செவ்வாய் தோஷம்

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையில் எந்த காலம் யோகமான காலம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிடமுறையில் ஜென்ம லக்னத்திற்கு 1, 2, 4, 7, 8, 12ல் செவ்வாய் இருந்தால் தோஷம் என்பதை எடுத்துக் கொள்வோம்.

ஆனால் ALP லக்னத்திற்கு
1, 2, 4, 7, 8, 12 ல் இன்றைய லக்னத்திற்கு,
இன்றைய வயதுடைய லக்னத்திற்கு,
நகரும் லக்னத்திற்கு 1, 2, 4, 7 ,8 , 12ல் செவ்வாய் இருந்தால் எதிர்பார்த்த யோகத்தை கொடுக்காது.

உடல் உபாதைகள் எண்ணங்களை மாற்றிக் கொடுக்கும்.
வேகம், கோபம், அவர்களுடைய தாக்கங்கள் அதிகமாக இருக்கும்.
தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும்.

செவ்வாய் என்பது இரத்தம்,
அதனால் இரத்தம் சார்ந்த உணர்வுகள் அதிகமாக தூண்டப்படும் பொழுது ஜாதகருக்கான வாய்ப்பை தட்டிப் பறிக்கும்.

சிம்ம லக்னத்திற்கு 4ம் ஆதிபத்தியம் பெறக்கூடிய செவ்வாய், சிம்ம லக்னம் ALP ஆக போகும் பொழுது 9ம் அதிபதியும் செவ்வாய் ஆக வரும்.

இந்த செவ்வாய் 1, 2, 4 ,7, 8, 12ல் இருந்தால் தாய், தந்தை மூலமாகவே ஜாதகருக்கு திருமணம் தடையாக இருக்கும்.

அட்சய லக்ன பத்ததி முறையில் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது 100% கண்டிப்பாக பலன் சொல்ல முடியும்.

மணமகன் மணமகள் யாராவது ஒருவருக்கு பொருத்தம் பார்த்தால் கண்டிப்பாக அவர்களுடைய வாழ்க்கையில் வழிகாட்ட முடியும்.

ஜென்ம லக்னம் என்பது நான் பிறக்கும் போது உள்ள லக்னம்.
ஆனால் திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது இன்றைய லக்னம் தான் பார்க்க வேண்டும்.

பிறக்கும்போது உள்ள மனம், உடல்,….. எல்லாமே நாம் வளர வளர மாறும். அதுதான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் நான் சொல்வது.

28 வயதில் நம்முடைய புத்தி,
நம்முடைய மனம், உடல், எல்லாமே வளர்ந்திருக்கும்.
அதை தான் பார்க்க வேண்டும்.
அதுதான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை.

நன்றி, வணக்கம்.

புணர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம்:

புணர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் ஒரு லக்னம் மாறும்.

அதாவது இது நாள் வரையில் என்னுடைய வாழ்க்கையில் பூர்வ புண்ணியத்தால் என்னுடைய உடல் எப்பொழுது தோன்ற ஆரம்பிக்கிறதோ
அந்த லக்னம் ஒரு டிகிரி இருந்தால்,
29 டிகிரியில் ஒரு குழந்தை பிறந்திருந்தால் ஒரே ஒரு டிகிரி தான் மீதம் இருக்கும்.
நான்கு மாதம் மட்டும்தான் மேஷ லக்னத்தில் இயங்கி இருக்கும்.

நம்முடைய அட்சய லக்னத்தில் ஒவ்வொரு டிகிரிக்கும் நான்கு மாதங்கள் நகரும் என்பது தான்
நம்முடைய ஆய்வு முறைகள்.
இதுதான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆய்வு.

இன்றைக்கு நாம் பார்க்கக்கூடியது கடக லக்னம் புனர்பூசம் நட்சத்திரம் நாலாம் பாதம்.

இந்த லக்னத்திற்கு குரு 6,9திற்கு அதிபதியாகி யோகத்தை கொடுப்பாரா? கொடுப்பார்.

ரண ருண சத்ரு ஸ்தானாதிபதி ஜாதகத்தில் இருக்கும் பொழுது ஜாதகருக்கு கடன், வம்பு, வழக்கு நோய்நொடி சார்ந்த விஷயங்கள்
போராடி ஜெயிக்க வேண்டும்.

கடன் இருந்தால் தீர்க்கக்கூடிய வருமானம் இருந்தால் ஜாதகர் ஜெயித்து விடுவார்.
போராடுவதற்கு ஒரு மனிதர் எண்ணங்களை கொடுத்தால்தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா.
முடியாது.
பணமும் கொடுத்து, போராட்டமான வாழ்க்கையும் கொடுத்தால்தான் ஜெயிக்க முடியும்.

நமக்கு கிடைக்க வேண்டிய அளவு வாழ்க்கை, சந்தோஷம், பணம் எதுவாக இருந்தாலும் கிடைக்க வேண்டிய அளவு கிடைத்தால் கிடைத்தால் சந்தோஷமாக இருக்கும்.

ஆறாம் அதிபதி என்றால் ரண ருண சத்ரு ஸ்தானம்.
நீங்கள் போராடி தான் ஜெயிக்க வேண்டும்.
கடன் நோய்நொடி கோர்ட் கேஸ் வம்பு வழக்கு இது இல்லாமல் நீங்கள் ஒருநாள்கூட தூங்க முடியாது என்று சொல்லாம்.

மீன ராசி 9 ஆம் அதிபதி
புனர்பூசம் 4ஆம் பாதம் வரும்பொழுது குரு ஆன்மீகம் சம்பந்தப்பட்டது,
அற ஒழுக்கம் சம்பந்தப்பட்டது.
ஆன்மீக யாத்திரைகள்,
செல்லலாமா?சித்தர்களை பார்க்கலாமா? என்று கேட்பார்கள். எப்பொழுதும் சித்தர்களை தேடி அலைய வேண்டாம்.
உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அவர்களே வந்து உங்களுடைய வாழ்க்கையை வழி நடத்துவார்கள்.

சித்தர்களை தேடி ஆத்மார்த்தமாக எந்த கோரிக்கையும் இல்லாமல் போங்கள்.
சரணாகதி உடன் நீங்கள் குருவை தேடி சென்றால் அந்த குரு வழி கொடுப்பார்.
எனக்கு சித்தர்களுடைய தரிசனம் வேண்டும் என்று தயவுசெய்து எதையும் கேட்காதீர்கள்.
சித்தர்களுடைய ஜீவசமாதியை தேடி கண்டிப்பாக செல்லாதீர்கள்.

உங்கள் வாழ்க்கை உங்களை தேடி வரும்.
ஒரே இடத்தில் இருந்து தேடுங்கள்.
உங்களுக்குள்ளே உங்களை தேடினால் உங்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
உங்களைத் தேடி குரு வருவார்கள்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

https://play.google.com/store/apps/details?id=com.guruvashishta.akshayalagnapaddati&hl=ta&gl=US