வருடம் ஆகியும் குழந்தை பேறு இல்லை என்ற கேள்விகளை கேட்பார்.

10 வருடத்தை இயக்கக்கூடிய அதிபதி புதன்.
புதன் எந்த பாவகத்தில் இருந்தாலும்,
அதனுடைய நட்சத்திரம் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4.
அந்த 3 வருடம் 4 மாதம் சூரியன் விரயாதிபதியாக இருந்து அந்த காலகட்டத்தில் உங்களுடைய வாழ்க்கையில் குழந்தைகள் சம்மந்தப்பட்டது,
பூர்வபுண்ணியம் சம்மந்தப்பட்டது,

குழந்தைபேறு பெறுவதற்காக மருத்துவ செலவுகள் செய்யக்கூடிய காலம் இந்த 3 வருடம் 4 மாதம்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இதை யார் சொன்னாலும் ஒரே மாதிரியான பலன் தான்.

நான் சொல்லி கொடுக்கக் கூடிய முறையில் ஜோதிடம் பார்த்தால் கண்டிப்பாக ஒரே மாதிரியான பலன்தான் வரும்.

ஒருவருக்கு குழந்தைகள் சம்மந்தப்பட்ட படிப்புக்காக விரயம் வரும்.
ஒருவர் குல தெய்வம், குலதெய்வ கோயில்களுக்காக செலவு செய்வார்.
ஒருவர் பரம்பரை சொத்து விஷயமாக கோர்ட், கேஸ்களுக்காக விரயம் செய்வார்.

விரயாதிபதி, நட்சத்திர அதிபதி சூரியனாக இருப்பதால் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
விரய செலவுகள் அதிகமாகும்.

லக்னம் மாறும்பொழுது, ஆதிபத்தியம் மாறும் பொழுது , தசாபுத்திகளுடைய தன்மைகளும் மாறும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://youtu.be/q0-pPXOxjSM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *